7th Tamil Term 1 Unit 3.1 Book Back Answers
Tamil Nadu 7th Standard Tamil Term 1 இயல் 3.1 புலி தங்கிய குகை Book Back Answers
7th Standard Tamil Term 1 Lesson 3 Book Back Answers. 7th Standard Tamil Samacheer Kalvi Guide Term 1 – 3rd Lesson Unit 3.1 புலி தங்கிய குகை Book Back and additional question and answers download pdf. Class 7 1st Term book back answers. Class 7 Tamil Book in answers download pdf. 7th All Subject Important Study Materials. 7th Tamil All Lessons. Answers.
- 7th Tamil Samacheer Kalvi Guide Term 1 – Lesson 3 ( இயல் 3.1 to 3.5 ) Full Answer Key
- 7th Tamil Term 1, Term 2, Term 3 – All Unit Book Back Answers
நாடு அதை நாடு Unit 3.1. புலி தங்கிய குகை
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டு உளனோ எனவினவுதி என்மகன் யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஓரும் புலிசேர்ந்து போகிய கல்அளை போல ஈன்ற வயிறோ இதுவே தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே* -காவற்பெண்டு
நூல்வெளி
காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர். சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர். கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர், சங்க கால மக்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இப்பாடலைப் பாடியுள்ளார். இவர் பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது. இந்நூலில் 86-ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
I. சொல்லும் பொருளும்
- சிற்றில் – சிறு வீடு
- யாண்டு – எங்கே
- கல் அளை – கற்குகை
- ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ‘யாண்டு’ என்னும் சொல்லின் பொருள் __________________
- எனது
- எங்கு
- எவ்வளவு
- எது
விடை : எங்கு
2. ‘யாண்டுளனோ?’ என்னும் சொல்லை பிரித்து எழுதக்கிடைப்பது __________________
- யாண்டு + உளனோ?
- யாண் + உளனோ?
- யா + உளனோ?
- யாண்டு + உனோ?
விடை : யாண்டு + உளனோ?
3. ‘கல் + அளை என்பதனைச் சேரத்து எழுதக் கிடைப்பது __________________
- கல்லளை
- கல்அளை
- கலலளை
- கல்லுளை
விடை : கல்லளை
III. குறுவினா
1. தம் வயிற்றுக்குத் தாய் எதனை உவமையாகக் கூறுகிறார்?
தம் வயிற்றுக்குத் தாய் “புலி தங்கிய குகை” உவமையாகக் கூறுகிறார்
IV. சிறுவினா
1. தம் மகன் குறித்துத் தாய் கூறிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
சிறிய என் வீட்டில் தூணைப் பற்றிக் கொண்டு, ஏதும் அறியாதவள் போல
நீ “உன் மகன் எங்கே ?” என என்னைக் கேட்கின்றாய்.அவன் எங்குள்ளான் என்று எனக்குத் தெரியாது.ஆனால் “புலி தங்கிய குகை” போல அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது.அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும். போய்க் காண்பாயாக’ என்று தன் மகன் குறித்து தாய் கூறினார்.
கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- ஓளவையார்
- காவற்பெண்டு
விடை : காவற்பெண்டு
2. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
- புறநானூறு
- முல்லைப்பாட்டு
- திருக்குறள்
- திருமுருகாற்றுப்படை
விடை : புறநானூற
3. கோப்பெரு நற்கிள்ளி ________________ மன்னன்
- சேர
- சோழ
- பாண்டிய
- பல்லவ
விடை : சோழ
4. குடில் என்பதன் பொருள்
- வீடு
- காடு
- நாடு
- நகரம்
விடை : வீடு
II. “புலி தங்கிய குகை” பாடலில் உள்ள எதுகை மோனை சொற்களை எடுத்து எழுதுக
மோனைச் சொற்கள்
- எனவினவுதி – என்மகன்
எதுகைச் சொற்கள்
- சிற்றில் – நற்றூண் – பற்றி
- ஈன்ற – தோன்றுவன்
III. வினாக்கள்
1. தமிழர்கள் எதனை முதன்மையான கடமையாக கருதின?
நாட்டைக் காக்கப் போர்க்களம் செல்வதைத் தம் முதன்மையான கடமைகளுள் ஒன்றாகக் கருதினர்.
2. தமிழர்கள் எவற்றில்லெல்லாம் சிறந்து விளங்கின?
தமிழர்கள் பழங்காலம் முதலே கல்வியிலும் வீரத்திலும் சிறந்து விளங்கினர்.
3. புலவரிடம் பெண் வினவியது யாது?
அன்னைே! உன் மகன் எங்கு உள்ளான்? என்று புவரிடம் பெண் வினவினாள்
4. “புலி சேர்ந்து போகிய கல்அளை போல” தொடர் பொருள் யாது?
பொருள் : புலி தங்கிச் சென்ற குகைபோல்
5. தன் மகன் எங்கு இருக்கக் கூடும் என்று புலவர் கூறுகின்றார்?
தன் மகன் போர்களத்தில் இருக்கக் கூடும் என்று புலவர் கூறுகின்றார்.
6. காவற்பெண்டு – சிறு குறிப்பு வரைக
காவற்பெண்டு சங்காலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர்.
சோழ மன்னன் போரவைக் காேப்பெரு நற்கிள்ளியின செவிலித்தாயாக விளங்கியவர் என்பர்.
கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர், சங்க கால மக்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் காெண்டு பாடல்கள் பாடியுள்ளார்.
7. புறநானூறு குறிப்பு வரைக
புறநானூறு எட்டுத்தாெகை நூல்களுள் ஒன்று. இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின வாழ்க்கடை முறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது.