You are currently viewing 5th Tamil Term 3 Lesson 3.4 Book Back Answers

5th Tamil Term 3 Lesson 3.4 Book Back Answers

5th Tamil Term 3 Lesson 3.4 Book Back Answers

5th Tamil Term 3 Lesson 3.4 மரபுத் தொடர்கள் Book Back Answers. 5th Standard Tamil Term 3 Book Back Question and Answers 2025. 5th Tamil All Subject book answers and guide. 

Class 5 – Term 3 – Lesson 3.4. மரபுத் தொடர்கள்

I. கீழ்க்காணும் தொடர்களில் ஏற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1 நாங்கள்—————உழவுத்தொழில் செய்து வருகிறோம். (வாழையடி வாழையாக/ விடிவெள்ளியாக)விடை : வாழையடி வாழையாக

  1. அவனுக்கு நடைமுறை அறிவு எதுவும்கிடையாது. அவன் ஒரு——(அவசரக்குடுக்கை/புத்தகப்பூச்சி)விடை : புத்தகப்பூச்சி
  2. பாரதிதாசன் கவிதை உலகில்———-ப்பறந்தார். (பற்றுக்கோடாக/ கொடி கட்டி)

விடை : கொடி கட்டி

II. பொருத்துக.

  1. கயிறு திரித்தல் – பொய் அழுகை
  2. ஓலை கிழிந்தது – விடாப்பிடி
  3. முதலைக் கண்ணீர் – இல்லாததைச் சொல்லல்
  4. குரங்குப்பிடி – மறைந்து போதல்
  5. நீர் மேல் எழுத்து – வேலை போய்விட்டது

விடை : 1 – இ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 –

III. ‘காலை வாரிவிடுகிறது‘ – இம்மரபுத்தொடர், கீழ்க்காணும் எந்தத்தொடருக்குப் பொருத்தமாக அமையும்?

  1. காலம் பொன் போன்றது. இருந்தாலும் நம்மைக்———————-.
  2. காலை எழுந்தவுடன் தூக்கம், நம்மைக்———————-.
  3. மறதி நம்மை அடிக்கடி ———————-
  4. இளமைக்காலம் நம்மை அடிக்கடி———————-.

விடை : மறதி நம்மை அடிக்கடி

IV. மலையேறி விட்டது – இம்மரபுத்தொடர் குறிக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க

  1. மாயச்செயல்
  2. கதை விடுதல்
  3. மாற்றம் பெறுதல்
  4. பயனில்லாது இருத்தல்

விடை : மாற்றம் பெறுதல்

V. சொற்களை த் தொடரில் அமைத்து எழுதுக.

1. பொறுமை _________

விடை : வாழ்வில் முன்னேற பொறுமை அவசியம்

2. நூல்கள் _________

விடை : தமிழ் நூல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை

3. தமிழ்மொழி _________

விடை : செம்மொழிகளுள் தமிழ் மொழி ஒன்று

4. அன்பு _________

விடை : அம்மா என் மீது அன்பாக இருப்பார்

5. கவிஞர் _________

விடை : பாரதியார் ஒரு தேசியக் கவிஞர் ஆவார்

VI. பொருத்துக

  1. பாரதியார் – என் தமிழ் இயக்கம்
  2. பாரதிதாசன் – கொடி முல்லை
  3. வாணிதாசன் – குயில் பாட்டு
  4. திருமுருகன் – வானம் வசப்படும்
  5. பிரபஞ்சன் – தமிழியக்கம்

விடை : 1 – இ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 –

VII. பிறமொழிச் சொற்கள் கலவாமல் எழுதுக.

அழகன், பிரெண்ட்ஸோடு கிரவுண்டுக்குச் சென்றான். அங்கு அனைவருடனும் ஜாலியாகக் கிரிக்கெட் விளையாடினான். அதனால், அவன் மிகவும் டையர்டாக இருந்தான்.

விடை:

அழகன், நண்பர்களோடு விளையாட்டு திடலுக்கு சென்றான். அங்கு அனைவருடனும் சந்தோஷமாகக் மட்டைபந்து விளையாடினான். அதனால், அவன் மிகவும் களைப்பாக இருந்தான்.

VIII. பின்வரும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

கபடி விளையாட்டு மன்றம்

அனைத்துப் பள்ளி மாணவ, மாணவியருக்கும் ஒரு நற்செய்தி

இடம்

அண்ணா விளையாட்டு மைதானம், சென்னை.

 

 

காலம்

மாணவர்

காலை 9 மணிமுதல் 11 மணிவரை

மாணவியர்

காலை 11 மணிமுதல் 12 மணிவரை

1. நீங்கள் மேலே படித்தது என்ன?

  1. பாடல்
  2. கதை
  3. விளம்பரம்

விடை : விளம்பரம்

2. பயிற்சி அளிக்கப்படும் விளையாட்டு எது?

  1. மட்டைப்பந்து
  2. கபடி
  3. சதுரங்கம்

விடை : கபடி

3. மாணவர்களுக்கு எத்தனை மணி நேரம் பயிற்சி வழங்கப்படுகிறது?

  1. 1 மணி
  2. 2 மணி
  3. 3 மணி

விடை: 2 மணி

4. மைதானம் – இந்தச்சொல்லுக்குரிய பொருள் எது?

  1. பூங்கா
  2. அரங்கம்
  3. திடல்

விடை : திடல்

5. விளம்பரத்திலிருந்து நீங்கள் புரிந்து கொண்டது என்ன?

  1. கபடி விளையாட்டுப் பயிற்சி இலவசமாகக் கற்றுத் தரப்படுகிறது.
  2. கபடி விளையாட்டில் மாணவர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர்.
  3. கபடிவிளையாட்டு நடைபெறுமிடம் பெரியார் விளையாட்டு மைதானம

விடை : கபடி விளையாட்டுப் பயிற்சி இலவசமாகக் கற்றுத் தரப்படுகிறது.

மொழியோடு விளையாடு

I. குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம்

1. இவர் எட்டயபுரத்துக் கவிஞர்

விடை : பாரதியார்

2. இது வெண்ணிறப் பறவை

விடை : புறா

3. தூக்கத்தில் வருவது

 விடை : கனவு

கீழிருந்து மேல்

1. புத்தகத்தைக் குறிக்கும் சொல்

விடை : நூல்

வலமிருந்து இடம்

1. பாராட்டி வழங்கப்படுவது

விடை : விருது

2. மக்கள் பேசுவதற்கு உதவுவது

விடை : மொழி

3. சுதந்திரத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல்

விடை : விடுதலை

குறுக்கும் நெடுக்குமாக

1. முத்தமிழுள் ஒன்று

விடை : நாடகம்

II. குறிப்புகள் கொண்டு விடை எழுதுக

1. தலைகீழாய் என் வீடு

விடை : தூக்கணாங்குருவி

2. என் பார்வை கூர்நோக்கு

விடை : கழுகு

3. நானும் ஒரு தையல்காரி

விடை : சிட்டுக்குருவி

4. வருமீன் வரும்வரை காத்திருப்பேன்

விடை : கொக்கு

5. எனக்கு வீடு கட்டத் தெரியாது

விடை : குயில்

III. சொல்லிருந்து புதிய சொல்

1. பாரதியார்

விடை : பாரதியார், பார், ரதி

2. மணிக்கொடி

விடை : மணி, கொடி, மடி,

3. பாவேந்தர்

விடை : பார், வேந்தர், வேர், பா

4. நாடகம்

விடை : நாகம், கடம், நாம்

5. விடுதலை

விடை : விடு, தலை, விலை, தவிடு

IV. சொற்களைக் கொண்டு புதிய தொடர் உருவாக்குக.

1. உண்மை

விடை : நாம் எப்பொழுதும் உண்மையே பேசவேண்டும்

2. பெருமை

விடை : தமிழர் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்

3. பாடல்

விடை : பாரதிதாசனின் பாடல் வரிகள் புரட்சி மிகுந்ததாக உள்ளது.

4. நாடகம்

விடை : இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்ததே முத்தமிழ் ஆகும்

5. தோட்டம்

விடை : எங்கள் தோட்டத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகமாக உள்ளது

6. பரிசு

விடை : விளையாட்டடில் வெற்றி பெற்றவரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது

V. முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடரமைக்க.

1. பெருமை பாரதிதாசன் தமிழுக்குச் சேர்த்துள்ளார்.

விடை : பாரதிதாசன் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

2. பறவை அழகான புறா

விடை : புறா அழகான பறவை

3. தமிழ் உண்டாகிறது மேல் ஆர்வம்

விடை : தமிழ் மேல் ஆர்வம் உண்டாகிறது

4. போற்றும் உலகம் எழுத்தாளர் உயர்ந்த

விடை : உலகம் போற்றும் உயர்ந்த எழுத்தாளர்

Leave a Reply