5th Tamil Term 3 Guide Lesson 1.2
5th Standard Tamil Term 3 Book Back Question and Answers 2025. 5th Tamil All Bubject book answers and guide.
இயல் 1: வாரித் தந்த வள்ளல்
1.2. வாரித் தந்த வள்ளல்
I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. “பொற்காசு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………….
- பொற் + காசு
- பொல் + காசு
- பொன் + காசு
- பொ + காசு
விடை : பொன் + காசு
2. “கொடைத்திறம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..
- கொடை + திறம்
- கோடை + திறம்
- கொட + திறம்
- கொடு + திறம்
விடை : கொடை + திறம்
3. “களிறு” என்பது ………………………………………… யைக்குறிக்கும்
- குதிரை
- கழுதை
- யானை
- ஒட்டகம்
விடை : யானை
4. “தரணி” இச்சொல்லின் பொருள் …………………………………………..
- மலை
- உலகம்
- காடு
- வானம்
விடை : உலகம்
5. ‘சோறு’ இச்சொல்லுடன் பொருந்தாதது ……………………………………………
- உணவு
- அமுது
- அன்னம்
- கல்
விடை : கல்
II. பொருத்துக
- பேழை – வாசல்
- மாரி – கடன்
- வாயில் – பெட்டி
- ஆணை – மழை
- இரவல் – கட்டளை
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ, 5 –ஆ
III. வினாக்களுக்கு விடையளிக்க.
1. பாணனின் குழந்தைகள் பசியால் வாடக் காரணம் என்ன?
- தானியங்களும், மாவும் தீர்ந்துபோய் விட்டதால் பாணனின் குழந்தைகள் பசியால் வாடின.
2. வல்வில் ஓரியின் சிறந்த பண்பு யாது?
- அள்ளிக் கொடுக்கும் வள்ளல் வல்வில் ஓரியின் வீரத்திலும் சிறந்தவனாக விளங்கினார்.
3. பரிசு பெற்ற பாணன், மன்னனை எவ்வாறு வாழ்த்தினான்?
- கற்ற கல்வி அறியாமை அகற்றுதல் அகற்றுதல் போல, உற்ற துயர் துடைக்கும் வள்ளலே! உங்களின் குன்றாப் புகழ் கொடைப் பண்பு ஓங்குக! வாழ்க! வாழ்க! நீவிர் வாழ்க! என் மன்னனைப் பார்த்து பாணன் வாழ்த்தினான்.
4. வாரித் தந்த வள்ளல் இப்படக்கதை மூலம் நீவிர் அறிந்து கொண்டதை எழுதுக.
- தன்னை நாடி வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாத வள்ளல் தன்மை கொண்டவனாக இருந்தவர் வல்வில் ஓரி ஆவார். அவரைப் போல் நாமும் வாழ வேண்டும்.
IV. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
குப்பன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். தான் செய்யும் வேலையில் யாரும் குறுக்கிடக்கூடாது என்று எண்ணுவான். சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமென்பதே அவன் ஆசை. ஒருநாள், அவன் பட்டம் விட்டுக்கொண்டிருந்தான். அப்போது, அவனுடைய தந்தை அங்கு வந்தார். “இந்தப் பட்டத்தைப் பார்க்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறது“ எனக்கேட்டார். அதற்குக் குப்பன், “இந்த நூல் பட்டத்தின் சுதந்திரத்தைத் தடுத்துக் கொண்டிருக்கிறது“ என்றான். உடனே அவன் தந்தை, பட்டத்தின் நூலை அறுத்து விட்டார் பட்டம் தடுமாறிக் கீழே விழுந்தது. இப்பொழுது பார், வரையறைக்குட்பட்டு நூலுடன் இருக்கும்போது இந்தப் பட்டம் எவ்வளவு அழகாகப் பறந்து கொண்டிருந்தது? ஆனால், அந்த ல்தான் பட்டத்தின் சுதந்திரத்தைத் தடுக்கிறது என்று நீ நினைத்தாய். இப்போது என்ன ஆயிற்று? நூல் அறுந்ததும் நிலை தடுமாறி, அந்தப் பட்டம் கீழே விழுந்துவிட்டதே இதுபோலத்தான் நம் வாழ்க்கையும் நூலறுந்த பட்டமாய் இருந்தால் நாமும் வாழ்வில் தடுமாறக்கூடும்“ என்று கூறினார்.
1. குப்பன் எந்த வகுப்பில் படிக்கிறான்?
- குப்பன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்
2. பட்டத்தின் நூல் அறுந்ததும் அதன் நிலை என்னவாயிற்று?
- பட்டத்தின் நூல் அறுந்ததும் தடுமாறிக் கீழே விழுந்தது.
3. இக்கதையின் மூலம் நீங்கள் அறிந்து கொண்டது என்ன?
- நம் வாழ்க்கையும் நூலறுந்த பட்டமாய் இருந்தால் நாமும் வாழ்வில் தடுமாறக்கூடும்
V. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- கண்ணுக்கு அழகு பிறரிடம் ————-காட்டல்.விடை : இரக்கம்
- சிறுபஞ்ச மூலம் ___________ என்பவரால் எழுதப்பட்டது.விடை : காரியாசான்
- வாரி கொடுக்கும் வள்ளல்___________விடை : வல்வில் ஓரி
- நாட்டு மக்களை வருத்தாமை___________ க்கு அழகுவிடை : அரசனுக்கு
VI. பிறமொழிச் சொற்கள் கலவாமால் எழுதுக
1. என்னுடைய புக் டேபிளில் உள்ளது.
- விடை : என்னுடைய புத்தகம் மேசையில் உள்ளது
2. நான் டிவியில் நீயூஸ் பார்த்தேன்
- விடை : நான் தாெலைக்காட்சியில் செய்திகள் பார்த்தேன்
3. தை மாதம் பர்ஸ்ட் நாள் பொங்கல் பெஸ்டிவெல் கொண்டாடினான்
- விடை : தை மாதம் முதல் நாள் பொங்கல் திருநாள் கொண்டாடினான்.
4. பாலன் ஸ்நாக்ஸ் சாப்பிட்டான்.
- விடை : பாலன் சிற்றுண்டி சாப்பிட்டான்.