6th Tamil Guide Term 2 Lesson 3.3
TN 6th Standard Tamil Book Back Answers Term 2 Lesson 3.3 வளரும் வணிகம் Solution Guide
6th Tamil Guide. 6th Std Tamil Term 2 Lesson 3.3 வளரும் வணிகம் Book Back Question and answers download pdf. 6th all subject book back questions and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.
6th Tamil Guide Term 2 – Lesson 3.3 கூடித் தொழில் செய் – வளரும் வணிகம் Book Back Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பாெருள் வாங்குபவர்_______
- நுகர்வோர்
- தொழிலாளி
- முதலீட்டாளர்
- நெசவாளி
விடை: நுகர்வோர்
2. “வணிகம் + சாத்து” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
- வணிகசாத்து
- வணிகம்சாத்து
- வணிகச்சாத்து
- வணிகத்துசாத்து
விடை: வணிகச்சாத்து
3. “பண்டம் + மாற்று” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
- பண்டமாற்று
- பண்டம்மாற்று
- பண்மாற்று
- பண்டுமாற்று
விடை: பண்டமாற்று
4. “வண்ணப்படங்கள்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- வண்ணம்+படங்கள்
- வண்ணப்+படங்கள்
- வண்ண+படங்கள்
- வண்ணமான+படங்கள்
விடை: வண்ணம்+படங்கள்
5. “விரிவடைந்த” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- விரி + வடைந்த
- விரி + அடைந்த
- விரிவு + அடைந்த
- விரிவ் + அடைந்த
விடை: விரிவு + அடைந்த
II. சொற்களை சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. வணிகம்
- ஒரு பொருளை பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும்
2. ஏற்றுமதி
- ஒரு நாட்டில் தேவைகளுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப் ஏற்றுமதி செய்யப்படுகின்றன
3. சில்லறை
- சில்லறை கொள்முதல் செய்வது சிறுவணிகம் ஆகும்
4. கப்பல்
- ஒட்டகம் பாலைவன கப்பல் என அழைக்கப்படுகிறது.
III. குறு வினா
1. வணிகம் என்றால் என்ன?
- மனிதன் தனக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் தானே உற்பத்தி செய்து கொள்ள முடியாது. தனக்குத் தேவையான சில பொருள்களை பிறரிடமிருந்து வாங்குவான்.
- தன்னிடம் உள்ள சில பொருள்களை பிறருக்கு தருவான். இவ்வாறு ஒரு பொருளை பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும்.
2. பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டு தருக?
நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களை பிறருக்க கொடுத்து, தனக்கு தேவையான பொருள்களை பிறரிடம் இருந்து பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகமுறை ஆகும்.
எ.கா.
- நெல்லை கொடுத்து அதற்குப் பதிலாக உப்பை பெறுதல்
- ஆட்டின் பாலைக் கொடுத்து தானியத்தை பெறுதல்
3. சிறுவணிகப் பொருட்கள் யாவை?
- சிறு முதலீட்டல் பொருட்களை வாங்கி வந்து வீதிகளில் வைத்து விற்பனை செய்வதும்; தலையில் சுமந்து சென்று விற்பதும்; தரைக்கடை அமைத்து விற்பதும்; தள்ளுவண்டியின் மூலம் விற்பதும்; போன்ற முறைகளில் விறகும் பொருட்கள் சிறுவணிகப் பொருட்கள் ஆகும்
IV. சிறு வினா
1. சிறுவணிகம், பெருவணிகம் வேறுபடுத்துக
சிறு வணிகம் |
பெரு வணிகம் |
சிறு முதலீட்டில் பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்வது |
பெரு முதலீட்டில் அதிக அளவு பொருட்களை வாங்கி விற்பனை செய்வது |
வீதியில் கொண்டு சென்று விற்பது |
பெரிய அளவில் கடைகள் அமைத்து விற்பது |
சில்லறை கொள்முதல் செய்வது |
மொத்தமாக கொள்முதல் செய்வது |
பெருவணிகர்களிடம் பொருட்களை வாங்குவார்கள் |
உற்பத்தி செய்யப்படும் இடங்களில் பொருட்களை வாங்குவார்கள் |
சிறு லாபம் கிடைக்கும் |
பெரு லாபம் கிடைக்கும் |
நுகர்வோரிடம் நேரடித் தொடர்பு கொள்வது அதிகம் |
நுகர்வோரிடம் நேரடித் தொடர்பு கொள்வது குறைவு |
2. பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருள்கள் எவை?
- பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவைகளை பிறநாட்டுக்கு ஏற்றுமதி செய்தனர்
- பழங்காலத்தில் சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன. அரேபியாவில் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன
V. ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச் சொல்லை எழுதுக
(மின்னணு வணிகம், காசோலை, இணையத்தள வணிகம், வரவோலை, வங்கி, மின்னணு மயம், பற்று அட்டை, பணத்தாள், கடன் அட்டை)
ஆங்கிலச் சொல் |
தமிழ்ச்சொல் |
கரன்சிநோட் |
பணத்தாள் |
பேங்க் |
வங்கி |
செக் |
காசோலை |
டிமாண்ட் டிராப்ட் |
வரவோலை |
டிஜிட்டல் |
மின்னணு மயம் |
டெபிட் கார்டு |
பற்று அட்டை |
கிரெடிட் கார்டு |
கடன் அட்டை |
ஆன்லைன் ஷாப்பிங் |
இணையத்தள வணிகம் |
ஈ-காமர்ஸ் |
மின்னணு வணிகம் |
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
- தமிழ்நாட்டின் தலைசிறந்த காப்பிய கால துறைமுகம் ______________விடை : பூம்புகார்
- அரேபியாவில் இருந்து வாங்கப்பட்டவை ______________விடை : குதிரைகள்
- “நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என வணிகரைப் பாராட்டும் நூல் ______________விடை : பட்டினப்பாலை
- பொருட்களை விற்பவர் _______________. பொருட்களை வாங்குபவர் ________________விடை : வணிகர், நுகர்வோர்
- கடைகளுக்கு சென்று பொருள்களை வாங்க நேரம் இல்லாதவர்களுக்கு ____________ உதவுகிறதுவிடை : இணையவழி வணிகம்
II. சிறு வினா
1. துறைமுக நகரங்கள் எப்பெயரில் குறிக்கப்பட்டன?
- பட்டினம்
- பாக்கம்
2. வணிகத்தை எவ்வாறு பிரிக்கலாம்? அவற்றை விளக்குக
வணிகத்தை இருவகையாக பிரிக்கலாம்
- தனிநபர் வணிகம்
- நிறுவன வணிகம்
தனிநபர் வணிகம் :-
- தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் தனிநபர் வணிகம் எனப்படும்
நிறுவன வணிகம் :-
- ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து வணிகம் நடத்தவது நிறுவன வணிகம் ஆகும்
3. வணிகச்சாத்து என்பது பற்றி எழுதுக.
- வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை சுற்றி வெளியூர்களுகுச் செல்லும்போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை வணிகசாத்து என்பர்
4. வணிகம் உயர்ந்தாக எப்படி கூற முடியும்?
- வணிகம் பண்டமாற்று முறையாகத் தொடங்கியது. பணத்தை பயன்படுத்தும் முறையாக வளர்ந்தது. இப்போது மின்னணுப் பரிமாவ்றம் செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது. வருங்காலத்தில் வணிகத்தில் இன்னும் பல புதுமைகள் வரக்கூடும்.
5. வாணிகத்தில் நடுநிலை பற்றி விளக்குக.
- வணிகர்கள் பொருளை வாங்கும்பொழுது உரிய அளவைவிட அதிகமாக வாங்க மாட்டார்கள். பிறருக்குக் கொடுக்கும் பொழுது அளவைக் குறைத்துக் கொடுக்கமாட்டார்கள். எனவே வணிகரை
“நடுவு நின்ற நன்னெஞ்சினோர்”
என்று பட்டினப்பாலை பாராட்டுகிறது.
6. பண்டமாற்று வணிகம் பற்றி தமிழ் நூல்கள் கூறுவன யாவை?
தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி
…….
உமணர் போகலும்
நற்றிணை – 183
பாலொடு வந்து கூழொடு பெயரும் ……
குறுந்தொகை – 23
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் ……
அகநானூறு – 149