7th Tamil Term 1 Unit 3.3 Book Back Answers
Tamil Nadu 7th Standard Tamil Term 1 இயல் 3.3 தேசியம் காத்த செம்மல் (பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்) Book Back Answers
7th Standard Tamil Term 1 Lesson 3 Book Back Answers. 7th Standard Tamil Samacheer Kalvi Guide Term 1 – 3rd Lesson Unit 3.3 தேசியம் காத்த செம்மல் (பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்) Book Back and additional question and answers download pdf. Class 7 1st Term book back answers. Class 7 Tamil Book in answers download pdf. 7th All Subject Important Study Materials. 7th Tamil All Lessons. Answers.
- 7th Tamil Samacheer Kalvi Guide Term 1 – Lesson 3 ( இயல் 3.1 to 3.5 ) Full Answer Key
- 7th Tamil Term 1, Term 2, Term 3 – All Unit Book Back Answers
7th Tamil Book Back Answer Term 1 – Unit 3.3. தேசியம் காத்த செம்மல் (பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்)
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் ______.
- தூத்துக்குடி
- காரைக்குடி
- சாயல்குடி
- மன்னார்குடி
விடை : சாயல்குடி
2. முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர் _____.
- இராஜாஜி
- நேதாஜி
- காந்திஜி
- நேருஜி
விடை : நேதாஜி
3. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர் _____.
- இராஜாஜி
- பெரியார்
- திரு.வி.க
- நேதாஜி
விடை : திரு.வி.க
II. குறுவினா
1. முத்துராமலிங்கத் தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது?
வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளை உண்டாக்கியவர்.
உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி – என்று முத்தராமலிங்கத் தேவரை பெரியார் பாராட்டியுள்ளார்.
2. முத்துராமலிங்கத் தேவரின் பேச்சுக்கு வாய்ப்பூட்டுச் சட்டத்தின் மூலம் தடை விதிக்கப்படக் காரணம் யாது?
முத்துராமலிங்கத்தேவர், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்படும் வகையில் வீர உரையாற்றினார்.
அவரது பேச்சைக் கேட்டு மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறு கொண்டு எழுந்தனர்
இதனால் அவரைப் பலமுறை ஆங்கில அரசு கைது செய்துள்ளது
மேலும், வாய்ப்பூட்டுச் சட்டம் மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று அவருக்கு தடை விதித்தது.
3. முத்துராமலிங்கத் தேவர் பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி எழுதுக.
முத்துராமலிங்கத் தேவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்
சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், சோதிடம், மருத்துவம் ஆகிய பலதுறைகளில் ஆற்றல் உடையவராக விளங்கினார்
III. சிறுவினா
1. நேதாஜியுடன் முத்துராமலிங்கத் தேவர் கொண்ட தொடர்புப் பற்றி எழுதுக.
நேதாஜி சுபாஷ் சந்திரபோசுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
அவரைத் தமது அரசியல் குருவாக ஏறறுக்கொண்டார்.
முத்துராமலிங்கத் தேவரின் அழைப்பை ஏற்றுக் 06.09. 1939 ஆம் ஆண்டு
நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்
நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத் தேவரின் முயற்சி ஏராளமான தமிழர்கள் இணைந்தனர்.
விடுதலைக்கு பின்னர் நேதாஜி என்ற பெயரில் வார இதழ் நடத்தினார்.
2. தொழிலாளர் நலனுக்காக முத்துராமலிங்கத் தேவர் செய்த தொண்டுகள் யாவை ?
1938 கால கட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராக திகழ்ந்தார்.
மதுரையில் இருந்த நூற்பாலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவனாந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார். அதற்காக ஏழு மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.
உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார்.
பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடினார்
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
- தந்தைப் பெரியாரால் ______________ என்று பாராட்டப்பட்டவர் முத்துராமலிங்கத் தேவர்விடை : சுத்தத் தியாகி
- முத்துராமலிங்கத் தேவர் _____________, _____________ ஆகிய இரு மொழியிலும் சொற்ப்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்விடை : தமிழ், ஆங்கிலம்
- நேதாஜி மதுரைக்கு வந்த ஆண்டு ____________விடை : 1939
- ஆங்கிலேய ஆட்சியில் மக்களை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் ____________விடை : குற்றப்பரம்பரைச்சட்டம்
- முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு _____________விடை : நேதாஜி சுபாஷ் சந்திர போசு
- வங்கச்சிங்கம் என்று போற்றப்பட்டவர் ____________விடை : நேதாஜி சுபாஷ் சந்திர போசு
II. சிறு வினா
1. முத்துராமலிங்கத்தேவர் மக்கள் தொண்டு செய்தது எப்படி?
முத்துராமலிங்கத் தேவர் தேசியம் உடல், தெய்வீகம் உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தார்
2. முத்துராமலிங்கத்தேவர் பெற்றுள்ள ஆற்றல் யாவை?
சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், சோதிடம், மருத்துவம் ஆகிய பலதுறைகளில் ஆற்றல் உடையவராக விளங்கினார்
3. முத்துராமலிங்கத் தேவர் முதன் முதலில் உரையாற்றிய தலைப்பு எது?
முத்துராமலிங்கத் தேவர் முதன் முதலில் உரையாற்றிய தலைப்பு விவேகானந்தரின் பெருமை என்பதாகும்
4. முத்துராமலிங்கத் தேவர் சிறைவைக்கப்பட்ட இடங்கள் எவை?
- அலிப்பூர்
- அமராவதி
- தாமோ
- கல்கத்தா
- சென்னை
- வேலூர்
5. முத்துராமலிங்கத்தேவரின் சிறப்புப் பெயர்கள் யாவை?
- தேசியம் காத்த செம்மல்
- வித்யா பாஸ்கர்
- பிரவசன கேசரி
- சன்மார்க்க சண்டமாருதம்
- இந்து புத்தசமய மேதை
6. எத்தனை நாட்கள் முத்துராமலிங்கத்தேவர் சிறையில் கழித்துள்ளார்?
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இம்மண்ணுலகில் வாழ்ந்த நாள்கள் 20,075. சுதந்திரப் போராட்டத்திற்காகச் சிறையில் கழித்த நாள்கள் 4000. தன் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கினைச் சிறையில் கழித்துள்ளார்.
7. முத்துராமலிங்கத்தேவருக்கு இந்திய அரசால் எந்த ஆண்டு தபால் தலை வெளியிடப்பட்டது?
முத்துராமலிங்கத்தேவருக்கு இந்திய அரசால் 1995 இல் தபால் தலை வெளியிடப்பட்டது.
8. முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர் என்ன?
முத்துராமலிங்கத்தேவர் நேதாஜி என்னும் பெயரில் வார இதழ் ஒன்றையும் நடத்தினார்.
9. வட இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர் யார்?
வட இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர் பாலகங்காதர திலகர்.
II. குறு வினா
1. முத்துராமலிங்கத்தேவரை தலைவர்கள் பாராட்டப்பட்ட விதத்தை கூறுக.
திரு.வி.கலியாணசுந்தரனார்
முத்துராமலிங்கத்தேவரின் விடுதலை வேட்கையை அறிந்த திரு.வி.கலியாணசுந்தரனார் தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியுள்ளார்.
காமராசர்
சாயல்குடி என்னும் ஊரில் நடைபெற்ற கூட்டத்தில் முத்துராமலிங்கத்தேவரின் பேச்சை கேட்ட பெருந்தலைவர் காமராசர். ‘இது போன்ற ஒரு பேச்சை இதுவரை நான் கேட்டதில்லை; முத்துராமலிங்கத்தேவரின் வீரம்மிக்க பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும்’ என்று காமராசர் மகிழ்ந்தார்.
அறிஞர் அண்ணா
‘தென்னாட்டுச் சிங்கம் என்று தேவரைச் சொல்லுகிறார்களே, அது சாலப் பொருந்தும் என அவரது தோற்றத்தைப் பார்த்த உடனேயே நினைத்தேன். அவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது’ என்று தேவரைப் புகழ்ந்துள்ளார்.
இராஜாஜி
‘முத்துராமலிங்கத்தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது; உதடுகளிலிருந்து அல்ல. உள்ளத்தால் எதிலும் பற்றற்று உண்மையெனப் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசிவிடுவது அவர் வழக்கம்’ என்று இராஜாஜி பாராட்டியுள்ளார்.
வடஇந்திய இதழ்கள்
பாராளுமன்றத்தில் இவர் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு வெள்ளையர் காலத்தில் விட்டல் பாய், வல்லபபாய் பட்டேல் போன்ற மேதைகள் பேசிய பேச்சைப் போல் இருந்ததாக வடஇந்திய இதழ்கள் பாராட்டியுள்ளன.
2. குற்றப்பரம்பரைச் சட்ட மாநாடு எதிராக முத்துராமலிங்கத்தேவர் செய்த போராட்டம் பற்றி கூறு
ஆங்கில ஆட்சியில் மக்களை ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டது குற்றப் பரம்பரைச் சட்டம் ஆகும்.
பிறப்பாலேயே ஒருவரைக் குற்றவாளியாகக் கருதும் அச்சட்டத்தை நீக்குவதற்காக மக்களைத் திரட்டிப் பல்வேறு போராட்டங்களை நடத்தினார் முத்துராமலிங்கத் தேவர்.
1934 ஆம் ஆண்டு மே 12, 13 ஆகிய தேதிகளில் கமுதியில் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார் .
அவரது தொடர் போராட்டத்தால் 1948 ஆம் ஆண்டு அச்சட்டம் நீக்கப்பட்டது.