You are currently viewing 7th Science Guide Term 1 Unit 3

7th Science Guide Term 1 Unit 3

7th Science Guide Term 1 Unit 3

7th Standard Science Term 1 Unit 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

7th Standard Science Unit 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் Tamil Medium Guide Book Back Question and answers. 7th Science All Unit Book Back Answers Guide.  7th STD All Subject Text Book Download pdf. 7th Science Physics, Chemistry, Biology Guide Book in Answers. Class 1 to 12 All Subject Guide.

7th Science Guide Term 1 Unit 1

 

7th Science Guide Term 1 Unit 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. ஒரு கீழ்க்கண்டவற்றில் உலோகம் எது?

  1. இரும்பு
  2. ஆக்சிஜன்
  3. ஹீலிய
  4. தண்ணீர்

விடை : இரும்பு

2. ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றில் எதற்கு உதாரணம்?

  1. உலோகம்
  2. அலோகம்
  3. உலோகப்போலிகள்
  4. மந்த வாயுக்கள்

விடை : அலோகம்

3.  கீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்?

  1. கணித வாய்ப்பாடு
  2. வேதியியல் வாய்ப்பாடு
  3. கணிதக் குறியீடு
  4. வேதியியல் குறியீடு

விடை : வேதியியல் வாய்ப்பாடு

 

4. அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்

  1. குளோரின்
  2. சல்பர்
  3. பாதரசம்
  4. வெள்ளி

விடை : பாதரசம்

5. எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய, ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?

  1. அலோகம்
  2. உலோகம்
  3. உலோகப்போலிகள்
  4. வாயுக்கள்

விடை : உலோகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. பருப்பொருளின் மிகச் சிறிய துகள் ___________ விடை : அணு
  2. ஒரு கார்பன் அணு இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் கொண்ட சேர்மம் ___________ விடை : கார்பன் டை ஆக்ஸைடு
  1. ___________ மின்சாரத்தைக் கடத்தும் ஒரேயொரு அலோகம்.விடை : கிராபைட்
  2. தனிமங்கள் ___________ வகையான அணுக்களால் உருவாக்கப்படுகின்றன. விடை : ஒரே
  1. _________ தனிமம் லத்தீன் அல்லது கிரேக்கப் பெயர்களிலிருந்து பெறப்பட்டன. விடை : குறிீடுகள்
  1. இதுவரை அறியப்பட்ட தனிமங்களின் எண்ணிக்கை ____________விடை : 118
  2. தனிமங்கள் தூய பொருட்களின் ____________ வடிவம்.விடை : எளிமையான
  3. தனிமங்களின் பெயரை எழுதும்போது முதல் எழுத்தை எப்போதுமே ____________ எழுத்தால் எழுதவேண்டும்.விடை : பெரிய
  4. மூன்று அணுக்களுக்கு மேலாக உள்ள மூலக்கூறுகளை ____________ மூலக்கூறுகள் என்று அழைக்கலாம்.விடை : பல அணு
  5. ____________ வளிமண்டலத்தில் அதிகளவு காணப்படும் வாயு.விடை : நைட்ரஜன்

III. கொடுக்கப்பட்டுள்ள ஒப்புமையை முடிக்கவும்

1. பாதரசம் : அறை வெப்பநிலையில் திரவம் :: ஆக்சிஜன் :  ____________

விடை : அறை வெப்பநிலையில் வாயு

2. அளவு  மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் : ____________ :: மின்சாரத்தைக்

கடத்தும் உலோகம் : தாமிரம்

விடை : கிராஃபைட்

3. தனிமங்கள் : இணைந்து சேர்மங்களை உருவாக்குகின்றது :: சேர்மங்கள் : : ____________ :

விடை : இணைந்து கலவைகளை உருவாக்கிறது

4. அணுக்கள் : தனிமத்தின் அடிப்படை துகள் :: ____________ : சேர்மங்களின் அடிப்படைத் துகள். 

விடை : மூலக்கூறுகள்

IV. சரியா? தவறா? தவறெனில் சரி செய்து எழுதுக

  1. இரண்டு வேறுபட்ட தனிமங்களில் ஒரே விதமான அணுக்கள் இருக்கும்.

விடை : தவறு

  • சரியான விடை : இரண்டு வேறுபட்ட தனிமங்களில் வேறு விதமான அணுக்கள் இருக்கும்.
  1. தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் ஒரு தூய பொருளாகும்.விடை : சரி

 

  1. அணுக்கள் தன்னிச்சையாக இருக்க முடியாது; அவை ஒரு குழுவாக இருக்கும் அதற்கு மூலக்கூறுகள் என்று பெயர்.விடை : தவறு
  • சரியான விடை : அணுக்கள் தன்னிச்சையாக இருக்க முடியும்
  1. சோடியம் குளோரைடில் (NaCl) ல் ஒரு சோடியம் மூலக்கூறு மட்டுமே உள்ளது விடை : சரி
  1. ஆர்கான் வாயு ஓரணு வாயுவாகும்.விடை : சரி

V. சுருக்கமாகப் பதிலளிக்கவும்.

1. கீழ்க்கண்ட சேர்மங்களின் வேதியியல் வாய்ப்பாட்டையும், அதில் அடங்கியுள்ள தனிமங்களின் பெயர்களை எழுதவும்.

சேர்மங்கள்

வேதியியல் வாய்ப்பாடு

தனிமங்களின் பெயர்கள்

1. சோடியம் குளோரைடு

Nacl

சோடியம், குளோரின்

2. பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

KoH

பொட்டாசியம், ஆக்சிஜன், ஹைட்ரஜன்

3. கார்பன் டை ஆக்ஸைடு

CO2

கார்பன், ஆக்சிஜன்

4. கால்சியம் ஆக்ஸைடு

CaO

கால்சியம், ஆக்சிஜன்

5. சல்பர் டை ஆக்ஸைட

SO2

சல்பர், ஆக்சிஜன்

2. கீழ்க்கண்ட மூலக்கூறுகளைத் தனிமங்கள் மற்றும் சேர்மங்களின் மூலக்கூறுகளாக வகைப்படுத்தவும்.

  

சேர்மங்களின் மூலக்கூறுகள்

தனிமங்களின் மூலக்கூறுகள்

3. வேதியியல் வாய்ப்பாடு என்ன என்பதைப் புரிந்து கொண்டாய்? இதன் முக்கியத்துவம் என்ன?

  • வேதியியல் வாய்ப்பாடு என்பது தனிமம் அல்லது சேர்மத்தினைக் குறிக்கக்கூடிய குறியீட்டு முறையாகும்.
  • இது ஒரு தனிமத்தில் உள்ள மூலக்கூறுகள் மற்றும் அணுக்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்களை வழங்குகிறது.

4. கீழ்க்கண்டவற்றை தக்க உதாரணத்துடன் வரையறு.

  1. தனிமம்
  • பருப்பொருளின் எளிமையான வடிவம் தனிமம் என அழைக்கப்படுகிறது.
  • பிரிக்க இயலாத வேதிப்பொருள் தனிமம் ஆகும்

எ.கா. இரும்பு

  1. சேர்மம்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களின் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வேதி பிணைப்பின் மூலம் இணைந்து கிடைக்கும் தூயபொருள் சேர்மம் ஆகும்.

எ.கா. நீர்

  1. உலோகம்

தகடாக மாற்றக்கூடிய பல்வேறு வடிவங்களைப் பெறத்தக்க வகையில் அமைந்துள்ள பொருள்கள் உலோகங்கள் என அழைக்கப்படுகின்றன

எ.கா. இரும்பு

  1. அலோகம்

பொதுவாக அலோகங்கள் பளபளப்பு தன்மையற்ற மற்றும் மிருதுவான தனிமங்கள் ஆகும்

எ.கா. கார்பன்

  1. உலோகப் போலிகள்

உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளை வெளிப்படுத்தும் தனிமங்கள் உலோகப்போலி எனப்படும்.

சிலிக்கன், ஆர்சனிக், ஆன்டிமணி மற்றும் போரான் ஆகியவை உலோகப்போலிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

5. கீழ்க்கண்ட தனிமங்களின் பெயர்களை எழுதி அவற்றைத் திண்மம், திரவம் மற்றும் வாயு அடிப்படையில் வகைப்படுத்தவும்.

அலுமினியம், கார்பன், குளோரின், பாதரசம், ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்.

திண்மம்

  • அலுமினியம்
  • கார்பன்

திரவம்

  • பாதரசம்

வாயு

  • குளோரின்
  • ஹைட்ரஜன்
  • ஹீலியம்

6. கீழ்க்கண்ட தனிமங்களை உலோகம், அலோகம் மற்றும் உலோகப் போலிகள் என வகைப்படுத்துக.

சோடியம், பிஸ்மத், வெள்ளி, நைட்ரஜன், சிலிக்கான், கார்பன், குளோரின், இரும்பு மற்றும் தாமிரம்.

உலோகம்

  • சோடியம்
  • வெள்ளி
  • இரும்பு
  • தாமிரம்.

அலோகம்

  • நைட்ரஜன்
  • கார்பன்
  • குளோரின்

உலோகப் போலிகள்

  • பிஸ்மத்
  • சிலிக்கான்

7. கீழ்க்கண்டவற்றை தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் என வகைப்படுத்துக.

தண்ணீர், சாதாரண உப்பு, சர்க்கரை, கார்பன்டை ஆக்சைடு, அயோடின் மற்றும் அலுமினியம்.

தனிமங்கள்

  • தண்ணீர்
  • அலுமினியம்

சேர்மங்கள்

  • சாதாரண உப்பு
  • சர்க்கரை
  • கார்பன்டை ஆக்சைடு
  • அயோடின்

8. கீழ்க்கண்ட தனிமங்களின் வேதியியல் குறியீட்டை எழுதுக.

  1. ஹைட்ரஜன்
  • H2
  1. நைட்ரஜன்
  • N2
  1. ஓசோன்
  • O3
  1. 4. சல்பர்
  • S8

9. தனிமங்கள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்களைக் கொடுக்கவும்.

  • பருப்பொருளின் எளிமையான வடிவம் தனிமம் என அழைக்கப்படுகிறது.
  • பிரிக்க இயலாத வேதிப்பொருள் தனிமம் ஆகும்

எ.கா. இரும்பு. வெள்ளி

10. மூலக்கூறு வரையறு.

  • ஒரு அணுவானது மற்றொரு அணு அல்லது அணுக்களுடன் இணைந்து உருவாக்கும் கூட்டுப் பொருள் மூலக்கூறு என அழைக்கப்படுகிறது.

11. சேர்மங்கள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் கொடுக்கவும்.

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களின் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வேதி பிணைப்பின் மூலம் இணைந்து கிடைக்கும் தூயபொருள் சேர்மம் ஆகும்.

எ.கா. நீர், சாதரண உப்பு

12. லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட தனிமங்களின் பெயர்களை எழுதுக.

தனிமத்தின் பெயர்

இலத்தீன்

குறியீடு

தங்கம்

ஆரும்

Au

தாமிரம்

குப்ரம்

Cu

13. ஒரு தனிமத்தின் அணுக்கட்டு எண் என்றால் என்ன?

  • வேதியியலில் அணுக்கட்டு எண் என்பது ஒரு தனிமத்தில், சேர்மத்தில் அல்லது பொருளில் அடங்கியுள்ள ஒட்டுமொத்த அணுக்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.

14. கந்தக அமிலத்தின் (H2SO4 ) அணுக்கட்டு எண்ணைக் கணக்கிடுக.

  • கந்தக அமிலத்தில் (H2SO4) இரண்டு ஹைட்ரஜன் அணுவும், ஒரு சல்பர் அணுவும் மற்றும் நான்கு ஆக்சிஜன் அணுவும் உள்ளன.
  • ஆகவே கந்தக அமிலத்தினுடைய அணுக்கட்டு எண் 2+1+4 = 7 ஆகும்.

VI. விரிவான விடையளிக்கவும்.

1. உலோகங்கள் மற்றும் அலோகங்கள் வேறுபடுத்துக.

உலோகங்கள்

அலோகங்கள்

1. உலோகங்கள் பளபளப்பான மேற்பரப்பைக் கொண்டவை

அலோகங்கள் பளபளப்புத் தன்மையற்றவை

2. இவை பொதுவாகக் கடினமானவை

இவை பொதுவாக மிருதுவானவை

3. அநேக உலோகங்கள் வளையக்கூடிய தன்மை கொண்டவை

அலோகங்கள் வளையும் தன்மையற்றவை

4. தகடாகவும், கம்பியாகவும் நீட்டலாம்

தகடாகவும், கம்பியாகவும் நீட்ட இயலாது

பெரும்பாலான உலோகங்கள் மின்சாரத்தை நன்கு கடத்தக்கூடியவை

அலோகங்கள் மின்சாரத்தை அரிதிற் கடத்தும் தன்மையுடையவை

வெப்பத்தை நன்கு கடத்தும்

வெப்பத்தை அரிதிற் கடத்தும்

உலோகங்களைத் தட்டும்போது ஒலியெழுப்பும். ஆகையால் மணிகள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

ஒலியெழுப்பும் தன்மையற்றத

2. சேர்மங்களின் பண்புகளை விவரிக்கவும்.

  • தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இணைந்து சேர்மங்களை உருவாக்குகின்றன.
  • ஒரு சேர்மத்தின் பண்புகள் அதனை உருவாக்கிய தனிமங்களின் பண்புகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன.
  • சேர்மங்களை இயற்பியல் முறையில் பிரிக்க இயலாது. ஏனெனில் இவற்றின் தனிமங்கள் வேதி பிணைப்பில் பிணைக்கப்பட்டுள்ளன.
  • சோடியம் குளோரைடை வடிகட்டுதல் போன்ற இயற்பியல் முறையால் பிரிக்க இயலாது.
  • சேர்மங்களை வேதியியல் முறையில் மட்டுமே அதன் உறுப்புக் கூறுகளாகப் பிரிக்க இயலும்.

3. தனிமங்களின் குறியீடுகளை எழுதக்கூடிய பல்வேறு விதமான  வழிமுறைகளை விவரிக்கவும். பொருத்தமான உதாரணங்களைக் கொடுக்கவும்.

  • தனிமங்களின் குறியீட்டில் ஒன்று அல்லது இரண்டு எழுத்துகள் மட்டுமே இடம்பெற வேண்டும்
  • பெரும்பாலான தனிமங்களின் குறியீடுகள் அவற்றின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்து கொண்டு குறிக்கப்படுகிறது.
    • உதாரணமாக ஆக்சிஜனின் குறியீடு O எனவும், ஹைட்ரஜனின் குறியீடு H எனவும் குறிக்கப்படுகின்றது.
  • ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும்போது அத்தனிமத்தின் முதல் இரண்டு எழுத்துகளைக் குறியீடாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அவ்வாறு எழுதும்போது முதல் எழுத்தைப் பெரிய எழுத்திலும், இரண்டாவது எழுத்தைச் சிறிய எழுத்திலும் எழுத வேண்டும்.
    • உதாரணமாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் என்ற இரண்டு தனிமங்களின் முதல் எழுத்தும் Hல் தொடங்குவதால், ஹைட்ரஜனை H எனவும் ஹீலியத்தை He எனவும் குறிக்கிறோம். அதேபோல் கார்பனின் குறியீடு C, கால்சியம், குளோரின், குரோமியத்தின் குறியீடுகள் முறையே Ca, Cl, Cr என்று குறிக்கப்படுகின்றன.
  • சில தனிமங்களின் குறியீடுகள் அவற்றின் லத்தீன் பெயர்களிலிருந்து பெறப்பட்டவை.
    • உதாரணமாக, தங்கத்தின் குறியீடு Au என்பது அதன் லத்தீன் பெயரான ‘ஆரும்’ என்பதிலிருந்தும், தாமிரத்தின் குறியீடு Cu அதன் இலத்தீன் பெயரான ‘குப்ரம்’ என்பதிலிருந்தும் பெறப்பட்டது ஆகும்.

4. தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் வேறுபடுத்துகம்.

தனிமங்கள்

சேர்மங்கள்

1. தனிமங்கள் பருப்பொருளின் எளிமையான வடிவமாகும்.

சேர்மங்கள் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் இணைவதின் மூலம் உருவாகும் ஒரு வேதியியல் பொருளாகும்.

2. தனிமங்கள் இணைந்து சேர்மங்களை உருவாக்குகின்றன.

சேர்மங்களை தனிமங்களாகப் பிரிக்க இயலும்.

3. தனிமங்களில் அணுக்கள் அடிப்படைத் துகளாகும்.

சேர்மங்களில் மூலக்கூறு அடிப்படைத் துகளாகும்.

5. சேர்மங்களின் ஏதாவது ஐந்து பண்புகளை எழுதவும்.

  • தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இணைந்து சேர்மங்களை உருவாக்குகின்றன.
  • ஒரு சேர்மத்தின் பண்புகள் அதனை உருவாக்கிய தனிமங்களின் பண்புகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன.
  • சேர்மங்களை இயற்பியல் முறையில் பிரிக்க இயலாது.
  • சேர்மங்களை வேதியியல் முறையில் மட்டுமே அதன் உறுப்புக் கூறுகளாகப் பிரிக்க இயலும்.
  • சேர்மங்கள் அவை இணைந்து உருவான தனிமங்களின் பண்புகளில் இருந்து முற்றிலம் மாறுபட்ட பண்புகளை வெளிப்படுத்தகின்றன.

6. உலோகம் மற்றும் அலோகத்தை ஒப்பிட்டு அதன் பண்புகளைப் பட்டியலிடவும். ஒவ்வொன்றிற்கும் மூன்று உதாரணங்களைக் கொடுக்கவும்.

உலோகங்கள்

அலோகங்கள்

1. பொதுவாக உலோகங்கள் கடினமானவை மற்றும் பளபளப்பானவை. விதி விலக்காகச் சோடியம் மென்மையான உலோகம் ஆகும

பொதுவாக அலோகங்கள் மிருதவானவை மற்றும் பளபளப்பு தன்மையற்றவை. விதி விலக்காகச் வைரம் பளபளப்பான அலோகம் ஆகும

2. பாதரசம் தவிர மற்ற அனைத்து உலோகங்களும் அறை வெப்பநிலையில் திண்ம நிலையில் காணப்படுகின்றன..

ஆச்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் குளோரின் போன்றவை அறை வெப்பநிலையில் வாயு நிலையில் உள்ளன. கார்பன், அயோடின், சல்பர் மற்றம் பாஸ்பரஸ் போன்றவை அறைவெப்பநிலையில் திண்ம நிலையில் உள்ள அலோகங்கள் ஆகும். அறை வெப்பநிலையில் உள்ள ஒரே அலோகம் புரோமின் ஆகும்

3. இவற்றைக் கம்பியாக நீட்ட முடியும்

இவற்றைக் கம்பியாக நீட்ட முடியாது

4. இவை மின்னோட்டம் மற்றும்  வெப்பத்தினை நன்கு கடத்தக்கூடிய கடத்திகளாகும்.

எ.கா. தாமிரம், காரீயம், டின், நிக்கல், இரும்பு,

அலோகங்கள் வெப்பம் மற்றும் மின்சாரத்தை கடத்தா அரிதிற் கடத்தியாகும். இருந்தபோதிலும் கார்பனின் புறவேற்றுமை வடிவமான கிராபைட் நன்கு மின்சாரத்தை கடத்தக்கூடிய கடத்தியாகும்

எ.கா. கார்பன், சல்பர், அயோடின்

7. உலோகப் போலிகளின் பண்புகளை எழுதவும்.

  • உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளை பெற்றுள்ளன
  • அறைவெப்பநிலையில் உலோகப்போலிகள் திண்ம நிலையில் இருக்கும்
  • உலோகப்போலிகளில் சிலிக்கன், ஜெர்மானியம் குறைந்த கடத்திகள் என அழைக்கப்படுகின்றன.
  • உலோகப்போலிகள் உலோகத்துடன் இணைந்து உலோகக் கலவையை உருவாக்குபவை

VII. வாக்கியத்தைச் சரியான வடிவத்தில் எழுதவும்.

1. தனிமங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களைக் கொண்டது, சேர்மங்கள் ஒரேவகையான அணுக்களை மட்டும் கொண்டது.

  • சேர்மங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களைக் கொண்டது, தனிமங்கள் ஒரேவகையான அணுக்களை மட்டும் கொண்டது.

IX. காரணம் மற்றும் கூற்று கேள்விகள்.

வழிமுறை: பின்வரும் வழிமுறைகளைப் பார்க்கவும்:

  1. இரண்டு கூற்றுகளும் சரி மற்றும் இரண்டாவது கூற்று முதல் கூற்றிற்கான சரியான விளக்கம்.
  2. இரண்டு கூற்றுகளும் சரி ஆனால் இரண்டாவது கூற்று முதலாம் கூற்றிற்குச் சரியான விளக்கமல்ல.
  3. முதல் கூற்று தவறானது இரண்டாம் கூற்று சரியானது.
  4. இரண்டு கூற்றுகளும் தவறானது.

முதல் கூற்று 

இரண்டாம் கூற்று 

1. ஆக்சிஜன் ஒரு சேர்மம்

ஆக்சிஜனை எளிய வகையில் உடைக்க முடியாது.

2. ஹைட்ரஜன் ஒரு தனிமம்

ஹைட்ரஜனை எளிய வகையில் உடைக்க முடியாது.

3. காற்று ஒரு சேர்மம் ஆகும்

 காற்றில் கரியமில வாயு உள்ளது.

4. காற்று தனிமங்களின் கலவை

நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் நியான் போன்றவை காற்றில் உள்ளன

5. பாதரசம் அறை வெப்பநிலையில் ஒரு திண்மம்

பாதரசம் ஒரு அலோகம்

விடை :-

  1. முதல் கூற்று தவறானது இரண்டாம் கூற்று சரியானது.
  2. இரண்டு கூற்றுகளும் சரி மற்றும் இரண்டாவது கூற்று முதல் கூற்றிற்கான சரியான விளக்கம்.
  3. முதல் கூற்று தவறானது இரண்டாம் கூற்று சரியானது.
  4. இரண்டு கூற்றுகளும் சரி மற்றும் இரண்டாவது கூற்று முதல் கூற்றிற்கான சரியான விளக்கம்.
  5. இரண்டு கூற்றுகளும் தவறானது.

Leave a Reply