12th Tamil Unit Test Question Paper
12th Tamil Unit Test Question Paper . 12 ஆம் வகுப்பு தமிழ் நவம்பர் 2021 மாதிரித் தேர்வு அரசு (ஆதி.ந) மேல்நிலைப்பள்ளி, இளமனூர் – மதுரை. 12th Revision Test Syllabus, ( DOWNLOADABLE PDF AVAILABLE IN END OF THE PAGE). 12TH TAMIL SAMACHEER KALVI BOOK BACK AND ADDITIONAL Q&A.
(முதல் 5 இயல்கள் மாதிரி தேர்வு)
- வகுப்பு: 12
- நேரம்: 2.30
- பாடம்: தமிழ்
- மதிப்பெண் : 90
12th Tamil Unit Test Question Paper | PDF Available in End of the Page
12th Tamil Unit Test Question Paper
பகுதி – I
அனைத்து வினாக்களுக்கும் உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 14 X 1 = 14
1. சிற்பி பாலசுப்பிரமணியன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற பொழி பெயர்ப்பு நூல்—
அ) நிலவுப்பூ
ஆ ) ஒளிப்பறவை
இ ),அக்கினிசாட்சி
ஈ ) ஒரு கிராமத்து நதி
2 . கீழ்க்கண்டவற்றுள் அய்யப்பமாதவன் இயக்கிய குறும்படத்தின் பெயர் —–
அ) மழைக்குப் பிறகு மழை
ஆ) நானென்பது இன்னொருவன்
இ) நீர்வெளி ஈ) இன்று
3 ) ‘ உவா உறவந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார் யார் யார்?
அ) சடாயு இராமார்
ஆ இராமன் சுக்ரீவன்
இ) இராமன் குகன்
ஈ) இராமன் சவரி
4. சுரதா நடத்திய கவிதை இதழ் —-
அ) இலக்கியம்
ஆ) காவியம்
இ ), ஊர்வலம்
ஈ ) விண்மீன்
5. இலக்கியத்தையும் மொழியைம் ஒரு சேரப்பேசும் இலக்கண நூல்,
அ) யாப்பருங்கலக்காரிகை
ஆ) தாட்டியலங்காரம்
இ) தொல்காப்பியம்
ஈ) நன்நூல்
6. உரிமைத் தாகம் என்னும் சிறுகதையின் ஆசிரியர்.
அ) உத்தமசோழன்
ஆ) புதுமைப்பித்தன்
இ) ஜெயகாந்தன்
ஈ) பூமணி
7. குழிமாற்று எந்தத் துறையோடு தொடர்புடையது.
அ) இலக்கியம்
ஆ) கணிதம்
இ) புவியியல்
ஈ ) வேளாண்மை
8 ) உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் இத்தொடர் உணர்த்தும் பண்பு.
அ) நேர்மறைப் பண்பு
ஆ) எதிர் மறைப் பண்பு
இ) முரண்பண்பு
ஈ ) இவை அனைத்தும்
9. பிழையான தொடாரக் கண்டறிக.
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ ) மலை மீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
ஈ) நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
10. தமிழில் திணை பாகுபாடு —–
அ) பொருட்குறிப்பு
ஆ) சொற்குறிப்பு
இ) தொடர்க்குறிப்பு
ஈ) எழுத்துக் குறிப்பு
11. Platform என்பதன் தழிழாக்கம்,
அ) இருப்பப்பாதை
ஆ) நடைமேடை
இ) காட்சி மோடை
ஈ) தொடர்வண்டி பாதை
12. ” வெங்கதிர்” சொல்லின் இலக்கணக் குறிப்பு.
அ) வினைத்தொகை
ஆ) உவமைத் தொகை
இ) பண்புத்தொகை
ஈ) அண்மொழித்தொகை
13 ) கடவு என்ற சொல்லின் பொருள் —-
அ) பாதை
ஆ) படித்துறை
இ) வயலின் பெயர்
ஈ) ஒரு அளவு
14 யார்? எது? ஆகிய வினாச் சொற்கள் பயனிலையாய் அனமந்து உணர்த்தும் திணைகள்
அ) அஃறிணை, உயர்திணை
ஆ) உயர்திணை அஃறிணை
இ) விரவுத்திணை , அஃறிணை
ஈ ) விரவுத்திணை , உயர்திணை
II அ) குறுவிளா (எவையேனும் 3 மட்டும்) 3 X 2 = 6
15. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
16. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது – விளக்குக.
17. நிலையாமை குறித்து சவரி உரைக்கும் கருத்து யாது?
18. – கலிவிழா, ஒலிவிழா -விளக்கம் தருக
II ஆ) (எவையேனும் 2 மட்டும் ) 2×2 =4
19. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியர் கூறும் கருத்தை குறிப்பிடுக.
20. “புக்கில், தன்மனை” சிறு குறிப்பு வரைக.
21. அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
II – இ) குறுவினா (எவையேனும் 7 மட்டும்) 7×2=14
22. கிணற்றுத்தவளை போல, அச்சாணி இல்லாத தேர் போல உவமைத் தொடர்களை சொற்றொடரில் அமைத்து எழுதுக
23. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
விலை, விளை, விழை
24. திருவளர்ச் செல்வன், திருவளர்செல்வன் – இவற்றில் சரியான தொடர் பாது?. அதற்கான இலக்கண விதி யாது ?
25 வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.
ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு, அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை கற்று கொடுக்கும்.
26. ஒரு விகற்பம், பல விகற்பம் என்றால் என்ன?
27. சொல்லை பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.
அ) கோவில்
ஆ) தலைமை
28. ஏதேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக.
அ) பூம்பாவாய் ஆ) ஒருமையுடன்
29. ஏதேனும் ஒன்றனுக்கு உறுப்பிலக்கணம் தருக.
அ) உயர்ந்தோர் ஆ ) பேசுவார்
30. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
அ ) புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது
ஆ. நிலத்தை கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும்
பகுதி – III
பிரிவு -1
(எவையேனும் 2 மட்டும் ) 2 x 4 = 8
31. “ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் இடஞ்சுட்டி பொருள் விளக்குக.
32. சடாயுவைத் தந்தையாக ஏற்று இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.
33. இவ்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வழி நின்று விளக்குக.
34. இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?
பகுதி – III
பிரிவு – 2
எவையேனும் 2 மட்டும் 2 × 4 = 8
35. சங்கப்பாடல்களில் ஒலிக் கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் – விளக்குக.
135. பண்டைய விரிந்த குடும்பத்தில் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் விளக்கம் எழுதுக.
37. நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?
38. மையாடல் – விளக்குக.
பகுதி III
பிரிவு – 3
எவையேனும் மூன்றனுக்கு மட்டும். 3 X 4 = 12
14. பொருள் வேற்றுமை அணியை விளக்குக?
(அல்லது)
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
– இக்குறிப்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
40. தழிழாக்கம் தருக.
அ ) A new language is a new life
ஆ ) Knowledge of language is the doorway to wisdom
இ ) The Limits of my language are the limits of my world
ஈ ) Learning is treasure that will follow its owner every were
41. யானைக்கும் அடி சறுக்கும்
(அல்லது)
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை –
பழமொழியை வாழ்க்கை நிகழ்வோடு
பொருத்திக் காட்டுக.
42. பா நயம் பாராட்டுக.
வெட்டியடிக்குது மின்னல் – கடல்
வீரத்திரை கொண்டு விண்ணையிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் – கூ
கூவென்று விளினைக் குடையது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா – என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய மழை
அங்ஙனம் வந்ததடா தம்பி வீரா.
12th Tamil Unit Test Question Paper
பகுதி IV
இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. 3 x 6 = 18
43 செய்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.
(அல்லது)
கவிதை எழுத அறிய வேண்டுவளவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க.
44. கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக
(அல்லது)
குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்து மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது
எவ்வாறு? விளக்குக.
45. “கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன” உங்கள் கருத்தை விவரிக்க.
(அல்லது)
பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று , சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
46. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக. 4 + 2 = 6
அ) ‘ குகனோடும் ‘ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல்.
ஆ)’ நன்று ‘ என முடியும் திருக்குறள்