3rd Tamil Term 1 Lesson 1 Book Back Answers
Lesson 1- Book Back Answers
பாடம் 1: தமிழ் அமுது
3rd Tamil Term 1 Lesson 1 Book Back Answers. 3rd Tamil Term 1 1st Lesson Book Back Answers. TN 3rd Standard 1st Term Lesson 3 Book Back Full Answer key based on New Samacheer kalvi syllabus. Students Guide 360. 3rd Standard All Important Study Materials. 3rd Tamil Term 1 Book Back Answers. 3rd Tamil Term 1 Book Back Answers.
பாடம் 1: தமிழ் அமுது
3rd Standard Tamil Lesson Book Back Answers |
தமிழ் அமுது
தோண்டுகின்ற போதெல்லாம்சுரக்கின்ற செந்தமிழே!வேண்டுகின்ற போதெல்லாம்விளைகின்ற நித்திலமே!உன்னைத் தவிரஉலகில் எனைக் காக்கபொன்னோ! பொருளோ!போற்றி வைக்க வில்லையம்மா!.
-கவிஞர் கண்ணதாசன்
பாடல் பொருள்
தோண்டுகின்ற பொழுதெல்லாம் ஊற்றைப்போல் சுரக்கின்ற செந்தமிழே! தேவைப்படும் பொழுதெல்லாம் ஊகின்ற முத்தே! உன்னை அன்றி இவ்வுலகில் என்னைக் காக்க வேறு பொன்னையோ பொருளையோ சேர்த்து வைக்கவில்லை, என்னைக் காத்திடுவாய் அம்மா.
ஆடிப் பாடி மகிழ்வோம்!
அத்திப்பழத் தேன் எடுப்போம்ஆலமர விழு தாவோம்இசைவோடு பள்ளி செல்வோம்ஈகையோடு நட்பு செய்வோம்உவகையாய் கற்றிடுவோம்ஊர் முழுதும் சுற்றிடுவோம்எல்லோரும் சேர்ந்திடுவோம்ஏட்டினிலே பாட்டு செய்வோம்ஐவகை நிலம் செழிக்கஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம்ஓடம் விட்டுக் களித்திடுவோம்ஔவை மொழி கற்றிடுவோம்எஃகாய் உறுதி கொள்வோம்
ஆடிப் பாடி மகிழ்வோம் பாடலின் பொருள் :
அத்திப் பழத்தின் தேன் எடுப்போம். ஆலமர விழுது போல் தாங்கு வோம். இன்முகத்துடன் பள்ளிக்குச் செல்வோம். நட்புணர்வுடன் பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம். மகிழ்ச்சியுடன் பாடம் படித்திடுவோம். ஊர் முழுவதும் சுற்றி வருவோம். எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழ்வோம். ஏட்டில் பாட்டு எழுதுவோம். ஐந்து வகை நிலம் செழிக்க ஒன்றுபட்டு வாழ்வோம். ஆற்றில் படகு விடுவோம். ஔவையின் அறிவுரைகளை மதித்திடுவோம். எ∴கு போன்ற மனவலிமை கொண்டு வாழ்வோம்.
விடை:
- விழுது – ஆலமரத்தின் தாங்கும் வேர்;
- இசைவோடு – மனநிறைவோடு;
- ஈகை – பிறருக்கு அளிப்பது;
- உவகை – மகிழ்ச்சி;
- ஏடு – எழுதப் பயன்படும் காகிதம்;
- ஐவகை – ஐந்து விதமான;
- ஓடம் – படகு;
- ஔவை – சங்ககாலப் பெண்புலவர்;
- எ∴கு – இரும்பின் ஒரு வகை;
- உறுதி – திடம் / வலிமை.
I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. நித்திலம் இச்சொல்லின் பொருள் ………………………
பவளம்
முத்து
தங்கம்
வைரம்
விடை : முத்து
2. செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………
செம்மை + தமிழ்
செந் + தமிழ்
செ + தமிழ்
செம் + தமிழ்
விடை : செம்மை + தமிழ்
3. உன்னை + தவிர என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………..
உன்னைத் தவிர
உனைத்தவிர
உன்னை தவிர
உனை தவிர
விடை : உன்னைத் தவிர
II. பின்வரும் சொற்களின் பொருள் தருக
- சுரக்கின்ற – ஊறுகின்ற
- நித்திலம் – முத்து
- விரும்புகின்ற – வேண்டுகின்ற
- போற்றி – பாதுகாத்து
III. இப்பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?
- தோண்டுகின்ற - வேண்டுகின்ற
- உன்னைத் – பொன்னோ
- காக்க – வைக்க
IV. கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்குக.
விடை
- செந்தமிழ்
- வணங்கு
- போற்றி
- நித்திலம்
- உலகில்
மொழியோடு விளையாடு
“தொட்டால் சுருங்கி”
மாணவர்கள் வட்டமாக நிற்க வேண்டும். ஒரு மாணவன் வட்டத்திற்கு வெளியே சுற்றி ஓடி வரவேண்டும். ஓடி வரும் மாணவன் நிற்கின்ற யாராவது ஒரு மாணவன் முதுகில் தொட்டு ஒரு சொல்லைக் கூற வேண்டும். அந்தச் சொல்லில் முடியும் எழுத்தை முதலாகக்கொண்டு வேறு சொல்லைத் தொடப்பட்டமாணவன் கூற வேண்டும். அவன் சொல்லைக் கூறிவிட்டால் ஓடி வரும் மாணவனே மீண்டும் ஓடி வந்து வேறு வேறு சொல் கூற வேண்டும். தொடப்பட்டவன் சரியாகக் கூற வில்லையென்றால் அவன் ஓடிவர வேண்டும். இவ்வாறே விளையாட்டைத் தொடரலாம்.
எ.கா: விலங்கு என்று சொன்னால் குருவி என்று சொல்ல வேண்டும்.
செயல் திட்டம்
கேட்டு, எழுதி வரலாமா
தமிழ் மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடல்கள் இரண்டை எழுதி வருக
விடை:
தமிழ் மொழியின் சிறப்பு
1. தமிழே, தமிழே, என் உயிரேதரணியில் இதற்கிலை ஈடிணையே!அமிழ்தின் இனிய தமிழ் மொழியேஅகிலம் போற்றும் உயர் மொழியே!
2. தொன்மையில் தோய்ந்தது எம்மொழியாம்எண்ணரும் இலக்கியச் செம்மொழியாம்.விண்ணவர் போற்றிடும் தேன்மொழியாம்கண்மணி எங்களின் தாய்மொழியாம்.