5th Tamil Guide Term 1 Guide Unit 2.1
5th Tamil Guide Term 1 Guide இயல் 2: கல்வி | Unit 2.1 மூதுரை
5th Standard 1st Term Tamil Book Solution | Book Back Answers
TN State Board Syllabus 5th Standard Term 1 Lesson 2 Unit 2.1 மூதுரை Book Back Answers / Guide Download PDF. 5th ennum ezhuthum work book answers download pdf. 5th Samacheer kalvi guide book in answers. Class 5th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 5th Books Solutions. 5th All Subject Guide.
5th Tamil Guide Term 1 Guide Unit 2.1 மூதுரை
I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. “என்றெண்ணி” என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது
- என் + றெண்ணி
- என்று + எண்ணி
- என்றெ + எண்ணி
- என்று + றெண்ணி
விடை : என்று + எண்ணி
2. “மடை + தலை” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- மடைதலை
- மடைத்தலை
- மடத்தலை
- மடதலை
விடை : மடைத்தலை
3. “வரும் + அளவும்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- வருமளவும்
- வருஅளவும்
- வரும்மளவும்
- வரும்அளவும்
விடை : வருமளவும்
4. “அறிவிலர்” என்பதன் எதிர்ச்சொல் ……………………………………………
- அறிவில்லாதவர்
- படிக்காதவர்
- அறியாதார்
- அறிவுடையவர்
விடை : அறிவுடையவர்
5. “எண்ணுதல்” இச்சொல்லுக்குரிய பொருள் ……………………………………………
- வாடுதல்
- வருந்துதல்
- நனைத்தல்
- நினைத்தல்
விடை : நினைத்தல்
II. இப்பாடலில் இரண்டாம் எழுத்து (எதுகை) ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
- அடக்கம் – கடக்க
- மடைத்தலை – உடையார்
- கருதவும் – வருமளவும்
- வருமளவும் – இருக்குமாம்
III. ‘மடைத்தலை ’ இச்சொல்லில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக.
- மடை
- தலை
- மலை
- தடை
IV. பொருத்துக.
- உறுமீன் – நீர் பாயும் வழி
- கருதவும் – பணிவு
- அறிவிலர் – நினைக்கவும்
- மடைத்தலை – பெரிய மீன்
- அடக்கம் – அறிவு இல்லாதவர்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஆ
வினாக்களுக்கு விடையளிக்க.
1. கொக்கு எதற்காகக் காத்திருக்கிறது?
- கொக்கு தனக்கு இரையாகக் கூடிய பெரிய மீன்கள் வரும் வரை அசைவின்றிக் காத்திருக்கின்றது.
2. யாரை அறிவில்லாதவர் என எண்ணிவிடக் கூடாது என ஔவையார் குறிப்பிடுகிறார்?
- தமக்குரிய காலம் வரும் வரை சிலர் அடங்கி இருப்பர். அவர்களை அறிவில்லாதவர் என எண்ணிவிடக்கூடாது.
சிந்தனை வினா.
அடக்கமாக இருப்பவரை அறிவில்லாதவர் என்று எண்ணி வெல்ல நினைக்கக்கூடாது. ஏன்? கலந்துரையாடுக.
- மாணவன் 1 : வணக்கம்! அடக்கம் இருப்பவரை அறிவில்லாதவர் என்று எண்ணி வெல்ல நினைக்கக் கூடாது.
- மாணவன் 2 : ஆம். சரியாக கூறினாய். அடக்கமாக இருப்பவர்கள் தனக்கு தகுந்த நேரம் வரும் வரை பொறுமையாக இருப்பர்.
- மாணவன் 3 : தனக்கு ஏற்ற நேரம் வந்தவுடன் விரைவாகச் செயலை முடித்து வெற்றி பெற்று விடுவார்கள். ஆதலால் அடக்கமானவரை அறிவில்லாதவராக எண்ணுதல் கூடாது.