You are currently viewing 7th Social Science Geography Guide Term 1 Unit 2

7th Social Science Geography Guide Term 1 Unit 2

7th Social Science Geography Guide Term 1 Unit 2

7th Standard Social Science Geography Guide Term 1 Lesson 2  நிலத்தோற்றங்கள்

7th Standard Social Science Geography Guide Term 1 Lesson 2  நிலத்தோற்றங்கள் Samacheer kalvi guide Book Back Question and answers Tamil Medium. 7th All subject Guide / Book Back answers. 7th Standard Social Science Text Book Download PDF.

Class 7 Social Science Geography Guide Term 1 Lesson 2 நிலத்தோற்றங்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் ———————— ஆகும்.

  1. வீழ்ச்சி குளம்
  2. வண்டல் விசிறி
  3. வெள்ளச் சமவெளி
  4. டெல்டா

விடை : வண்டல் விசிறி

2. குற்றால நீர்வீழ்ச்சி ——–ஆற்றுக்கு குறுக்காக அமைந்துள்ளது.

  1. காவேரி
  2. பெண்ணாறு
  3. சிற்றாறு
  4. வைகை

விடை : சிற்றாறு

3. பனியாற்றுபடிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் ——————— ஆகும்.

  1. சர்க்
  2. அரெட்டுகள்
  3. மொரைன்கள்
  4. டார்ன் ஏரி

விடை : சர்க்

4. மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்.

  1. அமெரிக்கா
  2. இந்தியா
  3. சீனா
  4. பிரேசில்

விடை : சீனா

5. பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று ——————————

  1. கடல் ஓங்கல்
  2. கடல் வளைவுகள்
  3. கடல் தூண்
  4. கடற்கரை

விடை : கடற்கரை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

  1. பாறைகள் உடைவதையும் மற்றும் நொறுங்குவதையும் —————– என்கிறோம். விடை : பாறைசிதைவுகள்
  1. ஒரு ஏரி அல்லது ஒரு கடலில் ஆறு சேரும் இடம் ——————– எனப்படுகிறது. விடை : ஆற்று முகத்துவாரம்
  1. காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் தென் ஆப்பிரிக்காவில் —————- பாலைவனத்தில் காணப்படுகிறது.விடை : கலஹாரி
  2. ஜெர்மனியில் காணப்படும் சர்க் —————— என்று அழைக்கப்படுகிறது.விடை : கார்சர்க்
  3. உலகின் மிக நீண்டகடற்கரை ———————- ஆகும்.விடை : மியாமி

III. பொருத்துக:

  1. பாறை உடைதல் மற்றும் நொறுங்குதல் – பனியாறுகள்
  2. கைவிடப்பட்ட மியாண்டர் வளைவுகள் – பிறை வடிவ மணற்குன்றுகள்
  3. நகரும் ஒரு பெரும் பனிக்குவியல் – காயல்
  4. பிறை வடிவ மணல் மேடுகள் – பாறைச் சிதைவுகள்
  5. வேம்பநாடு ஏரி – குதிரைக் குளம்பு ஏரி

Ans : 1-, 2-, 3-, 4-, 5-

IV. பின்வரும் தகவல்களை கருத்தில் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு

1. கூற்று (அ) முகத்துவாரப் பகுதியில் ஆறுகளால் டெல்டாக்கள் உருவாகின்றன.

காரணம் (க) கடல் பகுதியை ஆறு அடையும் போது ஆற்றின் வேகம் குறையும்.

  1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
  2. கூற்று சரி மற்றும் காரணம் தவறு
  3. கூற்று தவறு மற்றும் காரணம் சரி
  4. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

2. கூற்று (அ) கடல் வளைவுகள் இறுதில் கடல் தூண்களாகின்றன

காரணம் (க) கடல் தூண்கள் அலைகளின் படிவுகளால் ஏற்படுகின்றன.

  1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
  2. கூற்று சரி மற்றும் காரணம் தவறு
  3. கூற்று தவறு மற்றும் காரணம் சரி
  4. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விடை : கூற்று சரி மற்றும் காரணம் தவறு

V. பின் வருவனவற்றிற்கு விடையளிக்க.

1. அரித்தல் வரையறு.

  • நீர், காற்று, பனி மற்றும் கடல் அலைகள் என பல்வகைப்பட்ட காரணிகளால் புவியின் மேற்பரப்பு அடித்துச் செல்லப்படுவதை அரித்தல் என்கிறோம்

2. வீழ்ச்சி குளம் என்றால் என்ன?

  • நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளத்தை வீழ்ச்சி வீழ்ச்சி குளம் (Plunge pool) எனப்படுகின்றது.

3. குதிரைக் குளம்பு ஏரி எவ்வாறு தோன்றுகிறது?

  • ஆற்று வளைவுகள் இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் ஏற்படுவதால், ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் குறைந்து வருகின்றன. நாளடைவில், ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியாக உருவெடுக்கின்றது. இதுவே குதிரைக் குளம்பு ஏரி எனப்படுகிறது.

4. பனியாற்று அரித்தலினால் ஏற்படும் முதன்மை நிலத்தோற்றங்களை கூறிப்பிடவும்.

  • சர்க்
  • அரெட்டுகள்,
  • மொரைன்கள்

5. காளான் பாறைகள் பற்றி குறிப்பு எழுதுக.

  • காளான் வடிவ பாறைகளை பாலைவனப் பகுதிகளில் நம்மால் காணமுடியும். இவை காளான் பாறைகள் எனப்படுகின்றன.

6. காயல்கள் என்றால் என்ன? ஒரு உதாரணம் தருக.

  • கடற்கரையிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாக பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர் தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் (Lagoon) எனப்படும்.
  • எ.கா. ஒடிசாவிலுள்ள சிலிக்கா ஏரி, தமிழ்நாட்டிலுள்ள பழவேற்காடு ஏரி மற்றும் கேரளாவிலுள்ள வேம்பநாடு ஏரி.

VI. கீழ் குறிப்பிட்டவைகளை வேறுபடுத்துக

1. கிளையாறு மற்றும் துணையாறு

துணையாறு

  • ஒரு முதன்மை ஆற்றுடன் இணையும் அல்லது ஆற்றினுள் பாயும் ஓர் நீரோடை அல்லது ஓர் ஆறு.

கிளையாறு

  • ஒரு முதன்மை ஆற்றிலிருந்து பிரிந்து மற்றும் விலகிச் செல்லும் ஓர் ஆறு

2. ‘V’வடிவ பள்ளத்தாக்கு மற்றும் ‘U’வடிவ பள்ளத்தாக்கு.

‘V’வடிவ பள்ளத்தாக்கு

  • ஆற்றில் வேகமாக ஓடும் நீரானது பள்ளத்தாக்கை செங்குத்தாக அரித்து ஆழமாக்கும் இந்த பள்ளத்தாக்கு குறுகிய படுகை உடையதாக வடிகாலாயிடும் நிலப்பரப்பின் வழியாக செல்லும் போது பக்கவாட்டில் அரிப்பினை ஏற்படுத்தி வடிவ செங்குத்து மலைச்சரிவுகளை ஆற்றில் வேகமாக ஓடும் நீரானது பள்ளத்தாக்கை செங்குத்தாக அரித்து ஆழமாக்கும்.
  • இந்த பள்ளத்தாக்கு குறுகிய படுகை உடையதாக ‘V’வடிவில் காணப்படும். இதைத்தான் ‘V’வடிவ பள்ளத்தாக்கு என்கிறோம்

‘U’வடிவ பள்ளத்தாக்கு

  • ‘U’ வடிவ பள்ளத்தாக்கு பனியாற்றின் பக்கவாட்டு மற்றும் செங்குத்து அரிப்பினால் எற்படும் ஆழப்படுத்துதல் மற்றும் அகலப்படுததுதல் மூலம் உருவாகின்றன.
  • பனியாற்றினால் கடத்தப்படும் பெரிய மற்றும் சிறிய மணல் மற்றும் வண்டல் ஆகியன படிய வைக்கப்படுகின்றன.

3. கண்டப் பனியாறு மற்றும் மலைப்பனியாறு

கண்டப் பனியாறு

  • கண்டப்பகுதியில் பெரும் பரப்பில் பரவிக் காணப்படும் அடர்ந்த பனிப்படலம் கண்டப் பனியாறு எனப்படுகின்றது.
  • எ.கா. அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்து.

மலைப்பனியாறு

  • மலையிலிருந்து பள்ளத்தாக்கை நோக்கி நகரும் பனியாறு பள்ளத்தாக்கு பனியாறு எனப்படுகின்றது.
  • எ.கா. இமயமலைப் பகுதி மற்றும் ஆல்ப்ஸ் மலைப் பகுதி

VII. பத்தியளவில் விடையளி

1. ஆற்றின் அரிப்பால் தோன்றும் வேறுபட்ட நிலத்தோற்றங்களை விவாிக்க.

‘V’வடிவ பள்ளத்தாக்கு

  • ஆற்றில் வேகமாக ஓடும் நீரானது பள்ளத்தாக்கை செங்குத்தாக அரித்து ஆழமாக்கும் இந்த பள்ளத்தாக்கு குறுகிய படுகை உடையதாக வடிகாலாயிடும் நிலப்பரப்பின் வழியாக செல்லும் போது பக்கவாட்டில் அரிப்பினை ஏற்படுத்தி வடிவ செங்குத்து மலைச்சரிவுகளை ஆற்றில் வேகமாக ஓடும் நீரானது பள்ளத்தாக்கை செங்குத்தாக அரித்து ஆழமாக்கும். இந்த பள்ளத்தாக்கு குறுகிய படுகை உடையதாக ‘V’வடிவில் காணப்படும். இதைத்தான் ‘V’வடிவ பள்ளத்தாக்கு என்கிறோம்.

நீர்வீழ்ச்சி

  • நீரானது ஒரு செங்குத்துப் பாறையின் வன்சரிவின் விளிம்பில் அருவியாக வீழ்வதை நீர்வீழ்ச்சி எனலாம். மென்பாறைகள் அரிக்கப்படுவதால் நீர்வீழ்ச்சி தோன்றுகின்றது.
  • (உதாரணம்) தமிழ்நாட்டில் சிற்றாற்றின் குறுக்கே உள்ள குற்றால நீர்வீழ்ச்சி.

உட்பாய்த் தேக்கம்

  • நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளத்தை வீழ்ச்சி உட்பாய்த் தேக்கம் (Plunge pool) எனப்படுகின்றது.

ஆற்று வளைவுகள்

  • ஆறானது சமவெளிப் பகுதியை அடையும் போது அது சுழன்று, பெரிய திருப்பங்களுடன் செல்வதால் தோன்றும் பெரிய வளைவுகள் ஆற்று வளைவுகள் (Meanders) எனப்படுகின்றன.
  • (உதாரணம்) தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாற்று பகுதியில் காணப்படும் ஆற்று வளைவுகள்

குதிரைக் குளம்பு ஏரி

  • ஆற்று வளைவுகள் இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் ஏற்படுவதால், ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் குறைந்து வருகின்றன. நாளடைவில், ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியாக
  • உருவெடுக்கின்றது. இதுவே குதிரைக் குளம்பு ஏரி (Oxbow lake) எனப்படுகிறது.

2. காற்றின் செயல்களால் ஏற்படும் நிலத்தோற்றங்களை விளக்குக.

காளான் பாறைகள்

  • காளான் வடிவ பாறைகளை பாலைவனப் பகுதிகளில் நம்மால் காணமுடியும். இவை காளான் பாறைகள் எனப்படுகின்றன.

தனிக்குன்றுகள்

  • ஒரு தனித்து விடப்பட்ட எஞ்சிய குன்று வட்டமான தலைப்பகுதியுடன் நிற்கும் ஒரு தூண் போன்று காட்சி அளிப்பது காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் (Inselbergs) என்று அழைக்கப்படுகிறது.
  • (எ.கா.) தென் அமெரிக்காவில் கலஹாரி பாலைவனத்தில் காணப்படும் காற்றரிப்புத் தனிக்குன்றுகள்

மணல் குன்றுகள்

  • காற்று வீசும் போது மணலை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகின்றது. காற்றின் வீசுவது நிற்கும் போது மணலானது உயரம் குறைவான குன்றுகள் போன்று படியவைக்கின்றது. இப்படிவுகள் மணல் குன்றுகள் என அழைக்கப்படுகிறது.
  • பிறைச்சந்திர தோற்றமுடன் கூடிய மணல் மேடுகள் பிறைவடிவ மணல் குன்றுகள் எனப்படுகின்றன.

வண்டல் படிவுகள்

  • மணல் துகள்கள் மிக லேசாகவும் மற்றும் எடை குறைவாகவும் இருக்கும் போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்தி செல்கின்றது. இவ்வாறு கடத்தப்பட்ட மணல் ஒரு பெரும் பரப்பில் படிவதை காற்றடி வண்டல் படிவுகள் (Loess) எனப்படுகிறது.
  • காற்றடி வண்டல் படிவுகள் சீனாவில் அதிகமாக காணப்படுகின்றன.

3. அரெட்டுகள் எவ்வாறு தோன்றுகின்றன?

  • பனி உருகும் போது, சர்க்கானது நீரால் நிரப்பப்பட்டு அழகான ஏரிகளாக மலைப்பகுதிகளில் உருவாகின்றன. இந்த ஏரிகள் டார்ன் ஏரி என்று அழைக்கப்படுகிறது.
  • அடுத்தடுத்த இரண்டு சாக்குகள் ஒன்றை நொக்கி ஒன்று அரிக்கப்படும் போது, இதற்கு முன்னர் அமைந்த வட்டமான நிலத்தோற்றம் குறுகிய மற்றும் மலைச்சரிவான பக்கங்களுடன் கூடிய முகடுகளாக மாற்றம் அடைகின்றன.
  • இம்முகடுகள் அரெட்டுகள் என்ற கத்திமுனைக் குன்றுகளாக உருவெடுக்கின்றன.

Leave a Reply