You are currently viewing 4th Science guide Term3 Lesson 2

4th Science guide Term3 Lesson 2

4th Science guide Term3 Lesson 2

TN Board 4th Science Solutions Term 3 Unit 2 விலங்குகளின் வாழ்க்கை – Tamil Medium

4th Standard Science Guide Term 3 Lesson 2 விலங்குகளின் வாழ்க்கை Book Back Question and Answers Download PDf Tamil Medium. 4th Science Term 3 English Medium Book in answers. 4th All Subject Book Back Answers

4th Science Guide விலங்குகளின் வாழ்க்கை Text Book Back Questions and Answers

I. நான் யார்?

(எறும்பு, பறவை, ஒட்டகம், வௌவால், சிங்கம்)

Question 1.

எனது குழு காலனிகள் என்று அழைக்கப்படுகிறது ______________ விடை:எறும்பு

Question 2.

எங்களின் வீடு கூடாகும் _____________.விடை:பறவை

Question 3.

மணலில் நடப்பதற்காக என் கால் பாதங்கள் அகலமாக உள்ளன. _____________.

விடை:ஒட்டகம்

Question 4.

எனது பாதையில் உள்ள பொருள்களைக் கண்டுபிடிக்க மீயொலியைப் பயன்படுத்துவேன். _____________.விடை:வௌவால்

Question 5.

நான் பகலிலும், இரவிலும் சுறுசுறுப்பாக இருப்பேன். _____________.விடை:சிங்கம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

இரவில் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்குகளை என்று ____________ அழைப்பர்.

விடை:இரவில் இரைதேடும் விலங்குகள்

Question 2.

______________ பெற்றோரின் கவனிப்புக்கு மிகவும் பிரபலமானது.விடை:கங்காரு

Question 3.

ஆந்தைகளின் குழு ______________ எனப்படும்.விடை:கூட்டம்

Question 4.

______________ தேன்கூட்டில் வாழ்கின்றன.விடை:தேனீக்கள்

Question 5.

_______________ நம் இரத்ததை உறிஞ்சும்.விடை:கொசு

III. பொருத்துக :

  1. இறக்கையற்ற பூச்சி – நுகர்தல்
  2. யானை – செவுள்கள்
  3. ஒட்டகச்சிவிங்கி – மந்தை
  4. எறும்புகள் – நீண்ட கழுத்து
  5. மீன் – வெள்ளிமீன்

விடை:

  1. இறக்கையற்ற பூச்சி – வெள்ளிமீன்

2.. யானை – மந்தை

  1. ஒட்டகச்சிவிங்கி – நீண்ட கழுத்து
  2. எறும்புகள் – நீண்ட நுகர்தல்
  3. மீன் – செவுள்கள்

IV. பின்வரும் கேள்விகளுக்கு சுருக்கமாக பதிலளிக்க.

1. பறவைகள் கூடுகளை ஏன் உருவாக்குகின்றன?

விடை:

  • பறவைகள் தம் இளம் பறவைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு கூடுகளை உருவாக்குகின்றன.

2. உடல் தகவமைப்பு என்றால் என்ன?

விடை:

  • வாழ்விடத்திற்கு ஏற்ப விலங்குகளின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் உடல் தகவமைப்பு எனப்படும்.

3. எதிரொலித்து இடமாக்கல் — வரையறு.

விடை:

  • வௌவால் இரவில் தங்கள் வழியைக் கண்டுபிடிப்பதற்கும், அவற்றின் பாதையில் உள்ள பொருள்களை தெரிந்து கொள்வதற்கும் மீயொலியை பயன்படுத்துகிறது. இதனையே நாம் எதிரொலித்து இடமாக்கல்’ என்கிறோம்.

4. எறும்புகள் அதிர்வுகளை எவ்வாறு உணர்கின்றன?

விடை:

  • எறும்புகள் கால்களினால் தரையின் அதிர்வுகளை உணர்கின்றன.

5. குழுக்களாக வாழும் மூன்று விலங்குகளை எழுதுக.

விடை:

  • யானைகள், மான்கள், வரிக்குதிரைகள்

6. பறவைகள் ஏன்’V’ வடிவத்தில் பறக்கின்றன?

விடை:

  • காற்றின் எதிர்ப்பைக் குறைக்க பறவைகள் ‘V’ வடிவத்தில் பறக்கின்றன. பறவைகள் V’ வடிவத்தில் பறப்பதால் அவை அதிக அளவு ஆற்றலை சேமிக்கின்றன.

V. பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க.

1. விலங்குகள் ஏன் குழுக்களாக வாழ்கின்றன?

விடை:

  • உணவைத் தேடவும், வாழிடங்களை தேர்ந்தெடுக்கவும், தமது இனத்தைப் பாதுகாக்கவும் மற்றும் பேணுவதற்கும் விலங்குகள் சேர்ந்து வாழ்கின்றன.

2. பூச்சியின் மூன்று முக்கிய உடல் பகுதிகளை விளக்குக.

விடை:

  • தலை : தலையில் காணக்கூடிய முக்கிய பாகங்கள் பெரிய கூட்டுக் கண்கள், உணர்வு நீட்சிகள் மற்றும் வாயுறுப்புகள் ஆகும்.
  • மார்புப் பகுதி : இது உடலின் நடுப் பகுதியை குறிப்பதாகும். இது மூன்று இணை கால்களையும் இரண்டு இணை இறக்கைகளையும் பெற்றுள்ளது.
  • வயிற்றுப் பகுதி : இது பூச்சிகளின் கடைசி உடற் பகுதியாகும். பெரும்பாலான பூச்சிகளின் வயிற்றுப் பகுதிகள் கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

3. இரவில் இரைதேடும் விலங்குகள் பற்றி எழுதுக.

விடை:

  • சில விலங்குகள் இரவில் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன. இத்தகைய விலங்குகளை இரவில் இரைதேடும் விலங்குகள் என்று அழைக்கின்றார்கள். (எ.கா. ஆந்தை, வௌவால்). இரவில் இரைதேடும் விலங்குகள் பொதுவாக மிகவும் சிறந்த செவிப்புலன், நுகர்தல் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கண்பார்வை ஆகியவற்றைப் பெற்றுள்ளன.

V. கூடுதல் வினா :

1. குழு நடத்தை என்றால் என்ன?

விடை:

  • விலங்குகள் அதே இனத்தை சார்ந்த பிற உயிரினங்களுடன் சேர்ந்து நேரத்தை செலவிட்டு வாழ்வது குழு நடத்தை எனப்படும்.

2. தகவமைப்பு என்பது என்ன?

விடை:

  • ஒரு விலங்கு தன் வாழ்விடத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வது தகவமைப்பு ஆகும்.

3. ஓமடீடியா என்றால் என்ன?

விடை:

  • பூச்சிகளின் கூட்டுக் கண்கள் சிறிய அலகுகளால் ஆனவை. அவை ஒமடீடியா எனப்படும்.

4. பகலில் இரைதேடும் விலங்குகள் – குறிப்பு வரைக.

விடை:

  • பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்குகள் பகலில் இரைதேடும் விலங்குகள் எனப்படும் (எ-டு) கோழி.

5. பெற்றோரின் பராமரிப்பு என்று எது அழைக்கப்படுகிறது?

விடை:

  • பெரியவர்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் பெற்றோரின் பராமரிப்பு என்று அழைக்கப்படுகிறது.

6. தேனீக் குழுவில் உள்ள தேனீக்கள் எவை?

விடை:

  1. ராணித்தேனீ
  2. ட்ரோன்கள் எனப்படும் ஆண் தேனீக்கள்
  3. வேலைக்காரத் தேனீக்கள்

7. கூட்டமாக வாழும் விலங்குகளுக்கு எடுத்துக்காட்டு தருக.

விடை:

  • யானைகள், மான்கள், காட்டு எருமைகள், குரங்குகள்.

8. குளிரும்போது நாய் நடுங்குவது ஏன்?

விடை:

  • குளிரும்போது உடல் சூட்டை அதிகரிக்க நாய் நடுங்குகிறது.

9. பாம்பு சுற்றுப்புறங்களில் உள்ளவற்றை எதன் மூலம் உணர்கிறது?

விடை:

  • பாம்பு தன் நாக்கைக் கொண்டு சுற்றுப்புறங்களில் உள்ளவற்றை உணர்கிறது.

10. வௌவால் எத்தகைய ஒலியைப் பயன்படுத்துகிறது?

விடை:

  • வௌவால் மீயொலியைப் பயன்படுத்துகிறது.

4th Science Guide விலங்குகளின் வாழ்க்கை InText Questions and Answers

பக்கம் 79 முயல்வோம்

விலங்குகளை அவற்றின் குழு நடத்தையுடன் பொருத்துக.

விடை:

முயல்வோம்

கீழ்க்கண்ட வினாக்களை படித்து ஏற்ற விடையை கண்டறிந்து எழுதுக.

விடை:

பக்கம் 83 முயல்வோம்

விடுபட்ட வார்த்தையை நிரப்புக.

பட்டாம்பூச்சி மற்ற பூச்சிகளைப் போல மூன்று உடல் பாகங்களைக் கொண்டுள்ளது. அவை ______________ மற்றும் _____________ கொண்டுள்ளது. பட்டாம்பூச்சியின் மார்புப் பகுதியில் நான்கு ________________ மற்றும் ஆறு கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி அதன் இரண்டு ________________னால் நுகர்கின்றது.

விடை:

பட்டாம்பூச்சி மற்ற பூச்சிகளைப் போல மூன்று உடல் பாகங்களைக் கொண்டுள்ளது. அவை தலை, மார்புப் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதி கொண்டுள்ளது. பட்டாம்பூச்சியின் மார்புப் பகுதியில் நான்கு இறக்கைகள் மற்றும் ஆறு கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி அதன் இரண்டு உணர் நீட்சிகளினால் நுகர்கின்றது.

பக்கம் 85 கண்டறிவோம்

இரவில் இயங்கும் விலங்குகளை வட்டமிடு.

விடை:

பக்கம் 86 நிரப்புவோம்

விலங்குகளை உற்றுநோக்கி அவற்றின் செயல்களை எழுதுக.

விடை:

Leave a Reply