You are currently viewing 5th Social Science Guide Term 3 Lesson 3

5th Social Science Guide Term 3 Lesson 3

5th Social Science Guide Term 3 Lesson 3

TN Board 5th Social Science Solutions Term 3 Chapter 3 கல்வி உரிமைகள்

5th Social Science Guide கல்வி உரிமைகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.

_____________ என்பது, குழந்தையின் வளர்ச்சிக்கான முதல்படியாகும்.

அ. கல்வி

ஆ. ஆய்வு

இ. அகழ்வராய்ச்சி கல்வி

விடை:அ. கல்வி

Question 2.

____________ விட மேம்பட்டதாகும்.

அ. எண் கணிதம்

ஆ. எழுத்தறிவு

இ. மேலே உள்ள அனைத்தும்

விடை:இ. மேலே உள்ள அனைத்தும்

Question 3.

“கல்வி என்பது மனிதனுள் ஏற்கனவே இருக்கும் முழுமையின் வெளிப்பாடு” என்பது ____________ இன் பிரபலமான கூற்று ஆகும்.

அ. மகாத்மா காந்தி

ஆ. முனைவர்.இராதாகிருஷ்ணன்

இ. சுவாமி விவேகானந்தர்

விடை:இ. சுவாமி விவேகானந்தர்

Question 4.

________________ குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது.

அ. எழுத்தறிவு உரிமைச் சட்டம்

ஆ. கல்வி உரிமைச் சட்டம்

இ. பள்ளி உரிமைச் சட்டம்

விடை:ஆ. கல்வி உரிமைச் சட்டம்

Question 5.

கல்வியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு ______________ ஐ வடிவமைத்துள்ளது.

அ. தேசிய கல்வி கொள்கை

ஆ. தொடக்கக் கல்வி தொடர்பான தேசிய கொள்கை

இ. எழுத்தறிவுக்கான தேசிய கொள்கை

விடை:அ. தேசிய கல்வி கொள்கை

II. பொருத்துக

விடை:

III. சரியா தவறா?

Question 1.

ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி கிடைக்க உரிமை உண்டு.விடை:சரி

Question 2.

சமூகம், சூழ்நிலை மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க கல்வி உதவுகிறது.விடை:சரி

Question 3.

பள்ளி உரிமை சட்டம் குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தின் முறைகளை விவரிக்கிறது.விடை:தவறு

Question 4.

ஒருவரைக் கல்வி அறிவு உடையவராக மாற்றுவதற்கான முதல்படியாக எண் கணிதம் விளங்குகிறது.விடை:தவறு

Question 5.

முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் கு.காமராசரால் செயல்படுத்தப்பட்ட திட்டம் இலவச மதிய உணவுத் திட்டமாகும்.விடை:சரி

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.

கல்வியின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.

விடை:

கல்வி என்பது, ஒருவர் பெற்ற எழுத்தறிவை மட்டும் குறிப்பதன்று. இது எழுத்தறிவை விட மேம்பட்டதாகும். கல்வியின் மூலம், காரணத்தை ஆய்ந்து அறிதல், வாழ்வியல் திறன்களை வளர்த்தல், எது சரி, எது தவறு என்பதனை அறிதல், ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து வாழ்தல் ஆகியவற்றை அறிந்து கொள்கிறோம்.

Question 2.

கல்வி உரிமைகள் குறித்துச் சிறு குறிப்பு வரைக.

விடை:

ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறுவதற்கான உரிமை உண்டு. இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதி செய்வதற்கு (Ensure) கல்வி உரிமைச் சட்டம் (RTE) உள்ளூர் அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் வெவ்வேறு பொறுப்புகளை அளித்துள்ளது.

6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தைக் கல்வி உரிமைச் சட்டம் (2009) விவரிக்கிறது.

Question 3.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பங்கு என்ன?

விடை:

அனைவருக்கும் கல்வி இயக்கம் 2001ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

  • இந்தத் திட்டத்தின் நோக்கம்
  • தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரித்தல்
  • 14 வயது வரையிலான குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வியைப் பெறச் செய்தல்.
  • கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்.

Question 4.

தேசிய கல்வி கொள்கை பற்றிச் சிறு குறிப்பு வரைக.

விடை:

இந்திய மக்களிடையே கல்வியை மேம்படுத்துவதற்காக 2019 ஆம் ஆண்டில் இந்திய அரசு தேசிய கல்வி கொள்கையை (NPE) வடிவமைத்துள்ளது. தேசிய கல்வி கொள்கை தொடக்கக் கல்வி முதல் கல்லூரி வரையிலான அனைத்துக் கல்வி முறைகளையும் உள்ளடக்கியது.

Question 5.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் இரண்டு கூறுகளைப் பற்றி எழுதுக.

விடை:

  • தரமான கல்வியை வழங்குதல் மற்றும் மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல்.
  • கல்வி உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளையும் ஆதரித்தல்.

V. விரிவான விடையளிக்க.

Question 1.

இந்தியக் கல்வி முறை பற்றி எழுதுக.

விடை:

  1. குருகுலம் என்பது பண்டைய இந்தியாவில், பின்பற்றிக் கொண்டிருந்த கல்வி முறையாகும். குரு (ஆசிரியர்) மற்றும் ஷிஷ்யா (மாணவர்) ஆசிரமத்தில் வசித்து வந்தனர்.
  2. கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்கவும் 2001ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) தொடங்கப்பட்டது.
  3. 2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி உரிமைச் சட்டம் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெற வழி வகுக்கிறது.
  4. 2018 ஆம் ஆண்டில் மழலையர் கல்வி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிக் கல்வியை இணைத்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் (SS) அறிமுகப்படுத்தப்பட்டது.
  5. 2019ம் ஆண்டு தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை கல்வியை மேம்படுத்த தேசியக் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டது.

Question 2.

கல்வி உரிமைச் சட்டம் பற்றி விரிவாக எழுதுக.

விடை:

கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கிய கூறுகள்

  • தொடக்கக் கல்வி நிறைவடையும் வரை, எந்த மாணவரும்
  • பள்ளியிலிருந்து நிறுத்தப்படுவதில்லை.
  • அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களுக்கு இருபத்தைந்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
  • கல்வியின் தரத்தில் முன்னேற்றம்
  • ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் பள்ளி உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படவேண்டும்.
  • மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நிதி பகிரப்படும்.

Question 3.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் பற்றி விரிவாக எழுதுக.

விடை:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் குறிக்கோள்கள்

  • தரமான கல்வியை வழங்குதல் மற்றும் மாணவர்களின்
  • கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல்.
  • கல்வி உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளையும் ஆதரித்தல்.
  • பெண்கள் கல்வியில் கவனம் செலுத்துதல்.
  • மின்னணு கல்வியில் கவனம் செலுத்துதல்.
  • கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

5th Social Science Guide கல்வி உரிமைகள் Additional Important Questions and Answers

Question 1.

குழந்தையின் வளர்ச்சிக்கான முதல்படி ____________ ஆகும்.விடை:கல்வி

Question 2.

கல்வியின் நோக்கம் வெறும் _____________ பெறுவது மட்டும் அல்ல.

விடை:எழுத்தறிவைப்

Question 3.

கல்வி ______________ வளர்க்கிறது.விடை:ஞானத்தை

Question 4.

பண்டைய இந்தியாவில் _____________ என்ற கல்விமுறை பின்பற்றப்பட்டது.

விடை:குருகுலம்

Question 5.

அன்றையக் கல்வி முறையில் குருவும் சிஷ்யர்களும் _____________ வசித்து வந்தனர்.விடை:ஆசிரமத்தில்

Question 6.

இலவச மற்றும் கட்டாயக் கல்வியை _____________ உறுதி செய்கிறது.

விடை:கல்வி உரிமைச் சட்டம்

Question 7.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் வயது வரம்பு ______________

விடை:6 முதல் 14 வரை

Question 8.

சட்டமன்றப் பிரிவில் கல்வியானது ____________ பிரிவின் கீழ் வருகிறது.

விடை:பொதுப் பட்டியல்

Question 9.

2019ஆம் ஆண்டு இந்திய அரசு வடிவமைத்தது ______________விடை:தேசிய கல்விக் கொள்கை

Question 10.

பெண்கல்வியில் கவனம் செலுத்துதல் _____________ திட்டத்தின் ஒரு குறிக்கோள் ஆகும்.விடை:ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்

II. பொருத்துக

  1. ஜூலை 15 – சுவாமி விவேகானந்தர்
  2. 1968 ஆம் ஆண்டு – பண்டைய கல்விமுறை
  3. 2009ஆம் ஆண்டு – முதல் தேசிய கல்வி கொள்கை
  4. குருகுலம் – கல்வி வளர்ச்சி நாள்
  5. அமெரிக்கச் சொற்பொழிவு – கல்வி உரிமைச் சட்டம்

விடை:

  1. ஜூலை 15 – கல்வி வளர்ச்சி நாள்
  2. 1968 ஆம் ஆண்டு – முதல் தேசிய கல்வி கொள்கை
  3. 2009ஆம் ஆண்டு – கல்வி உரிமைச் சட்டம்
  4. குருகுலம் – பண்டைய கல்விமுறை
  5. அமெரிக்கச் சொற்பொழிவு – சுவாமி விவேகானந்தர்

5th Social Science Guide கல்வி உரிமைகள் InText Questions and Answers

பக்கம் 140 செயல்பாடு நாம் செய்வோம்

புதிருக்கு விடை காண்க

குறிப்புகள்

விடை:

Question 1.

நான் அழுக்காக இருக்கும்பொழுது வெண்மையாகவும், தூய்மையாக இருக்கும்பொழுது கருப்பாகவும் இருப்பேன். நான் யார்?விடை:கரும்பலகை

Question 2.

நான் இளம் வயதில் உயரமாகவும், வயதாகும்போது குட்டையாகவும் இருப்பேன். நான் யார்?விடை:பென்சில்

Question 3.

உலர்ந்திருக்கும் பொழுது நான் ஈரமாக்கப்படுவேன். நான் யார்?விடை:துண்டு

Question 4.

எனக்குக் கழுத்து உண்டு. ஆனால், தலை இல்லை . நான் யார்?விடை:குடுவை

Leave a Reply