You are currently viewing 7th Science Guide Term 3 Lesson 4

7th Science Guide Term 3 Lesson 4

7th Science Guide Term 3 Lesson 4

7th Standard Science Term 3 Solution Guide Tamil Medium | Lesson.4 அன்றாட வாழ்வில் வேதியியல்

7th Standard Science Samacheer kalvi guide Term 3 Lesson 4 அன்றாட வாழ்வில் வேதியியல் Book Back Question and answers Tamil Medium. 7th All subject Guide / Book Back answers. 7th Standard Science Text Book Download PDF.

7th Science Guide Term 3 பாடம் 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. நிமோனியா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சையில் பயனுள்ள ஒரு மருந்து _________

  1. ஸ்ட்ரெப்டோமைசின்
  2. குளோரோம்பெனிகால்
  3. பென்சிலின்
  4. சல்பாகுனிடின்

விடை : பென்சிலின்

2. ஆஸ்பிரின் ஒரு _________

  1. ஆண்டிபயாடிக்
  2. ஆண்டிபைரடிக்
  3. மயக்க மருந்து
  4. சைக்கீடெலிக்

விடை : ஆண்டிபைரடிக்

3. _________ என்பது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குகிறது

  1. அமிலநீக்கி
  2. ஆண்டிபைரடிக்
  3. வலிநிவாரணி
  4. ஆண்டிஹிஸ்டமின்

விடை : அமிலநீக்கி

4. ஒரு பொருள் தீப்பிடிக்க தேவையான மிகக் குறைந்த வெப்பநிலை அதன் _________ என அழைக்கப்படுகிறது

  1. கொதிநிலை
  2. உருகுநிலை
  3. சிக்கலானவெப்பநிலை
  4. எரிவெப்பநிலை.

விடை : எரிவெப்பநிலை.

5. மெழுகுவத்தியின் சுடரில் வெப்பமான பகுதி எது _________

  1. நீலம்
  2. மஞ்சள்
  3. கருப்பு
  4. உள் பகுதி

விடை : நீலம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. பென்சிலின் முதன்முதலில் கண்டுபிடித்தவா் _________ விடை : அலெகசாண்டர் ஃப்ளெம்மிங
  1. உலக ORS தினம் _________விடை : ஜூலை 29
  2. எரிதல் என்பது ஒருவேதிவினை, இதில்பொருள் _________ உடன் வினைபுரிகிறதுவிடை : ஆக்ஸிஜனேற்ற காரணி
  3. நீரில் நனைந்த காகிதத்தின் எரிவெப்பநிலை _________விடை : 451oF
  4. எண்ணெய்யால் உற்பத்தி செய்யப்படும் நெருப்பை _________ ஆல்கட்டுப்படுத்த முடியாதுவிடை : தண்ணீர்

III. கீழ்க்காணும் கூற்றுகள் சரியா, தவறா என ஆராய்க. கூற்று தவறு எனில், சரியானகூற்றை எழுதுக

  1. சளி மற்றும் புளூ போன்ற நோய்களை ஏற்படுதும் வைரஸ்களுக்கு ஆண்டிபயாடிக்குகள் மருந்துகள் வேலை செய்யும்.விடை : தவறு
  • சரியான விடை : சளி மற்றும் புளூ போன்ற நோய்களை ஏற்படுதும் வைரஸ்களுக்கு ஆண்டிபயாடிக்குகள் மருந்துகள் வேலை செய்யவதில்லை
  1. வலி நிவாரணி என்பது காய்ச்சலின் போது வெப்பநிலையைக் குறைக்கும் பொருட்கள்.விடை : தவறு
  • சரியான விடை : உடம்பெல்லாம் தனப்பு என்பது காய்ச்சலின் போது வெப்பநிலையைக் குறைக்கும் பொருட்கள்..
  1. அனைத்து எரிபொருள்களும் சுடரை உருவாக்குகின்றன.விடை : தவறு
  • சரியான விடை : அனைத்து எரிபொருள்களும் சுடரை உருவாக்குவதில்லை
  1. எரிதலுக்கு ஆக்ஸிஜன் அவசியம்விடை : சரி
  2. மரம் மற்றும் நிலக்கரியை எரிப்பதால் காற்றுமாசுபடுகிறதுவிடை : சரி

IV. பொருத்துக

  1. ஆண்டிபைரடிக் – வலியைக் குறைக்கும்
  2. வலி நிவாரணி – உடல் வெப்பநிலையைக் குறைக்கும்
  3. ஆன்டாசிட் – தன்னிச்சையான எரிப்பு
  4. பாஸ்பரஸ் – ORS தீர்வு
  5. கார்பன் டைஆக்சைடு – சுவாச பிரச்சனைக்கு வழி வகுக்கிறது

விடை : 1 – , 2 – , 3 – , 4 – , 5 –

V. ஒப்புமை

  1. சுடரின் உள் மண்டலம்: _________, சுடரின் வெளிமண்டலம்: _________ விடை : குறைந்த வெப்பம் (கருப்பு), அதிக வெப்பம் (நீலம்)
  1. டிஞ்சர் : _________. ஹிஸ்டமைன் : _________. விடை : நிறமி நாசினி, ஒவ்வாமை பாதிப்பு

VI. ஓரிரு சொற்களில் விடையளி

1. மனிதனில் கண்டறியப்பட்ட முதல் வைரஸ்நோய் _________ (மஞ்சள்காய்ச்சல் / டெங்குகாய்ச்சல்)

விடை : மஞ்சள் காய்ச்சல்

2. ORS – ன் விரிவாக்கம் _________________.

விடை : Oral Rehydration Solution (வாய்வழி நீரேற்ற கரைசல்)

3. கிருமி நாசினியாகவும் ஆண்டிசெப்டிக் ஆகவும் பயன்படக்கூடிய ஒரு மருந்தின் பெயரைக் குறிப்பிடுக?

பினாலிக் கரைசல்

4. டெட்டாலின் முக்கிய கூறுகள் யாவை?

  • குளோரோசைெலனோல் மற்றும் டெர்பென்கள்

5. எரிபொருளின் கலோரிஃபிக் மதிப்பின் அலகு என்ன?

  • எரிபொருள் கலோரிஃபிக் மதிப்பின் அலகு

6. எத்தனை வகையான எரிதல் உள்ளது?

  • எரிதலில் மூன்று வகை உள்ளது

7. நெருப்பை உற்பத்தி செய்வதற்கான அத்தியாவசிய தேவைகள் யாவை?

  • எரிபொருள், வெப்பம் மற்றும் ஆக்ஸிஜன்

VII. குறுகிய விடையளி

1. மருத்துவர்களைக் கலந்தாலோசிக்காமல் ஏன் மருந்துகள் எடுக்கக்கூடாது?

  • மருத்துவர்களைக் கலந்தாலோசிக்காமல் மருந்துகள் எடுக்கக்கூடாது ஏனென்றால் ஒரு நோய்க்கு ஒரு தவறான மருந்து தற்செயலாக சாப்பிட்டால், அது நோயைக் குணப்படுத்தாது, ஆனால் உண்மையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

2. கிருமிநாசினிகள் ஆண்டிசெப்டிக்லிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

ஆண்டிசெப்டிக்

கிருமிநாசினிகள்

1. அனைத்து ஆண்டிசெப்டிக்களும் கிருமிநாசினிகள் ஆகும்.

அனைத்து கிருமிநாசினிகளும் ஆண்டிசெப்டிக் அல்ல.

2. இது நேரடியாக உயிருள்ள செல்களின் மீது பயன்படுத்தப்படுகிறது.

இது உயிரற்ற பொருள் மீது தெளிக்கலாம்.

3. எ.கா. தோல் / சளி

எ.கா. மேற்பரப்பு, ஆய்வக மேசை, தரைகள்.

3. எரிதல் வெப்பநிலை என்றால் என்ன?      

  • ஒரு பொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலை அதன் எரிதல் வெப்பநிலை எனப்படும்.

4. 4.5 கிலோ எரிபொருள் முழுவதுமாக எரிந்து, உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு 1,80,000 kg என அளவிடப்படுகிறது என்றால், கலோரிஃபிக் மதிப்பு என்ன?

  • கலோரிஃபிக் மதிப்பு = 1, 80,000 / 4.5 = 40,000 KJ / Kg

VIII. விரிவாக விடையளி.

1. ஆண்டிபயாடிக் மற்றும் வலிநிவாரணி பற்றிச் சுருக்கமாக விளக்குங்கள்?

ஆண்டிபயாடிக்

  • சில தாவரங்களும், நுண்ணுயிரிகளும் நச்சுத்தன்மையுள்ள பாெருள்களை உற்பத்தி செய்கின்றன.
  • இந்தப் பாெருள்கள, மற்ற உயிரினங்களை அழிக்க உதவுகின்றன.
  • இவை நுண்ணுயிர் எதிர்ப்பிகளை என அழைக்கப்படுகின்றன. இன்று பல மருந்துத் தாெழிற்சாலைகள் ஆண்டிபயாட்டிக் மருந்துகளை செயற்கை முறையில் உற்பத்தி செய்கின்றன
  • உதாரணம் : குளாேராபினிகால் மற்றும் டெட்ராசைக்களின் பாேன்றவை புதிய வகை ஆண்டிபயாடிக்குகள் ஆகும்.

வலிநிவாரணி

  • வலிநிவாரணிகள் அல்லது வலிநீக்கிகள் எனபன நமது உடலிலிருந்து வெளியாகும் வலி-குறைக்கும் வேதிப்பாெருள்களாகும்.
  • அவை வெளியேறி வலி என்ற உணர்வைக் கட்டுப்படுத்துகிறது.
  • மைய நரம்பு மண்டலத்தில் நேரடியாக செயல்பாடாே அல்லது வலி உணரப்படும் புறநரம்பு இடங்களில் அதிகமாற்றம் இல்லாத, நிலையில் குறிப்பாக இவ்வகை வலிநீக்கிகள் செயல்படுகிறது.

2. மெழுகுவத்தி சுடரின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்க.