6th Tamil Guide Term 2 Lesson 1.2
TN 6th Standard Tamil Book Back Answers Term 2 – Lesson 1.2 துன்பம் வெல்லும் கல்வி Solution Samacheer kalvi
6th Tamil Guide. 6th Std Tamil Term 2 Lesson 1.2 துன்பம் வெல்லும் கல்வி Book Back Question and answers download pdf. 6th all subject book back questions and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.
6th Tamil Guide Term 2 – Lesson 1.2 கண்ணெனத் தகும் – துன்பம் வெல்லும் கல்வி
எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.
மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.
I. சொல்லும் பொருளும்
- தூற்றும் படி – இகழும் படி
- மூத்தோர் – பெரியோர்
- மேதைகள் – அறிஞர்கள்
- மாற்றார் – மற்றவர்
- நெறி – வழி
- வற்றாமல் – அழியாமல்
II.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாணவர் பிறர் _______ நடக்கக் கூடாது.
- போற்றும்படி
- தூற்றும்படி
- பார்க்கும்படி
- வியக்கும்படி
விடை : தூற்றும்படி
2. நாம் _______ சொற்படி நடக்க வேண்டும்.
- இளையோர்
- ஊரார்
- மூத்தோர்
- வழிப்போக்கர்
விடை : மூத்தோர்
3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- கையில் + பொருள்
- கைப் + பொருள்
- கை + பொருள்
- கைப்பு + பொருள்
விடை : கை+பொருள்
4. மானம் + இல்லா என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- மானம்இல்லா
- மானமில்லா
- மானமல்லா
- மானம்மில்லா
விடை : மானமில்லா
III. சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. மனமாற்றம்
விடை : மனிதன் தீயவழியிலிருந்து நல்வழிக்கு மனமாற்றம் அடைய வேண்டும்.
2. ஏட்டுக்கல்வி
விடை : மாணவர்கள் ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அனுபவ கல்வியையும் கற்றுக்கொள்ள வேண்டும்
3. நல்லவர்கள்
விடை : இந்த உலகில் நல்லவர்கள் என்று யாரும் கிடையாது
4. சோம்பல்
விடை : சோம்பல் மனித வாழ்க்கைக்கு எதிரி
IV. குறுவினா
1. நாம் யாருடன் சேரக்கூடாது?
- நாம் தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது
2. எதை நம்பி வாழக்கூடாது?
- மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது
3. இந்தப் பாடலின் முதல் இரு வரிகள் நினைவூட்டும் திருக்குறள் எது?
- கற்க கசடறக் கற்பவை கற்றபின்
- நிற்க அதற்குத் தக
4. நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?
- மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின் படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும், விருதுகளையும், பெருமைகளையும் பெறலாம்
V. சிறுவினா
நாம் எவ்வாறு வாழ வேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்?
- நாம் நூல்களைக் கற்றதோடு இருந்து விடக்கூடாது. கற்றதன் பயனை மறக்கக் கூடாது. நம் நாட்டின் நெறி தவறி நடக்கக் கூடாது. நல்லவர்கள் குறை சொல்லும்படி வளரக்கூடாது.
- பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்பு நெறி மாறக் கூடாது. பிறர் உழைப்பில் வாழக் கூடாது.
- தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது. துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும். சோம்பலை போக்கிட வேண்டும்.
- பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டு விட வேண்டும். வானைத்தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
- மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும், விருதுகளையும், பெருமையையும் பெற வேண்டும்.
- பெற்ற தாயின் புகழும் நம் தாய் நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்
துன்பம் வெல்லும் – கல்வி கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
- துன்பத்தை வெல்ல _______________ வேண்டும்விடை : கல்வி
- நெறி என்னும் சொல் தரும் பொருள் _______________விடை : வழி
- மானமில்லா _______________ சேரக்கூடாதுவிடை : கோழையுடன்
- _______________ என்னும் சிறப்பினை பெற்றவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்விடை : மக்கள் கவிஞர்
- திரையாசைப் பாடல்களில் _______________ உயர்வைப் போற்றினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்விடை : உழைப்பாளிகளின்
- துன்பத்தை நீக்கும் _______________ கற்க வேண்டும்விடை : கல்வியினைக்
- வானைத்தொடும் அளவுக்கு ______________ வளர்த்துக் கொள்ள வேண்டும். விடை : அறிவை
II. பிரித்து எழுதுக
- குணமிருந்தால் = குணம் + இருந்தால்
- கைப்பொருள் = கை + பொருள்
III. பாடலில் எதுகை, மேனைச் சொற்களை கூறுக
மேனைச் சொற்கள் எதுகைச் சொற்கள்
நடந்துவிடாதே – நல்லவர்கள் வெற்றிமேல் – வெற்றிவர
மாற்றார் – மானமில்லா பெற்ற – வற்றாமல்
வம்பு – வளர்ச்சி மண்ணில் – வேண்டும்
வெற்றிமேல் – வெற்றிவர கொல்லும் – கல்வி
கல்வி – கற்றிட மீற – மாற
III. சிறுவினா
1. நாம் யார் தூற்றும்படி வாழக் கூடாது என பட்டுக்கோட்டையார் கூறுகின்றனார்?
- நாம் நல்வர்கள் தூற்றும்படி வாழக்கூடாது என பட்டுக்கோட்டையார் கூறுகின்றனார்
2. நாம் எதனை மறக்கக் கூடாது?
- நூல்களை கற்றதன் பயனை மறந்து விடக் கூடாது.