5th Tamil Term 3 Guide Lesson 1
5th Standard Tamil Term 3 Book Back Question and Answers 2025. 5th Tamil All Bubject book answers and guide.
இயல் 1: நாடு / சமூகம் / அரசு / நிருவாகம்
1.1 சிறுபஞ்சமூலம்
I. சொல் பாெருள்
- வனப்பு – அழகு
- வேந்தன் – அரசன்
- கண்ணோட்டம் – இரக்கம்
- வாட்டான் – வருத்தமாட்டான்
- இத்துணை – இவ்வளவு
- பண் – இசை
II. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக
1. “வனப்பு” இச்சொல்லின் பொருள் ____________
- அறிவு
- பொறுமை
- அழகு
- சினம்
விடை : அழகு
2. “நன்றென்றல்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………………………..
- நன் + றென்றல்
- நன்று + என்றல்
- நன்றே + என்றல்
- நன்றெ + என்றல்
விடை : நன்று + என்றல்
3. “என்று + உரைத்தல்” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………………………….
- என்றுஉரைத்தல்
- என்றுயுரைத்தல்
- என்றஉரைத்தல்
- என்றுரைத்தல்
விடை : என்றுரைத்தல்
4. கண்ணுக்கு அழகு ……………………………………………
- வெறுப்பு
- பொறுமை
- இரக்கம்
- பொறாமை
விடை : இரக்கம்
III. பொருத்துக
1. கண்ணுக்கு அழகு |
கேட்பவர் நன்று என்று சொல்லுதல் |
2. காலுக்கு அழகு |
இவ்வளவுதான் என உறுதி செய்து கூறுதல் |
3. ஆராய்ச்சிக்கு அழகு |
நாட்டு மக்களை வருத்தாமை |
4. இசைக்கு அழகு |
பிறரிடம் சென்று கேட்காமை |
5. அரசனுக்கு அழகு |
இரக்கம் காட்டல் |
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ, 5 – இ |
IV. வினாக்களுக்கு விடையளிக்க.
1. கண்ணுக்கு எது அழகு?
- கண்ணுக்கு அழகு, இரக்கம் கொள்ளுதல்
2. காலுக்கு எது அழகைத் தருகிறது?
- காலுக்கு அழகு, பிறரிடம் பொருள் வேண்டிச் செல்லாமை
3. இசைக்கு அழகாக எது கூறப்படுகிறது?
- இசைக்கு அழகு, அதனைக் கேட்போர் நன்று எனச் சொல்லுதல்
4. அரசனுக்கு அழகைத் தருவது எது?
- அரசனுக்கு அழகு, தன் நாட்டு மக்களை வருத்த மாட்டான் என்று பிறர் அவனைப் புகழ்ந்து கூறுதல்.
V. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக
- கண்வனப்பு – கண்ணோட்டம்
- கால்வனப்பு – செல்லாமை
- கேட்டார் – வாட்டான்
- தன்னோடு – என்றுரைத்தல்