6th Social Science History Guide Term 3 Lesson 2
6th Standard Social Science History Term 3 Guide Lesson 2 இந்தியா – மெளரியருக்குப் பின்னர்
6th Standard Social Science Term 2 History Lesson 2 இந்தியா – மெளரியருக்குப் பின்னர் Book Back Question and answers Tamil Medium download pdf. 6th All Subject Text Books download pdf. 6th Social Science Term 1 Guide. 6th All Subject Book Back Answers. 6th Social Science Samacheer kalvi guide.
6th Social Science Guide Term 3 Lesson 2 இந்தியா – மெளரியருக்குப் பின்னர் Tamil Medium Book Back Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. கடைசி மௌரிய அரசரைக் கொன்றவர் ________
- புஷ்யமித்ரர்
- அக்னிமித்ரர்
- வாசுதேவர்
- நாராயணர்
விடை : புஷ்யமித்ரர்
2. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்_____
- சிமுகா
- சதகர்ணி
- கன்கர்
- சிவாஸ்வதி
விடை : பல்லவர்
3. குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______
- கனிஷ்கர்
- முதலாம் கட்பிசஸ்
- இரண்டாம் கட்பிசஸ்
- பன்-சியாங்
விடை : கனிஷ்கர்
4. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _____ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.
- தக்காணம்
- வடமேற்கு இந்தியா
- பஞ்சாப்
- கங்கைப் பள்ளத்தாக்கு சமவெளி
விடை : தக்காணம்
5. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.
- சிர்கப்
- தட்சசீலம்
- மதுரா
- புருஷபுரம்
விடை : சிர்கப்
II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்
1 கூற்று : இந்தோ-கிரேக்கர்களின், இந்தோ-பார்த்தியர்களின் குடியேற்றங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிறுவப்பட்டன.
காரணம் : குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் படிப்படியாக உள்ளூர் மக்களுடன் திருமண உறவுகொண்டு இரண்டறக் கலந்தனர்
- கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
- கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
- கூற்று சரி; காரணம் தவறு.
- கூற்றும் காரணமும் தவறானவை.
விடை : கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
1 கூற்று 1 : இந்தோ-கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு முறையை அறிமுகம் செய்து சின்னங்களும், உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.
கூற்று 2 : இந்தோ-கிரேக்கர்களின் ஆட்சியைக் குஷாணர் முடித்துவைத்தனர்.
- கூற்று ‘1’ தவறு , ஆனால் கூற்று ‘2’ சரி
- கூற்று ‘2’ தவறு , ஆனால் கூற்று ’1’ சரி
- இரண்டு கூற்றுகளுமே சரி
- இரண்டு கூற்றுகளுமே தவறு
விடை : கூற்று ‘2’ தவறு , ஆனால் கூற்று ’1’ சரி
2. பொருந்தாததை வட்டமிடுக
புஷ்யமித்ரர், வாசுதேவர், சிமுகா, கனிஷ்கர்
விடை : ‘கனிஷ்கர்
3. ஒரு வார்த்தையில் பதில் எழுதவும்
1. கடைசி சுங்க அரசர் யார்?
விடை : தேவபூதி
2. சாகர்களில் மிக முக்கியமான, புகழ் பெற்ற அரசர் யார்?
விடை : ருத்ரதாமன்
3. மகதத்தில் கன்வ வம்சத்தை நிறுவியர் யார்?
விடை : வாசுதேவர்
4. கோண்டோ பெர்னஸைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றியவர் யார்?
விடை : புனித தாமஸ்
III. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- இந்தோ-பார்த்திய அரசை நிறுவியவர் __________________விடை : கோண்டோ பெர்னஸ்
- தெற்கே __________________ இறப்பிற்குப் பின்னர் சாதவாகனர் சுதந்திர அரசர்களாயினர்.விடை: அசோகரின்
- ஹாலா எழுதிய, நூலின் பெயர் __________________விடை: சட்டசாய் (சப்தசதி)
- ___________ கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.வினட: கசர்மன்
- குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் __________________ஆகும்.வினட: பெஷாவர் (புருஷபுபரம்)
IV. சரியா ? தவறா ?
- மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பௌத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்ததுவிடை : சரி
- காரவேலரைப் பற்றி அதிகமான செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்.விடை : சரி
- குந்தல சதகர்ணி, சாதவாகன வம்சத்தின், பத்தாவது அரசராவார்.விடை : தவறு
- ‘புத்த சரிதம்’ அஸ்வகோஷரால் எழுதப்பட்டதுவிடை : சரி
V. பொருத்துக
- பதஞ்சலி – கலிங்கம்
- அக்னிமித்ரர் – இந்தோ-கிரேக்கர்
- அரசர் காரவேலர் – இந்தோ-பார்த்தியர்
- டெமிட்ரியஸ் – இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்
- கோண்டோ பெர்னெஸ் – மாளவிகாக்னிமித்ரம்
விடை : 1- ஈ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – இ
VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:
1. கடைசி மெளரிய அரசருக்கு என்ன நேர்ந்தது?
- மெளரியப் பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதா அவரது தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.
2. காளிதாசரின் ‘மாளவிகாக்னிமித்ரம்’ குறித்து சிறு குறிப்பு வரைக.
- அக்னிமித்ரர் காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னிமித்ரா நாடகத்தின் கதாநாயகன் எனக் கருதப்படுகிறார்.
3. கன்வ வம்சத்தின் அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுக
- கன்வ வம்சம் நான்கு அரசர்களை மட்டுமே பெற்றிருந்தது. அவர்களின் ஆட்சி 45 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.
கன்வ அரசர்கள்
- வாசுதேவர்
- பூமிமித்ரர்
- நாராயணர்
- சுசர்மன
4. சாதவாகனர்களின் இலக்கியச் சாதனைகளை எடுத்து கூறுக.
- சாதவாகன அரசர் ஹாலா ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞர்.
- கி.மு .(பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில், தக்காணப் பகுதிகளில் கண்டரா மொழிப்பள்ளியைச் சார்ந்த சமஸ்கிருதம் செழித்தோங்கியது.
- பிராகிருத மொழியில் 700 பாடல்களைக் கொண்ட சட்டசாய் (சப்தசதி) எனும் நூலை எழுதியதன் மூலம் அரசர் ஹாலா புகழ் பெற்றிருந்தார்.
5. சாதவாகனர்களின் நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை?
- காந்தாரம், மதுரா, அமராவதி, புத்த கயா, சாஞ்சி, பாகுத் ஆகிய இடங்கள் கலைகளுக்கும் அற்புதமான கட்டடங்களுக்கும் பெயர் பெற்றவையாகும்.
- மதுரா சிற்பக் கலைப்பள்ளி பௌத்த, சமண, வேதமதக் கடவுளர்களின் பிம்பங்களையும் முழு உருவச் சிலைகளையும் வடித்தது.
6. முதலாம் கட்பிசஸ்ஸின் சாதனைகளைக் குறிப்பிடுக.
- குஷாணர்களில் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் இராணுவத் தளபதி
- இவரேயாவார்.
- அவர் இந்தோ-கிரேக்க, இந்தோ-பார்த்திய அரசர்களை வெற்றிகொண்டு பாக்டீரியாவில் இறையாண்மையுடன் கூடிய அரசராக தன்னை நிலைநிறுத்தினார்.
- தன்னுடைய ஆதிக்கத்தை முதலில் காபூல், காந்தார தேசம் தொடங்கி, பின்னர் சிந்து வரையிலும் பரப்பினார்.
7. கனிஷ்கரின் அவையை அலங்கரித்த துறவிகள், அறிஞர்கள் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடுக.
- கனிஷ்கர் கலை, இலக்கியங்களின் மிகப்பெரும் ஆதரவாளர் ஆவார்.
- அஸ்வகோஷர், வசுமித்ரர், நாகார்ஜுனர் போன்ற எண்ணற்ற பௌத்தத் துறவிகளாலும் அறிஞர்களாலும் அவருடைய அவை அலங்கரிக்கப்பட்டது.
VII. கீழ்க் காண்பதற்கு விடையளிக்கவும்
1. மெளரியப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் மீது படையெடுத்தவர் யார்?
- மெளரியப் பேரரசின் வீழ்ச்சியின் விளைவாக வடமேற்கிலிருந்து சாகர்கள், சைத்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ-கிரேக்கர்கள் அல்லது பாக்டீரிய-கிரேக்கர்கள், குஷாணர்கள் போன்றோர் இந்தியாவின் மீது படையெடுத்தனர்.
- அசோகரின் மறைவுக்குப் பின்னர் தெற்கே சாதவாகனர்கள் சுதந்திர அரசர்களாயினர்.
- குப்தப் பேரரசு நிறுவப்படுவதற்கு முன்னர் வடக்கே சுங்கர்களும் கன்வர்களும் ஆட்சி புரிந்தனர். கலிங்கத்தில் சேடிகள் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினர்.
2. புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.
- புஷ்யமித்ர சுங்கர் மகதத்தில் தனது சுங்க வம்சத்தை நிறுவினார்.
- புஷ்யமித்திரர் பாடலிபுத்திரத்தைத் தனது தலைநகராக்கினார்.
- புஷ்யமித்திரரின் அரசு மேற்கு நோக்கி விரிவடைந்து உஜ்ஜைனி, விதிஷா ஆகியவற்றை உள்ளடக்கியதானது.
- பாக்டீரியாவின் அரசன் மினான்டரின் படையை புஷ்யமித்ரர் வெற்றிகரமாக முறியடித்தார். ஆனால் மினான்டர் காபூலையும் சிந்துவையும் தன்கைவசம் வைத்துக் கொண்டார்.
- கலிங்க அரசர் காரவேலனின் தாக்குதலையும் புஷ்யமித்ரர் முறியடித்தார்.
- மேலும் விதர்பாவையும் அவர் கைப்பற்றினார். புஷ்யமித்ரர் வேதமதத்தைத் தீவிரமாகப் பின்பற்றியவர்.
- அவர் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக இருமுறை அஸ்வமேத யாகம் நடத்தினார
3. கௌதமிபுத்திர சதகர்ணியைப் பற்றிக் குறிப்பெழுதுக.
- சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர் கௌதமிபுத்திர சதகர்ணியாவார்.
- இவரது அன்னை கௌதமி பாலஸ்ரீயால் வெளியிடப்பட்ட நாசிக் மெய்க்கீர்த்தியில் (பிரசஸ்தியில்) இவர் சாகர், யவனர் (கிரேக்கர்) பகலவர் (பார்த்தியர்) ஆகியோரை அழித்து ஒழித்தார் எனக் கூறப்பட்டுள்ளது.
- பேரரசின் எல்லைகளும் இம்மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
- இவர்களின் பேரரசு மகாராஷ்டிரா, வடக்கு கொங்கன், பெரார், குஜராத், கத்தியவார், மாளவம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.
- கப்பலின் வடிவம் பொறிக்கப்பட்டுள்ள வசிஸ்டபுத்திர புலமாயி நாணயங்கள் ஆந்திரர்கள் கடல்சார் நடவடிக்கைகளில் பெற்றிருந்த திறன்களையும். அவர்களது கப்பற்படை வலிமையையும் உணர்த்துகின்றன.
- போகர் கல்வெட்டானது தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அரசு உருவாக்கத்தில் தென்னிந்தியா வகித்த முக்கியப் பங்கைப் பற்றிக் கூறுகிறது
4. கோண்டோபரித் அரச வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?
- இந்தோ-கிரேக்கர், இந்தோ-சைத்தியர் ஆகியோருக்குப் பின்னர் இந்தோ – பார்த்தியர் வந்தனர்.
- அதனைத் தொடர்ந்து இவர்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டின் பிற்பாதியில் குஷாணர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.
- இந்தோ-பார்த்திய அரசு அல்லது கோன்டோபரித் வம்சம் கோண்டோ பெர்னஸால் நிறுவப்பட்டது.
- இந்தோ- பார்த்தியர் ஆட்சி செய்த பகுதி காபூல், காந்தாரா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
- கோண்டோ பெர்னெஸ் எனும் பெயர் கிறித்துவ உபதேசியார் புனித தாமசுடன் தொடர்புடையதாகும்.
- கிறித்துவ மரபின்படி புனித தாமஸ் இந்தியவிற்கு வருகை புரிந்தார்.
- கோண்டோ பெர்னெஸின் அரசவைக்கு அவரது வருகையால் மன்னர் கிறித்துவத்தை தழுவினார்.
5. இந்தோ-கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர் யார்? ஏன்?
- மினான்டர்: இவர் நன்கறியப்பட்ட இந்தோ-கிரேக்க அரசர்களில் ஒருவராவார்.
- வடமேற்குப் பகுதியில் பெரியதொரு அரசை இவர் ஆண்டதாகக் கூறப்படுகிறது.
- இவர் வெளியிட்ட நாணயங்கள் பரந்து விரிந்த பகுதியில் கிடைக்கின்றன. காபூல் பள்ளத்தாக்கில் தொடங்கி சிந்துநதி கடந்து மேற்கு உத்தரப்பிரதேசம் வரையிலான பகுதிகளில் கிடைத்தன.
- மிலிந்த பன்கா எனும் நூல் ஒன்று உள்ளது.
- பாக்டீரிய அரசன் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த அறிஞர் நாகசேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலே அந்நூலாகும். இந்த மிலிந்தாவே மினான்டர் என அடையாளப்படுத்தப்படுகிறது.
- மினான்டர் பௌத்தராக மாறி பௌத்தத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றியதாகக் கருதப்படுகிறது.
6. சாகர்கள் யார்?
- இந்தியாவில் இந்தோ-கிரேக்கரின் ஆட்சிக்குச் சாகர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.
- நாடோடி இனத்தவரான இவர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் நுழைந்து வடக்கு மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பரவினர்.
- இவர்கள் துருக்கிய நாடோடிப் பழங்குடியினர்க்கு எதிரானவர்கள்.
- சாகர்கள் பண்டைய நாடோடி இன ஈரானிய சைத்தியர்கள் ஆவர். சமஸ்கிருத மொழியில் இவர்கள் சாகர்கள் என அறியப்பட்டனர்.
- சாகர்களின் ஆட்சியானது மாவோஸ் அல்லது மோகா என்பவரால் காந்தாரப்பகுதியில் நிறுவப்பட்டது.
- அவருடைய தலைநகர் சிர்காப் ஆக இருந்தது.
- மோரா கல்வெட்டில் அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அவருடைய நாணயங்களில் புத்தர், சிவன் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
7. கனிஷ்கருடைய மதக் கொள்கை பற்றி எழுதுக.
- கனிஷ்கர் ஒரு தீவிர பௌத்தராவார்.
- கனிஷ்கரின் பேரரசு ஒரு பௌத்தப் பேரரசு.
- பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த பௌத்தத் துறவியான அஸ்வகோஷர் என்பவரின் போதனைகளால் அவர் பௌத்தத்தைத் தழுவினார்.
- கனிஷ்கர் மாபெரும் வீரராகவும் பேரரசை உருவாக்கியவராகவும் இருந்தபோதிலும் அதே அளவிற்கு மகாயான பௌத்தத்தை ஆதரிப்பவராகவும் அதைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்பவருமாக விளங்கினார்.
- கனிஷ்கர் பௌத்தத்தை அரசமதமாக்கினார்.
- மேலும் பல ஸ்தூபிகளையும் மடாலயங்களையும் மதுரா, தட்ச சீலம் மற்றும் பேரரசின் இதரபகுதிகளிலும் கட்டினார்.
- புத்தரின் நற்செய்திகளைப் பரப்புவதற்காகப் பௌத்தச் சமயப் பரப்பாளர்களைத் திபெத், சீனா மற்றும் மத்திய ஆசியாவின் பலநாடுகளுக்கும் அனுப்பிவைத்தார்.
- பௌத்தமதப் பிரிவுகளிடையே நிலவிய கருத்துவேறுபாடுகளைக் களைவதற்காக நான்காவது பௌத்தப் பேரவையை ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள குந்தல வனத்தில் கூட்டினார்.
- இப்பேரவையில்தான் ஹீனயானம், மகாயானம் எனப் பௌத்தம் பிளவுற்றது.