You are currently viewing 4th Tamil Term 3 Guide Lesson 6

4th Tamil Term 3 Guide Lesson 6

4th Tamil Term 3 Guide Lesson 6

4th Standard Tamil Term 3 – Lesson 6 மலையும் எதிரொலியும் Book Back Answers

4th Standard TN State Board Syllabus Term 3 Lesson 6 – இயல் 6 மலையும் எதிரொலியும் Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers.  Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.

 

4th Tamil Book Back Answers Term 3 Lesson 6: மலையும் எதிரொலியும்

விடுகதைக்குரிய சரியான படத்தைத் தேர்ந்தெடுப்போமா?

1. வட்டமாய் இருந்திடுவேன் உண்ணுவதற்கே என்னை வாங்குவர். ஆனால் என்னை யாரும் உண்ணுவதில்லை. நான் யார்?

விடை : தட்டு

2. உயரமாய் இருந்திடுவேன்; பச்சை ஆடை உடுத்தியிருப்பேன்; குளிர்ச்சியான தண்ணீரைக் கொட்டுவேன். நான் யார்?

விடை : மலை

3. நீல நிறமாய்த் தோன்றிடுவேன். ஓயாமல் அலைந்திடுவேன். தவழ்ந்து தவழ்ந்து வந்திடுவேன். நான் யார்?

விடை : ஆறு

4. நீ பார்த்தால் நானும் பார்ப்பேன். நீ சிரித்தால் நானும் சிரிப்பேன். நீ செய்தால் நானும் செய்வேன். நான் யார்?

விடை : கண்ணாடி

5. தரையிலே ஊர்ந்திடுவேன். வானத்திலே பறந்திடுவேன். கடலைத் தாண்டிடுவேன். மக்களைச் சுமந்து செல்வேன். நான் யார்?

விடை : விமானம்

மொழியோடு விளையாடு: குறிப்புகளைப் படி, விடையைக் கண்டுபிடி

  1. மூன்றெழுத்துச் சொல் நடு எழுத்து எடுத்து விட்டால் படுக்கச் சொல்லும் காஞ்சிபுரம் இதனால் புகழ் பெறும்

விடை : பட்டு

  1. நான்கெழுத்துச் சொல் முதல் இரண்டு எழுத்து விடச்சொல்லும் கடை இரண்டு எழுத்து பாட்டி சொல்வார் முதலும் கடையும் வித்தாகும்.

விடை: விடுகதை

  1. ஐந்தெழுத்துச் சொல் முதல் இரண்டும் இனிக்கும் கடைசி மூன்றும் பறக்கும் முதலும் கடையும் தேடும் அது என்ன?

விடை: தேன்சிட்டு

கீழ்க்காணும் தொடர்களில் எழுவாயைக் கண்டறிக:

  1. குழந்தை சிரித்தது.

விடை : குழந்தை

  1. கண்ணன் படம் வரைந்தான்.

விடை : கண்ணன்

  1. பூங்கோதை பள்ளி சென்றாள்.

விடை : பூங்கோதை

  1. அண்ணன் தம்பிக்கு உதவினான்.

விடை : அண்ணன்

  1. பறவைகள் வானில் பறந்தன.

விடை : பறவைகள்

  1. பசு புல் மேய்ந்தது

விடை : பசு

கீழ்க்காணும் தொடர்களைப் பயனிலைகளை கண்டறிக:

1. அவர் சிறந்த மருத்துவர்.

விடை : பெயர்ப் பயனிலை

2. என்னை அழைத்தவர் யார்?

விடை : வினாப் பயனிலை

3. அருளரசன் நல்ல மாணவன்.

விடை : பெயர்ப் பயனிலை

4. நேற்று அழகன் ஊருக்குச் சென்றான்.

விடை : வினைப் பயனிலை

5. முக்கனிகள் யாவை?

விடை : வினாப் பயனிலை

6. புலி உறுமியது

விடை : வினைப் பயனிலை

Leave a Reply