You are currently viewing 6th Social Science History Guide Term 3 Lesson 3

6th Social Science History Guide Term 3 Lesson 3

6th Social Science History Guide Term 3 Lesson 3

6th Standard Social Science Guide Term 3 Solution Lesson 3 பேரரசுகளின் காலம் : குப்தர் வர்த்தனர்

6th Standard Social Science Term 2 History Lesson 3 பேரரசுகளின் காலம் : குப்தர் வர்த்தனர் Book Back Question and answers Tamil Medium download pdf. 6th All Subject Text Books download pdf. 6th Social Science Term 1 Guide. 6th All Subject Book Back Answers. 6th Social Science Samacheer kalvi guide.

6th Social Science Guide Term 3 Lesson 3 பேரரசுகளின் காலம் : குப்தர் வர்த்தனர் – Tamil Book Back Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. குப்த வம்சத்தை நிறுவியவர் ________ ஆவார்

  1. முதலாம் சந்திரகுப்தர்
  2. ஸ்ரீகுப்தர்
  3. விஷ்ணு கோபர்
  4. விஷ்ணுகுப்தர்

விடை :  ஸ்ரீகுப்தர்

2. பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ________ ஆவார்.

  1. காளிதாசர்
  2. அமரசிம்மர்
  3. ஹரிசேனர்
  4. தன்வந்திரி

விடை : ஹரிசேனர்

3. சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் _______ என்ற இடத்தில் உள்ளது.

  1. மெக்ராலி
  2. பிதாரி
  3. கத்வா
  4. மதுரா

விடை : மெக்ராலி

4. அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் ____________

  1. சரகர்
  2. சுஸ்ருதர்
  3. தன்வந்திரி
  4. அக்னிவாசர்

விடை : சுஸ்ருதர்

5. வங்காளத்தின் கௌட அரசர் _______

  1. சசாங்கர்
  2. மைத்திரகர்
  3. ராஜ வர்த்தனர்
  4. இரண்டாம் புலிகேசி

விடை : சசாங்கர்

II. கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.

1 கூற்று : ஹரப்பா வட இந்தியாவில் பல சிறிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், முதலாம் சந்திரகுப்தர் ஒரு பெரிய நாட்டின் முடியரசராகத் தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டார்.

காரணம் : முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணமுடித்தார்

  1. காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
  2. காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
  3. கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
  4. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.

விடை : காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

1 கூற்று 1 : தென்னிந்திய அரசர்களோடு இரண்டாம் சந்திரகுப்தர் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை.

கூற்று 2 : ஹரப்பா மக்களுக்கு இரும்பின் பயன் தெரியாது.

  1. முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி
  2. இரண்டாம் கூற்று தவறு, ஆனால் முதல் கூற்று சரி
  3. இரண்டு கூற்றுகளும் சரி
  4. இரண்டு கூற்றுகளும் தவறு

விடை : முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி

2. கீழ்க்காண்பனவற்றில் கால வரிசைப்படி அமைந்துள்ளது எது?

  • ஸ்ரீகுப்தர் – முதலாம் சந்திரகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர்
  • முதலாம் சந்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர்
  • ஸ்ரீ குப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – முதலாம் சந்திரகுப்தர்
  • விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர் – முதலாம் சந்திரகுப்தர்

விடை : ஸ்ரீகுப்தர்முதலாம் சந்திரகுப்தர்சமுத்திரகுப்தர்விக்கிரமாதித்யர்

3. கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்திக்கவும். அவற்றில் எது/ எவை சரியானது/சரியானவை என்பதைக் கண்டறியவும்.

1. அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.

2. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.

  1. 1 மட்டும் சரி
  2. 2 மட்டும் சரி
  3. 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி
  4. 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு

விடை : 1 மட்டும் சரி

2. பொருந்தாததை வட்டமிடுக

1. காளிதாசர் , ஹரிசேனர், சமுத்திரகுப்தர், சரகர்

விடை : ஹரிசேனர்

2. ரத்னாவளி, ,ஹர்சசரிதா, நாகநந்தா, பிரியதர்சிகா

விடை : ஹர்சசரிதா

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. இலங்கை அரசர் ___________ சமுத்திர குப்தரின் சமகாலத்தவர் ஆவார்.விடை : ஸ்ரீ மேகவர்மன்
  2. இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியின்போது சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி ___________ இந்தியாவிற்கு வந்தார்விடை: ஹீணர்களின்
  3. ___________ படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிகோலியதுவிடை: ஹீணர்களின்
  4. ___________ அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்தது.வினட: நில வரியே
  5. குப்தர்களின் அலுவலக மொழி ___________.வினட: சமஸ்கிருதம்
  6. பல்லவ அரசர் ___________ சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.விடை: விஷ்ணு கோபன்
  7. வர்த்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ___________ ஆவார்வினட: ஹர்ஷர்
  8. ஹர்ஷர் தலைநகரை ___________ லிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.வினட: தானேஸ்வரி

IV. சரியா ? தவறா ?

  1. தன்வந்திரி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தார்விடை : சரி
  2. குப்தர்களின் காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் இந்தோ – ஆரிய பாணியை ஒத்துள்ளன.விடை : தவறு 
  1. குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இல்லைவிடை : தவறு
  2. ஹர்ஷர் ஹீனயான பௌத்த பிரிவைச் சேர்ந்தவர்விடை : தவறு
  3. ஹர்ஷர் அவருடைய மத சகிப்புத் தன்மையின்மைக்காகப் பெயர் பெற்றவர்விடை : தவறு

V. பொருத்துக

A.

  1. மிகிரகுலா – வானியல்
  2. ஆரியபட்டர் – குமாரகுப்தர்
  3. ஓவியம் – ஸ்கந்தகுப்தர்
  4. நாளந்தா பல்கலைக்கழகம் – இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்கள்
  5. சார்த்தவாகர்கள் – பாக்

விடை : 1 – , 2 – , 3 – , 4 – , 5 –

B

  1. பாணர் – 10,000 மாணவர்கள்
  2. ஹர்ஷர் – பிரயாகை
  3. நாளந்தா பல்கலைக்கழகம் – ஹர்ஷ சரிதம்
  4. யுவான் சுவாங் – ரத்னாவளி
  5. பெளத்த சபை – சி-யூ-கி

விடை : 1 – , 2 – , 3 – , 4 – , 5 –

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:

1. ‘கவிராஜா’ என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது? ஏன்?

  • கவிராஜா’ என்ற பட்டம் சமுத்திரகுப்தருக்கு வழங்கப்பட்டது
  • கவிதைப் பிரியரும் இசைப் பிரியருமாவார் அதனால் ‘கவிராஜா’ எனும் பட்டம் பெற்றார்

2. நாளந்தா பல்கலைக்கழகத்தில் கற்றுத்தரப்பட்ட பாடப்பிரிவுகள் யாவை?

  • நாளந்தாவில் பெளத்தத் தத்துவமே முக்கியப் பாடப்பிரிவாக இருந்தது.
  • யோகா, வேத இலக்கியங்கள், மருத்துவம் ஆகியவையும் கற்பிக்கப்பட்டன

3. அரசர்களின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை விளக்குக

  • குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்.
  • அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார்.
  • எனவே அரசர் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவராவார். மற்றவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை எனும் கோட்பாடு

4. உலோகவியலில் குப்தர்களின் சாதனைகளை எடுத்துக் கூறுக.

  • உலோகத் தொழில் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட மெக்ராலி இரும்புத் தூணாகும்.
  • டெல்லியிலுள்ள இவ்வொற்றை இரும்புத்தூண் இன்றளவும் துருப் பிடிக்காமல் உள்ளது.

5. ஹூணர்கள் என்போர் யார்?

  • ஹூணர்கள் என்போர் நாடோடிப் பழங்குடியினராவர். தங்கள் மாபெரும் தலைவர் அட்டில்லாவின் தலைமையில் இவர்கள் ரோமாபுரியையும் கான்ஸ்டாண்டிநோபிளையும் பேரச்சத்திற்கு உள்ளாக்கினர். இவர்களோடு தொடர்புடைய வெள்ளை ஹூணர்கள் மத்திய ஆசியா வழியாக இந்தியா வந்தனர். தங்கள் தொடர் படையெடுப்புகளின் மூலமாக எல்லையோர நாடுகளுக்குத் தொந்தரவு கொடுத்துவந்தனர். ஸ்கந்தகுப்தரைத் தோற்கடித்த பின்னர் இவர்கள் மத்திய இந்தியப் பகுதிகளில் பரவினர். அவர்களின் தலைவரான தோரமானர் தனக்குத் தானே அரசராக முடி சூட்டிக் கொண்டார். அவருக்குப் பின்னர் அவரது மகன் மிகிரகுலர் ஆட்சி செய்தார். முடிவில், மத்திய இந்தியாவில் மாளவத்தை ஆட்சி செய்துவந்த யசோதர்மன் அவர்களைத் தோற்கடித்து அவர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டினார்

6. ஹர்ஷர் காலத்தில் வசூலிக்கப்பட்ட மூன்று வகையான வரிகளைக் குறிப்பிடுக.

  • பாகா
  • ஹிரண்யா
  • பாலி

7. ஹர்ஷர் எழுதிய நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  • ரத்னாவளி
  • நாகநந்தா
  • பிரியதர்ஷிகா

VII. சுருக்கமான விடையளிக்கவும்

1. மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.

  • பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் ‘புகழ்வதாகும்’.
  • அவைக்களப் புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்துபாடி அவர்தம் சாதனைகளைப் பட்டியலிட்டனர். இவை பின்னர் மக்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்காகத் தூண்களில் பொறிக்கப்பட்டன.
  • சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவரான ஹரிசேனர் இயற்றிய பிரயாகை மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி) அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது.
  • சமுத்திரகுப்தரின் ஆட்சிக்கான மிக முக்கியச் சான்று அலகாபாத் தூண் கல்வெட்டாகும்

2. சமுத்திரகுப்தரின் படையெடுப்புகள் குறித்து எழுதுக.

  • சமுத்திரகுப்தர் மகத்தான போர்த்தளபதியாவார். அவர் பேரரசர் ஆனவுடன் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்றார்.
  • தென்னிந்தியாவின் மீதும் படையெடுத்தார். தென்னிந்தியாவில் பல்லவநாட்டு அரசர் விஷ்ணுகோபனை சமுத்திரகுப்தர் தோற்கடித்தார்.
  • வட இந்தியாவில் சமுத்திரகுப்தர் ஒன்பது அரசுகளைக் கைப்பற்றினார்.
  • தென்னிந்தியாவைச் சேர்ந்த 12 அரசர்களைத் தனக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்களாக்கி அவர்களைக் கப்பம் கட்டச் செய்தார்.
  • கிழக்கு வங்காளம், அஸ்ஸாம், நேபாளம், பஞ்சாபின் கிழக்குப் பகுதி, ஆகியவற்றின் அரசர்களும் ராஜஸ்தானத்தைச் சேர்ந்த பல்வேறு பழங்குடியினரும் சமுத்திரகுப்தரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.

3. குப்தர்கள் காலத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன?

நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. விவசாயிகளின் நிலைமை பரிதாபகரமாக இருந்தது. அவர்கள் பலவேறு வரிகளைச் செலுத்த வேண்டிய நிலையில் இருந்தனர். அவர்கள் கொத்தடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

  1. சேத்ரா – வேளாண்மைக்கு உகந்த நிலங்கள்
  2. கிலா – தரிசு நிலங்கள்
  3. அப்ரகதா – வனம் அல்லது காட்டு நிலங்கள்
  4. வஸ்தி – குடியிருப்பதற்கு உகந்த நிலங்கள்
  5. கபத சரகா – மேய்ச்சல் நிலங்கள்

4. சிரெஸ்தி, சார்த்தவாகா வணிகர்களைக் குறித்து எழுதுக.

சிரேஸ்தி

  • சிரேஸ்தி பிரிவைச் சார்ந்த வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள்

சார்த்தவாகா

  • சார்த்தவாகா  வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளில் பொருட்களை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள்.

5. கட்டடக்கலைக்குக் குப்தர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதுக.

  • கட்டுமானக் கோவில்களை முதன்முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே.
  • இது முன்பிருந்த மரபான, பாறைக் குடைவரைக் கோவில்களின் அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சியாகும்.
  • கோபுரங்களோடும் விரிவான செதுக்குவேலைப்பாடுகளோடும் அனைத்து இந்து தெய்வங்களுக்கும் இக்கோவில்கள் கட்டப்பட்டன.
  • மிகவும் குறிப்பிடத்தக்க பாறைக் குடைவரைக் குகைகள் அஜந்தா, எல்லோரா (மகாராஷ்டிரா), பாக் (மத்தியப் பிரதேசம்), உதயகிரி (ஒடிசா) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
  • இக்காலப் பகுதியில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள், திராவிட பாணிக் கூறுகளை ஒத்திருக்கின்றன.
  • குப்தர்களின் உலோகச் சிற்பத்திற்கு இரு சிறந்த எடுத்துக்காட்டுகள்: நாளந்தாவிலுள்ள 18 அடி உயரமுள்ள புத்தரின் செப்புச் சிலை.
  • சுல்தான் கஞ்ச் என்னும் இடத்திலுள்ள ஏழரை அடி உயரமுள்ள புத்தரின் உலோகச் சிற்பம்.
  • குப்தர்களின் ஓவியக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்பவை அஜந்தா குகை ஓவியங்களும், குவாலியர்பாக் குகையில் காணப்படும் ஓவியங்களும் ஆகும்.

6. காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.

  • காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள், சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்கிரம ஊர்வசியம் என்பனவாகும்.
  • அவருடைய ஏனைய சிறப்புமிக்க நூல்கள் மேகதூதம் , ரகுவம்சம், குமாரசம்பவம், ரிதுசம்காரம் ஆகியனவாகும்.

7. ஹர்ஷரை ஒரு கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் மதிப்பீடு செய்யவும்.

  • ஹர்ஷரே ஒரு கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். அவர் சிறந்தகவிஞர்களையும் கலைஞர்களையும் தன்னைச் சூழ்ந்து இருக்கச் செய்தார்.
  • அவருடைய புகழ்பெற்ற நூல்கள் ரத்னாவளி, நாகநந்தா, பிரியதர்சிகா ஆகியனவாகும்.
  • பானபட்டர், மயூரா, ஹர்தத்தா, ஜெயசேனர் ஆகியோர் அவருடைய அவையை அலங்கரித்தனர்.

Leave a Reply