7th Social Science History guide Term 3 Lesson 2
7th Std Social Science Term 3 Guide History Lesson.2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
7th Social Science History guide Term 3 Lesson 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் Book Back Question and answers English Medium. 7th All subject Guide / Book Back answers. 7th Standard Social Science Text Book Download PDF.
7th Social Science Guide Term 3 – History Lesson 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. தென்னிந்தியாவில் உள்ள மிகப்ழமையான கட்டுமானக் கோவில் எது?
- கடற்கரைக் கோவில்
- மண்டகப்பட்டு
- கைலாசநாதர் கோவில்
- வைகுந்தபெருமாள் கோவில்
விடை : கடற்கரைக் கோவில்
2. மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால் எப்போது அங்கீகரிக்கப்பட்டது?
- 1964
- 1994
- 1974
- 1984
விடை : 1984
3. முற்காலச் சோழர் கட்டடக்கலையின் சிறப்பம்சம் யாது?
- புடைப்புச் சிற்பங்கள்
- விமானங்கள்
- பிரகாரங்கள்
- கோபுரங்கள்
விடை : விமானங்கள்
4. அழகிய நம்பி கோவில் எங்கமைந்துள்ளது?
- திருக்குறுங்குடி
- மதுரை
- திருநெல்வேலி
- திருவில்லிபுத்தூர்
விடை : திருக்குறுங்குடி
5. வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டியவர் யார்?
- மகேந்திரவர்மன்
- இரண்டாம் நந்திவர்மன்
- ராஜசிம்மன்
- இரண்டாம் ராஜராஜன்
விடை : இரண்டாம் நந்திவர்மன்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
- பல்லவ அரசர் மகேந்திரவர்மனால் முதன்முதலாய் கட்டப்பட்ட குடைவரைக் கோவில் ________________ என்ற இடத்தில் உள்ளது.விடை : மண்டகப்பட்டு
- முற்கால சோழர் கட்டடக்கலை ________________ பாணியைப் பின்பற்றியது விடை : செம்பியன் மகாதேவி
- மீராபாய் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மண்டபம் ________________ ஆகும்விடை : புதுமண்டபம்
- பிற்கால சோழர் காலம் பொலிவுமிக்க ________________ பெயர்பெற்றது விடை : கோபுரங்களுக்கு
- விஜயநகர கால கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் ________________ ஆகும்.விடை : மண்டபங்கள்
III. பொருத்துக
- ஏழு கோவில்கள் – மதுரை
- இரதிமண்டபம் – தாராசுரம்
- ஐராவதீஸ்வரர்கோவில் – திருக்குறுங்குடி
- ஆதிநாதர் கோவில் – கடற்கரைக்கோவில்
- புதுமண்டபம் – ஆழ்வார் திருநகரி
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – உ, 5 – அ
IV. தவறான இணையைக் காண்க
1.
- கிருஷ்ணாபுரம் கோவில் – திருநெல்வேலி
- கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி
- சேதுபதிகள் – மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்கள்
- ஜலகண்டேஸ்வரர் கோவில் – வேலூர
விடை : கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி
2. கூற்று : இராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன
காரணம் : உலகிலேயே மிக நீளமான கோவில் பிரகாரங்களை இக்கோவில் கொண்டுள்ளது.
- காரணம், கூற்றை விளக்கவில்லை
- காரணம், கூற்றை விளக்குகின்றது
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை : காரணம், கூற்றை விளக்குகின்றது
3. பொருந்தாததைக் கண்டுபிடி.
- திருவில்லிபுத்தூர் அழகர்கோவில்
- ஸ்ரீரங்கம்
- காஞ்சிபுரம்
- திருவண்ணாமலை
விடை : ஸ்ரீரங்கம்
4. பின்வரும் காலத்திற்குப் பெயரிடுக.
அ) கி.பி. 600 – 850 –
விடை : பல்லவன் காலம்
ஆ) கி.பி. 850 – 1100 –
விடை : முற்கால சோழர்கள் காலம்
இ) கி.பி. 1100 – 1350 –
விடை : பிற்கால சோழர்கள் காலம்
ஈ) கி.பி. 1350 – 1600 –
விடை : விஜய நகர / நாயக்கர் காலம்
5. சரியான வாக்கியங்களைக் கண்டுபிடி
- மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
- பல்லவர்கால கட்டடக்கலைப் பாணியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
- பின்ளையார்பட்டியிலுள்ள குகைக் கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும்.
- மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களான சேதுபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர்.
விடை : 1 மற்றும் 3
V. சரியா? தவறா? காண்
- இராஜசிம்மன் காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டினார்.விடை : சரி
- முற்கால பாண்டியர், பிற்காலச் சோழரின் சமகாலத்தவர் ஆவர்.விடை : தவறு
- பாண்டியக் கட்டடக்கலையின் சிறப்பம்சமாய் திகழ்வது குடைவரை மற்றும் கட்டுமானக் கோவில்கள் ஆகும்.விடை : சரி
- பிரகதீஸ்வரர் கோவில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.விடை : சரி
- தாதாபுரம் கோவிலில் விஜயநகர மற்றும் நாயக்கர் கால ஓவியங்களைக் காணமுடியும்.விடை : தவறு
VI. குறுகிய விடையளி
1. பஞ்சபாண்டவ இரதம் பற்றி குறிப்பு வரைக.
- தமிழ் திராவிட கோவில் கட்டடக் கலை மரபிற்கு மகாபலிபுரத்திலுள்ள ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ள பஞ்ச பாண்டவ இரதங்கள் என்றழைக்கப்படும்
- திரௌபதி இரதம், தர்மராஜா இரதம், பீமரதம், அர்ச்சுன இரதம், நகுல சகாதேவ இரதம் ஆகியன சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.
2. சித்தன்னவாசல் ஓவியங்கள் பற்றிக் கூறுக
- சித்தன்னவாசல் ஓவியங்கள் அஜந்தா ஓவியங்களுடன் சில ஒப்புமைகளைப் பெற்றுள்ளன. திருமலைபுரத்தில் கிடைத்துள்ள முற்காலப் பாண்டியர் ஓவியங்கள் சேதமடைந்த நிலையிலுள்ளன.
3. தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பம்சங்களைக் குறிப்பிடுக.
- தஞ்சாவூர் பெரிய கோவில் அது கட்டப்பட்டபோது ஒரு பெரிய கோவில் வளாகமாக இருந்தது.
- அதன் விமானம் (கர்ப்பகிரகத்தின் மேலுள்ள கட்டுமானம்) 216 அடிகள் உயரம் கொண்டதாகும்.
- உலகத்தில் மனிதனால் கட்டப்பட்ட மிக உயரமான சிகரங்களில் அதுவும் ஒன்று என்பதால் அது குறிப்பிடத் தகுந்ததாக உள்ளது.
- மிகவும் உயரமாக அமைந்திருப்பதால் அதன் சிகரம் தட்சிண மேரு என்றழைக்கப்படுகிறது.
- இங்குள்ள 16 அடி நீளமும் 13 அடி உயரமும் கொண்ட மிகப்பெரும் நந்தியின் சிலை ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும்.
4. இராமேஸ்வரம் கோவில் நம் கவனத்தை ஈர்க்கும் விதத்தைக் கூறுக.
- மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களாக இராமநாதபுரம் பகுதியை ஆண்டு வந்த சேதுபதிகள் இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலின் கட்டடக் கலைக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.
- இராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன.
- உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரங்கள் இவையே எனச் சொல்லப்படுகிறது.
- இக்கோவில் மூன்று பிரகாரச் சுற்றுக்களைக் கொண்டுள்ளது.
- வெளிப்பிரகாரத்தைத் தாங்கிநிற்கும் 1200க்கும் மேற்பட்ட தூண்கள் தனிச்சிறப்பு கொண்டனவாகும்.