6th Tamil Guide Term 1 Lesson 2.2
TN 6th Standard Tamil Book Back Answers Term 1 Lesson 2.2 காணி நிலம்
6th Tamil Guide. 6th Std Tamil Term 1 Lesson 2.2 காணி நிலம் Book Back Question and answers download pdf. 6th all subject book back question and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.
6th Tamil Guide Term 1 – Lesson 2.2 இயற்கை – காணி நிலம்
- இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்.
- அவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.
- இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.
- எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.
- தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.
- அவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.
- மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.
- நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.
- பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு முதலிய பல நூல்களை இயற்றி உள்ளார்.
- பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.
I. சொல்லும் பொருளும்
- காணி – நில அளவைக் குறிக்கும் சொல்
- மாடங்கள் – மாளிகையின் அடுக்குகள்
- சித்தம் – உள்ளம் .
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. “கிணறு” என்பதைக் குறிக்கும் சொல் __________________
- ஏரி
- கேணி
- குளம்
- ஆறு
விடை : கேணி
2. “சித்தம்” என்பதன் பொருள் _____________________
- உள்ளம்
- மணம்
- குணம்
- வனம்
விடை : உள்ளம்
3. “மாடங்கள்” என்பதன் பொருள் மாளிகையின் _________________
- அடுக்குகள்
- கூரை
- சாளரம்
- வாயில்
விடை : அடுக்குகள்
4. “நன்மாடங்கள்” என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ___________________
- நன் + மாடங்கள்
- நற் + மாடங்கள்
- நன்மை + மாடங்கள்
- நல் + மாடங்கள்
விடை : நன்மை + மாடங்கள்
5. “நிலத்தினிடையே” என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ___________________
- நிலம் + இடையே
- நிலத்தின் + இடையே
- நிலத்து + இடையே
- நிலத் + திடையே
விடை : நிலத்தின் + இடையே
6. “முத்து + சுடர்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________
- முத்துசுடர்
- முச்சுடர்
- முத்துடர்
- முத்துச்சுடர்
விடை : முத்துச்சுடர்
7. “நிலா + ஒளி” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______
- நிலாஒளி
- நிலஒளி
- நிலாவொளி
- நிலவுஒளி
விடை : நிலாவொளி
III. பொருத்துக.
- முத்துச்சுடர்போல – அ. தென்றல்
- தூய நிறத்தில் – ஆ. நிலாஒளி
- சித்தம் மகிழ்ந்திட – இ. மாடங்கள்
விடை : 1 – ஆ , 2 – இ, 3 – அ
IV. நயம் அறிக.
1. காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
- முத்து – முன்பு
- பத்து – பக்கத்திலே
- அங்கு – அந்த
- நிறத்தினதாய் – நிலத்திடையே
2. காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை ச் சொற்களை எடுத்து எழுதுக.
- காணி – கேணி
- தென்றல் – நன்றாய்
- பன்னிரண்டு – தென்னைமரம்
- பத்து – சித்தம்
V. குறுவினா
1. காணி நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?
- காணி அளவு நிலம் வேண்டும் அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும்.
- அழகான தூண்களையும், தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும்.
- நல்ல நீரையுடைய கிணறும் அங்கு இருக்க வேண்டும்.
- இளநீரும், கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும். அங்கே முத்து போன்ற நிலவெளி வீச வேண்டும்.
- காதுக்கு இனிய குரலின் குரேலாசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும் என்று பாரதியார் வேண்டுகிறார்
2. பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக.
- பாரதியார் ஒர் இயற்கை கவிஞர் ஆவார். அவருடைய பாடல்களில் அதிகம் இயற்கை வர்ணனைகளே இடம் பெற்றிருக்கும்
- “நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
- காக்கை குருவி எங்கள் கூட்டம்”…
- என்று பல பாடல்களை பாடி இருப்பதன் மூலம் அவரது இயற்கை வெளிப்பாடு தெரிகிறிது.
- எந்தவொரு கவிஞனும் இயற்கையோடு ஒன்றிருக்காவிடில் கவிதையை இயற்ற முடியாது. அந்த அளவிற்கு இயற்கை, கவிஞனுக்கு கவிதைகளை அள்ளித் தெளிக்கிறது. அப்படி இருக்கும்போது பாரதிக்கு இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பமானது புதிதல்ல்.
- பாரதியார் தன் வாழ்வை இயற்கையோடே அமைத்து கொண்டார். அவர் தன் பார்வையில் பட்ட அனைத்துப் பொருட்களையும் இயற்கையாகவே கண்ணுற்றார். அது மட்டுமல்லாமல் அவர் பாடாத இயற்கை பொருட்களே இல்லை.
- இயற்கையோடே வாழவும் கற்றுக் கொண்டார். வாழ்ந்தும் காட்டியவர் அவர் இயற்றிய காணிநிலம் பாடலில் கூட, காணி அளவு நிலம் வேண்டும் அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும்.
- அழகான தூண்களையும், தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும். நல்ல நீரையுடைய கிணறும் அங்கு இருக்க வேண்டும்.
- இளநீரும், கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும். அங்கே முத்து போன்ற நிலவெளி வீச வேண்டும்.
- காதுக்கு இனிய குரலின் குரேலாசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும் என்று போல பாரதியார் பாடியுள்ளார்.
- இவற்றையெல்லாம் பார்க்கும்போது பாரதியார் இயற்கையின் மீது பராசக்தியிடம் கொண்டுள்ள விருப்பம் வெளியிடப்படுகிறது.
காணி நிலம் கூடுதல் வினாக்கள்
I. சேர்த்து எழுதுதல்
- இளமை + தென்றல் – இளந்தென்றல்
- பத்து + இரண்டு – பன்னிரண்டு
II. கோடிட்ட இடங்களை நிரப்புதல்
- பாரதியாரின் இயற்பெயர் ________________விடை : சுப்பிரமணியன்
- எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர் ________________விடை : பாரதியார்.
- பாரதியார் ________________, ________________, ________________ நூல்களை இயற்றி உள்ளார்.விடை : பாஞ்சாலிசபதம், கண்ணன்பாட்டு, குயில்பாட்டு
III. பொருத்துக
- தூண் – அ. முத்துச்சுடர்
- மாடம் – ஆ. அழகு
- நிலா ஒளி – இ. தூயநிறம்
விடை : 1 – ஆ , 2 – இ, 3 – அ