5th Tamil Guide Term 1 Unit 3.3
5th Tamil Term 2 – Lesson 3 – இயல் 3.3 தப்பிப் பிழைத்த மான் Book Back Answers
5th Standard 1st Term Tamil Book Solution | Book Back Answers
TN State Board Syllabus 5th Standard Term 1 Lesson 3 – இயல் 3.3 தப்பிப் பிழைத்த மான் Book Back Answers / Guide Download PDF. 5th ennum ezhuthum work book answers download pdf. 5th Samacheer kalvi guide book in answers. Class 5th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 5th Books Solutions. 5th All Subject Guide.
5th Tamil Guide Term 1 Unit 3.3 மதிப்பீடு
வினாக்களுக்கு விடையளிக்க.
1. நரி, காகத்திடம் இருந்து ஏன் மானைப் பிரிக்க எண்ணியது?
- காகமும் மானும் இணைபிரியாத நண்பர்கள், அவர்களைப் பிரித்து மானைக் கொன்று தின்றுவிட வேண்டும் என எண்ணி நரி, காகத்திடம் இருந்து மானைப் பிரித்தது.
2. நரியை நண்பனாக ஏற்றுக் கொண்ட மானிடம் காகம் கூறியதென்ன?
- நரியை நண்பனாக ஏற்றுக் கொண்ட மானிடம், “நண்பா, யாரையும் நம்பிவிடாதே! அது நமக்குத்தான் ஆபத்து” என்று காகம் கூறியது. மேலும் “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்றது.
3. நரி, மானை எங்கு அழைத்துச் சென்றது?
- நரி, மானை விவசாயி ஒருவரின் விளைச்சல் நிலத்திற்கு அழைத்துச் சென்றது.
4. வலையில் மாட்டிக்கொண்ட மானைக் காகம் எவ்வாறு காப்பாற்றியது?
- விவசாயி அருகில் வரும் வரை நீ இறந்தது போல அசையாமல் இரு. விவசாயி உன்னை வலையில் இருந்து விடுவித்தவுடன், நான் மரத்திலிருந்து ‘கா கா’ என்று குரல் கொடுக்கிறேன். உடனே தப்பித்து விடு என்றது காகம். அதன்படி மான் நடந்து கொண்டு நடித்தது. வேடன் விடுவித்தவுடன் காகம் கரைய மான் ஓடியது.
5. ‘தப்பிப் பிழைத்த மான்’ கதையிலிருந்து நீங்கள் அறிந்து கொண்ட நீதி யாது?
- ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்.
சிந்தனை வினா.
1. நமக்கு நண்பர்களாக இருப்பவர்களிடம் என்னென்ன நற்குணங்கள் இருக்க வேண்டும்? பட்டியலிடுக.
- அன்பு, உண்மை , நல்லொழுக்கம், இரக்கம், மனிதநேயம், சகிப்புத் தன்மை , சினம் கொள்ளாமை, ஈகை குணம் ஆகிய நற்குணங்கள் இருக்க வேண்டும்.