7th Tamil Guide Term 1 Unit 1.2 Book Back Answers
7th Tamil Guide Term 1 Lesson 1
Tamil Nadu 7th Standard Tamil Book Term 1 எங்கள் தமிழ் Solution | Lesson 1.1
7th Standard Tamil Samacheer Kalvi Guide Term 1, Term 2, Term 3 Book Back and additional Questions and answers download pdf. 7th Tamil Term 1 Lesson 1 Unit 1.2 ஒன்றல்ல இரண்டல்ல Book Answers and solutions. Class 7 Tamil Book in answers download pdf. 7th All Subject Important Study Materials. 7th Tamil All Lessons. Answers.
7th Tamil Samacheer Kalvi Guide Unit 1.2. ஒன்றல்ல இரண்டல்ல
I. சொல்லும் பொருளும்
- ஒப்புமை – இணை
- முகில் – மேகம்
- அற்புதம் – விந்தை
- உபகாரி – வள்ளல்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ________
- கலம்பகம்
- பரிபாடல்
- பரணி
- அந்தாதி
விடை : பரணி
2. வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
- அகில்
- முகில்
- துகில்
- துயில்
விடை : முகில்
3. ‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
- இரண்டு + டல்ல
- இரண் + அல்ல
- இரண்டு + இல்ல
- இரண்டு + அல்ல
விடை : இரண்டு + அல்ல
4. ‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- தந்து + உதவும்
- தா + உதவும்
- தந்து + தவும்
- தந்த + உதவும்
விடை : தந்து + உதவும்
5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____
- ஒப்புமைஇல்லாத
- ஒப்பில்லாத
- ஒப்புமையில்லாத
- ஒப்புஇல
விடை : ஒப்புமையில்லாத
III. குறுவினா
1. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
- தமிழ்நாட்டில் வீசும் தென்றலில் தேன் மணம் கவழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.
2. ‘ஒன்றல்ல இரண்டல்ல ’ – பாடலில் இடம் பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.
- முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி.
- புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல்.
IV. சிறுவினா
1. தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை ?
- பகைவரை வென்று பாடுவது பரணி இலக்கியம்.
- பரிபாடல் கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, திருக்குறள், சங்க இலக்கியங்கள் – ஆகியன தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுகிறார்
ஒன்றல்ல இரண்டல்ல – கூடுதல் வினாக்கள்
I. பொருள் தருக
- முகில் – மேகம்
- உபகாரி – வள்ளல்
- அருள் – இரக்கம்
- சொல் – கூற
- கவி – கவிஞன்
II. பிரித்து எழுதுக
- ஒன்றல்ல = ஒன்று + அல்ல
- இரண்டல்ல = இரண்டு + அல்ல
- செங்கனி = செம்மை + கனி
- பெருஞ்செல்வம் = பெருமை + செல்வம்
III. எதிர்ச்சொல் தருக
- பெருமை x சிறுமை
- இயற்கை x செயற்கை
- புகழ் x இகழ்
- கனி x காய்
IV. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. தமிழக மன்னர்களும் வள்ளல்களும் ________________ மிக்கவர்களாக விளங்கினர்.
விடை : கொடைத்திறன்
2. முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் ________________
விடை : வேள்பாரி
3. புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் ________________
விடை : குமண வள்ளல்
4. ‘ஒன்றல்ல இரண்டல்ல’ பாடலில் ஆசிரியர் ________________
விடை : உடுமலை நாராயண கவி
5. பகைவரை வென்று பாடுவது ________________ இலக்கியம்
விடை : பரணி
6. உடுமலை நாராயண கவியின் இயற்பெயர் ________________
விடை : நாராயணசாமி
V. வினாக்கள்
1. தமிழ்நாட்டில் உள்ள வளங்கள் யாவை?
- நில வளம்
- நீர்வளம்
- பொருள் வளம்
- அருள் வளம்
2. தமிழ்மொழியிலுள்ள வளங்கள் யாவை?
- இலக்கிய வளம்
- இலக்கண வளம்
3. தமிழகத்தில் கொடைத்திறன் மிக்கவர்களாகத் திகழ்ந்தவர்கள் யாவர்?
- மன்னர்கள்
- வள்ளல்கள்
4. மழை மேகத்தை விட புகழ்பெற்றவன் யார்? அவன் செயல் யாது?
- மழை மேகத்தை விட புகழ் பெற்றவன் – வள்ளல் வேள்பாரி
- அவன் முல்லைக்கொடி படர்வதற்கு தன் விலை உயர்ந்த தேரை தந்தவர் ஆவார்
5. எங்கு தேன் மணம் கமழும்?
- தமிழகத்தில் வீசும் காற்றில் மணம் கமழும்
6. உடுமலை நாராயண கவி – குறிப்பு வரைக
- இயற்பெயர் – நாராயணசாமி
- சிறப்பு பெயர் – பகுத்தறிவுக் கவிராயர்
- பணி – தமிழ் திரைப்பட பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்
கூடுதல் வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம்
அ) பரிபாடல்
ஆ) பரணி
இ) சங்க இலக்கியங்கள்
ஈ) திருக்குறள்
Answer:
ஆ) பரணி
2.பொருத்துக.
1. பகைவரை வென்றதைப் பாடுவது – அ) பரிபாடல்
2. இசைப்பாடல் – ஆ) பரணி
3. வான்புகழ் கொண்டது – இ) சங்க இலக்கியங்கள்
4. அகம், புறம் மெய்ப்பொருளாகக் கொண்டது – ஈ) திருக்குறள்
அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4- ஈ
Answer:
அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ
3.பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர்
அ) பாரதியார்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
ஈ) உடுமலை நாராயணகவி
4.தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்
அ) பாரதியார்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
ஈ) உடுமலை நாராயணகவி
5.தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ்பெற்ற கவிஞர்
அ) பாரதியார்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
ஈ) உடுமலை நாராயணகவி
6.முல்லைக்குத் தேர் தந்து புகழ்பெற்றவன் ………………
அ) வேள்பாரி
ஆ) குமணன்
இ) அதியமான்
ஈ) பேகன்
Answer:
அ) வேள்பாரி
7.புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன் ……………..
அ) வேள்பாரி
ஆ) குமணன்
இ) அதியமான்
ஈ) பேகன்
Answer:
ஆ) குமணன்
8.இசைப்பாடல் இலக்கியம்
அ) பரிபாடல்
ஆ) பரணி
இ) சங்க இலக்கியங்கள்
ஈ) திருக்குறள்
Answer:
அ) பரிபாடல்
9.அகம், புறம் மெய்ப்பொருளாகக் கொண்ட இலக்கியம்
அ) பரிபாடல்
ஆ) பரணி
இ) சங்க இலக்கியங்கள்
ஈ) திருக்குறள்
Answer:
இ) சங்க இலக்கியங்கள்
10.வான்புகழ் கொண்ட இலக்கியம்
அ) பரிபாடல்
ஆ) பரணி
இ) சங்க இலக்கியங்கள்
ஈ) திருக்குறள்
Answer:
ஈ) திருக்குறள்
11.தானியக் கதிருக்குக் கூறப்பட்ட உவமை
அ) கனி
ஆ) தென்றல்
இ) பொன்
ஈ) தேன்
Answer:
இ) பொன்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ஒன்றல்ல இரண்டல்ல பாடலின் ஆசிரியர் …………………….
2. தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமின்றி …………………… வளமும் …………………… வளமும் நிரம்பியது.
3. தமிழக மன்னர்களும் வள்ளல்களும் ………………….. மிக்கவர்களாக விளங்கினர்.
4. ‘கவிச்சொல்லுக்கு’ என்ற சொல்லில் ‘கவி’ என்பதன் பொருள் ……………………..
5. முல்லைக்குத் தேர் கொடுத்தான் ……………………..
Answer:
1. உடுமலை நாராயண கவி
2. பொருள், அருள்
3. கொடைத்திறன்
4. புலவன்
5. வேள்பாரி
குறு வினா
1.மேகத்தை விடப் புகழ்பெற்றவன் யார்? அவன் செயல் யாது?
- மழை மேகத்தை விடப் புகழ்பெற்றவன் : வள்ளல் வேள்பாரி.
- அவன் செயல் : முல்லைக் கொடி படர்வதற்குத்தன் விலை உயர்ந்த தேரைக் கொடுத்தல்.
2.நன்செய் நிலம் என்றால் என்ன?
- ஆற்றுநீர், குளத்துநீர், கிணற்றுநீர் ஆகிய நீர்வள ஆதாரங்களைக் கொண்டு ஓர் ஆண்டுக்கு மூன்று போகங்கள் வரை வேளாண்மை செய்யும் நிலத்தொகுதி நன்செய் நிலம் எனப்படுகின்றது.
3.நன்செய் நிலப்பயிர்கள் யாவை?
- நெல், வாழை, கரும்பு.
சிறு வினா:
1.உடுமலை நாராயண கவி – குறிப்பு வரைக.
- இயற்பெயர் : நாராயணசாமி
- காலம் : 25.9.1899 – 23.5.1981
- சிறப்புப்பெயர் : பகுத்தறிவுக் கவிராயர்
- பணி : தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்
- சிறப்புகள் : கலைமாமணி பட்டம், 31.12.2008ல் இந்திய அஞ்சல் துறை இவரின் அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. உடுமலைப் பேட்டையில் சிலை மற்றும் மணிமண்டபத்தைத் தமிழக அரசு நிறுவியுள்ளது.