7th Tamil Guide Term 1 Unit 1.1
Tamil Nadu 7th Standard Tamil Book Term 1 இயல் 1.1 எங்கள் தமிழ் Solution | Lesson 1
7th Standard Tamil Samacheer Kalvi Guide Term 1, Term 2, Term 3 Book Back and additional Questions and answers download pdf. 7th Tamil Term 1 Lesson 1 இயல் 1.1 எங்கள் தமிழ் Book Answers and solutions. Class 7 Tamil Book in answers download pdf. 7th All Subject Important Study Materials. 7th Tamil All Lessons. Answers.
7th Tamil Guide Term 1 அமுதத்தமிழ் Unit 1.1 எங்கள் தமிழ்
I. சொல்லும் பொருளும்
- ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்
- குறி – குறிக்கோள்
- விரதம் – நோன்பு
- பொழிகிற – தருகின்ற
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ‘நெறி’ என்னும் சொல்லின் பொருள் _________
- வழி
- குறிக்கோள்
- கொள்கை
- அறம்
விடை : கொள்கை
2. ‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______
- குரல் + யாகும்
- குரல் + ஆகும்
- குர + லாகும்
- குர + ஆகும்
விடை : குரல் + ஆகும்
3. வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______
- வான்ஒலி
- வானொலி
- வாவொலி
- வானெலி
விடை : வானொலி
III. நயம் அறிக
1. ‘எங்கள் தமிழ்’ பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
- அருள்நெறி – அதுவே
- கொல்லா – கொள்கை
- எல்லா – என்றும்
- அன்பும் – அச்சம்,
- இன்புறவே – இசைந்திடும்
2. ‘எங்கள் தமிழ்’ பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
- அருள் – பொருள்
- தரலாகும் – குரலாகும்
- புகழாது – இகழாது
- யாரையும் – தாரையும்
- இன்புறவே – அன்பறமே
- அன்பும் – இன்பம்
3. ‘எங்கள் தமிழ்’ பாடலில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
- தரலாகும் – குரலாகும்
- ஊக்கிவிடும் – போக்கிவிடும்
- வானொலியாம்– தேன்மொழியாம்
- புகழாது – இகழாது
IV. குறுவினா
1. தமிழ் மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?
- நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தரும்
- கொல்லாமையைக் குறிக்கோளாகவும், பொய்யாமைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
- நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தை தூண்டும். அஃது அச்சத்தை போக்கி இன்பம் தரும்
2. தமிழ் மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.
- தமிழ்மொழியை கற்றோர், பொருள் (செல்வம்) பெறுவதற்காக யாரையும் புகழந்து பேசமாட்டார்
- தம்மையும் போற்றாதவரையும் இகழந்து பேச மாட்டார்
V. சிறுவினா
1. ‘எங்கள் தமிழ்’ பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
- நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தரும். அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.
- தமிழ்மொழியைக் கற்றோர், பொருள் (செல்வம்) பெறுவதற்காக யாரையும் புகழந்து பேசமாட்டார். தம்மையும் போற்றாதவரையும் இகழந்து பேச மாட்டார்
- கொல்லாமையைக் குறிக்கோளாகவும், பொய்யாமைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
- நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தை தூண்டும். அஃது அச்சத்தை போக்கி இன்பம் தரும்.
எங்கள் தமிழ் – கூடுதல் வினாக்கள்
I. பொருத்துக
- விரதம் – வழி
- நெறி – நோன்பு
- குறி – தருகின்ற
- பொழிகிற – குறிக்கோள்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. நாமக்கல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் ________________
விடை : வெ.இராமலிங்கனார்
2. ________________ என்றழைக்கப்படுபவர் வெ.இராமலிங்கனார்
விடை : காந்தியக் கவிஞர்
3. நோன்பு என்னும் பொருள் தரும் வேறொரு சொல் ________________
விடை : விரதம்
4. ________________ நம் அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும்
விடை : தமிழ்மொழி
5. எங்கள் தமிழ் மொழி ________________ போன்ற மொழியாகும்.
விடை : தேன்
III. வினாக்கள்
1. நாமக்கல் கவிஞரின் பன்முகத்தன்மையினை எழுதுக
- தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர்
2. நாமக்கல் கவிஞரின் படைப்புகள் யாவை?
- மலைக்கள்ளன்
- சங்கொலி
- என்கதை நாமக்கல் கவிஞர் பாடல்கள்
3. நாமக்கல் கவிஞர் குறிப்பு வரைக
- இயற்பெயர் – வெ.இராமலிங்கனார்
- சிறப்பு பெயர் – நாமக்கல் கவிஞர், காந்தியக் கவிஞர்
- சிறப்பு – தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர்
- படைப்புகள் – மலைக்கள்ளன், சங்கொலி, என்கதை, நாமக்கல் கவிஞர் பாடல்கள்
கூடுதல் வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பொருத்துக.
1. விரதம் – அ) வழி
2. நெறி – ஆ) நோன்பு
3. குறி – இ) தருகின்ற
4. பொழிகிற – ஈ) குறிக்கோள்
அ) 1-ஆ 2-அ 3-ஈ 4-இ
ஆ) 1-இ 2-அ 3-ஈ 4-ஆ
இ) 1-ஆ 2-ஈ 3-ஆ 4-இ
ஈ) 1-ஈ 2- அ 3-ஆ 4-இ
Answer:
அ) 1-ஆ 2-அ 3-ஈ 4-இ
2. நாமக்கல் கவிஞர் என்றழைக்கப்படுபவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வெ.இராமலிங்கனார்
ஈ) கவிமணி
Answer:
இ) வெ.இராமலிங்கனார்
3. காந்தியக் கவிஞர் என்றழைக்கப்படுபவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வெ.இராமலிங்கனார்
ஈ) கவிமணி
Answer:
இ) வெ.இராமலிங்கனார்
4. நாமக்கல் கவிஞர் படைப்புகள் அல்லாத ஒன்று
அ) மலைக்கள்ளன்
ஆ) என்கதை
இ) சங்கொலி
ஈ) காந்திபுராணம்
Answer:
ஈ) காந்திபுராணம்
5. “அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்” என்று பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வெ.இராமலிங்கனார்
ஈ) கவிமணி
Answer:
இ) வெ.இராமலிங்கனார்
6. “பொருள்பெற யாரையும் புகழாது
போற்றாதாரையும் இகழாது” – இவ்வடிகளில் அமைந்த முரண் சொற்கள்
அ) பொருள் – போற்றா
ஆ) யாரையம் – தாரையும்
இ) பொருள் – பெற
ஈ) புகழாது – இகழாது
Answer:
ஈ) புகழாது – இகழாது
7. “கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக” – இவ்வடிகளில் ‘நோன்பு’ என்னும் பொருள் தரும் சொல் எது?
அ) கொல்லா
ஆ) விரதம்
இ) குறி
ஈ) நெறி
Answer:
ஆ) விரதம்
8. “கத்தியின்றி இரத்த மின்றி
யுத்தமொன்று வருகுது” – இவ்வடிகளைப் பாடியவர்
அ) வெ.இராமலிங்கனார்
ஆ) பாரதிதாசன்
இ) கவிமணி
ஈ) பாரதியார்
Answer:
அ) வெ.இராமலிங்கனார்
கோடிட்ட இடங்களை நிரப்புக
- தமிகத்தின் முதல் அரசவைக் கவிஞர் …………….
- உலகமொழிகளில் தொன்மையானது ………………….
- ‘எங்கள் தமிழ்’ என்னும் தலைப்பில் கவிதை இடம்பெறும் நூல் ……………………
- மலைக் கள்ளன் , சங்கொலி , என் கதை என்னும் நூல்களை எழுதியவர் …………………..
- வெ.இராமலிங்கனாரை ……………….. என்றும் அழைப்பர் …………………
- நம் அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும். …………………..
- எங்கள் தமிழ்மொழி ……………….போன்ற மொழியாகும்
- விடுபட்ட சீர்களை நிரப்புக.
- …………… அறிவைத் தரலாகும்.
- அதுவே_ ………….. குரலாகும்
Answer:
1. கவிஞர் வெ.இராமலிங்கனார்.
2. தமிழ்மொழி
3. நாமக்கல் கவிஞர் பாடல்கள்
4. கவிஞர் வெ.இராமலிங்கனார் .
5. நாமக்கல் கவிஞர்
6. தமிழ்மொழி
7. தேன்
8. அருள்நெறி, தமிழன்
குறு வினா
1. நாமக்கல் கவிஞர், ‘காந்தியக் கவிஞர்’ என அழைக்கக் காரணம் யாது?
- காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் நாமக்கல் கவிஞர், ‘காந்தியக் கவிஞர்’ என அழைக்கப்படுகிறார்.
2. நாமக்கல் கவிஞரின் பன்முகத் தன்மையினை எழுதுக.
- தமிழறிஞர்
- கவிஞர் விடுதலைப் போரட்ட வீரர்
3. நாமக்கல் கவிஞரின் படைப்புகள் சிலவற்றைக் கூறுக.
- மலைக்கள்ளன்
- சங்கொலி
- என் கதை நாமக்கல் கவிஞர் பாடல்கள்
சிறு வினா
1. தமிழின் சிறப்புகள் சிலவற்றை எழுதுக.
- உலக மொழிகளில் தொன்மையானது தமிழ்மொழி.
- மென்மையும் இனிமையும் வளமையும் உடையது.
- வாழ்வுக்குத் தேவையான அன்பையும் அறத்தையும் கூறுவது.
- காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்று, என்றும் இளமையோடு திகழ்கிறது.
2. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் – குறிப்பு வரைக
- இயற்பெயர் : இராமலிங்கனார்
- சிறப்புப்பெயர்: நாமக்கல் கவிஞர், காந்தியக்கவிஞர்.
- சிறப்பு : தமிழறிஞர், கவிஞர், விடுதலைப்போராட்ட வீரர், தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்.
- படைப்புகள் : மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி