4th Social Science Guide Term 3 Lesson 1
TN Board 4th Social Science Solutions Term 3 Lesson 1 உலகெலாம் தமிழர்கள்
4th Standard Social Science Guide Term 3 Lesson 1 உலகெலாம் தமிழர்கள் Book Back Question and answers Tamil Medium. 4th All Subject Book Back Answers. TN 4th std Tamil, English, Maths, Science, Social Science Tamil Medium and English Medium. Class 1 to 12 Book Back Question and Answers.
4th Social Science Guide உலகெலாம் தமிழர்கள் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
Question 1.
இலங்கையின் அலுவலக மொழிகளில் ஒன்று _____________ ஆகும்.
(அ) மாண்டரின்
(ஆ) இந்தி
(இ தமிழ்
(ஈ) சமஸ்கிருதம்
விடை:(இ தமிழ்
Question 2.
நவீன சிங்கப்பூர் _____________ இல் நிறுவப்பட்டது.
(அ) 1819
(ஆ) 1820
(இ. 1947
(ஈ) 1835
விடை:(அ) 1819
Question 3.
பண்டைய காலங்களில், மலேசியாவில் உள்ள கெடா மாநிலம் கடல் வழியாக தமிழ்நாட்டின் ___________ உடன் இணைக்கப்பட்டிருந்தது.
(அ) விசாகப்பட்டினம்
(ஆ) நாகப்பட்டினம்
(இ மதுரை
(ஈ) சென்னை
விடை:(ஆ) நாகப்பட்டினம்
Question 4.
மியான்மரின் முதன்மையான சமயம் _____________ ஆகும்.
(அ) இந்து சமயம்
(ஆ) சமண சமயம்
(இ) புத்த சமயம்
(ஈ) சீக்கிய சமயம்
விடை:(இ) புத்த சமயம்
Question 5.
ஆங்கிலேயர்கள் மொரீஷியஸைக் கைப்பற்றிய ஆண்டு ___________ ஆகும்.
(அ) 1810
(ஆ) 1820
(இ) 1910
(ஈ) 1920
விடை:(அ) 1810
II. சரியான விடையைத் தேர்வு செய்க.
Question 1.
மலேசியாவில் பல்லவர்களும் சோழர்களும் செல்வாக்கு பெற்றிருந்தனர்.
விடை:சரி
Question 2.
தென் பசிபிக் பகுதியில் உள்ள எரிமலை தீவுகளின் கூட்டம் பிஜி ஆகும்.
விடை:சரி
Question 3.
மன்னர் அனவர்தா மின்சாவின் மகன் கியான்சித்தா ஆவார்.
விடை:சரி
Question 4.
ரீயூனியன் தீவு என்பது, பிரெஞ்சு வெளியுறவுத் துறையின் ஒரு பகுதியாகும்.
விடை:சரி
Question 5.
தமிழ்நாட்டில் மட்டுமே தமிழர்கள் வாழ்கின்றனர்.
விடை:தவறு
III. பின்வருவனவற்றைப் பொருத்துக.
- ஆனந்தா கோயில் – சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ்
- துணைநிலை ஆளுநர்- ரத்து ஜோனி
- திருக்குறளி – நாகப்பட்டினம்
- அஞ்சல் அருங்காட்சியகம் மியான்மர்
- பண்டைய துறைமுகம் – மொரீஷியஸ்
விடை:
- ஆனந்தா கோயில் – மியான்மர்
- துணைநிலை ஆளுநர் – சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ்
- திருக்குறளி – ரத்து ஜோனி
- அஞ்சல் அருங்காட்சியகம் – மொரீஷியஸ்
- பண்டைய துறைமுகம் – நாகப்பட்டினம்
IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
1. தமிழ்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான கடந்தகால உறவுகளை விவரிக்கவும்.
விடை:
- தமிழ்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான உறவுகள் 2000! ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். நாகப்பட்டினத்திலிருந்து கெடாவுக்கு வழக்கமான போக்குவரத்து இருந்தது.
2. ரீயூனியன் தீவு – குறிப்பு வரைக.
விடை:
- மொரீஷியஸ் அருகிலுள்ள ரீயூனியன் என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். இது பிரெஞ்சு : வெளியுறவுத் துறையின் ஓர் அங்கமாகும்.
3. அலுவலக மொழிகளுள் ஒன்றாக தமிழ்மொழியினைக் கொண்ட நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக.
விடை:
- இந்தியா, இலங்கை, சிங்கப்பூர்.
4. மொரீஷியஸ் நாட்டைக் கட்டமைத்ததில் தமிழர்களின் பங்களிப்பினைக் கூறுக.
விடை:
- தமிழர்கள், இத்தீவை வாழ்வதற்கு ஏற்றதாக மாற்றுவதற்கும், பல கட்டடங்களைக் கட்டுவதற்கும் உதவினர்.
5. அ. மலேசியாவில் கொண்டாடப்படும் இந்து பண்டிகை எது?
விடை:
- தைப்பூசம்
ஆ. மியான்மர் நாட்டின் தேசத் தந்தை யார்?
விடை:
அனவர்தா மின்சா
V. கூடுதல் வினா.
1. இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்களின் இரண்டு குழுக்கள் யாவை?
விடை:
- இலங்கை தமிழர்கள்.
- இந்தியத் தமிழர்கள்.
2. எத்தனை முறை உலகத் தமிழ் மாநாடுகள் மலேசியாவில் நடத்தப்பட்டன.
விடை:
- மூன்று முறைகள்.
3. சிங்கப்பூரில் உள்ள தமிழர்களின் கடின உழைப்பின் அடையாளங்கள் யாவை?
விடை:
- ஜொகூர் பாலம், செம்பவாங் கப்பல் கட்டும் தளம், கல்லாங் விமான ! நிலையம் மற்றும் புனித ஆண்ட்ரு கதீட்ரல் ஆகியன தமிழர்களின் கடின உழைப்பின் அடையாளங்கள் ஆகும்.
4. பிஜியில் உருவாக்கப்பட்ட மகளிர் சங்கம் எது?
விடை:
- இந்திய சன்மார்க்க மகளிர் சங்கம்.
5. மியான்மரில் (பர்மா) உள்ள இந்துக்களின் கோயில்கள் சிலவற்றை கூறு.
விடை:
- மாரியம்மன் கோயில், முருகன் கோயில், திருமால் கோயில்.