5th Tamil Guide Term 1 Unit 1.4
5th Tamil Term 1 – Lesson 1 – இயல் 1.4 மரபுச்சொற்கள்
5th Standard 1st Term Tamil Book Solution | Book Back Answers
TN State Board Syllabus 5th Standard Term 1 Book Back Answers / Guide Download PDF. 5th ennum ezhuthum work book answers download pdf. 5th Samacheer kalvi guide biik in answers. Class 5th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 5th Books Solutions. 5th All Subject Guide.
I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. நம் முன்னோர்கள் ஒரு சொல்லை சொல்லியவாறே நாமும் சொல்வது _________
- பழைமை
- புதுமை
- மரபு
- சிறப்பு
விடை : மரபு
2. யானை __________
- கத்தும்
- பிளிறும்
- கூவும்
- அலறும்
விடை : பிளிறும்
3. ‘ஆந்தை அலறும்’ – என்பது __________
- ஒலிமரபு
- வினை மரபு
- இளமைப் பெயர் மரபு
- இருப்பிடப் பெயர் மரபு
விடை : ஒலிமரபு
4. புலியின் இளமைப் பெயர் __________
- புலிப்பறழ்
- புலிக்குட்டி
- புலிக்கன்று
- புலிப்பிள்ளை
விடை : புலிப்பறழ்
5. ‘பூப்பறித்தாள்’ என்பது __________
- வினை மரபு
- பெயர் மரபு
- ஒலி மரபு
- இளமைப் பெயர் மரபு
விடை : வினை மரபு
II. ஒலி மரபுகளைப் பொருத்துக.
- சிங்கம் – கூவும்
- அணில் – அலப்பும்
- மயில் – முழங்கும்
- குயில் – கீச்சிடும்
- குரங்கு – அகவும்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – உ, 4 –அ, 5 – ஆ
5th Tamil Guide Term 1 Unit 1.4
III. உயிரினங்களின் உரிய ஒலி மரபை வட்டமிடுக.
- மயில் – கூவும், அகவும், பிளிறும், கத்தும்
விடை : அகவும்
- கிளி – அலப்பும், பேசும், கூவும், கீச்சிடும்
விடை : பேசும்
- குரங்கு – அகவும், கீச்சிடும், சீறும், அலப்பும்
விடை : அலப்பும்
- ஆடு – பேசும், கத்தும், பிளிறும், கூவும்
விடை : கத்தும்
- குயில் – அலப்பும், பிளிறும், அகவும், கூவும்
விடை : கூவும்
- யானை – கத்தும், கர்ச்சிக்கும், உறுமும், பிளிறும்
விடை : பிளிறும்
IV. வினை மரபுகளைப் பொருத்துக.
- நீர் – பறித்தாள்
- முறுக்கு – எய்தான்
- உணவு – குடித்தான்
- அம்பு – தின்றான்
- பூ – உண்டான்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – உ, 4 – ஆ, 5 – அ
V. ஒலிமரபுச் சொற்களை எழுதுக
- பூனை – கரையும்
- எலி – சீறும்
- சேவல் – குரைக்கும்
- காகம் – கீச்சிடும்
- நாய் – கூவும்
விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – உ, 4 –அ , 5 – இ
வினாக்களுக்கு விடையளிக்க.
1. மரபு என்றால் என்ன?
- நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே வழங்குவது மரபு.
2. பாடப்பகுதியில் எத்தனை வகையான மரபுச் சொற்களை இடம் பெற்றுள்ளன?
- பாடப்பகுதியில் ஒலி மரபு, இளமைப் பெயர் மரபு, வினைமரபு, உறுப்புப் பெயர் மரபு, இருப்பிட மரபுச் சொற்கள் என ஐந்து வகையான மரபுச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.
3. ஒலிமரபிற்கு நான்கு எடுத்துக்காட்டுகள் தருக.
- குயில் – கூவும்
- மயில் – – அகவும்
- நாய் – குரைக்கும்
- ஆடு – கத்தும்.
மொழியை ஆள்வோம்
I. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. நல்லறிவு :
- விடை : ராமு நல்லறிவு கொண்டவனாய் விளங்கினான்.
2. தென்னை மரம் :
- விடை : தென்னை மரம் உயரமாக வளரும் மரம்.
3. கவியரங்கம் :
- விடை : எங்கள் பள்ளில் கவியரங்கம் “அன்றும் இன்றும்” எனும் தலைப்பில் நடைபெற்றது.
4. நன்றி :
- விடை : நாய் நன்றி உள்ள விலங்கு
II. கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்து வினாக்களுக்கு விடையெழுதுக.
(மேரி ஆடினாள், ஈ பறந்தது, புலி உறுமியது, பாட்டி தும்மினார், குழந்தை சிரித்தது, பூனை தூங்கியது)
1. குழந்தை என்ன செய்தது?
விடை : குழந்தை சிரித்தது
2. மேரி என்ன செய்தாள் ?
விடை : மேரி ஆடினாள்
3. பாட்டி என்ன செய்தார்?
விடை : பாட்டி தும்மினார்
4. எது பறந்தது?
விடை : ஈ பறந்தது
5. தூங்கியது எது?
விடை : பூனை தூங்கியது
6. புலி என்ன செய்தது?
விடை : புலி உறுமியது
III. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். நம் தாய்மொழியாம் தமிழ் காலத்தால் முந்தையது மட்டுமன்று; உலகின் முதன்மொழியும் ஆகும். வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமை நம் தமிழ்மொழிக்கே உண்டு. தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்துபிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியது, நம் தமிழ்ப்பண்பாடு. உலகமே வியந்து பார்க்கும் வளமான சொற்கள் உடையது நம் அன்னைத் தமிழ்மொழி.
1. தமிழ் என்னும் சொல்லின் பொருள் யாது?
- தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள்
2. உறவினர் என்னும் பொருள் தரும் சொல்லை பத்தியிலிருந்து எடுத்தெழுதுக.
- கேளிர்
3. தமிழ்மொழியில் என்னென்ன இலக்கணப் பிரிவுகள் உள்ளன?
- தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்துபிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது
4. தமிழ்ப் பண்பாடு உலகுக்கு உணர்த்திய உயரிய தத்துவம் யாது?
- யாதும் ஊரே யாவரும் கேளிர்
5. பிரித்து எழுதுக.
- தமிழிலக்கணம் – தமிழ் + இலக்கணம்
IV. எடுத்துக்காட்டில் உள்ளது போல் மாற்றி எழுதுக.
எ.கா.
ஹேண்ட்ரைட்டிங் காம்பிடிசன்ல எனக்குப் ஃபர்ஸ்ட் பிரைஸ் கிடைத்தது.
விடை : கையெழுத்துப் போட்டியில் எனக்கு முதற்பரிசு கிடைத்தது.
1. ஃபஸ்ட் பீரியட் தமிழ் கிளாஸ் நடந்தது
விடை : முதல் காலம் தமிழ் வகுப்பு நடந்தது.
2. நான் ட்ராயிங் நோட்டில் உள்ள பிச்சர்க்கு கலர் கொடுத்தேன்
விடை : நான் ஓவிய நோட்டில் உள்ள படத்திற்கு வண்ணம் கொடுத்தேன்
V. பொருத்தமான சொற்களால் பாடலை நிறைவு செய்க .
(உண்மை , பயிற்சி, பொறுமை, கல்லாமை, ஊக்கம், கல்வி, பொறாமை, முயற்சி)
- ________ உடையவன் மாணவன் ________ அற்றவன் மாணவன்
விடை : பொறுமை / பொறாமை
- _________ கற்பவன் மாணவன் _______ தவிர்ப்பவன் மாணவன்
விடை : கல்வி / கல்லாமை
- _________ பெறுபவன் மாணவன் ________ செய்பவன் மாணவன்
விடை : பயிற்சி / முயற்சி
- _________ பேசுபவன் மாணவன் _______ கொள்பவன் மாணவன;
விடை : உண்மை / ஊக்கம்
VI. பாரதிதாசனின் பாடலில் வரும் வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக
- பனிமலர்
- பாகிடை
- நனிபசு
- கனியிடை
- கழையிடை
VII. கீழ்வரும் குறுக்கெழுத்து புதிரில் உள்ள வினாக்களுக்குச் சிந்தித்துச் சரியான விடையைக் கண்டுபிடி.
கீழிருந்து மேல்
- தமிழ் மொழியின் முதல் இலக்கண நூல்
விடை : தொல்காப்பியம்
- பாரதிதாசன் இவர் மேல் பற்று வைத்திருந்தார்
விடை : பாரதியார்
- புதுவையில் தோன்றிய புதுமைப்
விடை : பாரதிதாசன்
மேலிருந்து கீழ்
- பாரதிதாசனின் தந்தையின் பெயர்
விடை : கனகசபை
- பாரதியார் எழுதிய பாடலில் ஒன்று
விடை : பாப்பா பாட்டு
- முத்தமிழ் என்பது இயல், இசை
விடை : நாடகம்
இடமிருந்து வலம்
- உடலுக்கு குளிர்ச்சி தருவது
விடை : இளநீர்
- உலகின் முதன் மொழி மூத்த மொழி
விடை : தமிழ்
- தமிழ் என்னும் சொல்லுக்குரிய பொருள்
விடை : இனிமை
XIII. சொல்லிலிருந்து புதிய சொல் உருவாக்குக.
1. காஞ்சிபுரம்
விடை : – கா, காஞ்சி, புரம், காசி, காரம், சிரம்
2. புதுக்கவிதை
விடை : – விதை, கவிதை, கவி, புதை
3. நெல்லிக்கனி
விடை : – நெல், கனி, கலி, கல்
4. கற்குவியல்
விடை : – குவியல், குவி, கவி, கல், வில்
XIV. சொற்களைக் கொண்டு புதிய தொடர்களை உருவாக்குக.
(அகிலா – படித்தாள் – நான் – பாடம் – வீட்டிற்கு – சென்றாள் – படித்தேன் – சென்றேன் – வந்தாள் – பள்ளிக்கு)
- அகிலா பள்ளிக்கு வந்தாள்
- அகிலா வீட்டிற்கு சென்றேன்
- நான் பள்ளிக்கு சென்றேன்
- நான் பாடம் படித்தேன்
- அகிலா பாடம் படித்தாள்
XV. குறிப்புகளைக் கொண்டு விடைகளைக் கண்டுபிடி.
- உருண்டோடும் பெரிய தேரைக் காப்பது அதன் சிறிய _______ ஆகும்.
விடை : அச்சாணி
- இரும்பை இழுக்கும் சக்தி கொண்டது.
விடை : காந்தம்
- அம்மா – வேறு சொல் .
விடை : அன்னை
- ஆத்திசூடி எழுதிய பெண்பாற் புலவர்.
விடை : ஒளவையார்
- மேடு – எதிர்ச்சொல் தருக.
விடை : பள்ளம்
- காகம் தனக்குக் கிடைத்த உணவைப் பிற காகங்களோடு ________ உண்ணும்.
விடை : மகிழ்ந்து
- உன் விடைகளின் மூன்றாவது எழுத்துகளை வரிசைப்படுத்தி. எதிர்காலத்தில் நீ யாராக இருப்பாய் எனத் தெரியும். ________
விடை : சாதனையாளர்
4. சொல்லிருந்து புதிய சொல் உருவாக்குக.
எ.கா. காஞ்சிபுரம் – கா, காஞ்சி, புரம், காசி, காரம், சிரம்
1. புதுக்கவிதை
2. நெல்லிக்கனி
3. கற்குவியல்
Answer:
- 1. புதுக்கவிதை – புது, புவி, கவி, கவிதை, புதை, தை
- 2. நெல்லிக்கனி – நெல், நெல்லி, கனி, கல், கலி
- 3. கற்குவியல் – கயல், கவி, கல், குவியல், குவி, வில்