6th Tamil Guide Term 2 Lesson 3.1
TN 6th Standard Tamil Book Back Answers – Term 2 Lesson 3.1 நானிலம் படைத்தவன் Solution Guide
6th Tamil Guide. 6th Std Tamil Term 2 Lesson 3.1 நானிலம் படைத்தவன் Book Back Question and answers download pdf. 6th all subject book back questions and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.
6th Tamil Book Back Answers Term 2 – Lesson 3.1 கூடித் தொழில் செய் – நானிலம் படைத்தவன்
- முடியரசனின் இயற்பெயர் துரைராசு.
- பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
- திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.
- இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
I. சொல்லும் பொருளும்
- மல்லெடுத்த – வலிமைபெற்ற
- சமர் – போர்
- நல்கும் – தரும்
- கழனி – வயல்
- மறம் – வீரம்
- எக்களிப்பு – பெருமகிழ்ச்சி
- கலம் – கப்பல்
- ஆழி – கடல்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் __________
- மகிழ்ச்சி
- துன்பம்
- வீரம்
- அழுகை
விடை : வீரம்
2. “கல்லெடுத்து” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- கல் + அடுத்து
- கல் + எடுத்து
- கல் + லடுத்து
- கல் + லெடுத்து
விடை : கல் + எடுத்து
3. “நானிலம்” என்னும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- நா+னிலம்
- நான்கு+நிலம்
- நா+நிலம்
- நான்+நிலம்
விடை : நான்கு+நிலம்
4. “நாடு+ என்ற” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
- நாடென்ற
- நாடன்ற
- நாடுஎன்ற
- நாடுஅன்ற
விடை : நாடென்ற
5. “கலம்+ ஏறி” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
- கலம்ஏறி
- கலமறி
- கலன்ஏறி
- கலமேறி
விடை : கலமேறி
III. சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. மாநிலம்
- தமிழ்நாடு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் ஆகும்
2. கடல்
- உலகில் பெருங்கடல்கள் ஏழு
3. பண்டங்கள்
- இனிப்பு பண்டங்கள் அனைவருக்கும் அதிகமாக பிடிக்கும்
IV. நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை சொற்களை எழுதுக
- கல்லெடுத்து – மல்லெடுத்த
- ஊராக்கி – பேராக்கி
- பெருமை – மருதம்
- முக்குளித்தான் – எக்களிப்பு
- பண்டங்கள் – கண்டங்கள்
- அஞ்சாமை – அஞ்சுவதை
V. நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள மோனை சொற்களை எழுதுக
- கல்லெடுத்து – கலமேறி
- மல்லெடுத்து – மறத்தால்
- நானிலத்தை – நாகரிக
- முக்குளித்தான் – முத்தெடுத்து
- பண்டங்கள் – பயன்நல்கும்
VI. குறு வினா
1. நான்கு நிலங்கள் யாவை?
- நான்கு நிலங்கள் என்பவை முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என்பவை ஆகும்.
2. தமிழன் எதற்கு அஞ்சினான்?
- தமிழன், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான்.
3. தமிழன் எதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்?
- முத்து, ஏலம், மிளகு ஆகியவற்றைக் வணிகம் நோக்குடன் கப்பலில் கண்டங்களைச் சுற்றி வந்தான்
VII. சிறு வினா
1. தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை எவ்வாறு உருவாக்கினார்?
- தமிழன் கற்களும், முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பை திருத்தி பண்படுத்தினான்
- தனது உடல் வலிமையால் வளத்தை பெருக்கினான். ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையை பெற்றான்
- முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என் நிலத்தை நான்கு வகைப்படுத்திய நாகரிக மனிதன் தமிழன் தான்.
2. தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன யாவை?
- தமிழன் கற்களும், முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பை திருத்தி பண்படுத்தினான். தனது உடல் வலிமையால் வளத்தை பெருக்கினான்.
- ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையை பெற்றான். முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என் நிலத்தை நான்கு வகைப்படுத்திய நாகரிக மனிதன் அவன்
- பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களில் எளிதாக வெற்றி கண்டான். பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றி கொடியை நாட்டினான்.
- முத்து, ஏலம், மிளகு ஆகியவற்றைக் வணிகம் நோக்குடன் கப்பலில் கண்டங்களைச் சுற்றி வந்தான். எதற்கும் அஞ்சுவான் ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான்.
நானிலம் படைத்தவன் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
- “சமர்” என்னும் சொல்லின் பொருள் ____________விடை : போர்
- “வயல்” என்ற சொல்லின் வேறு பெயர் ____________விடை : கழனி
- வீரகாவியம் படைத்தவர் ____________விடை : முடியரசன்
- “ஆழி” என்பதற்கு ____________ என்ற பெயர்விடை : கடல்
II. குறு வினா
1. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப் பெற்றவர் யார்?
- முடியரசன்
2. நானிலம் படைத்தவன் என்ற பாடல் எந்தநூலில் இடம் பெற்றுள்ளது?
- நானிலம் படைத்தவன் என்ற பாடல் முடியசரன் எழுதிய புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
3. நானிலம் படைத்தவன் பாடலில் முடியரசன் குறிப்பிட்டுள்ள நிலங்கள் யாவை?
- முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல்
4. முடியரசன் – குறிப்பு வரைக
- முடியரசனின் இயற்பெயர் – துரைராசு
- பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை ஆகிய நூல்களை எழுதியுள்ளார்
- திராவிட நாட்டின் வானம்பாடி என்றும் கவியரசு என்றும் பாராட்டப் பெற்றவர்.