7th Social Science History Guide Term 1 Unit 3
7th Standard Social Science History Guide Term 1 Lesson 3 தென்இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
7th Standard Social Science History Guide Term 1 Lesson 3 தென்இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Samacheer kalvi guide Book Back Question and answers Tamil Medium. 7th All subject Guide / Book Back answers. 7th Standard Social Science Text Book Download PDF.
7th Social Science History Guide Term 1 Unit 3 தென்இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?
- விஜயாலயன்
- முதலாம் ராஜராஜன்
- முதலாம் ராஜேந்திரன்
- அதிராஜேந்திரன்
விடை : விஜயாலயன்
2. கீழ்க்காணும் பாண்டிய அரசர்களுள், களப்பிரர் ஆட்சியை முடித்துவைத்தவர் என அறியப்படுபவர் யார்?
- கடுங்கோன்
- வீரபாண்டியன்
- கூன்பாண்டியன்
- வரகுணன்
விடை : கடுங்கோன்
3. கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?
- மண்டலம்
- நாடு
- கூற்றம்
- ஊர்
விடை : ஊர்
4. விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?
- வீர ராஜேந்திரன்
- ராஜாதிராஜா
- அதி ராஜேந்திரன்
- இரண்டாம் ராஜாதிராஜா
விடை : அதி ராஜேந்திரன்
5. சோழர்களின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?
- கண்ணாயிரம்
- உறையூர்
- காஞ்சிபுரம்
- தஞ்சாவூர்
விடை : தஞ்சாவூர்
6. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?
- சோழமண்டலம்
- பாண்டிய நாடு
- கொங்குப்பகுதி
- மலைநாடு
விடை : பாண்டிய நாடு
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
- _________ தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை நிர்மாணித்தார்.விடை : முதலாம் ராஜராஜன்
- __________வேதக் கல்லூரி ஒன்றை எண்ணாயிரத்தில் நிறுவினார்.விடை : முதலாம் ராஜராஜன்
- ___________ வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி ஆவார்.
விடை : ஜடில ராந்தக தநடுஞ்சடையன் (அ) முதலாம் வரகுணன்
- பாண்டியப் பேரரசின் அரசுச் செயலகம் ____________என அறியப்பட்டது.
விடை : எழுத்து மண்டபம்
III. பொருத்துக:
- மதுரை – உள்நாட்டு வணிகர்
- கங்கை கொண்ட சோழபுரம் * கடல்சார் வணிகர்
- அஞ்சு வண்ணத்தார் – சோழர்களின் தலைநகர்
- மணி – கிராமத்தார் – பாண்டியர்களின் தலைநகர்
Ans : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ
IV. சரியா? தவறா?
- டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு மதுரையில் உருவானது.விடை : சரி
- ’கூடல் நகர் காவலன்’ என்பது பாண்டிய அரசரின் பட்டமாகும்.விடை : சரி
- சோழ அரசு வைகையின் கழிமுகப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.விடை : தவறு
- முதலாம் குலோத்துங்கன் சாளுக்கிய – சோழ அரச வம்சத்தைச் சேர்ந்தவர். விடை : சரி
- சோழ அரசரின் மூத்த மகன் யுவராஜன் என அழைக்கப்பட்டார்.விடை : சரி
V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க: பொருத்தமான விடையை ( √ ) டிக் இட்டுக் காட்டவும்.
- பிற்காலச் சோழர்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
- அவர்கள் ஓர் உள்ளாட்சித் துறைத் தன்னாட்சி அமைப்பைக் கொண்டிருந்தனர்.
- அவர்கள் வலுவான கப்பற்படையைக் கொண்டிருந்தனர்.
- அவர்கள் பௌத்தத்தைப் பின்பற்றினர்.
- அவர்கள் பெரிய கோவில்களைக் கட்டினர்.
- 1, 2 மற்றும் 3
- 2, 3 மற்றும் 4
- 1, 2 மற்றும் 4
- 1, 3 மற்றும் 4
விடை : 1, 2 மற்றும் 4
2. ராஜேந்திர சோழனைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
- அவர் கங்கைகொண்ட சோழன் எனும் பட்டத்தைச் சூட்டிக்கொண்டார்.
- அவர் தெற்கு சுமத்ராவைக் கைப்பற்றினார்.
- அவர் சோழர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தினார் எனப் போற்றப்படுகிறார்.
- அவர் ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற அவருடைய கப்பற்படை உதவியது.
- 1 மற்றும் 2
- 3 மற்றும் 4
- 1, 2 மற்றும் 4
- இவை அனைத்தும்
விடை : இவை அனைத்தும்
3. கூற்று : யுவராஜாக்கள் மாநிலங்களின் ஆளுநர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.
காரணம்: நிர்வாகத்தில் பயிற்சி பெறுவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
- காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
- கூற்று தவறு, காரணம் சரி.
- கூற்றும் காரணமும் தவறு.
விடை : காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
4. கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவுகளை இறங்குவரிசையில் வரிசைப்படுத்தவும்.
- நாடு
- மண்டலம்
- ஊர்
- கூற்றம்
விடை
- மண்டலம்
- நாடு
- கூற்றம்
- ஊர்
5. கீழ்க்காணும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படி எழுதவும்.
- மாறவர்மன், வீரபாண்டியனைக் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார்.
- உள்நாட்டுப்போர் தொடங்கியது.
- மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது.
- மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு, மகன்கள். ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் சுந்தரபாண்டியன்.
- சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார்.
- மாலிக்கபூர் மதுரையின் மீது படையெடுத்தார்.
விடை :
- மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு, மகன்கள். ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் சுந்தரபாண்டியன்.
- மாறவர்மன், வீரபாண்டியனைக் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார்.
- உள்நாட்டுப்போர் தொடங்கியது.
- சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார்.
- மாலிக்கபூர் மதுரையின் மீது படையெடுத்தார்
- மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது.
VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:
1. சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?
- சந்தனக்கட்டை, கருங்காலிக்கட்டை, சுவையூட்டும் பொருட்கள், விலையுயர்ந்த ஆபரணக் கற்கள், மிளகு, எண்ணெய், நெல், தானியங்கள், உப்பு ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
2. ’சதுர்வேதி மங்கலம்’ என எது அழைக்கப்பட்டது?
- அரசர்களும் உள்ளூர் தலைவர்களும் உருவாக்கிய பிராமணர் குடியிருப்புகளை ’மங்கலம்’ அல்லது ’சதுர்வேதிமங்கலம்’ எனப்பட்டன
3. ‘காணிக்கடன்’ பற்றி எழுதுக.
- சோழஅரசின் பொதுவருவாய் முக்கியமாக நிலவரி மூலம் பெறப்பட்டது. நிலவரியானது ‘காணிக்கடன்’ என அழைக்கப்பட்டது.