6th Social Science History Guide Term 2 Lesson 2
6th Standard Social Science Term 2 Solution Lesson 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
6th Standard Social Science Term 2 History Lesson 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் Book Back Question and answers Tamil Medium download pdf. 6th All Subject Text Books download pdf. 6th Social Science Term 1 Guide. 6th All Subject Book Back Answers. 6th Social Science Samacheer kalvi guide.
6th Social Science Guide Term 2 Lesson 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. பௌத்த நூல்களின் பெயர் என்ன?
- அங்கங்கள்
- திரிபிடகங்கள்
- திருக்குறள்
- நாலடியார்
விடை : திரிபிடகங்கள்
2. சமணத்தின் முதல் தீர்த்தங்காரர் யார்?
- ரிஷபா
- பார்சவ
- வர்தமான
- புத்தர்
விடை : ரிஷபா
3. சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?
- 23
- 24
- 25
- 26
விடை : 24
4. மூன்றாம் பௌத்த சபை எங்கு கட்டப்பட்டது?
- ராஜகிரகம்
- வைசாலி
- பாடலிபுத்திரம்
- காஷ்மீர்
விடை : பாடலிபுத்திரம்
5. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?
- லும்பினி
- சாரநாத்
- தட்சசீலம்
- புத்தகயா
விடை : சாரநாத்
II. கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. கூற்று : ஒரு சாதாரண மனிதரால் உபநிடதங்களைப் புரிந்து கொள்ள இயலாது.
காரணம் : உபநிடதங்கள் மிகவும் தத்துவம் சார்ந்தவை.
- கூற்றும் அதன் காரணமும் சரியானவை
- கூற்று தவறானது.
- கூற்று சரியானது; ஆனால் அதற்கான காரணம் தவறானது.
- கூற்று, காரணம் ஆகிய இரண்டு தவறு.
விடை : கூற்றும் அதன் காரணமும் சரியானவை.
2. கூற்று : ஜாதகங்கள் புகழ் பெற்ற கதைகளாகும்.
காரணம் : அஜந்தா குகையின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதகக் கதைகளைச் சித்தரிக்கின்றன.
- கூற்றும் அதற்கான காரணமும் சரி
- கூற்று தவறு.
- கூற்று சரி: ஆனால் அதற்கான காரணம் தவறு.
- கூற்றும் அதற்கான காரணம் ஆகிய இரண்டும் தவறு.
விடை : கூற்றும் அதற்கான காரணமும் சரி
3. சரியான விடையைக் கண்டறியவும்.
விகாரைகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன?
- கல்விக் கூடமாக 2. பௌத்தத் துறவிகளின் தங்குமிடம்
- புனிதப் பயணிகள் தங்குவதற்காக 4. வழிபாட்டுக் கூடம்
- 2 சரி
- 1 மற்றும் 3 சரி
- 1, 2, 4 ஆகியவை சரி
- 1 மற்றும் 4 சரி
விடை : 2 சரி
4. சமணமும் பெளத்தமும் உருவாவதற்கு கீழ்க்கண்டக் கூற்றுளைக் காரணமாகக் கருதலாமா?
1. வேள்விச்சடங்குகள் பெருஞ்செலவு மிக்கதகா இருந்தன
2. மூடநம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும்சாதரண மனிதர்களைக் குழப்பமுறச் செய்தன.
மேலேசொல்லப்பட்ட கூற்றில்/கூற்றுகளில், எது/எவை சரியானது/சரியானவை.
- 1 மட்டும்
- 2 மட்டும்
- 1 மற்றும் 2
- 1 மற்றும் 2 ம் இல்லை
விடை : 1 மற்றும் 2
5. சமணம் குறிதத கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
- உலகைக் கடவுள் தோற்றுவித்தார் என்பதைச் சமணம் மறுக்கிறது.
- உலகைக் கடவுள் தோற்றுவித்தார் என்பதைச் சமணம் ஒத்துக் கொள்கிறது.
- சமணததின அடிப்டைத் தத்துவம் சிலை வழி்பாடாகும்
- இறுதித்தீர்பபு எனும் நம்பிக்கையைச் சமணம் ஒததுக் கொள்கிறது.
விடை : உலகைக் கடவுள் தோற்றுவித்தார் என்பதைச் சமணம் ஒத்துக் கொள்கிறது.
6. பொருந்தாததை தேர்வுசெய்.
பார்சவா, மகாவீரர், புத்தர், ரிஷபர்
விடை : புத்தர்
7. தவறான இணையைக் கண்டுபிடி
- அகிம்சை – காயப்டுத்தாமல் இருத்தல்
- சத்யா – உண்மை பேசுதல்
- அஸ்தேய – திருடாமை
- பிரம்மச்சாரியபா – திருமண நிலை
விடை : பிரம்மச்சாரியபா – திருமண நிலை
8. சித்தார்த்த கெளதமர் குறித்து கீழே காண்பனவற்றுள் ஒன்றைத்தவர மற்ற அனைத்தும் சரி.
- இந்து மதத்தை நிறுவியவர் அவரே.
- அவர் நேபாளத்தில் பிறந்தார்
- அவர் நிர்வாணம் அடைந்தார்
- அவர் சாக்கியமுனி எனறு அறியபட்டார்
விடை : இந்து மதத்தை நிறுவியவர் அவரே.
III. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- மகாவீரரின் கோட்பாடு ________________________ என்று அழைக்கப்படுகிறது. விடை : திரிரத்தினங்கள்
- ____________ என்பது துன்பங்களிலிருந்தும் மறுபிறவியிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு நிலை.விடை: நிர்வாண நிலை
- பௌத்தத்தை நிறுவியவர் ____________ ஆவார்.விடை: கௌதம புத்தர்
- காஞ்சிபுரத்திலுள்ள, திருப்பத்திக்குன்றம் என்னும் கிராமம் ஒரு காலத்தில் ____________ என்று அழைக்கப்பட்டது.வினட: ஜைனக்காஞ்சி
- ____________ என்பது புத்தரின் உடல் எச்சங்கள் மீது கட்டப்பட்டனவாகும்வினட: ஸ்தூபி
IV. சரியா ? தவறா ?
- புத்தர் கர்மாவை நம்பினார்.விடை : சரி
- புத்தருக்குச் சாதிமுறை மேல் நம்பிக்கை இருந்ததுவிடை : தவறு
- கௌதம சுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார்விடை : சரி
- விகாரைகள் என்பன கோவில்களாகும்விடை : தவறு
- அசோகர் பௌத்த மதத்தைப் பின்பற்றினார்விடை : சரி
V. பொருத்துக
- அங்கங்கள் – வர்தமானா
- மகாவீரர் – துறவிகள்
- புத்தர் – பௌத்தக் கோவில்கள்
- கசத்யா – சாக்கியமுனி
- பிட்சுக்கள் – சமண நூல்
விடை : 1- உ, 2 – அ, 3 – ஈ, 4 – இ, 5 – ஆ
VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:
1. சமணத்தின் மூன்று ரத்தினங்கள் எவை?
- நன்னம்பிக்கக
- நல்லறிவு
- நற்செயல்
2. பௌத்தத்தின் இருபிரிவுகள் எவை?
- ஹூனாயனம்
- மகாயானம்.
3. ‘ஜினா’ என்பதின் பாெருள் என்ன?
- ‘ஜினா’ என்பதன் பாெருள் தன்னையும், வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும்.
4. பௌத்தத்திற்கும் சமணத்திற்கும் உள்ள இரண்டு பாெதுவான கூறுகளை எழுதுக.
- மகாவீரர், புத்தர் இருவருமே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
- இருந்தபாேதிலும் அவர்கள் அரச குடும்ப உரிமைகளை நிராகரித்து, துறவு வாழ்க்கையைத் தேர்வு செய்தனர்.
- சமணமும் பௌத்தமும் வேதங்களின் ஆதிக்கத்தை மறுத்தன.
- மக்கள் பேசிய மொழிகளில் இரு மதங்களும் பாேதிக்கப்பட்டன.
5. பௌத்த சங்கத்தைப் பற்றி குறிப்பெழுதுக.
- புத்தர் தனது கருத்துக்களைப் பரப்புவதற்காக சங்கம் ஒன்றை நிறுவினார். அதில் உறுப்பினர்களாக இருந்த துறவிகள் ‘பிட்சுக்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.
- அவர்கள் மிக எளிய வாழ்க்கையை மேற்காெண்டனர்.
6. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த வருகை தந்த சீனப் பயணியின் பெயரைக் குறிப்பிடுக.
- கி.பி. (பாெ.ஆ.) ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் என்ற சீனப் பயணி காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார்.
7. சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண் ஜைனத் துறவியின் பெயர் என்ன?
- சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண் ஜைனத் துறவி கவுந்தியடிகள் ஆவார்.
VII. கீழ்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
1. பௌத்தத்தின் எட்டு நெறிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
- நல்ல நம்பிக்கை
- நல்ல எண்ணம்
- நல்ல பேச்சு
- நல்ல செயல்
- நல்ல வாழ்க்கை
- நல்ல முயற்சி
- நல்ல அறிவு
- நல்ல தியானம்
2. சமணத்தின் முக்கியமான ஐந்து நடத்தை விதிகள் எவை?
- அகிம்சை – எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது,
- சத்யா – உண்மையை மட்டுமே பேசுதல்
- அஸ்தேய – திருடாமை
- அபரிக்கிரகா – பணம், பாெருள் சாெத்துக்கள் மீது ஆசை காெள்ளலாமல் இருப்பது.
- பிரம்மச்சரியா – திருமணம் செய்து காெள்ளாமை
3 பௌத்தத்தின் நான்கு பேருண்னமகளை எடுத்துரைக்கவும்.
- வாழ்க்கை துன்பங்கள், துயரங்கள், நிறைந்தது
- ஆசையே துன்பங்களுக்கான காரணம்
- ஆசையைத் துறந்துவிட்டால் துன்ப துயரங்களைப் பாேக்கி விடலாம்
- சரியான பாதையைப் பின்பற்றினால் (எண்வகக வழிகள்) ஆசைகளை வென்று விடலாம்.
4. பௌத்தத்தின் பிரிவுகளான ஹீனயான, மகாயான பிரிவுகளிடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபாடுகளை எழுதவும்.
ஹீனயானம் |
மகாயானம் |
1. புத்தரின் சிலைகளையாே உருவப் படங்களையாே வணங்கமாட்டார்கள் |
புத்தரின் உருவங்களை வணங்கினர். |
2. மிக எளிமையாக இருப்பர் |
விரிவான சடங்குகளைப் பின்பற்றினர். |
3. தனிமனிதர்கள் முக்தி அடைவதே தங்களின் நாேக்கம் என்று நம்பினர். |
அனைத்து உயிரினங்களும் முக்தி பெறுவதே தங்களின் நாேக்கம் என்று நம்பினர். |
விடை : 1- உ, 2 – அ, 3 – ஈ, 4 – இ, 5 – ஆ |
5. சங்ககாலத்தில் பௌத்தமும் சமணமும் செழித்தாேங்கின. ஒவ்வாென்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.
- சமணத்திற்கு மிகவும் பிற்பட்டே தமிகத்தில் பௌத்தம் பரவியது. சங்க காலத்திற்குப் பின்னர் இயற்ப்பட்ட இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பௌத்த இலக்கியமாகும். மணிமேகலையில் காஞ்சிபுரம் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் புகழ் பெற்ற ஒரு பௌத்த மையமாகும்.
- பண்டையத் தமிழ் இலக்கியங்கள் ஜைனம் என்பதை சமணம் என்று குறிப்பிடுகின்றன. அறவாேர் பள்ளியில் சமணத் துறவிகள் வாழ்ந்தாக மணிமேகலையில் குறிப்பு உள்ளது. மதுரைக்கு அருகில் உள்ள கீழக்குடியில் கிராமத்தில் சமணர் மலை என்ற ஒரு குன்று உள்ளது.