6th Tamil Guide Term 2 Lesson 1.3
TN 6th Standard Tamil Book Back Answers Term 2 – Lesson 1.3 கல்விக்கண் திறந்தவர் Solution Samacheer kalvi
6th Tamil Guide. 6th Std Tamil Term 2 Lesson 1.3 கல்விக்கண் திறந்தவர் Book Back Question and answers download pdf. 6th all subject book back questions and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.
6th Tamil Guide Term 2 – Lesson 1.3 கண்ணெனத் தகும் – கல்விக்கண் திறந்தவர்
I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் _________.
- ஆடு மேய்க்க ஆள் இல்லை
- ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
- வழி தெரியவில்லை
- பேருந்து வசதியில்லை
விடை : ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
2. “பசியின்றி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- பசி + இன்றி
- பசி+யின்றி
- பசு + இன்றி
- பசு + யின்றி
விடை : பசி + இன்றி
3. “காடு+ஆறு” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- காட்டாறு
- காடாறு
- காட்டுஆறு
- காடுஆறு
விடை : காட்டாறு
4. “படிப்பறிவு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- படி + அறிவு
- படிப்பு + அறிவு
- படி + அறிவு
- படிப்பு + வறிவு
விடை : படிப்பு + அறிவு
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்கச் _______________ அறிமுகப்படுத்தினார்விடை : சீரூடைத் திட்டத்தை
- காமராசரை ‘கல்விக் கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர் ____________________விடை : தந்தை பெரியார்
III. சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. வகுப்பு
விடை : அருண் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றான்
2. உயர்கல்வி
விடை : உயர்கல்வி பயில ராமு சென்னைக்கு சென்றான்.
3. சீருடை
விடை : பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றி பயில பள்ளிக்கு சீருடையில் தான் வரவேண்டும்.
IV. குறுவினா
1. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?
- பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றவை காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆகும்.
2. காமராசர் முதல்வராகப் பொறுப்பேற்றதும் கல்விக்காகச் செய்த முதல் பணி யாது?
- காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை திறக்க ஆணையிட்டார்.
- மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுனறைபடுத்தினார்.
- மாணவர்கள் பசியின்றிப் படிக்க மத்திய உணவுத்திட்டத்தைக் கொண்டு வந்தார்.
- பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
V. சிறுவினா
காமராசரின் மதிய உணவுத்திட்டம் குறித்து எழுதுக
- 1955-ம் ஆண்டு மார்ச் 27-ல் சென்னையில் ” சென்னை மாகாண தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாநாடு” நடந்தது. அம்மாநாட்டில் காமராசர் கூறியது, “தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும்.
- பள்ளிக்கூடம் இருக்கிற ஊர்களில் கூட குழந்தைகளும் படிக்கப் போவது இல்லை. ஏழைப்பயன்களுக்கும், பெண்களுக்கும் வயிற்றுபாடு பெரும்பாடாக உள்ளது.
- ஒரு வேளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று ஆடு, மாடு மேய்க்கப்போய் தங்கள் எதிர் காலத்தைப் பழகாக்கிக் கொள்கிறார்கள். அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரச் செய்வது முக்கியம்.
- அதற்கு, ஏழைக்குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க வேண்டும். இதற்கு தொடக்கத்தில் ஒரு கோடி செலவாகும். சில ஆண்டுகளில் மூன்று கோடி, நான்கு கோடி கூடச் செலவாகும்.
- நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல. தேவைப்பட்டால் அதற்காக தனி வரிகூட போடலாம் என்று காமராசர் கூறினார்
- அதன்படி மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்துவது என்றும் முதலில் எட்டையபுரத்தில் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாரதியார் பிறந்து எட்டையபுரத்தில் 1956-ல் முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது
- 1956-ல் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டத்தின் மூலம் 29,017 பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்பட்டது. 15லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள்
கல்விக்கண் திறந்தவர் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
- படிப்பறிவு இருந்தால் தான் நாடு …………………………. அடையும்விடை : உயர்வு
- ………………………… என தந்தை பெரியாரால் காமராசர் பாரட்டப்பட்டார். விடை : கல்விக்கண் திறந்தவர்
- காமராசரின் சிறப்புப்பெயர் ………………………………விடை : கருப்புகாந்தி
- காமராசர் உள்நாட்டு விமானநிலையம் ……………………………… அமைந்துள்ளது விடை : சென்னையில்
- நடுவணரசு ………………………………-ம் ஆண்டு பாரதரத்னா விருதினை வழங்கியது விடை : 1976
- காமராசர் முதல் அமைச்சராக பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய …………………….. தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.விடை : 6000
II. பிரித்தெழுதுக
- ஏற்றத்தாழ்வு = ஏற்றம் + தாழ்வு
- பெருந்தலைவர் = பெருமை + தலைவர்
- அரசுடமை = அரசு + உடமை
III. குறுவினா
1. காமராசரின் சிறப்பு பெயர்கள் யாவை?
- படிக்காதமேதை
- பெருந்தலைவர்
- கர்மவீரர்
- கருப்புக்காந்தி
- ஏழைப்பங்காளர்
- தலைவர்களை உருவாக்குபவர்
2. காமராசர் பள்ளிகளில் சீருடைத்திட்டத்தினை கொண்டு வந்த நோக்கம் என்ன?
- பள்ளிகளில் குழந்தைகள் ஏற்றத்தாழ்வின்றி கல்வி கற்பதற்காக காமராசர் பள்ளியில் சீருடைத்திட்டத்தினை கொண்டு வந்தார்.
3. காமராசரின் கல்விப்பணிகள் யாதெனக்கூறு?
- காமராசர் முதல் அமைச்சராக பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய 6000 தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.
- மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவசக் கட்டாயக்கல்விக்கான சட்டத்தை இயற்றி தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். மாணவர்கள் பசியின்றி படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
- பள்ளிகளில் குழந்தைகள் ஏற்றத்தாழ்வின்றி கல்வி கற்பதற்காக சீருடைத் திட்டத்தினை கொண்டு வந்தார்.
- பள்ளிகளின் வசதியைப் பெருக்க பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார். தமிழ்நாட்டில் பல கிளை நூலகங்களை தொடங்கினார். மாணவர்கள்
- உயர்கல்விப் பெறப் பொறியில் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றை புதிதாக தொடங்கினார்.
- இவ்வாறு கல்விப் புரட்சிக்கு வித்திட்டார். இவையெல்லாம் காமராஜர் ஆற்றிய கல்விப்பணிகள் ஆகும்.
4. காமராசருக்கு தமிழக அரசு செய்த சிறப்புகள் யாவை?
- மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது
- நடுவண் அரசு 1976 பாரத ரத்னா விருது வழங்கியது
- காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம், விருநகர் இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன
- சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது
- சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டது
- கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம்10.2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.