7th Tamil Guide Term 3 lesson 2

7th Tamil Guide Term 3 Unit 2.5 

7th Tamil Guide Term 3 Unit 2.5 | 7th Tamil Samacheer kalvi guide Term 3, Unit 2.5

7th Tamil Term 3 Unit 2.5 Book Back Answers

 2.5. அணி இலக்கணம்

TN 7th Tamil Term 3, Lesson 2, Unit 2.5. அணி இலக்கணம் Book Back Answers. 7th Standard Tamil Samacheer Kalvi Guide Book Back Answers. Class 7 Term 1, Term 2, Term 3 Book Answers Solutions. Tamil Nadu State Board Syllabus Samacheer Kalvi 7th Tamil Book Answers Solutions Guide Download  Pdf. 7th Books Solutions. TN State Board New Syllabus Samacheer Kalvi 7th Std Tamil Guide Pdf. Text Book Back Questions and Answers Term 1, 2, 3, Unit Wise Important Questions with answers, Study Material, Question Bank, Model Questions, Revision Test question Papers, Notes, and revise our understanding of the subject. Samacheer Kalvi 10th & 12th Tamil Book Solutions Guide Pdf Free Download, Tamilnadu State Board Samacheer Kalvi 7th Tamil Book Back Answers Solutions Guide Term 1, 2, 3.

7th Tamil Samacheer Kalvi Guide Term 3, Unit 2.5 Book Back Answers

7th Tamil Guide Term 3 Unit 2.5

I. குறுவினா

1. உருவக அணியை விளக்குக.

உவமை வேறு, உவமிக்கப்படும் பொருள் வேறு என்றில்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும்.

சான்று:

“வையம் தகழியாக வார்கடல் நெய்யாக”

பூமி அகல் விளக்காவும், கடல் நெய்யாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளதால் உருவக அணி ஆயிற்று

2. உருவக அணிக்கும் ஏகதேச உருவக அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?

உருவக அணி
இரு பொருள்களுக்கு உருவகப் படுத்துதல்     

ஏகதேச உருவக அணி

இரு பொருள்களுள் ஒன்றை உருவகப்படுத்தி  மற்றொன்றை உருவகப் படுத்தாமல் வருவது  

அணி இலக்கணம் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது ___________________

விடை : உவமை அணி

2. வையகம் தகழியாக வார்கடல் நெய்யாக எனத் தொடங்கும் பாடலில் இடம் பெறும் அணி ___________________

விடை : உருவக அணி

3. இருபொருள்களுள் ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் வருவது ___________________

விடை : ஏகதேச உருவக அணி

II. வினாக்கள்

1. உவமை, உருவகம் விளக்குக

உவமை:

“தேன் போன்ற தமிழ்” என்று கூறுவது உவமை ஆகும்.

உருவகம:

“ தமிழ்த்தேன்” என்று கூறுவது உருவகம் ஆகும்.

2. ஏகதேச உருவக அணி என்றால் என்ன? சான்று தருக.

இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.

சான்று:

        பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

          கருமமே கட்டளைக் கல

                                                 – திருக்குறள்

மொழியை  ஆள்வோம்!

I. சரியான வினாச்சொல்லை இட்டு நிரப்புக.

1. நெல்லையப்பர் கோவில் ___________ உள்ளது?

விடை : எங்கு

2. ___________ ஆழ்வார்கள் மூன்று பேர்?

விடை : முதல்

3. ___________சொற்களைப் பேச வேண்டும்?

விடை : எப்படிப்பட்ட

4. அறநெறிச்சாரம் பாடலை எழுதியவர் ___________?

விடை : யார்

5. அறநெறிச்சாரம் என்பதன் பொருள் ___________?

விடை : யாது

 

II. பின்வரும் தொடரைப் படித்து வினாக்கள் எழுதுக.

பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் பேருந்தில் ஏறிப் பள்ளிக்குச் சென்றாள்.

  1. பூங்கொடி பள்ளிக்கு எப்படிச் சென்றாள்?
  2. பூங்கொடி யாருடன் பள்ளிக்கு சென்றாள்?
  3. பூங்கொடி எப்பொழுது பள்ளிக்கு சென்றாள்?
  4. பூங்கொடி தோழியுடன் எங்கு சென்றாள்?

 

III. தலைப்புச் செய்திகளை முழு சொற்றொடர்களாக எழுதுக.

1. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம் – வானிலை மையம் அறிவிப்பு.

விடை :- தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

2. சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன் – மாவட்ட ஆட்சியர் பாராட்டு

விடை :– தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளது என்று வானிலை மையம் அறிவித்து ள்ளது.

3. தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் – மக்கள் ஆர்வத்துடன் வருகை

விடை :- தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கியதை அடுத்து, அதைக் காண மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர்

4. தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டி – தமிழக அணி வெற்றி

விடை :- தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது

5. மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி – ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம்

விடை :– மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.

6. மாநில அளவிலான பேச்சுப்போட்டி- சென்னையில் இன்று தொடக்கம்

விடை :- மாநில அளவிலான பேச்சுப்போட்டியானது சென்னையில் இன்று தொடங்க உள்ளது

மொழியோடு  விளையாடு

I. கீழ்க்காணும் படங்கள் சார்ந்த சொற்களை எழுதுக.

1.
  • கரும்பலகை
  • வகுப்பறை
  • பாடப்புத்தகம்
  • மாணவர்கள்
  • மாணவிகள்
  • ஆசிரியர்
2.
  •  மரம்
  • நடைபாதை
  • ஊஞ்சல்
  • சருக்குமரம்
  • செடிகள்

II. கீழ்க்காணும் சொற்களைப் பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்தித் தொடர்கள் உருவாக்குக.

 (விதை, கட்டு, படி, நிலவு, நாடு, ஆடு)

1. விதை

விதைநெல் வாங்கினான்

சோளம் விதைத்தான்.

2. கட்டு

கட்டுச்சோறு உண்டான்.

வீடு கட்டினான்

3. படி

படிகட்டில் அமர்ந்தான்

நூலைப் படித்தான்

4. நிலவு

நிலவைப் பார்த்தான்

கடும் வெப்பம் நிலவுகிறது

5. நாடு

நாட்டை நேசி

நூலகத்தை நாடினான்

6. ஆடு

ஆடு புல்லை தின்னும்

நாட்டியம் ஆடினாள்

நிற்க  அதற்குத்  தக

I. கலைச்சொல் அறிவோம்.

குறிக்கோள் – Objective

பொதுவுடைமை – Communism

வறுமை – Poverty

செல்வம் – Wealth

கடமை – Responsiblity

ஒப்புரவுநெறி – Reciprocity

லட்சியம் – Ambition

அயலவர் – Neighbour

நற்பண்பு – Courtesy

Leave a Reply