You are currently viewing 7th Science Guide Term 1 Unit 5

7th Science Guide Term 1 Unit 5

7th Science Guide Term 1 Unit 5

7th Standard Science Term 1 Unit 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

7th Standard Science Unit 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் Tamil Medium Guide Book Back Question and answers. 7th Science All Unit Book Back Answers Guide.  7th STD All Subject Text Book Download pdf. 7th Science Physics, Chemistry, Biology Guide Book in Answers. Class 1 to 12 All Subject Guide.

7th Science Guide Term 1 Unit 1

 

7th Science Guide Term 1 Unit 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது

  1. பிரையோபில்லம்
  2. பூஞ்சை
  3. வைரஸ்
  4. பாக்டீரியா

விடை : பிரையோபில்லம்

2. ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை

  1. ஸ்போர்கள்
  2. துண்டாதல்
  3. மகரந்தச் சேர்க்கை
  4. மொட்டு விடுதல்

விடை : மொட்டு விடுதல்

3. ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு

  1. வேர்
  2. தண்டு
  3. இலை
  4. மலர்

விடை : மலர்

4. மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை

  1. காற்று
  2. நீர்
  3. பூச்சிகள்
  4. மேற்கூறிய அனைத்தும்

விடை : மேற்கூறிய அனைத்தும்

5. பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்

  1. வெற்றிலை
  2. மிளகு
  3. இவை இரண்டும்
  4. இவை இரண்டும் அன்று

விடை : இவை இரண்டும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு ___________ விடை : மகரந்தத் தாள்
  2. ___________ என்பது சூலக வட்டத்தின் பருத்த அடிப்பகுதியாகும்விடை : சூலகம்
  3. கருவுறுதலுக்குப் பின் சூல் ___________ ஆக மாறுகிறது.விடை : விதை
  4. சுவாச வேர்கள் ___________ தாவரத்தில் காணப்படுகின்றன. விடை : அவிசினியா
  5. வெங்காயம் மற்றும் பூண்டு _________ வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்விடை : குமிழம்

III. பொருத்துக

  1. அல்லி – சப்பாத்திக் கள்ளி
  2. பெரணி – கிரைசாந்திமம்
  3. இலைத் தொழில் தண்டு – பூச்சிகளை ஈர்க்கிறது
  4. கொக்கி – ஸ்போர்
  5. தரைகீழ் ஓடு தண்டு – பிக்னோனியா

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ, 5 –

IV. சரியா? தவறா? தவறெனில் சரி செய்து எழுதுக

  1. முழுமையான மலர் என்பது நான்கு வட்டங்களைக் கொண்டது.விடை : சரி
  2. அல்லி இதழ், சூலக முடியை அடையும் நிகழ்ச்சிக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர்.விடை : சரி
  3. கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு: கேரட்.விடை : சரி
  4. இஞ்சி என்பது தரைகீழ் வேராகும்விடை : தவறு
  • சரியான விடை : இஞ்சி என்பது தரைகீழ் தண்டாகும்
  1. சோற்றுக்கற்றாழையின் இலைகள், நீரைச் சேமிப்பதால் சதைப் பற்றுள்ளதாக உள்ளன.விடை : சரி

V. பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடி.

  1. கூற்று தவறு, காரணம் சரி
  2. கூற்றும் தவறு, காரணமும் தவறு
  3. கூற்றும் சரி, காரணமும் சரி
  4. கூற்று சரி, காரணம் தவறு.

1. கூற்று : பூவில் நடக்கும் மகரந்தச் சேர்க்கையும் கருவுறுதலும், கனிகளையும், விதைகளையும் உருவாக்கும்.

காரணம் R : கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறும். சூலானது, விதையாக மாறும்.

விடை : கூற்றும் சரி, காரணமும் சரி

2. கூற்று A : கூம்புவடிவ வேருக்குஎடுத்துக்காட்டு கேரட் ஆகும் .

காரணம் R : இது வேற்றிட வேரின் மாறுபாடாகும்.

விடை :  கூற்று சரி, காரணம் தவறு.

VI. மிக குறுகிய விடையளிக்கவும்.

1. தாவரத்தில் உள்ள இரு வகையான இனப்பெருக்கத்தை எழுது.

  • பாலினப் பெருக்கம் – (எ.கா.) செம்பருத்தி
  • பாலில்லா இனப்பெருக்கம் – (எ.கா.) உருளைக்கிழங்கு

2. மலரின் இரு முக்கியமான பாகங்கள் யாவை?

  • மகரந்தத்தாள் வட்டம் – ஆண் இப்பெருக்க உறுப்பு
  • சூலக வட்டம் – பெண் இப்பெருக்க உறுப்பு

3. வரையறு – மகரந்தச் சேர்க்கை.

  • ஒரு மலரில், மகரந்தத்தூள் சூலகமுடியை அடையும் நிகழ்ச்சியே மகரந்தச்சேர்க்கை எனப்படும்.

4. மகரந்தச் சேர்க்கைக்குஉதவும் காரணிகள் யாவை?

  • காற்று
  • நீர்
  • பூச்சிகள்
  • விலங்குகள்
  • பறவைகள்

5. பின்வருவனவற்றிற்கு எடுத்துக்காட்டு தருக.

அ. கந்தம்

  • சேனைக்கிழங்கு
  • சேப்பங்கிழங்கு

ஆ. கிழங்கு

  • உருளைக் கிழங்கு.

6. பற்றுக் கம்பிகள் என்றால் என்ன?

  • ஏறு கொடிகளில் இலையும், இலையின் பாகங்களும் நீண்ட பற்றுக் கம்பிகளாக மாறியுள்ளன. இவை ஏறுகொடிகளைத் தாங்கிகளில் பற்றி ஏறுவதற்கு உதவுகின்றன.

(எ.கா.) பைசம் சட்டைவம் (பட்டாணி)

7. முட்கள் என்றால் என்ன?

  • இலைகள் முட்களாக மாறுவது முட்கள் எனப்படும்
  • இலைகள் முட்களாக மாறியதால், தண்டு பசுமையாகி ஒளிச்சேர்க்கை செய்து உணவு தயாரிக்கிறது.

எ.கா. கள்ளி வகைகள்.

VII. குறுகிய விடை தருக

1. இருபால் மலரை, ஒருபால் மலரிலிருந்து வேறுபடுத்து.

இருபால் மலர்கள்

ஒருபால் மலர்கள்

1. முழுமையான மலர்

முழுமையற்ற மலர்கள்

2. ஒரு மலரில் புல்லி, அல்லி, மகரந்தத்தாள் மற்றும் சூலகம் என்ற நான்கு வட்டங்கள் காணப்படும்

நான்கு வட்டங்களில் ஏதேனும் ஒரு சில வட்டங்கள் இருக்காது

3. இருபால் மலர்களாக இருக்கும்.

ஒருபால் மலர்களாக இருக்கும்.

2. அயல் மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன?

  • ஒரு தாவரத்தின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள் அதே இனத்தைச் சார்ந்த மற்றொரு தாவரத்தின் சூலகமுடியை அடையும் நிகழ்ச்சி அயல் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

3. இலைத் தொழில் இலைக்காம்பு பற்றி எழுது.

  • அகேஷியா ஆரிகுலிபார்மிஸ் தாவரத்தில்இலைக்காம்புஅகன்று,இலைபோல் மாறி இலை செய்ய வேண்டிய ஒளிச்சேர்க்கை வேலையை இலைக்காம்பு மேற்கொள்கிறது.

VIII. விரிவான விடையளிக்கவும்.

1. மகரந்தச் சேர்க்கை பற்றி விவரி

  • மகரந்தப் பையில் உள்ள மகரந்தத் தூள்கள், சூலக முடியை அடையும் நிகழ்ச்சிக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர்.

மகரந்தச் சேர்க்கை இரண்டு வகைப்படும்.

  1. இயற்கை மகரந்தச் சேர்க்கை
  2. செயற்கை மகரந்தச் சேர்க்கை.

இயற்கை மகரந்தச் சேர்க்கை

  • இயற்கையாகவே, பல்வேறு வழிமுறைகளில் மலரின் சூலகமுடியை மகரந்தத்தூள் சென்றடையும். இது இயற்கை மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
  • அயல் மகரந்தச் சேர்க்கை, தன் மகரந்தச் சேர்க்கை என இரு வகைப்படும்

தன் மகரந்தச் சேர்க்கை

அயல் மகரந்தச் சேர்க்கை

1. ஒரு மலரின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள் அதே மலரின் சூலகமுடியையோ அல்லது மற்றொரு மலரின் சூலகமுடியையோ அடைவது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும்

ஒரு தாவரத்தின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள் அதே இனத்தைச் சார்ந்த மற்றொரு தாவரத்தின் சூலகமுடியை அடையும் நிகழ்ச்சி அயல் மகரந்தச் சேர்க்கை எனப்படும

2. தன் மகரந்தச் சேர்க்கை நடக்க அதிக அளவில் மகரந்தத்தூள்கள் உற்பத்தியாக வேண்டும் என்ற அவசியமில்லை.

அயல் மகரந்தச் சேர்க்கை நடக்க அதிக அளவில் மகரந்தத்தூள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

3. இதனால் உருவாகும் புதிய தாவரங்களில் எவ்வித வேறுபாடுகளும் இருக்காது.

இதனால் உருவாகும் புதிய தாவரங்களில் புதிய பண்புகள் காணப்படும்.

செயற்கை மகரந்தச் சேர்க்கை

  • செயற்கை முறையில் மகரந்த தூள் சூலக முடியை சென்றடைவது செயற்கை மகரந்தச் சேர்க்கை ஆகும்

2. தரைகீழ்த்தண்டின்வகைகளை விளக்குக.

  • தரைகீழ் தண்டுகள் முழுவதுமாக மண்ணில் புதைந்திருக்கும். இவை வரம்புடைய வளர்ச்சி உடையவை

தரைகீழ்த் தண்டுகள் நான்கு வகைப்படும்.

  1. மட்டநிலத் தண்டு
  2. கந்தம்
  3. கிழங்கு
  4. குமிழம்

மட்டநிலத் தண்டு:

  • தண்டு தரைக்குக் கீழ் இருக்கும். இது கணுமற்றும் கணுவிடைகளோடு தடித்து காணப்படும். கணுவில் செதில் இலைகள் தோன்றும்.இதுதரைக்குக் கீழ்கிடைமட்டமாகவும், குறிப்பிட்ட வடிவமின்றியும் இருக்கும். இதன் தண்டில் உள்ள மொட்டுகள் முளைத்து புதிய தண்டு மற்றும் இலைகளை உருவாக்கும்.

எ.கா. இஞ்சி, மஞ்சள்

கந்தம்:

  1. இத்தரைகீழ்த் தண்டு வட்ட வடிவில் இருக்கும். இதன் மேற்பகுதியும், அடிப்பகுதியும் தட்டையாக இருக்கும். இது மட்ட நிலத் தண்டை விட மிகவும் குறுகிய தண்டாகும். இதன் செதில் இலைகளின் கோணத்திலிருந்து ஒன்று அல்லது பல மொட்டுகள் உருவாகும். ஒவ்வொரு மொட்டும் வளர்ந்து சேய்த் தாவரங்களை உருவாக்கும்.

எ.கா. – சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு

கிழங்கு:

  • இது கோள வடிவில் உணவைச் சேமிக்கும் தரை கீழ்த் தண்டாகும். இதன் தண்டில் வளர்வடங்கிய மொட்டுகள் காணப்படும். இவை கண்கள் எனப்படும். நாம், இக்கிழங்கின் ஒரு பகுதியை அதன் மொட்டோடு வெட்டி நடுவதன் மூலம் அவை முளைத்துப் புதிய தாவரத்தைத் தரும்.

எ.கா உருளைக் கிழங்கு.

குமிழம் :

  • இதன் தண்டு மிகவும் குறுகியது, தட்டு போன்றது. இதன் சதைப்பற்றான இலைகள் உணவைச் சேமிக்கும். குமிழத்தில் இரண்டு வகையான இலைகள் உள்ளன.
  • சதைப்பற்றுள்ள இலை
  • செதில் இலை

தண்டின் நுனியில் நுனி மொட்டு இருக்கும். இது எண்ணற்ற பல செதில் இலைகளால் மூடப்பட்டிருக்கும். குமிழத்தின் உள்ளே உள்ள இலைகள் உணவைச் சேமிக்கும்.

எ.கா. பூண்டு, வெங்காயம்.

IX. படம் சார்ந்த கேள்விகள்:

i. பின்வரும் படங்களைப் பார்த்து, அதன் பாகங்களை குறிக்க

  1. சூலக முடி 2. சூலகத் தண்டு 3. சூற்பை                 4. சூல்
  2. அல்லி 3. மகரந்த பை 4. மகரந்தக் கம்பி     8. புல்லி
  3. சூலகம் 10 மகரந்த்தாள்

ii. பின்வரும் தாவரங்களின் மாற்றுருக்களை எழுதுக.

தாவரங்களின் பெயர்

மாற்றுருக்கள்

1. ஆலமரம்

நெப்பன்தஸ்

2. நெப்பன்தஸ்

கொல்லிகள்

3. வெங்காயத்தாமரை

குட்டையான ஓடு தண்டுகள்

4. ஸ்டோலன்

தரையொட்டிய தண்டு

Leave a Reply