4th Tamil Guide Term 1 Lesson 2
4th Standard 1st Term Tamil Book Solution | Book Back Answers
TN State Board Syllabus 4th Standard Term 1 Lesson 2 – இயல் 2 : பனைமரச் சிறப்பு Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers. Class 4th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.
4th Tamil Term 1 | Lesson-2: பனைமரச் சிறப்பு
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. “வல்லமை” என்ற சொல்லின் பொருள் ____________________
- வலிமை
- எளிமை
- இனிமை
- புதுமை
விடை : அ) வலிமை
2. “உயர” என்ற சொல்லின் எதிர்ச்சொல் ____________________
- மேலே
- நிறைய
- தாழ
- அதிகம்
விடை : இ) தாழ
3. “விழுந்து” என்ற சொல்லின் எதிர்ச்சொல் ____________________
- நடந்து
- பறந்து
- எழுந்து
- நின்று
விடை : இ) எழுந்து
4. “கரையோரம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ____________________
- கரை + ஓரம்
- கரை + யோரம்
- கரைய + ஓரம்
- கர + ஓரம்
விடை : அ) கரை + ஓரம்
5. “அங்கெல்லாம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _________________
- அங் + கெல்லாம்
- அங்கு + எல்லாம்
- அங்கு + கெல்லாம்
- அங்கெ + ல்லாம்
விடை : ஆ) அங்கு + எல்லாம்
6. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக
- சாலையோரம் = சாலை + ஓரம்
- குருத்தோலை = குருத்து + ஓலை
வினாக்களுக்கு விடையளி
1. பனைமரத்தில் இருந்து கிடக்கும் உணவுப் பொருள்கள் யாவை?
- நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், பதநீர், கற்கண்டு, கருப்பட்டி போன்ற உணவுப் பொருட்கள் பனை மரத்திலிருந்து கிடைக்கின்றன.
2. சிறுவர்கள் விளையாடுவதற்குப் பனைமரம் எவ்வாறு உதவுகிறது?
- பனங்காய் வண்டி, பனை ஓலைக் காற்றாடி, பனை ஓலை விசிறி, பொம்மைகள் ஆகியவற்றை செய்து சிறுவர்கள் விளையாடுவதற்குப் பனைமரம் உதவுகிறது.
3. பனைமரத்தை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம்?
- “மரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை” இதனை உணர்ந்து நாம் அனைவரும் பனைமரம் வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். பனை மரத்தினைப் பற்றிய பல அரிய செய்திகளை அறிந்து கொண்டு, பனையின் சிறப்பினை நமது நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் எடுத்துக்கூற வேண்டும். பனங்கொட்டைகளைச் சேகரித்து குளம், ஆறு, குட்டை போன்றவற்றின் கரையோரங்களில் விதைகளை ஊன்றி பாதுகாக்கலாம்.
4. பனை மரத்தின் பயன்களாக நீ கருதுவனவற்றை உன் சொந்த நடையில் எழுதுக.
- (i) பனைமரம் நீண்டு வளரக்கூடியது. இது வேர், தூர்ப் பகுதி, நடுமரம், பத்தை மட்டை, உச்சிப் பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளைபீலி, பனங்காய், பச்சை மட்டை, சாரை ஓலை, குருத்தோலை என்ற பன்னிரண்டு உறுப்புகளை உடைய மரம். இப்பொருட்கள் அனைத்தும் மனிதர்களுக்குப் பயன்படுவன.
- (ii) நுங்கும், பனங்கிழங்கும், பனம்பழமும் உணவாகப் பயன்படுகின்றன. ஓலை கூடைகள் முடையவும், கைவினைப்பொருட்கள் செய்யவும், கூரை வேயவும் பயன்படுகிறது.
- (iii) பனஞ்சாறு பதனீராகவும், கற்கண்டாகவும், கருப்பட்டியாகவும் பயன் தருகிறது. பனை மரம் புயலைத் தாங்கும் வல்லமை பெற்றது. பனை ஓலை ஓலைச்சுவடிக்காகவும் பயன்படுத்தப்பட்டது.
- (iv) பனை மரத்தின் வேர் நீரைத் தக்க வைத்துக்கொள்ளும் இயல்பு கொண்டது. இது நிலத்தடி நீர் மட்டம் உயர் காரணமாக அமைகிறது.
- (v) பனங்காய் வண்டி, பனைஓலை காற்றாடி, பனை ஓலை விசிறி, பொம்மைகள் ஆகியவற்றைச் செய்து விளையாட்டுக்கள் விளையாட பயன்படுகிறது. பறவைகளுக்கு வாழிடமாகவும் விளங்குகிறது.
உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் மரத்தாலான பொருள்களைப் பட்டியலிடுக
கதவு | நாற்காலி |
முக்காலி | மேசை |
மரக்கரண்டி | மரக்கட்டில் |
ஊஞ்சல் | மரப்பாவை |
மண்வெட்டி | அரிவாள்மனை |
களைகொத்தி | பம்பரம் |
சொற்களுக்கு உரிய படங்களைப் பொருத்துக
ஒரே பொருள் தரும் சொற்களைக் கண்டுபிடித்து வட்டமிடுக
1. நிலவு – மதி, ஆதவன், திங்கள், கதிரவன், சந்திரன், பரிதி.
விடை : மதி, திங்கள், சந்திரன்
2. அம்மா – சேய், அன்னை, குழந்தை, தாய், மழலை, மாதா.
விடை : அன்னை, தாய், மாதா
3. மகுடம் – அரசன், மணிமுடி, தலை, கிரீடம், அணிகலன், அரசி.
விடை : மணிமுடி, கிரீடம், அணிகலன்
4. திரள் – கூட்டம், கடை, வீதி, நெருக்கம், மக்கள், கும்பல், நெரிசல்
விடை : கூட்டம், நெருக்கம், கும்பல்
இலக்கணம் – பால்
கீழ்க்காணும் சொற்களை வகைப்படுத்துக
அவள், சென்றனர், படித்தான், வந்தது, பறந்தன, ஓடினர், எழுதினான், விளையாடினர், குயவன், நாட்டிய மங்கை, மேய்ந்தன, வகுப்பறை, கற்கள், ஆசிரியர், மாணவர்கள், வீடு, பெற்றோர், தங்கை, அண்ணன், மரங்கள், செடி, மலர், பூக்கள்
ஆண்பால் | பெண்பால் | பலர்பால் |
படித்தான் | அவள் | சென்றனர் |
எழுதினான் | நாட்டிய மங்கை | ஓடினர் |
குயவன் | தங்கை | விளையாடினர் |
ஆசிரியர் | பெற்றோர் | |
அண்ணன் |
ஒன்றன்பால் | பலவின்பால் |
வந்தது | பறந்தன |
வகுப்பறை | மேய்ந்தன |
வீடு | கற்கள் |
செடி | மரங்கள் |
மலர் | பூக்கள் |
பொருத்துக
- அவன் ஆடினாள்
- அவள் ஓடியது
- அவர்கள் வரைந்தான்
- அது பாடினார்கள்
- அவை பறந்தன
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ, 5 – உ