12th Tamil Guide Unit 3.4 Answers
இயல்: 3.4 உரிமைத்தாகம்
12th Tamil Guide Unit 3.4 Answers. TN Standard Tamil Samacheer kalvi Guide இயல்: 3.4 உரிமைத்தாகம் Book Back and Additional Question with answers. +2 Tamil New Syllabus Full Answer key Important Question with the answer for Mid Term, Quarterly, Half-yearly, Revision Exams, and also Public Exams. STUDENTS GUIDE 360
12th Tamil Guide Unit 3 இயல்: 3.4 உரிமைத்தாகம் Book Back and Additional Question-Answers.
12th Tamil Guide Lesson 3 Book Back & Additional Question & Answers
12th Tamil Guide Lesson 3 Book Back & Additional Question & Answers |
பாடநூல் வினாக்கள் | 12th Tamil Guide Unit 3.4 Answers
நெடுவினா
1. ‘உரிமைத்தாகம்’ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால் கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
Answer:
கதைமாந்தர்கள்:
முத்தையா, வெள்ளைச்சாமி, பங்காருசாமி, முத்தையா மனைவி மூக்கம்மாள்.
முன்னுரை :
ஆசிரியர் பூமணி எழுதிய உரிமைத்தாகம் என்னும் சிறுகதையில் அண்ணன், தம்பியின் மன விரிசலால், தம்பி படும் துன்பத்தை எழுத்தோவியமாக்கித் தந்திருக்கிறார். அண்ணன் முத்தையன், தம்பி வெள்ளைச்சாமி.
தம்பி வெள்ளைச்சாமி கடன் வாங்குதல் :
வெள்ளைச்சாமி தன் திருமணத்திற்குப் பிறகு அண்ணனைவிட்டுப் பிரிந்து விடுகிறான். இந்நிலையில் ரூ.200நிலத்தின் மீது பங்காரு சாமியிடம் கடனாக வாங்குகிறான். இது முத்தையனுக்குத் தெரியாது. ஆனால், முத்தையனின் மனைவி இதைத் தெரிந்து கொண்டு முத்தையனிடம் கூறுகிறான். வெள்ளைச்சாமியால் கடனை அடைக்க முடியவில்லை. இதற்கிடையே முத்தையனின் மனைவி தன் நகைகளை அடகு வைத்துக் கடனை அடைக்கச் சொல்கிறாள்.
முத்தையன் பங்காரு வீட்டிற்குச் செல்லுதல் :
முத்தையன் ரூ.200-யை எடுத்துக் கொண்டு பங்காருசாமி வீட்டுக்குச் செல்கிறான். அண்ணன் தம்பிக்காக வந்திருப்பதை அறிந்த பங்காரு ரூ.400 தந்தால் எழுதிக் கொடுத்த பத்திரத்தைத் தருவதாகக் கூறுகிறார். வீடு திரும்பிய முத்தையன் தம்பியோடு சென்று நிலத்தை உழுகிறான்.
செய்தியறிந்த பங்காரு முத்தையன் மற்றும் வெள்ளைச்சாமியுடன் சண்டை புரிகிறார். கடைசியில் நீதிமன்றத்திற்குப் போவேன் என்று மிரட்டுகிறார் பங்காரு. அதை ஏற்காத அண்ணன் தம்பிகள் பங்காருவை விரட்டுகிறார்கள். அவரும் பயந்து ஓடிவிடுகிறார். இது கதையின் முடிவு.
அண்ணன் தம்பி இணையாதிருந்தால்…..
பங்காருசாமி நீதிமன்றத்திற்குச் சென்றார். வழக்கறிஞர் ஒருவரைப் பார்த்து வெள்ளைச்சாமி மீது வழக்குத் தொடுத்தார். இந்தச் செய்தியை வெள்ளைச்சாமி யாரிடமும் சொல்லவில்லை. நீதிமன்றத்திற்கு இரண்டு முறை சென்று வந்தான். ஒரு நாள் பங்காருசாமியைப் பார்த்து என் நிலத்தைத் திருப்பிக் கொடுங்கள். விவசாயம் செய்து கடனை அடைக்கிறேன் என்கிறான். பங்காருசாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மனம் உடைந்த வெள்ளைச்சாமி வீட்டின் வாயில் படியிலேயே விஷம் சாப்பிட்டு மயக்க மடைகிறான்.
மருத்துவமனையில் வெள்ளைச்சாமி :
வெள்ளைச்சாமியை பங்காருசாமியே மருத்துவமனையில் சேர்க்கிறார். சிகிச்சை பெறுகிறான் வெள்ளைச்சாமி, செய்தியறிந்த முத்தையன் மருத்துவமனை சென்று விபரம் அறிகிறான். முத்தையன் தன் தம்பிக்காக, பணம் கேட்டு பங்காரு மிரட்டியதால்தான் விஷம் குடித்தான் என்று காவல் துறையில் புகார் கொடுக்கச் சென்றான் பங்காருசாமி முத்தையனை வழிமறித்து அடமானப் பத்திரத்தைத் திருப்பிக் கொடுப்பதாகவும் வாங்கிய 200 ரூபாயைக் கொடுத்தாலே போதும் என்று வேண்டுகிறார். ஒப்புக்கொண்ட முத்தையன் புகார் கொடுப்பதைத் தவிர்த்து தம்பி வெள்ளைச்சாமியோடு வீடு திரும்பினான்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
கூடுதல் வினாக்கள் | 12th Tamil Guide Unit 3.4 Answers
பலவுள் தெரிக
1. ‘அஞ்ஞாடி’ என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்
அ) ரா.கி. ரங்கராஜன்
ஆ) புதுமைப்பித்தன்
இ) பூமணி
ஈ) உத்தமசோழன்
Answer: இ) பூமணி
2. பூமணி எழுதிய சிறுகதைத் தொகுப்பு
அ) அறுப்பு, வரப்புகள்
ஆ) அறுப்பு, வயிறுகள்
இ) நொறுங்கல்கள், வாய்க்கால்
ஈ) அறுப்பு, வாய்க்கால்
Answer: ஆ) அறுப்பு, வயிறுகள்
Question 3.
பூமணி எழுதிய புதினங்கள்
அ) வரப்புகள், வயிறுகள்
ஆ) அஞ்ஞாடி, அறுப்பு
இ) வரப்புகள், அஞ்ஞாடி
ஈ) பிறகு, வயிறுகள்
Answer: இ) வரப்புகள், அஞ்ஞாடி
Question 4.
முத்தையனின் மனைவி பெயர்
அ) செல்வி
ஆ) மூக்கம்மா
இ) அல்லி
ஈ) கண்ணம்மா
Answer: ஆ) மூக்கம்மா
Question 5.
வெள்ளைச்சாமியின் அண்ணன் பெயர்
அ) முத்தையன்
ஆ) பங்காருசாமி
இ) செவத்தையன்
ஈ) கருப்பசாமி
Answer: அ) முத்தையன்
Question 6.
‘கிரயம்’ என்ற சொல்லின் பொருள்
அ) ஒப்பந்தம்
ஆ) வாக்குறுதி
இ) விலை
ஈ) வாடகை
Answer: இ) விலை
Question 7.
உரிமைத்தாகம் என்ற சிறுகதையின் ஆசிரியர்
அ) புதுமைப்பித்தன்
ஆ) பூமணி
இ) உத்தமசோழன்
ஈ) சுஜாதா
Answer: ஆ) பூமணி
Question 8.
சரியானதைத் தேர்க.
அ) கி.ரா – கி.ராமராஜன்
ஆ) அறுப்பு – நாடகம்
இ) கொம்மை – புதினம்
ஈ) முத்தையன் – அல்லி
Answer: இ) கொம்மை – புதினம்
Question 9.
பொருந்தாததைத் தேர்க.
அ) உரிமைத்தாகம் – பூமணி
ஆ) வாய்க்கால் – புதினம்
இ) வயிறுகள் – சிறுகதைத் தொகுப்பு
ஈ) மூக்கம்மா – வெள்ளைச்சாமியின் மனைவி
Answer: ஈ) மூக்கம்மா – வெள்ளைச்சாமியின் மனைவி
Question 10.
பொருத்துக.
அ) பங்காரு சாமி – 1. மூக்கம்மா
ஆ) முத்தையன் – 2. மேலூர்
இ) வெள்ளைச்சாமி – 3. திரைப்படம்
ஈ) கருவேலம்பூக்கள் – 4. நம்பிக்கைக்கௌரவம்
அ) 2, 1, 4, 3
ஆ) 2, 1, 3, 4
இ) 2, 4, 1, 3
ஈ) 3, 4, 1, 2
Answer: ஆ) 2, 1, 3, 4
Question 11.
‘உரிமைத் தாகம்’ என்னும் சிறுகதை ……………….. என்னும் தொகுப்பில் உள்ளது.
அ) அறுப்பு
ஆ) வயிறுகள்
இ) நொறுங்கல்கள்
ஈ) பூமணி சிறுகதைகள்
Answer: ஈ) பூமணி சிறுகதைகள்
Question 12.
பூமணி எப்புதினத்திற்காக 2014இல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார்?
அ) வெக்கை
ஆ) கொம்மை
இ) அஞ்ஞாடி
ஈ) வாய்க்கால்
Answer: இ) அஞ்ஞாடி
Question 13.
பூமணி ………….. எழுத்தாளர்களில் ஒருவர்.
அ) நெய்தல்
ஆ) கரிசல்
இ) தஞ்சை
ஈ) கொங்கு
Answer: ஆ) கரிசல்
Question 14.
‘பூமணி’ என்பாரின் இயற்பெயர்
அ) பூ. மணிரத்னம்
ஆ) பூ. மாணிக்கவாசகர்
இ) பூவரசு மணிகண்டன்
ஈ) பூ. மணிகண்டன்
Answer: ஆ) பூ. மாணிக்கவாசகர்
Question 15.
கி.ரா. என்னும் முன்னத்தி ஏரைப் பின்தொடர்கின்ற பின்னத்தி ஏர்
அ) ந. பிச்சமூர்த்தி
ஆ) அகிலன்
இ) வேணுகோபாலன்
ஈ) பூமணி
Answer: ஈ) பூமணி
Question 16.
பூமணி ஆற்றிய பணி
அ) தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளர்
ஆ) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பதிவாளர்
இ) சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer: அ) தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளர்
Question 17.
பூமணி எடுத்துள்ள திரைப்படம்
அ) கருத்தம்மா
ஆ) கருவேலம்பூக்கள்
இ) தண்ணீர் தண்ணீர்
ஈ) பொற்காலம்
Answer: ஆ) கருவேலம்பூக்கள்
Question 18.
பூமணியின் சிறுகதைத் தொகுப்புகளில் பொருந்தாததைக் கண்டறிக.
அ) அறுப்பு
ஆ) வயிறுகள்
இ) நொறுங்கல்கள்
ஈ) சித்தன் போக்கு
Answer: ஈ) சித்தன் போக்கு
Question 19.
வெக்கை, நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால், பிறகு, அஞ்ஞாடி, கொம்மை ஆகிய புதினங்களை இயற்றியவர்
அ) மேலாண்மை பொன்னுசாமி
ஆ) பூமணி
இ) நாகூர் ரூமி
ஈ) தி. ஜானகிராமன்
Answer: ஆ) பூமணி
Question 20.
பொருத்திக் காட்டுக.
அ) திருகை – 1. கிராம நிர்வாக அலுவலர்
ஆ) குறுக்கம் – 2. ஓலைப்பட்டி
இ) கடகம் – 3. சிறிய நிலப்பரப்பு
ஈ) கெராமுனுசு – 4. மாவு அரைக்கும் கல்
அ) 4, 3, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 2, 1, 4
ஈ) 4, 2, 1, 3
Answer: அ) 4, 3, 2, 1
Question 21.
‘உரிமைத்தாகம்’ என்னும் சிறுகதை எடுத்துரைப்பது
அ) நிலத்துடனான உறவு குடும்ப உறவை வலுப்படுத்துவதை
ஆ) வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட இழப்புகள்
இ) முதலாளித்துவம் தொழிலாளிகளை நசுக்குவதை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer: அ) நிலத்துடனான உறவு குடும்ப உறவை வலுப்படுத்துவதை
கற்பவை கற்றபின்
1. ‘நமது நிலமே நமது அடையாளம்’ – இக்கூற்றை விவாதிக்க.
Answer:
நம்மை யார் என்று கேட்பவருக்குப் பெயரைச் சொன்னவுடன் உன்ஊர் எது என்று கேட்பார்கள்: காரணம் என்னவென்றால், எந்த ஊர் என்றால் எந்தவிதமான (மண்ணில்) நிலத்தில் வாழ்ந்தவன், அவனது பண்புகள் என்னவாக இருக்கும் என்று கூறிவிடலாம். இது அனுபவத்தால் மட்டுமே முடியும்.
ஒவ்வொரு நிலத்தில் வாழும் மண்ணிற்குத் தகுந்தாற்போல்தான் வாழ்பவரின் குணம் ஒத்திருக்கும். சங்க காலத்திலேயும் திணைக்குத் தகுந்தாற்போல பண்புகள் பெற்றிருப்பதை அறிய முடிகிறது. மண்ணின் அடிப்படையில்தான் மனங்கள் இருப்பதுண்டு.
நமது நிலமே, நமது அடையாளம் – என்பது நமது பரம்பரையின் அடையாளமாகவே கொள்ளலாம்.
2. வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறவினர்களின் பங்கு முக்கியமானது என்பதைக் குறித்துப் பேசுக.
Answer:
அனைவருக்கும் வணக்கம்!
உலகில் மக்கள் பெருக்கம் அதிகமாகிவிட்டது. ஆனால், உறவுகள் சுருங்கிவிட்டது. வேலைப் பளுவின் காரணமாக நாள்தோறும் உழைப்பில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. உண்ணும் உணவில் கூட சிரத்தை எடுத்துக் கொள்வது கிடையாது.
பிள்ளைகளின் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ள நேரமில்லை. உடலைப்பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்கிறோம். எல்லாம் அவசரக் கோலங்கள். இந்நிலையில் எங்கள் வீட்டில் என் பெண்ணின் காதணி விழா. முதன் முதலில் எங்கள் வீட்டில் ஒரு விழா.
அவ்விழாவிற்கு எனக்கு ஒன்றுவிட்ட மாமா மகள் வந்திருந்தாள். ஏழ்மையான தோற்றம். ஏண்டா வந்தாள் என்று நினைத்தேன். ஆனால் காதணி விழாவின் அடுத்த அடுத்த நிகழ்வுகள், பந்தி பரிமாறுதல், உறவினர்களை நலம் விசாரித்தல் போன்ற எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தாள். என் உடன்பிறப்புகள் எல்லாம் வேடிக்கைப் பார்க்க, தனி ஒருவராக என் வீட்டு விழாவை நன்முறையில் நடத்திக் கொடுத்த உறவின் முக்கியத்தை என்றும் மறவேன். உறவுகள் அது நமது சிறகுகள்.
12th Tamil Guide Lesson 3 Book Back & Additional Question & Answers |