5th Social Science Guide Term 2 Lesson 1
5th Social Science Guide Term 2 Lesson 1 பண்டைய அகழ்வாராய்ச்சி
5th Standard Social Science Book Back and Additional Question and answers Term 2 Lesson 1 பண்டைய அகழ்வாராய்ச்சி Book in answers download pdf. 5th Social Science Samacheer kalvi guide Tamil Medium Download answers. 5th All Subject Test Book download. 5th Tamil Medium Guide. Class 5 All Subject Book Back Answers.
5th Social Science Guide பண்டைய அகழ்வாராய்ச்சி Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
Question 1.
அகழ்வாராய்ச்சியின் மூலம் மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்ந்த இடங்கள் பற்றிய வரலாற்றினைப் படிப்பவர்கள் ______________
அ) தொல்பொருள் ஆய்வாளர்
ஆ) அறிவியலாளர்
இ) அகழ்வாராய்ச்சியாளர்
விடை:அ) தொல்பொருள் ஆய்வாளர்
Question 2.
எகிப்தில் உள்ள சிறிய பிரமிடுகள் _____________ க்காக உருவாக்கப்பட்டன.
அ) இளவரசர்
ஆ) அரசர்
இ) அரசி
விடை:இ) அரசி
Question 3.
சிந்துவெளி நாகரிகம் ______________ நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.
அ) எகிப்து
ஆ) ஹரப்பா
இ) அமெரிக்கா
விடை:ஆ) ஹரப்பா
Question 4.
ஆதிச்சநல்லூர் ______________ இல் உள்ளது.
அ) தூத்துக்குடி
ஆ) சென்னை
இ) புதுச்சேரி
விடை:அ) தூத்துக்குடி
Question 5.
கீழடி _____________ காலம் என்பதனைத் தெரிவிக்கிறது.
அ) நவீன
ஆ) சங்க
இ) இடைக்
விடை:ஆ) சங்க
II. பொருத்துக.
விடை:
III. சரியா தவறா?
Question 1.
அகழ்வாராய்ச்சியின் போது தொல்கைவினைப் பொருள்கள் கண்டறியப்பட்டன.
விடை:சரி
Question 2.
சிந்துவெளி நாகரிகம் ஹரப்பாவில் உள்ளது.
விடை:சரி
Question 3.
ஆதிச்சநல்லூர் என்ற தொல்பொருள் ஆய்வு இடம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ளது.விடை:தவறு
Question 4.
கீழடியில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சி, கீழடி ஒரு வளர்ச்சியடைந்த நகரம் என்பதனைத் தெரிவிக்கிறது.விடை:சரி
Question 5.
ரோமன் விளக்குகள், கண்ணாடிப் பொருள்கள், நவரத்தினக்கற்கள் போன்றவை அரிக்கமேடு என்ற இடத்தில் கண்டறியப்பட்டன.விடை:சரி
IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
Question 1.
அகழ்வாராய்ச்சி என்றால் என்ன?
விடை:
- அகழ்வாராய்ச்சி என்பது பூமியின் மேற்பரப்பின்கீழ் என்ன இருக்கிறது என்பதைப்பற்றி ஆராய்வதாகும். இந்த ஆய்வு, வரையறைக்குட்பட்டு நிகழ்த்தப்படுகிறது.
Question 2.
தொல்பொருள் ஆய்வாளர் என்பவர் யார்?
விடை:
- மனிதர்கள் மற்றும் இடங்களின் வரலாற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆய்வு செய்பவர்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள் என்றழைக்கப்படுகின்றனர். மேலும் அவர்கள் தொல்கைவினைப் பொருள்களையும் பகுப்பாய்வு செய்வார்கள்.
Question 3.
பிரமிடுகள் பற்றிய சிறுகுறிப்பு வரைக.
விடை:
- பிரமிடுகள் என்பன எகிப்தில் உள்ள அரச குடும்பத்தினரின் கல்லறைகள் ஆகும். பிரமிடுகள் பற்றி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டபோது அரசிக்காக வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிலான பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மிகச் சிறப்பான வடிவமைப்பினைக் கொண்ட மிகப் பெரிய கல்லறைகள் அரச குடும்பத்திற்காக கட்டப்பட்டன என்பதனைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். பிரமிடுகளிலிருந்து கண்டறியப்பட்ட எலும்புக்கூடுகள், மக்களின் சராசரி உயரம் மற்றும் வயது பற்றிய தகவல்களைக் கொடுத்தன.
Question 4.
ஆதிச்சநல்லூரில் கண்டறியப்பட்ட தொல்கைவினைப் பொருள்கள் யாவை?
விடை:
- இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில், முதுமக்கள் தாழிகள், பல்வகைப்பட்ட மட்பாண்டங்கள் (கருப்பு, சிவப்பு) இரும்பாலான குத்துவாள், கத்திகள், ஈட்டிகள், அம்புகள், சில கல்மணிகள், சில தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன.
Question 5.
கீழடி எங்கு அமைந்துள்ளது?
விடை:
- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் தாலுகாவில் கீழடி அமைந்துள்ளது.
V. விரிவான விடையளிக்க.
Question 1.
சிந்துவெளி நாகரிகம் பற்றி விவரி.
விடை:
- சிந்துவெளி நாகரிகம் ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோண்டப்பட்ட முதல் தொல்லியல் ஆய்வு தளம் இதுவாகும். அங்கு சுட் செங்கற்கள் நிலத்தடியில் காணப்பட்டன. நகரமானது நன்கு திட்டமிட்டும், சரியான வடிகால் அமைப்புகளுடனும், கிணறுகளுடனும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
- மூடிய வடிகால்களுக்கு கழிவு நீரை அனுப்பும் வழி இருந்தது. மேம்படுத்தப்பட்ட தானியக் களஞ்சியங்கள், பெரிய குளம் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் இருந்தன. நகரமும் அதன் நாகரிகமும் அவர்களின் காலத்தை விட மிக உயர்ந்த நிலையில் இருந்தன என்பது கண்டறியப்பட்டது.
Question 2.
கீழடி பற்றி விவரி.
விடை:
- இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை திருபுவனம் தாலுகாவிலுள்ள கீழடி கிராமத்தில் சங்ககாலத்தைச் சேர்ந்த பழமையான நகரத்தை அகழ்ந்து ஆய்வு செய்துள்ளது. செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்கள், நன்கு அமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு போன்ற சான்றுகள் இந்த ஆய்வில் கிடைத்துள்ளன.
- மேலும் தமிழ்-பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்கள், கண்ணாடியிலான மணிகள், செம்மணிகள், வெண்கல்படிகம், முத்துகள், தங்க ஆபரணங்கள், இரும்புப் பொருள்கள் , சங்குவளையல்கள், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை போன்றவையும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
- கீழடியில் ரோம் நாட்டைச் சேர்ந்த பழங்காலத் தொல்பொருள்களும் கிடைத்துள்ளன. இவை இந்தியாவிற்கும் ரோம் நாட்டிற்கும் இடையே நிலவிய வாணிகத்தொடர்பை உறுதி செய்கின்றன.
Question 3.
அரிக்கமேடு பற்றி விரிவாக எழுதவும்.
விடை:
- அரிக்கமேடு, புதுச்சேரி அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும். கடற்கரை கிராமமாக இருந்த அரிக்கமேடு, ரோம் நகருடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது என்பதனை அகழ்வாராய்ச்சி மூலம் அறிய முடிகிறது.
- அங்கு ரோமானிய விளக்குகள், கண்ணாடிப் பொருள்கள், பலவகை கண்ணாடி மணிகள், விலை உயர்ந்த கற்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், மதுக்குடுவைகள் போன்றவற்றை தொல்பொருள் ஆய்வாளர் கண்டறிந்தார். அவர், மேலும் அக்கிராமத்திலுள்ள மீனவர்களுக்கு அந்தத் தொல்கைவினைப் பொருள்கள் யாவும் புதியனாக இருந்தன என்பதனைக் குறிப்பிட்டுள்ளார்.