6th Science Guide Term 1 Unit 2
6th Standard Science Guide | Term 1 – Lesson 2 விசையும் இயக்கமும்
| Tamil Medium
6th Standard Science Term 1 Lesson 2 விசையும் இயக்கமும் Book Back Question and answers Tamil Medium download pdf. 6th All Subject Text Books download pdf. 6th Science Term 1 Guide. 6th All Subject Book Back Answers.
6th Science Guide Term 1 Lesson 2 விசையும் இயக்கமும்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. வேகத்தின் அலகு _____________
- மீ
- விநாடி
- கிலோகிராம்
- மீ/வி
விடை : மீ/வி
2. கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்?
- பூமி தன் அச்சைப் பற்றிச் சுழலுதல்
- நிலவு பூமியை சுற்றி வருதல்
- அதிவுறும் கம்பியின் முன்பின் இயக்கம்
- மேற்கண்ட அனைத்தும்
விடை : அதிவுறும் கம்பியின் முன்பின் இயக்கம்
3. கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு.
- வேகம் = தொலைவு X காலம்
- வேகம்= தொலைவு X காலம்
- வேகம் = காலம் X தொலைவு
- 1/ (தொலைவு X காலம்)
விடை : வேகம்= தொலைவு X காலம்
4. கீதா தன் தந்தையின் வண்டியினை எடுத்துக்கொண்டு அைளுவடய வீட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள மாமா வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு செல்வதற்கு 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள்.
கூற்று 1 – கீதாவின் வேகம் 1 கி.மீ/ நிமிடம்
கூற்று 2: கீதாவின் வேகம் 1 கி.மீ/ மணி
- கூற்று 1 மட்டும் சரி
- கூற்று 2 மட்டும் சரி
- இரண்டு கூற்றுமே சரி
- இரண்டு கூற்றுகளும் தவறு
விடை : கூற்று 1 மட்டும் சரி
II. கீழ்க்காணும் வாக்கியங்கள் சரியா? தவறா ? திருத்தி எழுதுக.
- மையப்புள்ளியைப் பொறுத்து முன்னும் பின்னும் இயங்கும் இயக்கம் அலைவு இயக்கம் ஆகும்.விடை : சரி
- அதிர்வு இயக்கமும், சுழற்சி இயக்கமும் கால ஒழுங்கு இயக்கமாகும்விடை : தவறு
- சரியான விடை : அதிர்வு இயக்கமும், அலைவு இயக்கமும் கால ஒழுங்கு இயக்கமாகும்
- மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனத்தின் இயக்கம் ஒரு சீரான இயக்கமாகும்.விடை : தவறு
- சரியான விடை : மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனத்தின் இயக்கம் ஒரு சீரற்ற இயக்கமாகும்.
- வருங்காலத்தில் மனிதர்களின் பதிலியாக ரோபோட்டுகள் செயல்படும்.
விடை : சரி
III. கோடிட்ட இடங்களை நிரப்புக:
- சாலையில் நேராகச் செல்லும் ஒரு வண்டியின் இயக்கம் _____________
விடை : நேர்கோட்டு இயக்கம்
- புவி ஈர்ப்பு விசை _____________ விசையாகும்.விடை : தொடா
- மண்பாண்டம் செய்பவரின் சக்கரத்தின் இயக்கம் _____________விடை : சுழற்சி
- ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவைக் கடக்குமானால், அப்பொருளின் இயக்கம் _____________விடை : சீரான
IV. தாெடர்பின் அடிப்படையில் நிரப்புக.
- பந்தை உதைத்தல் : தொடு விசை :: இலை கீழே விழுதல் : ____________?
விடை : தாெடா விசை
- மனிதனின் தொலைவு : மீட்டர்:: வேகம் : ____________?விடை : மீட்டர்/ வினாடி
- சுழற்சி இயக்கம் : பம்பரம் சுற்றுதல் :: அலைவு இயக்கம் : ____________?
விடை : ஊஞ்சலின் இயக்கம்.
V.பொருத்துக
Ans : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 5 – உ
VI. ஒரு வார்த்தையில் விடையை எழுதுக.
1. தொடுதல் நிகழ்வின்றி ஒரு பொருள் மீது செயல்படும் விசையின் பெயர் ___________
விடை : தொடா விசை
2. காலத்தைப் பொறுத்து ஒரு பொருளின் நிலை மாறுபடுவது ___________
விடை : இயக்கம்.
3. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்பத் திரும்ப நிகழும் இயக்கம் ___________ எனப்படும்.
விடை : கால ஒழுங்கு இயக்கம்
4. சம இடைவெளியில் தொலைவை கடக்கும் பொருளின் இயக்கம் ________________
விடை : சீரான இயக்கம்.
5. நுணுக்கமான அல்லது கடினமான வேலகளைச் செய்யுமாறு கணினி நிரல்களால் வடிவமைக்கப்பட்ட இயந்திரம் ________________
விடை : ரோபாட்
VII. ஓரிரு வார்த்தைகளில் விடையளி
6th Science Guide Term 1 Unit 2
1. விசை – விடையறு.
- பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே விசை என அழைக்கப்படுகிறது.
2. பாெருள் நகரும் பாதையைப் பாெறுத்து இயக்கங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
- நேர்க்கோட்டு இயக்கம்
- வளைவுப்பாதை இயக்கம்
- வட்டப்பாதை இயக்கம்
- சுழற்சி இயக்கம்
- அலைவு இயக்கம்
- ஒழுங்கற்ற இயக்கம்.
3. நீ, இயங்கும் மகிழுந்தினுள் உட்கார்ந்திருக்கும் பாேது உன்னருகில் அமர்ந்திருக்கும் உன் நண்பனைப் பாெறுத்து நீ என்ன நிலையில் உள்ளாய்?
- என் நண்பனைப் பொறுத்தவரையில் நான் ஓய்வில் உள்ளேன்.
4. பூமியின் சுழற்சி கால ஒழுங்கு இயக்கமாகும்-விவரி.
- பூமியின் சுழற்சி கால ஒழுங்கு இயக்கமாகும். ஏனெனில் பூமியானது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக இயங்குகிறது.
5. சுழற்சி இயக்கம், வளைவுப்பாதை இயக்கம் வேறுபடுத்துக.
சுழற்சி இயக்கம் |
வளைவுப்பாதை இயக்கம் |
ஒரு பொருள் தன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல் சுழற்சி இயக்கமாகும். |
பொருளானது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும். |
(எ.கா) பம்பரத்தின் இயக்கம் |
(எ.கா) பந்தினை வீசுதல் |
VIII. கணக்கீடுக
1. ஒரு வண்டியானது 5 மணி நேரத்தில் 400 கி.மீ. தூரத்தை கடந்தால் வண்டியின் சராசரி வேகம் என்ன?
வாகனம் கடந்த தூரம் |
= 400 கி.மீ. |
வாகனம் எடுத்துக் கொண்ட நேரம் |
= 5 மணி நேரம் |
சராசரி வேகம் |
= கடந்த தூரம் / எடுத்துக் கொண்ட நேரம் |
= 400 கி.மீ / 5 நேரம் |
|
= 80 கி.மீ / நேரம் |