6th Tamil Guide Term 2 Lesson 2.2
TN 6th Standard Tamil Book Back Question & Answers Term 2 – Lesson 2.2 கண்மணியே கண்ணுறங்கு Solution
6th Tamil Guide. 6th Std Tamil Term 2 Lesson 2.2 கண்மணியே கண்ணுறங்கு Book Back Question and answers download pdf. 6th all subject book back questions and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.
6th Tamil Guide Term 2 – Lesson 2.2 பாடறிந்து ஒழுகுதல் – கண்மணியே கண்ணுறங்கு Book answers
நூல்வெளி
தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று. தால் என்பதற்கு நாக்கு என்று பொருள்.
நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு) என்று பெயர்பெற்றது.
குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.
I. சொல்லும் பொருளும்
- நந்தவனம் – பூஞ்சோலை
- பார் – உலகம்
- பண் – இசை
- இழைத்து – செய்து
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. “பாட்டிசைத்து” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- பாட்டி + சைத்து
- பாட்டி + இசைத்து
- பாட்டு + இசைத்து
- பாட்டு+சைத்து
விடை : பாட்டு + இசைத்து
2. “கண்ணுறங்கு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- கண் + உறங்கு
- கண்ணு + உறங்கு
- கண் + றங்கு
- கண்ணு + றங்கு
விடை : கண் + உறங்கு
3. “வாழை + இலை” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- வாழையிலை
- வாழைஇலை
- வாழலை
- வாழிலை
விடை : வாழையிலை
4. “கை + அமர்த்தி” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- கைமர்த்தி
- கைஅமர்த்தி
- கையமர்த்தி
- கையைமர்த்தி
விடை : கையமர்த்தி
5. “உதித்த” என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல்________
- மறைந்த
- நிறைந்த
- குறைந்த
- தோன்றிய
விடை : மறைந்த
III. குறுவினா
1. இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை?
- சேர நாடு
- சோழ நாடு
- பாண்டிய நாடு
2. நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது?
- நமது வீட்டிற்கு வந்தவரை இன்முகத்தாேடு வரவேற்று அறுசுவை உணவளித்து உபசரிக்க வேண்டும் என நாட்டுப் புறப்பாடல் கூறுகிறது
3. தாய் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறார்?
- தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயாே!
- தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆன தாெட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேர நாட்டின் முத்தேனோ! இல்லம் வந்தவளை இன்முகத்தாேடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழ நாட்டின் முக்கனியாே!
- குளம் வெட்டி, அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் பாேக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழாே! கண்வண கண்மணியே கண்மூடி உறங்குவாயாக! என்று, தாய் தன் குழந்தையைப் பாராட்டுகிறாள்.
கண்மணியே கண்ணுறங்கு – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
- “பார்” என்ற சொல்லின் பொருள் _______________விடை : உலகம்
- _______________ என்ற சொல்லின் பொருள் இசைவிடை : “பண்”
- “தால்” என்னும் சொல் தரும் பொருள் ____________விடை : நாக்கு
- தாலாட்டு _____________________ ஒன்றுவிடை : வாய்மொழி இலக்கியங்களுள்
- குழந்தையின் ____________, குழந்தைகளை ____________ பாடும் பாட்டு தாலாட்டு
விடை : அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும்
II. சேர்த்து எழுதுக
- மூன்று + தேன் = முத்தேன்
- மூன்று + கனி = முக்கனி
- மூன்று + தமிழ் = முத்தமிழ்
- பூ + சோலை = பூஞ்சோலை
- நன்மை + தமிழ் = நற்றமிழ்
III. பாடப்பகுதியிலுள்ள எதுகை. மோனைச் சொற்களை எழுதுக
மோனைச் சொற்கள் எதுகைச் சொற்கள்
நந்தவன் – நற்றமிழ் கண் – பண்
பாட்டிசைத்து – பார் தொட்டில் – கட்டி
தந்தத்திலே – தங்கத்திேல வைக்கும் – முக்கனி
குளிக்க – குளம் வெட்டி – கட்டி
கண்ணே – கண்ணுறங்கு கண்ணே – கண்ணுறங்கு
IV. வினாக்கள்
1. முந்நாடுகளின் சிறப்புகள் எவையென தாய் கூறுகின்றாள்?
- சேரநாடு – முத்து
- சோழ நாடு – முக்கனி
- பாண்டிய நாடு – முத்தமிழ்
2. தாலாட்டு பற்றிய குறிப்பினை எழுதுக
- தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று.
- தால் என்பதற்கு நாவு (நாக்கு) என்று பொருள். நாவை அசைத்து பாடுவதால் தாலாட்டு (தால் + ஆட்டு) எனப் பெயர் பெற்றது.
- குழந்தையின் அழுகையை நிறுத்தவும், குழந்தைகளை தூங்க வைக்கவும் பாடும் பாட்டு தாலாட்டு
3. தொகைச்சொற்களின் விளக்கத்தை கூறு
முத்தேன்
- கொம்புத்தேன்
- பொந்துத்தேன்
- கொசுத்தேன்
முக்கனி
- மா
- பலா
- வாழை
முத்தமிழ்
- இயல்
- இசை
- நாடகம்