3rd Tamil Term 1 Lesson 2 Book Back Answers
பாடம் 2: கண்ணன் செய்த உதவி
3rd Tamil Term 1 Lesson 2 Book Back Answers. TN 3rd Standard 1st Term Lesson 2 கண்ணன் செய்த உதவி Book Back Full Answer key based on New Samacheer kalvi syllabus. Students Guide 360. 3rd Standard All Important Study Materials. 3rd Tamil Term 1 Book Back Answers. 3rd Tamil Term 1 Book Back Answers.
Lesson 2 கண்ணன் செய்த உதவி |
I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள் ……………..
சந்திரன்
சூரியன்
விண்மீன்
நெற்கதிர்
விடை : சூரியன்
2. மகிழ்ச்சியடைந்தான் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..
மகிழ்ச்சி + அடைந்தான்
மகிழ்ச்சி + யடைந்தான்
மகிழ்ச்சியை + அடைந்தான்
மகிழ்ச்சியை + யடைந்தான்
விடை : மகிழ்ச்சி + அடைந்தான்
3. ஒலியெழுப்பி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..
ஒலி + யெழுப்பி
ஒலி + எழுப்பி
ஒலியை + யெழுப்பி
ஒலியை + எழுப்பி
விடை : ஒலி + எழுப்பி
II. சரியா? தவறா?
- கண்ணன் பெரியவருக்குச் சாலையைக் கடக்க உதவினான். (சரி)
- கண்ணன் பள்ளிக்கு நேரத்தோடு வந்து விட்டான். (சரி)
- பெரியவர் அலைபேசியில் 107ஐ அழைத்தார். (தவறு)
- ஆசிரியரும் மாணவர்களும் கண்ணனைப் பாராட்டினர். (சரி)
III. அகர முதலியைப் பார்த்துப் பொருள் வேறுபாடு அறிக
1. ஒலி : ___________________________
2. ஒளி : ___________________________
விடை:
ஒலி : சத்தம்ஒளி : வெளிச்சம்
3. பள்ளி : ___________________________
4. பல்லி : ___________________________
விடை:
பள்ளி : கல்வி கற்கும் இடம்பல்லி : ஒரு சிறிய உயிரி
5. காலை : ___________________________
6. காளை : ___________________________
விடை:
காலை : சூரியன் உதிக்கும் நேரம்காளை :எருது
IV. சரியான சொல்லால் நிரப்பிப் படி
(வலிமை, கத்த, இலைதழைகளைத், நீளமாக, உயரமானது)
- ஒட்டகச்சிவிங்கி மிகவும் உயரமானது
- அதன் கழுத்து நீளமாக இருக்கும்.
- ஒட்டகச்சிவிங்குக்குக் குரல்நாண் இருந்தாலும் அதனால் சத்தம் போட்டு கத்த முடியாது.
- ஒரு சிங்கத்தையே காலால் தாக்கிக் கொல்லும் அளவுக்கு வலிமை வாய்ந்தது.
- ஒட்டகச்சிவிங்கி இலைதழைகளைத் தின்னும்.
V. வினாக்களுக்கு விடையளி
1. கண்ணன் எங்குப் புறப்பட்டான்?
கண்ணன் பள்ளிக்குப் புறப்பட்டான்
2. பள்ளி செல்லும் வழியில் கண்ணன் யாரைப் பார்த்தான்?
பள்ளி செல்லும் வழியில் கண்ணன் ஒரு பெரியவரைப் பார்த்தான்.
3. பேருந்து எதில் மோதியது?
பேருந்து ஒரு மரத்தில் மோதியது.
4. பெரியவர் எந்த எண்ணிற்குச் செல்பேசியில் பேசினார்?
பெரியவர் 108 என்ற எண்ணிற்கு செல்பேசியில் பேசினார்.
5. ஆசிரியர் கண்ணனை எதற்காகப் பாராட்டினார்?
பிறருக்கு உதவி செய்ததற்காக ஆசிரியர் கண்ணனைப் பாராட்டினார்.
VI. சொல் விளையாட்டு
வாத்தில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.
- நகை
- புகை
- சிரிப்பு
- நடிப்பு
- திரிப்பு
- நகைப்பு