6th Tamil Guide Term 1 Lesson 3.3
TN 6th Standard Tamil Book Back Answers Term 1 Lesson 3.3 கணியனின் நண்பன்
6th Tamil Guide. 6th Std Tamil Term 1 Lesson 3.3 கணியனின் நண்பன் Book Back Question and answers download pdf. 6th all subject book back question and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.
6th Tamil Book Back Answers Term 1 – Lesson 3.3 அறிவியல், தொழில்நுட்பம் – கணியனின் நண்பன்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. நுட்பமாகச் சிந்தித்து அறிவது _________________
- நூலறிவு
- நுண்ணறிவு
- சிற்றறிவு
- பட்டறிவு
விடை : நுண்ணறிவு
2. தானே இயங்கும் இயந்திரம் _______________.
- கணினி
- தானியங்கி
- அலைபேசி
- தொலைக்காட்சி
விடை : தானியங்கி
3. “நின்றிருந்த” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- நின் + றிருந்த
- நின்று + இருந்த
- நின்றி + இருந்த
- நின்றி + ருந்த
விடை : நின்று + இருந்த
4. “அவ்வுருவம்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- அவ்வு + ருவம்
- அ + உருவம்
- அவ் + வுருவம்
- அ + வுருவம்
விடை : அ + உருவம்
5. “மருத்துவம் + துறை” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________
- மருத்துவம்துறை
- மருத்துவதுறை
- மருந்துதுறை
- மருத்துவத்துறை
விடை : மருத்துவத்துறை
6. “செயல் + இழக்க” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது__________
- செயலிழக்க
- செயல்இழக்க
- செயஇழக்க
- செயலிலக்க
விடை : செயலிழக்க
7. “நீக்குதல்” என்னும் சொல்லின் எதிர்ச்சொல் _______________________
- போக்குதல்
- தள்ளுதல்
- அழித்தல்
- சேர்த்தல்
விடை : சேர்த்தல்
8. “எளிது” என்னும் சொல்லின் எதிர்ச்சொல் _______________________
- அரிது
- சிறிது
- பெரிது
- வறிது
விடை : அரிது
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
- மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை ___________________
விடை : எந்திரங்கள்
- தானியங்கிகளுக்கும், எந்திர மனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு _________________விடை : செயற்கை நுண்ணறிவு.
- உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் ___________________விடை : டீப் புளூ.
- ‘சோபியா’ ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு ___________________ விடை : சவுதி அரேபியா
III. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. தொழிற்சாலை
விடை : தொழிற்சாலை என்பது மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதாகும்
2. உற்பத்தி
விடை : சோப்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் எங்கள் ஊரில் உள்ளது
3. ஆய்வு
விடை : ஆய்வு என்பது ஒரு தேடல் வகை
4. செயற்கை
விடை : மனிதர்கள் விவசாயத்தில் செயற்கை உரங்களை பயன்படுத்துகின்றன
5. நுண்ணறிவு
விடை : மனிதர்கள் நுண்ணறிவால் சிந்திக்கின்றனர்
IV. குறுவினா
1. ரோபோ என்னும் சொல் எவ்வாறு உருவானது?
- காரல் கபெக் (Karel capek) என்பவர் ‘செக்’ நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர். இவர் 1920ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார். அதில் “ரோபோ” (Robot) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார்.
- ரோபோ என்ற சொல்லுக்கு ’அடிமை’ என்பது பொருள்.
- ஒரு தொழிற்சாலையில் ரோபோக்கள் வேலை செய்வதாக அந்த நாடகத்தில் காட்சிகளை அமைத்திருந்தார். இவ்வாறு ரோபோ என்னும் சொல் வழக்கத்திற்கு வந்தது
2. ‘டீப் புளூ’ – மீத்திறன் கணினி பற்றி எழுதுக.
- 1997-ஆம் ஆண்டு மே மாதம் சதுரங்கப் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் என்பவர் கலந்து கொண்டார்.
- ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி (Super Computer) அவருடன் போட்டியிட்டது. போட்டியில் டீப் புளூவே வெற்றி வாகை சூடியது”.
V. சிறுவினா
1. எந்திரமனிதனின் பயன்களை விளக்குக.
- மனிதர்களை விட மீத்திறன் மிக்கதாக இருப்பதனால், மனிதர்களை விட விரைவாகவும் விவேகமாகவும் செயல்பட முடிகின்றது.
- மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்ய எந்திர மனிதன் பயன்படுகிறான். உணவங்களில் உணவு பரிமாறுவதற்குப் பயன்படுகிறான்.
- பொது இடங்களில் வழிகாட்டுவதற்குப் பயன்படுகிறான். வெடிகுணடுகளைச் செயலிழக்கச் செய்கிறான்.
- விளையாட்டுத்துறையிலும், மருத்துவத்துறையிலும் முத்திரை பதித்து வருகிறான். மனிதனால் செல்ல முடியாத இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறான்.
- பயம் அறியாதவன் இந்த எந்திர மனிதன்
2. துருவப் பகுதிகளில் ஆய்வு செய்ய எந்திரமனிதர்களை அனுப்புவதன் காரணம் யாது?
- வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே உள்ள துவப்பகுதிகள் மனிதர்கள் வாழ ஏற்ற சூழ்நிலை இருப்பதில்லை.
- இங்கு ஆய்வு செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் அவர்கள் பல உபாதைகளுக்கு ஆட்படுவர் அல்லது இறந்தும் போவார். அப்படி நடந்தால் ஆய்வு பாதியில் நின்றுவிடும். முழுமையும் பெறாது.
- ஆனால் எந்திரமனிதர்கள் எந்த பருவநிலையிலும் இயங்கும் தன்மை பெற்றவர்கள். இவர்களை பயன்படுத்தினால் ஆய்வு எந்த தடங்கலுமின்றி முழுமைபெறும்.
- அதனால் தான் துருவப்பகுதியில் ஆய்வு செய்ய எந்திர மனிதர்களை அனுப்புகின்றனர்.
கணியனின் நண்பன் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
- மனித ஆற்றல் குறையைப் போக்க மனிதன் கண்டுபிடித்தவையே ___________________விடை : தானியங்கிகள்
- ‘நான் ஓர் எந்திரமனிதன் . என்னை __________________ என்றும் அழைப்பார்கள் விடை : ரோபோ
- ஐக்கிய நாடுகள் சபை ______________ என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது.விடை : புதுமைகளின் வெற்றியாளர்
- _________________, ________________, ________________ மனிதரை விட விரைவாகத் தானே செய்துமுடிக்கும் எந்திரமே தானியங்கி ஆகும். விடை : நுட்பமான, கடினமான, ஒரே மாதிரியான வேலைகளை
- சூழ்நிலைகளை உணர்வதற்கான ___________________ ஆகியவற்றுடன் உருவாக்கப்படுகின்றனவிடை : நுண்ணுணர்வுக் கருவிகள் (Sensors)
- தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் தானியங்கிகள் _______________, _________________ போன்ற பணிகளைச் செய்கின்றன. விடை : உற்பத்தி செய்தல், பழுதுகளை நீக்குதல்
- எந்திர மனிதர்களுக்கும் தானியங்கிகளுக்கும் உள்ள வேறுபாடு ___________________ ஆகும்விடை : செயற்கை நுண்ணறிவு
- சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ள ரோபோவின் பெயர் __________________விடை : சோபியா
II. சிறுவினா
1. சோபியா பற்றிய விவரங்கள் குறிப்பிடுக
- “உலகிலேயே முதன்முதலாக சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளது. அந்த ரோபோவின் பெயர் ‘சோபியா’.
- மேலும் ஐக்கிய நாடுகள் சபை ‘புதுமைகளின் வெற்றியாளர்’ என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது. உயிரில்லாத ஒரு பொருளுக்கு ஐ.நா.சபை பட்டம் வழங்குவதும் இதுதான் முதல் முறை.
2. தானியங்கிகள் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் யாது?
- மனிதர்கள் தம் வேலைகளை எளிதாகச் செய்ய முதலில் எந்திரங்களைக் கண்டுபிடித்தனர். அவற்றை இயக்குவதற்கு மனித ஆற்றல் தேவைப்பட்டது. இக்குறையைப் போக்க மனிதன் கண்டுபிடித்தவையே தானியங்கிகள்.