You are currently viewing 7th Tamil Book Back Answers Term 1 Unit 2.3

7th Tamil Book Back Answers Term 1 Unit 2.3

7th Tamil Book Back Answer Term 1 Unit 2.3

7th Standard Tamil Book Term 1 Unit 2.3 விலங்குகள் உலகம் Solution | Lesson 2.3

7th Standard Tamil Samacheer Kalvi Guide Term 1, 2nd Lesson Book Back and additional question and answers download pdf. Class 7 1st Term book back answers. Class 7 Tamil Book in answers download pdf. 7th All Subject Important Study Materials7th Tamil All Lessons. Answers.

7th Tamil Book Back Answer Term 1 Unit 2.1

அணில் நிழல் காடு > 2.3. விலங்குகள் உலகம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது ____.

  1. காது
  2. தந்தம்
  3. கண்
  4. கால்நகம்

விடை : தந்தம்

2. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் _______.

  1. வேடந்தாங்கல்
  2. கோடியக்கரை
  3. முண்டந்துறை
  4. கூந்தன்குளம்

விடை : முண்டந்துறை

3. ‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

  1. காடு + ஆறு
  2. காட்டு + ஆறு
  3. காட் + ஆறு
  4. காட் + டாறு

விடை : காடு + ஆறு

4. ‘அனைத்துண்ணி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. அனைத்து + துண்ணி
  2. அனை + உண்ணி
  3. அனைத் + துண்ணி
  4. அனைத்து + உண்ணி
  5. விடை : அனைத்து + உண்ணி

 

5. ‘நேரம் + ஆகி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

  1. நேரமாகி
  2. நேராகி
  3. நேரம்ஆகி
  4. நேர்ஆகி

விடை : நேரமாகி

6. ‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

  1. வேட்டைஆடிய
  2. வேட்டையாடிய
  3. வேட்டாடிய
  4. வேடாடிய

விடை : வேட்டையாடிய

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. ‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ – என்று அழைக்கப்படும் விலங்கு ___________

விடை : புலி

2. யானைக் கூட்டத்திற்கு ஒரு ___________ யானைதான் தலைமை தாங்கும்.

விடை : பெண்

3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ____________

விடை : உடலைப் போர்த்தியிருக்கும் அடர்ந்த முடிகள்

III. குறுவினா

1. காடு – வரையறுக்க.

மனித முயற்சியின்றி வளர்ந்த மரங்கள், செடிகள், கொடிகள், புல், புதர்கள், பூச்சியினங்கள், பறவைகள், விலங்குகள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடம் தான் இக்காடாகும்.

இடை இடையே காட்டாறுகளும், நீரோடைகளும் இருக்கும்.

மனிதனின் முதல் இருப்பிடம் காடு.

2. யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகின்றன?

யானைகள் பொதுவாக மனிதர்க்ளைத் தாக்குவது இல்லை. அவற்றின் வழித்தடங்களில் குறுக்கிடும்போது தான் மனிதர்களைத் தாக்குகின்றன. மேலும் யானைக்குக் கண்பார்வை குறைவு; கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதி.

3. கரடி ‘அனைத்துண்ணி’ என அழைக்கப்படுவது ஏன்?

கரடி பழங்கள், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான்கள் என ஆகியவற்றை உண்பதால் ‘அனைத்துண்ணி’ என அழைக்கப்படுகிறது

4. மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.

  • புள்ளிமான்
  • சருகுமான்
  • மிளாமான்
  • வெளிமான்

 

IV. சிறுவினா

புலிகள் குறித்து நீங்கள் அறிந்துகொண்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக.

புலிகள் தனித்து வாழும் இயல்புடையவை.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழு ம் . மற்ற புலிகள் அந்த எல்லைக்குள் செல்லாது.

கருவுற்ற புலியானது தொண்ணூறு நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும்.

குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து வரும். அவை வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளையும் பிரித்துத் தனியாக அனுப்பிவிடும்

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழ் நாட்டில் வனக் கல்லூரி அமைந்துள்ள இடம் _________________

விடை : மேட்டுப்பாளையம்

2. தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் முண்டந்துறை ஆகும்

விடை : முண்டந்துறை

3. நன்கு வளர்ந்த கரடியின் எடை _________________ கிலோ

விடை : 160

4. _________________ என்றழைக்கப்படும் விலங்கு புலி

விடை : பண்புள்ள விலங்கு

5. ஆழகில் சிந்த மான் வகை _________________

விடை : புள்ளிமான்

6. இயற்கை விஞ்ஞானிகள் காட்டுக்கு அரசனாக குறிப்பிடும் விலங்கு _________________

விடை : புலி

7. காட்டு விலங்குகளுக்கு _________________ தருவது சட்டப்படி குற்றமாகும்

விடை : துன்பம்

II. பிரித்து எழுதுக.

  1. நினைவாற்றல் = நினைவு + ஆற்றல்
  2. பண்புள்ள = பண்பு + உள்ள
  3. அனைத்துண்ணி = அனைத்து + உண்ணி

 

III. வினாக்கள்

1. முண்டந்துறை புலிகள் காப்பகம் பற்றி எழுதுக

தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் ஆகும். 895 ச.கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டு மாடு போன்ற அரியவகை விலங்கள் வாழ்கின்றன

2. உலகில் யானை வகைகள் எத்தனை? அவை யாவை?

உலகில் இரணடு வகையான யானைகள் உள்ளன.

  1. ஆசிய யானை
  2. ஆப்பிரிக்க யானை

3. புலியினை பண்புள்ள விலங்கு எனக் கூறக்காரணம் யாது?

புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவது இல்லை. எனவே , அதனைப் பண்புள்ள விலங்கு என்று நாங்கள் கூறுவோம்.

4. முண்டந்துறை புலிகள் காப்பகம் பற்றி குறிப்பு எழுதுக.

இது தமிழ்நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம்.

895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டுமாடு போன்ற அரிய விலங்குகள் வாழ்கின்றன.

5. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது?

தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் – மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்)

6. கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள் யாவை?

கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வனவியல் (BSc. Forestry), முதுநிலை வனவியல் (MSc. Forestry) ஆகிய படிப்புகள் உள்ளன.

7. உலகில் உள்ள சிங்கங்களின் வகைகளை கூறுக.

உலகில் ஆசியச் சிங்கம், ஆப்பிரிக்கச் சிங்கம் என இரண்டு வகைச் சிங்கங்கள் வாழ்கின்றன.

8. இந்தியாவில் ஆசியச் சிங்கங்கள் எங்கு காணப்படுகின்றன?

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ‘கிர் சரணாலயத்தில்’ மட்டுமே ஆசியச் சிங்கங்கள் உள்ளன.

9. இயற்கை விஞ்ஞானிகள் புலியை காட்டுக்கு அரசன் என காரணம் என்ன?

நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட புலியே உயர்ந்தது. எனவே இயற்கை விஞ்ஞானிகள் புலியையே காட்டுக்கு அரசன் என்கிறார்கள்.

10. யானை குணநலன்கள் பற்றி கூறுக.

யானைகள் எப்பொழுதும் கூட்டமாகத்தான் வாழும். இந்தக் கூட்டத்திற்கு ஒரு பெண் யானைதான் தலைமை தாங்கும்.

யானைகள் தங்களுக்குத் தேவையான தண்ணீர், உணவு ஆகியவற்றிற்காக இடம் பெயர்நது கொண்டே இருக்கும்.

ஒரு யானை நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல், இலை தழைகளை உணவாக உட்கொள்ளும். அதற்குக் குடிக்க 65 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

யானை மிகுந்த நினைவாறறல் கொண்ட விலங்கு. அது பாசம் நிறைந்த விலங்கும் கூட.

Leave a Reply