7th Tamil Guide Term 3 Unit 3.1

7th Tamil Term 3 Unit 3.1 Book Back Answers | 7th Tamil Samacheer kalvi guide Term 3, Lesson 3

7th Tamil Term 3 Unit 3.1 Book Back Answers

3.1. மலைப்பொழிவு

TN 7th Tamil Term 3, Lesson 3, Unit 3.1. மலைப்பொழிவு Book Back Answers. 7th Standard Tamil Samacheer Kalvi Guide Book Back Answers. Class 7 Term 1, Term 2, Term 3 Book Answers Solutions. Tamil Nadu State Board Syllabus Samacheer Kalvi 7th Tamil Book Answers Solutions Guide Download  Pdf. 7th Books Solutions. TN State Board New Syllabus Samacheer Kalvi 7th Std Tamil Guide Pdf. Text Book Back Questions and Answers Term 1, 2, 3, Unit Wise Important Questions with answers, Study Material, Question Bank, Model Questions, Revision Test question Papers, Notes, and revise our understanding of the subject. Samacheer Kalvi 10th & 12th Tamil Book Solutions Guide Pdf Free Download, Tamilnadu State Board Samacheer Kalvi 7th Tamil Book Back Answers Solutions Guide Term 1, 2, 3.

7th Tamil Samacheer Kalvi Guide Term 3, Unit 3.1. மலைப்பொழிவு Book Back Answers

3.1. மலைப்பொழிவு

I. சொல்லும் பொருளும்

  • சாந்தம் – அமைதி
  • தாரணி – உலகம்
  • மகத்துவம் – சிறப்பு
  • தத்துவம் – உண்மை
  • பேதங்கள் – வேறுபாடுகள்
  • இரக்கம் – கருணை

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது _________.

  • பணம்
  • பொறுமை
  • புகழ்
  • வீடு
விடை : பொறுமை

2. சாந்த குணம் உடையவர்கள் _____________ முழுவதையும் பெறுவர்.

  • புத்தகம்
  • செல்வம்
  • உலகம்
  • துன்பம்
விடை : உலகம்

3. ’மலையளவு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

  • மலை + யளவு
  • மலை + அளவு
  • மலையின் + அளவு
  • மலையில் + அளவு
விடை : மலை + அளவு

4. ’தன்னாடு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

  • தன் + னாடு
  • தன்மை + னாடு
  • தன் + நாடு
  • தன்மை + நாடு
விடை : தன் + நாடு

5. இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________.

  • இவையில்லாது
  • இவைஇல்லாது
  • இவயில்லாது
  • இவஇல்லாது
விடை : இவையில்லாது

III. பொருத்துக.

  1. சாந்தம்       – அ.சிறப்பு
  2. மகத்துவம் – ஆ.உலகம்
  3. தாரணி       – இ.கருணை
  4. இரக்கம்      –  ஈ.அமைதி
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

IV. குறுவினா

1. இந்த உலகம் யாருக்கு உரியது?

சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்களுக்கே இந்த உலகம் உரியது.

2. உலகம் நிலைதடுமாறக் காரணம் என்ன?

சாதிகளும் கருத்து வேறுபாடுகளும் உலகம் நிலைதடுமாறக் காரணம் ஆகும்.

3. வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற என்ன செய்ய வேண்டும்?

வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற நல்ல உள்ளத்தோடு வாழ வேண்டும்.

V. சிறுவினா

சாந்தம் பற்றி இயேசுகாவியம் கூறுவன யாவை?

  • சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்களுக்கே இந்த உலகம் உரியது. அவர்களே தலைவர்கள் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார்.
  • வாழ்க்கையில் தேவைப்படும் பொறுமை. அது மண்ணையும், விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமை உடையது என்றார்.
  • சாதிகளும் கருத்து வேறுபாடுகளும் உலகம் நிலைதடுமாறுகின்றது.
  • அறத்தை நம்பினால் சண்டை இல்லாமல் உலகம் அமைதியாகிவிடும்.
  • பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும்.

மலைப்பொழிவு  –  கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கண்ணதாசனின் இயற்பெயர் _____________
விடை : முத்தையா
2. கண்ணதாசான் _____________ இயற்றினார்
விடை : இயேசு காவியத்தை
3. சாந்தம் என்னும் _____________கொண்டவர்களுக்கே இந்த உலகம் உரியது.
விடை : அமைதியான பண்பு
4. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது _____________
 
விடை : பொறுமை
5. பிரிவினைகள் காரணமாக மக்களிடையே _____________, _____________ ஏற்படுகின்றன
 
விடை : முரண்பாடுகளும், மோதல்களும்
6. அறத்தை நம்பிய பிறகுதான் சண்டைகள் நீங்கி _____________
விடை : உலகம் அமைதியாகும்.
7. இவ்வுலகம் _____________ இல்லா வாழ்வைப் பெற வேண்டும்
விடை : ஏற்றத்தாழ்வு

II. சிறு வினா

1. உலக மக்கள் எவற்றால் பிரிந்துள்ளனர்?

உலக மக்கள் சாதி, மதம், மொழி முதலியவற்றால் பிரிந்துள்ளனர்.

2. உலகம் எவ்வாறு உயர்வடையும்?

எல்லாரிடமும் அன்பு காட்டி அமைதியையே வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தால் உலகம் உயர்வடையும்.

3. இறைவனின் இரக்கத்தை பெறுவோர் யார்?

இரக்கம் உடையோரே பேறு பெற்றவர். அவர்கள் பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்த்தை பெறுவர்.

4. கண்ணதாசன் ஆசையில் விழுந்தவன் வாழ்வு பற்றி கூறுவன யாவை?

மனிதன் ஆசையில் விழுந்துவிட்டால் அவனது வாழ்வு பாலைவனம் போல் பயனற்றதாகவிடும்.

5. வாழ்க்கை மலர்ச்சோலையாக எப்போது மாறும்?

மனிதன் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால்,  அவன் வாழக்கை மலர்சோலையாக மாறிவிடும்.

6. இயேசுகாவியம் பற்றி எழுதுக

இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசு காவியம் ஆகும்

III. குறு வினா

1. உண்மையில்லா உறவுகளாக வாழ்பவர் யாவர்?

மனிதர்கள் சண்டை சச்சரவுகளால் தாமும் துன்புற்றுப் பிறரையும் துன்புறுத்துகின்றன. மேலும் அவர்கள் தன்னாடு என்றும். பிறர்நாடு என்றும் பேசி உண்மையில்லா உறவுகளாக வாழ்கின்றனர்.

2. இதயம் மலையளவு எவ்வாறு உயர்ந்தாக மாறும்?

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடக்கும் ஆயிரம் போட்டிகளால் பயனற்ற கனவுகள்தாம் தோன்றுகின்றன. இவை இல்லாமல் அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயர்ந்ததாக மாறும்.

3. கண்ணதாசன் பற்றி குறிப்பு வரைக

  • கண்ணாதாசனின் இயற்பெயர் முத்தையா
  • சிறப்புப் பெயர் கவியரசு ஆகும்
  • காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்
  • ஏராளமான திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்
  • இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்

Leave a Reply