7th Tamil Book Back Answer Term 1 Unit 2.6
Tamil Nadu 7th Standard Tamil Book Term 1 திருக்குறள் Solution | Lesson 2
7th Standard Tamil Samacheer Kalvi Guide Term 1 2nd Lesson Unit 2.6 திருக்குறள் Book Back and additional question and answers download pdf. Class 7 1st Term book back answers. Class 7 Tamil Book in answers download pdf. 7th All Subject Important Study Materials. 7th Tamil All Lessons. Answers.
Tamil Nadu 7th Standard Tamil Book Term 1 திருக்குறள் Solution | Lesson 2.6
- திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்று கூறுவர்.
- இவர் முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார் போன்ற சிறப்புப் பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறார்.
- தமிழ்நூல்களில் ‘திரு’ என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும்.
- திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பகுப்புகளைக் கொண்டது.
- இதில் அறம்- 38, பொருள்-70, இன்பம்-25 என மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன.
- அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
- இதற்கு முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன.
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வாய்மை எனப்படுவது __________________
- அன்பாகப் பேசுதல்
- தீங்குதராத சொற்களைப் பேசுதல்
- தமிழ்ல் பேசுதல்
- சத்தமா பேசுதல்
விடை : தீங்குதராத சொற்களைப் பேசுதல்
2. செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும் __________________
மன்னன்
பொறாமை இல்லாதவன்
பொறாமை உள்ளவன்
செல்வந்தன்
விடை : பொறாமை உள்ளவன்
3. “பொருட்செல்வம்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________________
- பொரு + செல்வம்
- பொருட் + செல்வம்
- பொருள் + செல்வம்
- பொரும் + செல்வம்
விடை : பொருள் + செல்வம்
4. “யாதனில்” என்னும் சொல்லை பிரித்து எழுதக்கிடைப்பது __________________
- யா + எனில்
- யாது + தெனில்
- யா + தெனில்
- யாது + எனில்
விடை : யாது + எனில்
5. “தன் + நெஞ்சு” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது __________________
- தன்நெஞ்சு
- தன்னெஞ்சு
- தானெஞ்சு
- தனெஞ்சு
விடை : தன்நெஞ்சு
6. “தீது + உண்டோ” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது __________________
- தீதுண்டோ
- தீதுஉண்டோ
- தீதிண்டோ
- தீயுண்டோ
விடை : தீதுண்டோ
II. சிறந்த அரசின் பணிகளை வரிசைப்படுத்தி எழுதுக.
அ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.
ஆ) பொருள் வரும் வழிகளை அறிதல்.
இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்.
ஈ) பொருள்களைச் சேர்த்தல்.
விடை : ஆ, ஈ, இ, அ
III. குறுவினா
1. எப்போது தன்நெஞ்சே தன்னை வருத்தும்?
- ஒருவர் தன் நெஞ்சறிய பொய் சொல்லக் கூடாது. அவ்வாறு கூறினால் அவர் நெஞ்சமே அவனை வருத்தும்
2. வாழும் நெறி யாது?
- ஒருவர் தன் நெஞ்சில் பொறாமையில்லாத குணத்தையே ஒழுக்க நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.
3. உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் யார்?
- உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவார்.
IV. கீழ்க்காணும் சொற்களைக் கொண்டு திருக்குறள் அமைக்க.
பொருட்செல்வம் எல்லாம் பூரியார்
செல்வத்துள் கண்ணும் அருட்செல்வம்
உள செவிச்செல்வம் அச்செல்வம்
தலைசெல்வம்
1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
2. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
V. பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடு.
அறவழி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தேசத்தந்தை காந்தியடிகள். அவர் தம் சிறு வயதில் ‘அரிச்சந்திரன்’ நாடகத்தைப் பார்த்தார் . அதில் அரிச்சந்திரன் என்னும் மன்னர் ‘பொய் பேசாமை ’ என்னும் அறத்தை எத்தகைய சூழ்நிலையிலும் தவறாமல் கடைப்பிடித்தார். இந்த நாடகத்தைக் கண்ட காந்தியடிகள் தாமும் பொய்யே பேசாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார் . அதனைத் தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இப்பண்பே காந்தியடிகள் எல்லார் இதயத்திலும் இடம் பிடிக்கக் காரணமாக அமைந்தது.
1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
2. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
விடை :-
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி என்ற பிற பெயர்களில் அழைக்கப்படும் நூல் ______________ விடை : திருக்குறள்
2. திருக்குறளில் ______________ குறட்பாக்கள் உள்ளன விடை : 1330
3. ______________ செல்வமே செல்வங்களுள் சிறந்த செல்வமாகும். விடை : அருளாகிய
4. ______________ எனப்படுவது மற்றவர்க்கு ஒரு தீங்கும் தராத சொற்களைச் சொல்லுதல் ஆகும். விடை : வாய்மை
II. பிரித்து எழுதுக
- பொறாமையில்லா = பொறாமை + இல்லாத
- தீதுண்டோ = தீது + உண்டோ
- அருட்செல்வம் = அருள் + செல்வம்
- யாதொன்றும் = யாது + ஒன்றும்
- வலிமையுடையவர் = வலிமை + உடையவர்
III. வினாக்கள்
1. செவ்வியான் கேடு நினைக்கப்டும் எப்போது?
- பெறாமை கொண்டவருடைய செல்வம், பொறாமை இல்லாதவருடைய வறுமை சான்றோரால் ஆராயப்படும்.
2. சிறந்த அரசின் செயல்கள் யாவை?
- பொருள் வரும் வழிகளை அறிதல்
- பொருள்களைச் சேர்த்தல்
- பொருளைப் பாதுகாத்தல்
- காத்த பொருளைப் பயனுள்ள வகையில் திட்டமிட்டுச் செலவிடுதல்
3. எப்போது வாழ்வில் துன்பம் இல்லை?
- பிறருடைய குற்றத்தைக் காண்பது போல், தன்னுடைய குற்றத்தையும் காண்பவருடைய வாழ்வில் துன்பம் இல்லை.
4. ஒருவரின் நெஞ்சம் வருந்தக் காரணம் யாது?
- ஒருவர் தன் நெஞ்சறிய பொய் சொல்லக் கூடாது. அவ்வாறு கூறினால் அவர் நெஞ்சமே அவனை வருத்தும்.
5. வலிமையுடையவர் எந்த நிலையை எண்ணி பார்க்க வேண்டும்?
- ஒருவர் தன்னை விட மெலிந்தவரை துன்புறுத்தும் போது, தன்னை விட வலிமையுடையவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலையை எண்ணிப் பார்த்தல் வேண்டும்.
6. ஒருவர் எப்போது புறங்கூறுதல் கூடாது
- ஒருவருக்கு நேர்நின்று கடுமையான சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம். ஆனால், அவர் இல்லாதபோது புறங்கூறுதல் கூடாது.
7. அருட்செல்வம், பொருட்செல்வம் குறித்த வள்ளுவர் கூறவது?
- அருளாகிய செல்வமே செல்வங்களுள் சிறந்த செல்வமாகும்.
- பொருட்செல்வம் இழிந்தவரிடத்திலும் உள்ளது.