7th Science Guide Term 2 Lesson 6
7th Std Science Term 2 Solution | Lesson.6 கணினி வரைகலை
7th Standard Science Samacheer kalvi guide Term 2 Lesson 6 கணினி வரைகலை – Digital Painting Book Back Question and answers Tamil Medium. 7th All subject Guide / Book Back answers. 7th Standard Science Text Book Download PDF.
7th Science Guide Term 2 பாடம் 6 கணினி வரைகலை
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. Tux Paint எதற்காகப் பயன்படுகிறது?
- வண்ணம் தீட்ட
- நிரல் அமைக்க
- வருட
- PDF ஆக மாற்ற
விடை : வண்ணம் தீட்ட
2. Tux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டைப் (toolbar) பயன்படுகிறது?
- இடப்பக்க கருவிப் பட்டை
- வலப்பக்க கருவிப்பட்டை
- நடுப்பகுதி கருவிப்பட்டை
- அடிப்பகுதி கருவிப்பட்டை
விடை : இடப்பக்க கருவிப் பட்டை
3. முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?
- Ctrl + Z
- Ctrl + R
- Ctrl + Y
- Ctrl + N
விடை : Ctrl + Z
4. Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?
- வண்ணம் தீட்ட
- கணிதம் கற்க
- நிரல் பற்றி அறிய
- வரைகலையைக் கற்க
விடை : கணிதம் கற்க
5. Tux Math ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காகப் பயன்படுகிறது?
- எளிய கூட்டல்
- வகுத்தல்
- படம் வரைதல்
- பெருக்கல்
விடை : எளிய கூட்டல்
II. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க:
1. Tux Paint என்றால் என்ன?
- Tux Paint என்பது குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இலவச ஓவியப்பயிற்சி செயலியாகும்.
2. பனுவல் கருவியின் (Text Tool) பயன் என்ன?
- பனுவல் கருவியைப் பயன்படுத்தி எழுத்துகளைத் தட்டச்சு செய்யலாம்.
3. சேமிக்கப் பயன்படும் குறுக்குவழி விசை எது?
- சேமிக்கப் பயன்படும் குறுக்குவழி விசை Ctrl + S
4. Tux Math என்றால் என்ன?
- ‘Tux Math’ என்பது கணிதம் கற்பதற்கான காணொலி விளையாட்டாகும்.
- இது ஒரு மாற்றியமைக்கக் கூடிய இலவச மென்பொருளாகும்.
- கணக்கைச் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கற்கச் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
5. ரேஞ்சர் விளையாட்டின் பயன் யாது?
- 10 வரத்தக்க கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல்
6. கனிணியில் பயன்படுத்தப்படும் கருவிகளின் பெயர்களும் அவற்றின் குறுக்கு வழி விசைகள் பற்றி எழுதுக.
Tool Name | Keyboard Shortcut Key |
New | Ctrl+N |
Open | Ctrl+O |
Save | Ctrl+S |
Ctrl+P | |
Quit | Esc |
Undo | Ctrl+Z |
Redo | Ctrl+Y |
7. முன் செயல் நீக்கல் (Undo) பயன் பற்றி எழுதுக
- இக் கருவியினைப் பயன்படுத்தி முன்னர் செய்த செயலை நீக்கலாம்.
8. வடிவங்கள் (shapes) பயன்களை குறித்து எழுது
- இக்கருவியைப் பயன்படுத்தி நிரப்பப்பட்ட அல்லது நிரப்பப்படாத வடிவங்களை வரையலாம்.
9. தலைப்புத் திரை (Title Screen) பற்றி எழுதுக
- Tux Paint ஐ முதலில் தொடங்கும் போது, தலைப்புத் திரை தோன்றும். அவ்வாறு தோன்றிய பிறகு, விசைப் பலகையில் உள்ள ஏதேனும் ஒரு எழுத்துருவை அழுத்தவும் அல்லது சுட்டியைச் சொடுக்கித் தொடரவும். (ஏனெனில் 30 வினாடிகளுக்கு மேல் தலைப்புத் திரை தானாக மறைந்து விடும்.)
10. முதன்மை திரை (Main Screen) பிரிவுகள் யாவை
முதன்மை திரை பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
இடப்பக்கம் :
- கருவிப்பட்டை (Toolbar) கருவிப்பட்டை என்பது வரையவும் திருத்தங்கள் செய்யவும் பயன்படும்.
நடுப்பகுதி : படம் வரையும் பகுதி (Drawing Canvas)
- இப்பகுதி படம் வரைவதற்குப் பயன்படும். இதுவே திரையின் பெரும் பகுதியாகும்.
வலப்பக்கம் : பலவிதக் கருவிகள் (Selector) :
- இடது பக்கத்தில் தெரிவு செய்யும் கருவிக்கு பொருத்தமான பல்வேறு பொருட்கள் வலது பக்கத்தில் இடம்பெற்றிருக்கும். (எ.டு) கோட்டுக் கருவியைத் (Line tool) தெரிவு செய்தால் பொருத்தமான பல்வேறு கோடுகளை வலது பக்கத்தில் காணலாம். வடிவக் கருவியைத் (Shapes tool) தெரிவு செய்தால் பல்வேறு வடிவங்களைக் காணலாம்.
கீழ்ப்பகுதி :
- வண்ணங்கள் (Colours) திரையின் கீழ்ப்பகுதியில் பல வண்ணங்கள் இடம்பெற்றிருக்கும்.
அடிப்பகுதி :
- உதவிப்பகுதி (Help Area) திரையின் அடிப்பகுதியில் உள்ள பென்குயின் உருவமானது தேவையான உதவிகளையும் தகவல்களையும் வழங்கும்.