4th Tamil Term 3 Guide Lesson 8
4th Standard Term 3 – Lesson 8 உறவுமுறைக் கடிதம் Book Back Answers
4th Standard TN State Board Syllabus Term 3 Lesson 8 – இயல் 8 உறவுமுறைக் கடிதம் Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers. Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.
4tt Tamil Book Back Answers Guide Term 3 Lesson 8: உறவுமுறைக் கடிதம்
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. |“நற்பண்பு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
- நல்ல + பண்பு
- நற் + பண்பு
- நல் + பண்பு
- நன்மை + பண்பு
விடை : நல்ல +பண்பு
2. பின்வருவனவற்றுள் எது உள்ளரங்க விளையாட்டு இல்லை?
- தாயம்
- ஐந்தாங்கல்
- பல்லாங்குழி
- கபடி
விடை : கபடி
3. “பாரம்பரியம்” இச்சொல்லுக்குரிய பொருளைத் தராத சொல்?
- அண்மைக்காலம்
தொன்றுதொட்டு
- தலை முறை
- பரம்பரை
விடை : அண்மைக்காலம்
உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
விளையாட்டும் பொழுதுபோக்கும் ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம்பெறுவன. சங்க காலத்தில் இளையரும் முதியவரும் பலவகையான விளையாட்டுகளிலும் பொழுதுபோக்குகளிலும் ஈடுபட்டனர். அவற்றுள் ஒன்று, ஏறு தழுவுதல். முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள், கூரிய கொம்புகளை உடைய காளைகளை அடக்குவதனை வீர விளையாட்டாகக் கருதினர்.
1. ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடப்படுவன யாவை?
- விளையாட்டும் பொழுதுபோக்கும் ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடப்படுவன
2. ஏறு தழுவுதல் என்றால் என்ன?
- காளைகளை அடக்குதல் வீர விளையாட்டு ஏறு தழுவுதல் எனப்படும்
3. உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள எதிர்ச்சொற்களை எழுதுக.
- இளையரும் x முதியவரும்
4. ஏறு தழுவுதல் எந்த நிலத்துடன் தொடர்புடையது?
- ஏறு தழுவுதல் முல்லை நிலத்துடன் தொடர்புடையது
5. நிரப்புக.
ஏறு தழுவுதல் என்பது, ———— விளையாட்டு. (உள்ளரங்க/ வெளியரங்க)
விடை : வெளியரங்க
மொழியோடு விளையாடு: உங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளைக் கட்டத்தில் கண்டறிந்து எழுதுக.
கிளித்தட்டு |
பம்பரம் |
பல்லாங்குழி |
தாயம் |
சடுகுடு |
ஆடுபுலி |
ஐந்தாங்கல் |
கிட்டிப்புள் |
காயா பழமா |