6th Tamil LO – Learning Outcomes
6th Standard Tamil LO – Learning Outcomes ஆறாம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவுகள். Class 6 Learning Outcomes, kattrel velaivugal download pdf
6th Standard Tamil LO – Learning Outcomes ஆறாம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவுகள்
6 ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவுகள்
- T601- குழந்தை பல வகையான ஒலிகளை (மழை, தென்றல். தொடர் வண்டி, பேருந்து மற்றும் தெரு வியாபாரிகள் எழுப்பும் ஓசைகள்) தங்கள் சொந்த மொழியிலும் விரும்பும் வகையிலும் கேட்டுச் சுவைத்திடல் இன்புறுதல் (பேச்சு மொழி சைகை மொழி)
- T602 தாங்கள் பார்த்த கேட்ட உள்ளூர் சமூக நிகழ்வுகள், செயல்பாடுகள், சடங்குகள் போன்றவற்றைப் பற்றி தயக்கம் இன்றி வினா எழுப்பவும் கலந்துரையாடவும் செய்தல்
- T603 மாணவர்கள் தாம் படித்த பார்த்த நிகழ்வுகள் மீதான கட்டுரைகள் எழுதுதல் கேட்ட தலைப்புகள் பற்றி தங்களின் சொந்த நடையில் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லல் கதைகளை நீட்டித்தல் போன்றவற்றைச் செய்தல்
- T604 வானொலி, தொலைக்காட்சி ,செய்தித்தாள் போன்றவற்றில் தாங்கள் கேட்ட பார்த்த படித்த செய்திகளை தங்களின் சொந்த மொழி நடையில் கூறுதல்
- T605 பல்வேறு சூழல்களில் பிறரால் சொல்லப்பட்ட சொற்களை (பார்வை இழந்தவரின் பயண அனுபவங்கள் போன்றவை திரும்பக் கூறுதல்
- T606 தங்கள் பகுதிகளில் காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்களை அறிந்திருத்தல் அவற்றை பற்றி கலந்துரையாடல்
- T607 மற்றவர்களின் மொழிகள் உணவுப் பழக்கங்கள் வாழ்க்கை நிலை அவற்றில் காணப்படும் வேற்றுமைகள் அவை தன்னுடையதிலிருந்து வேறுபட்டுள்ளமை பற்றி பேசுதல்
- T608 ஒரு நூலை ஆழ்ந்து படித்து அந்நூலின் மையக்கருத்தை ஊகித்தறிதல்
- T609 மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல் ஊகித்தறிதல்மற்றும் முடிவு செய்தல்
- T610 பல்வேறு பாடப் பொருட்கள் பற்றி தமிழில் உள்ள பனுவல்களை (செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், கதைகள், இணையத்தில் தகவல் தரும் பகுதிகள் போன்றவற்றில் இருந்து படித்து புரிந்து கொண்டு அவற்றின் மீதான கருத்துக்களை பகிர்தல் தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்
- T611 ஒலி யியைவு , சந்தம் முதலான யாப்ப மைதிக் கூறுதல் மரபுத் தொடர்கள் போன்ற மொழியின் மரபு நடை நுட்பங்கள் போன்றவற்றை க் கருத்தில் கொண்டு கதைகள் கட்டுரைகளின் நயம் பாராட்டல்
- T612 பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கியப் பாடப் பகுதிகளை உரிய ஒலிப்பு முறை குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்
- T613 வெவ்வேறு வகையான கட்டுரைகளை படித்தல்
- T614 புதிய சொற்களை தெரிந்து கொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்துதல் அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளை புரிந்து கொள்ள முயலுதல்
- T615 கைத்தொழில், கட்டடவியல், உழவுத் தொழில், நாட்டியம் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படும் மொழியின் தனிச்சிறப்புகளை அறிந்து கொள்ள பேரார்வத்தை வெளிப்படுத்துதல் அவற்றின் நயங்களை பாராட்டுதல்
- T616 மற்றவர்களின் அனுபவங்களைத் தேவைக்கு ஏற்ப தேவை ஏற்படும்போது எழுதுதல் முதன்மை சாலைகளின் சந்திப்புகள் பேருந்து நிறுத்தங்கள் போன்ற பொது இடங்களில் நடக்கும் நிகழ்வுகள் கேட்ட பேச்சுக்கள் ஆகியன
- T617 செய்தித்தாள்கள், இதழ்கள், கதைகள், இணையத்தில் காணப்படும் தகவல்கள் கட்டுரைகள் போன்றவற்றை படித்து புரிந்து கொண்டு தமது விருப்பு வெறுப்புகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துதல் (பொது எழுத்துமுறை அல்லது பிரெய்லி எழுத்துமுறை )
- T618 பல்வேறு நோக்கங்களுடன் பல்வேறு தலைப்புகளில் சரியான நிறுத்தற்குறிகளுடன் எழுதுதல்
- T619 பல்வேறு சூழல்களில் நிகழ்வின் போது மற்றவர்கள் கூறியவற்றை தமது சொந்த மொழியில் எழுதுதல்
- T620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும் போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி எழுதுதல்.