6th Science Guide Term 3 Lesson 3
6th Standard Science Term 3 Book Back Question & Answers Lesson 3 அன்றாட வாழ்வில் வேதியியல்
6th Standard Science Term 3 Guide Lesson 3 அன்றாட வாழ்வில் வேதியியல் Book Back Question and answers Tamil Medium download pdf. 6th All Subject Text Books download pdf. 6th Science Term 3 Guide. 6th All Subject Book Back Answers.
6th std Science Guide Term 3 – Lesson 3 அன்றாட வாழ்வில் வேதியியல் Book Back Answers
I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. சோப்புக்களின் முதன்மை மூலம் ___________ ஆகும்.
- புரதங்கள்
- விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
- மண்
- நுரை உருவாக்க
விடை : விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
2. வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு ___________ கரைசல் பயன்படுகிறது.
- அம்மோனியம் ஹைட்ராக்சைடு
- சோடியம் ஹைட்ராக்சைடு
- ஹைட்ரோகுளோரிக் அமிலம்
- சோடியம் குளோரைடு
விடை : சோடியம் ஹைட்ராக்சைடு
3. சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் ___________ ஆகும்
- விரைவாக கெட்டித்தன்மையடைய
- கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
- கடினமாக்க
- கலவையை உருவாக்க
விடை : கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
4. பீனால் என்பது ______________________
- கார்பாலிக் அமிலம்
- அசிட்டிக் அமிலம்
- பென்சோயிக் அமிலம்
- ஹைட்ரோகுளோரிக் அமிலம்
விடை : கார்பாலிக் அமிலம்
5. இயற்கை ஒட்டும்பொருள் ________________ .
- புரதங்களில்
- கொழுப்புகளில்
- ஸ்டார்ச்சில்
- வைட்டமின்களில்
விடை : ஸ்டார்ச்சில்
II. சரியா? தவறா?
- செறிவூட்டப்பட்ட பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.விடை : சரி
- ஜிப்சம் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுகின்றது.விடை : தவறு
- சரியான விடை : எப்சம் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுகின்றது
- ஜிப்சத்தை சூடுபடுத்துவதன் மூலம் பாரிஸ்சாந்து கிடைக்கின்றது.விடை : சரி
- ஒட்டும்பொருள் என்பது இரு பொருள்களை ஒன்றோடொன்று பிரிக்கப் பயன்படுகின்றது.விடை : தவறு
- சரியான விடை : ஒட்டும்பொருள் என்பது இரு பொருள்களை ஒன்றோடொன்று சேர்க்கப் பயன்படுகின்றது.
- NPK என்பது தாவரங்களுக்கான முதன்மைச் சத்துக்கள் ஆகும்.விடை : சரி
III. கோடிட்ட இடங்களை நிரப்புக:
- வெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமான வாயு _________ ஆகும்விடை : புரோப்பேன்தயால் S-ஆக்ஸைடு
- சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணைய் மற்றும் _________ தேவைப்படுகின்றது.விடை :சோடியம் ஹைட்ராக்ஸைடு
- உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது __________________ ஆகும். விடை : மண்புழு
- சுற்றுச்சூழலுக்கு உகந்தவை ________________ உரங்கள் ஆகும் விடை : இயற்கை
- இயற்கை பசைக்கு உதாரணம் ___________ ஆகும்.விடை : ஸ்டார்ச்
IV.பொருத்துக
- சோப்பு – C6H5 OH
- சிமெண்ட் – CaSO2.2H2O
- உரங்கள் – NaOH
- ஜிப்சம் – RCC
- பீனால் – NPK
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – உ, 4 – ஆ, 5 – அ
V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக
- பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.
- கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.
- பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
- அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைச் சேர்த்து குளிர வைக்கவும்.
- இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையைத் துவைக்க முயற்சிக்கவும்.
- சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.
விடை :-
- சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.
- கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.
- அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைச் சேர்த்து குளிர வைக்கவும்.
- பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
- பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.
- இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையைத் துவைக்க முயற்சிக்கவும்.
VI. ஒப்புமை தருக
1. யூரியா: கனிம உரம் : : மண்புழு உரம்: ________________
விடை :இயற்கை உரம்
2. ________________ : இயற்கை ஒட்டும்பொருள் : : செலோ டேப் : செயற்கை ஒட்டும்பொருள்:
விடை : ஸ்டார்ச்
VII. மிகக் குறுகிய விடையளி
1. சோப்பில் அடங்கியுள்ள மூலப்பொருள்கள் யாவை?
- சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணைய் மற்றும் சோடியம் ஹைட்ராக்ஸைடு தேவைப்படுகின்றது.
2. சோப்பில் உள்ள இரு வெவ்வேறு வகை மூலக்கூறுகள் என்னென்ன?
- சோப்பு மூலக்கூறுகளுக்கு இரண்டு முனைகள் உண்டு.
நீர் விரும்பும் பகுதி
- நீர் விரும்பிகள் நீர் மூலக்கூறுகளை நோக்கியும் செல்கின்றன.
நீர் வெறுக்கும் பகுதி
- நீர்வெறுக்கும் மூலக்கூறுகள் துணியிலுள்ள அழுக்கு மற்றும் எண்ணெய்ப் பொருளை நோக்கியும்,
3. கனிம உரங்களுக்கு உதாரணம் தருக.
- மண்ணில் இயற்கையாகக் கிடைக்கும் கனிமப் பொருள்களைக் கொண்டு, தொழிற்சாலைகளில் வேதிமாற்றத்திற்குட்படுத்தி தயாரிக்கப்படும் உரங்கள் கனிம உரங்கள் என அழைக்கப்படுகின்றன.
எ.கா:-
- யூரியா, சூப்பர் பாஸ்பேட்
- அம்மோனியம் சல்பேட்
- பொட்டாசியம் நைட்ரேட்.
4. பீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.
- பீனால் என்பது கார்பாலிக் அமிலம் எனப்படும் கரிம அமிலமாகும். பீனாலின் மூலக்கூறு வாய்பாடு – C6H5OH. இது வீரியம் குறைந்த அமிலமாகும். இது ஆவியாகும் தன்மையுள்ள, வெண்மை நிறப் படிக திண்மமாகும்.
- பினாலின் கரைசல் நிறமற்றதாக இருப்பினும், மாசு காரணமாக இளம் சிவப்பு நிறக் கரைசலாக மாற்றமடைகிறது.
5. பாரிஸ் சாந்தின் பயன்களை விவரிக்கவும்.
- கரும்பலகையில் எழுதும் பொருள் தயாரிக்க பயன்படுகின்றது.
- அறுவைச் சிகிச்சையில் எலும்பு முறிவுகளைச் சரிசெய்யப் பயன்படுகின்றது.
- சிலைகள் வார்ப்பதற்கு பயன்படுகின்றது.
- கட்டுமானத்துறையில் பயன்படுகின்றது.
6. சிமெண்டில் கலந்துள்ள மூலப்பொருள்கள் யாவை?
- இயற்கையில் கிடைக்கக்கூடிய சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம் ஆகிய தாது உப்புகளைக் கலந்து அரைப்பதன் மூலம் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.
7. சிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் எதற்காகப் பயன்படுகிறது?
- சிமெண்டுடன் நீர் சேர்க்கும்பொழுது சில நிமிடங்களில் அது கெட்டிப்படுகிறது. சிமெண்ட் தயாரிக்கும்போது இறுதியாக அத்துடன் சிறிதளவு ஜிப்சம் சேர்க்கப்படுகின்றது. ஜிப்சமானது சிமெண்டின் கெட்டிப்படும் நேரத்தை தாமதமாக்குகின்றது.
VIII. குறுகிய விடையளி
1. மண்புழு ஏன் உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுகின்றது?
- மண்புழுக்கள் உயிரி கழிவுகள் அனைத்தையும் உணவாக உண்டு செரித்து வெளியேற்றுகின்றன. இத்தகைய மண், செழிப்பான தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது.
- இவ்வாறு மண்புழு விவசாயத்திற்குப் பல்வேறு வகைகளில் உதவுவதால் இது உழவனின் நண்பன் எனவும் அழைக்கப்படுகிறது.
2. சிமெண்ட் தயாரிக்கும் முறையை விவரிக்கவும்.
- பண்டைய காலத்தில் வீடுகளைக் கட்ட சுண்ணாம்புக் கலவைகளும், மண் மற்றும் மரக்கட்டைகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது வீடுகள் முதல் பெரிய அணைக்கட்டுகள், மற்றும் பாலங்கள் கட்டுவதற்கு சிமெண்ட் பயன்படுகிறது.
- இயற்கையில் கிடைக்கக்கூடிய சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம் ஆகிய தாது உப்புகளைக் கலந்து அரைப்பதன் மூலம் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.
- சிமெண்டுடன் நீர் சேர்க்கும்பொழுது சில நிமிடங்களில் அது கெட்டிப்படுகிறது. சிமெண்ட் தயாரிக்கும்போது இறுதியாக அத்துடன் சிறிதளவு ஜிப்சம் சேர்க்கப்படுகின்றது.
- ஜிப்சமானது சிமெண்டின் கெட்டிப்படும் நேரத்தை தாமதமாக்குகின்றது.
3. ஜிப்சத்தின் பயன்களைக் கூறுக.
- உரமாகப் பயன்படுகிறது.
- சிமெண்ட் தயாரிக்கப் பயன்படுகிறது
- பாரீஸ் சாந்து தயாரிப்பில் பயன்படுகிறது.
IX. விரிவான விடையளி
1. வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.
அன்றாட வாழ்வில் வேதியியல் பாட விடைகள் 2021
- இரும்புக்கம்பிகள் அல்லது எஃகு வலைகளைக் கற்காரையோடு சேர்த்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட காரையாகும்.
- இந்தக் காரை மிகவும் வலுவானதாகவும் உறுதியானதாகவும் இருக்கும்.
- இது அணைக்கட்டுகள், பாலங்கள், வீட்டின் மேல்தளம் மற்றும் தூண்கள் கட்டுவதற்குப் பயன்படுகிறது.
- இதைக்கொண்டு பெரிய குடிநீர்த் தொட்டிகள், குழாய்கள் மற்றும் கழிவு நீர் வடிகால்களையும் அமைக்கின்றார்கள்.
2. சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது?
தேவைப்படும் பொருள்கள் :
- 35 மி.லி நீர், 10 கி. சோடியம் ஹைட்ராக்சைடு, 60 மி.லி. தேங்காய் எண்ணெய்.
செய்முறை
- சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக்கொள்.
- கண்ணாடிக் குவளையில் நீரை நிரப்பு.
- அதனுடன் 10 கி. சோடியம் ஹைட்ராக்சைடைச் சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
- பின் அதனுடன் 60மி.லி தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக சேர்த்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
- பின் இதனை சிறிய காலித் தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.