12th Tamil Samacheer Kalvi Guide இயல் 3 Book Back & Additional Question-Answers www.studentsguide360.com

12th Tamil Guide Unit 3.3 Answers

12th Tamil Guide Unit 3.3 Answers

இயல்: 3.3 கம்பராமாயணம்

12th Tamil Guide Unit 3.3 Answers. TN Standard Tamil Samacheer kalvi Guide இயல்: 3.3 கம்பராமாயணம் Book Back and Additional Question with answers. +2 Tamil New Syllabus Full Answer key Important Question with the answer for Mid Term, Quarterly, Half-yearly, Revision Exams, and also Public Exams. STUDENTS GUIDE 360
12th Tamil Guide Unit 3 இயல்: 3.3 கம்பராமாயணம் Book Back and Additional Question-Answers.
12th Tamil Samacheer Kalvi Guide இயல் 3 Book Back & Additional Question-Answers www.studentsguide360.com

பாடநூல் வினாக்கள் | 12th Tamil Guide Unit 3.3 Answers

பலவுள் தெரிக

Question 1.
‘உவா உற வந்து கூடும்
உடுபதி, இரவி ஒத்தார்’ – யார் யார் ?
அ) சடாயு, இராமன்
ஆ) இராமன், குகன்
இ) இராமன், சுக்ரீவன்
ஈ) இராமன், சவரி
Answer: இ) இராமன், சுக்ரீவன்

 குறுவினா | 12th Tamil Guide Unit 3.3 Answers

1. நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?

Answer:
நிலையாமை என்பது உலக வாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிக்கும்.
“என் பொய்யான உலகப்பற்று அழிந்தது; என் பிறவி ஒழிந்தது” என்று சவரி நிலையாமை குறித்துக் கூறுகிறாள்.
 

2. “துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது” என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்?

அ) நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
ஆ) சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
Answer:
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழிக்கு இப்பாடலடிகள் பொருந்தும்.
 
விளக்கம்:
குகனின் வருத்தத்தை உணர்ந்த இராமன் கூறியது. துன்பம் என்று ஒன்று இருந்தால் இன்பம் என்பது புலப்படும் – என்பதே பொருத்தம்.
 

சிறுவினா | 12th Tamil Guide Unit 3.3 Answers 

1. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக.

Answer:

குகன் :

இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவான் என்று குகன் வருந்துவான் என்பதை உணர்ந்த இராமன், “குகனே! துன்பம் இருந்தால்தான் இன்பம் வரும். நம்மிடையே பிரிவு இப்போது ஏற்படுகிறது. இதுவரை நாங்கள் நால்வர். இப்போது உன்னையும் சேர்த்து ஐவர்” என்று குறிப்பிடுகிறார். (அன்புள இனி நாம் ஓர் ஐவர் ஆனோம்)

சுக்ரீவன் :

சுக்ரீவன் இராமன் மீது கொண்ட அளவற்ற அன்பினால் சீதையைத் தேடி இலங்கை சென்றான்.
இராவணனைக் கொன்று வருவதாகக் கூறி சென்றவன் அவன் மணிமுடியை மட்டும் கொண்டு வந்தான்.
இராமன் மீது அவன் கொண்டிருந்த அளவற்ற அன்பைக் கண்ட இராமன் நீ, என் இனிய உயிர் நண்பன் என்று கூறி, நான்கு பேராக இருந்த நாங்கள் குகனுடன் சேர்த்து ஐந்து பேராகும்.
உன்னையும் இணைத்து ஆறுபேர் ஆனோம் என்றான்.

வீடணன் :

சீதையைக் கவர்ந்து வந்த செயல் தவறு என்று கூறியதற்காக இராவணனை வீடணன் கடிந்தான்.
இலங்கை விட்டு வந்த வீடணன் இராமனிடம் அடைக்கலம் வேண்டினான்.
இராமன் அவனை உடன்பிறந்தவனாக ஏற்று இலங்கை அரசனை அவனுக்கு உரிமையாக்கினான்.
குகனுடன் ஐவர், சூரியனின் மகன் சுக்கிரீவன் உடன் ஆறுபேர் உன்னையும் சேர்த்து எழுவர் ஆனோம்.
 

2. சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.

Answer:
இராமன் ஆற்றிய கடமைகள் :
இராவணன் சீதையைச் சிறையெடுத்த போது தடுத்துச் சண்டையிட்டுக் காயப்பட்டவன் சடாயு.
அவன் இராவணனோடு சண்டையிட்டுத் தன் உயிரை இழந்ததை அறிந்த இராமன் தன் தந்தையாகவே சடாயுவைக் கருதினான்.
ஒரு தந்தைக்கு மகன் எவ்வாறு இறுதிச் சடங்குகளைச் செய்வானோ அதைப் போன்று இராமன் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டான்.
பார்ப்பவர்கள் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும் சந்தனக் கட்டைகளையம் இராமன் கொண்டு வந்தான்.
தேவையான தருப்பைப் புற்களை ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் தூவினான். மணலினால் திருத்தமான மேடை அமைத்து, நன்னீரும் கொண்டு வந்தான்.
இறுதிச்சடங்கு செய்யப்படக்கூடிய மேடைக்குத் தன் தந்தையாகக் கருதிய சடாயுவைத் தன் பெரிய கைகளினால் தூக்கிக் கொண்டு வந்தான்.

 நெடுவினா

1. பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.

Answer:
குகனுடன் கொண்ட உறவுநிலை :
  • (i) தன்மீது அளவற்ற அன்பு கொண்ட குகன் தன்னைப் பிரிய விருப்பமின்மை என்பதை உணர்ந்து ‘என் உயிர் அணையாய்’ என்றான். “நீ என் உயிர் போன்றவன்’ என்று கூறியது மட்டுமல்லாது, நீ சொல்லும் வேலைகளைச் செய்யும் பணியாளனாய் இருக்கின்றேன்.
  •  (ii) குகனின் அன்பால் தன்னை அவனுடைய பணியாளாய்’ கருதும் உரிமையை இராமன்குகனுக்குக் கொடுத்திருந்தான். சகோதரனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன்.
சடாயுடன் கொண்ட உறவு நிலை :
  • i) தனது மனைவிசீதையை இராவணன் சிறையெடுத்தபோது தடுத்து, சண்டையிட்டுக் காயப்பட்டு இறந்தான் சடாயு என்பதை அறிந்து அவனது உயிர்த்தியாகத்தின் உத்தமத்தை உணர்கிறான்.
  • ii)  தனக்காக உயிரைவிட்ட சடாயுவின் உடலை இறுதிச் சடங்கிற்குத் தயார்படுத்தும்போது, தந்தைக்கு மகன் ஆற்றும் கடமையாகக் கருதுகிறான். சடாயுவின் தியாகத்தால் ‘மகனாய்’ கருதும் உரிமையை இராமன் சடாயுவுக்குக் கொடுத்தான்.
சவரியுடன் கொண்ட உறவு நிலை :
  • i) தன்னைக் கண்ட பிறகுதான் பிறவி ஒழிப்பேன் என்று தவம் இருந்த சவரியிடம் பரிவு காட்டி பேசினான் இராமன்.
  • ii) இராமனைக் கண்டதால்தான் பிறந்ததின் பயனை அடைந்ததாக உணர்ந்த சவரி, இராமன், இலக்குவனுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தான். தனது அன்புக்குரியவராக விளங்கிய சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான் இராமன்.
சுக்ரீவனிடம் கொண்ட உறவு நிலை :
  • i) தனக்காக இலங்கை சென்று கடும்போர் புரிந்து இராவணனின் மணிமகுடத்தை எடுத்து வந்த சுக்ரீவனை நினைத்துப் பெருமைப்பட்டான் இராமன்.
  • ii) நீ வேறு நான் வேறு அல்ல ; உன் பகைவர் என் பகைவர், உன் உறவினர், என் உறவினர் என் உறவினர் உன் உறவினர், ‘நீ என் இனிய உயிர் நண்பன்’ என்று கூறினான் இராமன்.
  • iii) சுக்ரீவனைத் தன் உயிர்நண்பனாகக் கருதும் உரிமையைக் கொடுத்தான் இராமன், மேலும் அவனைச் சகோதரனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன்.
வீடணனிடம் கொண்ட உறவு நிலை :
  • i) தன் மனைவியைக் கவர்ந்து சென்ற இராவணனின் செயலைக் கண்டிக்கும் இராவணின் தம்பியாகிய வீடணின் இராமன் மிகுந்த அன்பு கொள்கிறான்.
  • ii) தன்னிடம் அடைக்கலம் அடையும் வீடணனை உடன்பிறந்தவனாக ஏற்றுக் கொள்கின்றான்.
  • iii)  தன்னை நம்பி வந்த வீடணனுக்கு இலங்கையைக் கொடுக்கின்றான்.
  • iv) இலங்கையை வழங்குவதால் தன்னை நம்பும் யாவரும் நலம் பெறவேண்டும் என்று நினைக்கும் உரிமையைக் கொடுக்கின்றான் இராமன்.
இவ்வாறாக, இராமபிரான் பணியாளனாய், சகோதரனாய், தந்தைக்கு உற்ற மகனாய், தாய்க்கு உற்ற மகனாய், நண்பனாய், உரிமையை வழங்கும் சகோதரனாய்ப் பிற உயிர்களுடன் பல உறவு நிலைகளைக் கொண்டு இராமன் பண்பின் படிமமாக விளங்குகிறார்.
 
இலக்கணக் குறிப்பு
  • உளது – இடைக்குறை
  • மாதவம் – உரிச்சொற்றொடர்
  • தாழ்கடல் – வினைத்தொகை
  • செற்றவர் – வினையாலணையும் பெயர்
  • நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ
உறுப்பிலக்கணம்
12th Tamil Guide Unit 3.3 Answers

புணர்ச்சி விதி

அருங்கானம் – அருமை + கானம்

ஈறுபோதல் என்ற விதிப்படி, ‘மை’ கெட்டு, அரு + கானம் என்றானது.
இனமிகல் என்ற விதிப்படி, எங்’ தோன்றி அருங்கானம் எனப் புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக
Question 1.
“அன்னவன் உரை கேளா
அமலனும் உரை நேர்வான்” – அன்னவன் யார்?
அ) குகன்
ஆ) இராமன்
இ) சுக்ரீவன்
ஈ) வீடணன்
Answer: ஆ) இராமன்
Question 2.
‘இளவல் உன் இளையான்’ – இளவல் யார்?
அ) இலக்குவன்
ஆ) குகன்
இ) சுக்ரீவன்
ஈ) வீடணன்
Answer: அ) இலக்குவன் 
Question 3.
சடாயு யாருடைய நண்பன்
அ) குகன்
ஆ) இராமன்
இ) தயரதன்
ஈ) அருணன்
Answer: இ) தயரதன் 
Question 4.
‘இந்தனம் எனைய என்ன கார்’ – இந்தனம் என்பதன் பொருள்
அ) இந்த நேரம்
ஆ) மாலை
இ) மணல்
ஈ) விறகு
Answer: ஈ) விறகு 
Question 5.
சுக்ரீவனுடன் இராமன் நட்புக் கொள்ளும் படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது?
அ) ஆரண்ய காண்டம்
ஆ) கிட்கிந்தா காண்டம்
இ) சுந்தர காண்டம்
ஈ) அயோத்தியா காண்டம்
Answer: ஆ) கிட்கிந்தா காண்டம் 
Question 6.
“உவா உற வந்து கூடும்
உடுபதி, இரவி ஒத்தார்” – ‘உவா’ என்பதன் பொருள்
அ) சந்திரன்
ஆ) சூரியன்
இ) பௌர்ணமி
ஈ) அமாவாசை
Answer: ஈ) அமாவாசை 
Question 7.
வீடணன் அடைக்கலமாகும் படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது?
அ) ஆரண்ய காண்டம்
ஆ) கிட்கிந்தா காண்டம்
இ) சுந்தர காண்டம்
ஈ) யுத்த காண்டம்
Answer: ஈ) யுத்த காண்டம்
Question 8.
“ஆழியான் அவனை நோக்கி,
அருள்சுரந்து, உவகை கூற” – ‘ஆழியான்’ எனப்படுபவன்
அ) குகன்
ஆ) இராமன்
இ) வீடணன்
ஈ) சடாயு
Answer: ஆ) இராமன்
Question 9.
‘குகனோடும் ஐவர் ஆனேம்
முன்பு, பின்குன்று சூழ்வான்’ – ‘குன்று’ பொருள்
அ) மலை
ஆ) பாறை
இ) கதிரவன்
ஈ) இராமன்
Answer: இ) கதிரவன் 
Question 10.
“தந்தனன் தாதை தன்னைத் தடக்
கையான் எடுத்துச் சார்வான்” – ‘தடக்கையான்’ இலக்கணக் குறிப்பு
அ) உரிச்சொற்றொடர்
ஆ) வினைத்தொகை
இ) உம்மைத்தொகை
ஈ) மரூஉ
Answer: அ) உரிச்சொற்றொடர் 
Question 11.
‘குவித்து’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
அ) குவித்த + உ
ஆ) குவி + (த்)(ந்) + த் + உ
இ) குவி + த் + த் + உ
ஈ) குவித்து + உ
Answer: இ) குவி + த் + த் + உ 
Question 12.
‘தந்தனன்’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
அ) த + த்(ந்) + த் + அன் + அன்
ஆ) தந்து + அன் + அன்
இ) தா + த் + த் + அன் + அன்
ஈ) தா(த) + த்(ந்) + த் + அன் + அன்
Answer: ஈ) தா(த) + த்(ந்) + த் + அன் + அன்
Question 13.
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ என்ற விதிப்படி அமைந்த சொல்
அ) தலைப்பட்டு
ஆ) நமக்கிடையே
இ) உமக்கிடையே
ஈ) அருங்கானம்
Answer: அ) தலைப்பட்டு 

14. ‘செற்றவர் என்னைச் செற்றார்’ – ‘செற்றவர்’ இலக்கணக் குறிப்பு

அ) பலர்பால் வினைமுற்று
ஆ) வியங்கோள் வினைமுற்று
இ) வினையாலணையும் பெயர்
ஈ) எதிர்கால வினைமுற்று

Answer: இ) வினையாலணையும் பெயர் 

Question 15.
‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ என்னும் விதிப்படி அமைந்த சொல்
அ) மண்ணில்
ஆ) திரைப்படம்
இ) இல்லை
ஈ) பின்னாளில்
Answer: அ) மண்ணில் 
Question 16.
‘தருப்பையும் திருத்தி, பூவும்’ – ‘திருத்தி’ – இலக்கணக் குறிப்பு
அ) பெயரெச்சம்
ஆ) பண்புப்பெயர்
இ) வினையெச்சம்
ஈ) வினைத்தொகை
Answer: இ) வினையெச்சம் 
Question 17.
‘துன்பு உளது எனின் அன்றோ ’ – ‘உளது’ – இலக்கணக் குறிப்பு
அ) வினையெச்சம்
ஆ) பெயரெச்சம்
இ) மரூஉ
ஈ) இடைக்குறை
Answer: ஈ) இடைக்குறை 
Question 18.
ஓர் மூலம் இல்லான் யார் ?
அ) இலக்குவன்
ஆ) இராமன்
இ) சடாயு
ஈ) சுக்ரீவன்
Answer: ஆ) இராமன் 
Question 19.
‘யாவரும் கேளிர்’ என்பது தமிழர் நற்பண்பின் …………….. ஆகும்.
அ) மலர்ச்சி
ஆ) தொடர்ச்சி
இ) உயர்ச்சி
ஈ) வளர்ச்சி
Answer: ஈ) வளர்ச்சி 
Question 20.
‘சிறியோரை இகழ்தல் இலமே’ என்பது தமிழர் நற்பண்பின் …………. ஆகும்
அ) வளர்ச்சி
ஆ) தொடர்ச்சி
இ) மலர்ச்சி
ஈ) உயர்ச்சி
Answer: இ) மலர்ச்சி 
Question 21.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது தமிழர் நற்பண்பின் …………… ஆகும்.
அ) முதிர்ச்சி
ஆ) வளர்ச்சி
இ) உயர்ச்சி
ஈ) தொடர்ச்சி
Answer: அ) முதிர்ச்சி 
Question 22.
‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்பது தமிழர் நற்பண்பின் ……………….. ஆகும்.
அ) முதிர்ச்சி
ஆ) தொடர்ச்சி
இ) உயர்ச்சி
ஈ) வளர்ச்சி
Answer: ஆ) தொடர்ச்சி 
Question 23.
தமிழர் நற்பண்பின் உயர்ச்சியாக இருப்பது ……………. ஆகும்.
அ) புறநானூறு
ஆ) திருக்குறள்
இ) கம்பராமாயணம்
ஈ) தொல்காப்பியம்
Answer: இ) கம்பராமாயணம் 
Question 24.
கூற்று 1 : குளிர்கடலும் இந்நிலமும் எல்லாம் உளதேயாகும். நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன்
கூற்று 2 : அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலிக்கவில்லை.
 
அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று இரண்டும் தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer: ஆ) கூற்று 1 சரி 2 தவறு 
Question 25.
கூற்று 1 : “அன்பு மிகுந்த என் சுற்றத்தினர் உன் சுற்றத்தினர் – நீ என் உயிர்நண்பன்”
கூற்று 2 : “பதினான்கு உலகங்களும் எனது பெயரும் இங்கு எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் உனக்கே உரிமை எனக் கொடுத்தேன்”
 
அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer: ஈ) கூற்று இரண்டும் சரி 
Question 26.
கூற்று 1 : “மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் ஐவர் ஆனோம்”
கூற்று 2 : இறுதிச்சடங்கு செய்யக்கூடிய மேடைக்குத் தன் மகனாகிய சடாயுவைத் தூக்கி வந்தான் இராமன்.
அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று இரண்டும் சரி
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer: அ) கூற்று இரண்டும் தவறு 
Question 27.
சரியானதைத் தேர்க.
அ) சடாயு – கழுகின் மகன்
ஆ) வீடணன் – இராவணனின் தம்பி
இ) சுக்ரீவன் – வாலியின் அண்ணன்
ஈ) குகன் – வேடற்குலத்தலைவன்
Answer: இ) சுக்ரீவன் – வாலியின் அண்ணன்
Question 28.
சரியானதைத் தேர்க.
அ) ஆரண்ய காண்டம் – சவரி பிறப்பு நீங்கு படலம்
ஆ) கிட்கிந்தா காண்டம் – நட்பு கோட்படலம்
இ) யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப்படலம்
ஈ) அயோத்தியா காண்டம் – சடாயு உயிர்நீத்த படலம்
Answer: ஈ) அயோத்தியா காண்டம் – சடாயு உயிர்நீத்த படலம் 
Question 29.
சரியானதைத் தேர்க.
அ) செற்றவர் – வினையாலணையும் பெயர்
ஆ) திருத்தி – வினையெச்சம்
இ) உளது – உள்ளது என்பதன் மரூஉ
ஈ) நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ
Answer: இ) உளது – உள்ளது என்பதன் மரூஉ 
Question 30.
பொருத்துக.
அ) சடாயு – 1. உயிர் நண்பன்
ஆ) சுக்ரீவன் – 2. அடைக்கலமானவன்
இ) குகன் – 3. தந்தை உறவு
ஈ) வீடணன் – 4. வேடற்குலத் தலைவன்
அ) 3, 1, 2, 4
ஆ) 3, 1, 4, 2
இ) 3, 1, 4, 2
ஈ) 1, 2, 4, 3
Answer: இ) 3, 1, 4, 2 
Question 31.
‘எனக்கும் மூத்தோன்’ என்று யார் யாரை ஏற்றுக் கொண்டார்?
அ) இராமன் குகனை
ஆ) குகன் இராமனை
இ) குகன் பரதனை
ஈ) பரதன் குகனை
Answer: ஈ) பரதன் குகனை 
Question 32.
………………. தலைவன் குகன்.
அ) ஆயர்
ஆ) வேடுவர்
இ) பரதவர்
ஈ) குறவர்
Answer: ஆ) வேடுவர்

33. பொருத்திக் காட்டுக.

அ) அமலன் – 1. குளிர்ந்த
ஆ) இளவல் – 2. இராமன்
இ) துன்பு – 3. தம்பி
ஈ) நளிர் – 4. துன்பம்
அ) 2, 3, 4, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 1, 4
ஈ) 1, 2, 3, 4
Answer: அ) 2, 3, 4, 1 

34. ‘இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்’ என்று யார் யாரிடம் கூறியது?

அ) இலக்குவன் குகனிடம்
ஆ) இராமன் குகனிடம்
இ) குகன் பரதனிடம்
ஈ) பரதன் குகனிடம்
Answer: ஆ) இராமன் குகனிடம் 
35. இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவான் என்று வருந்தியவன்
அ) அனுமன்
ஆ) குகன்
இ) இராவணன்
ஈ) வாலி
Answer: ஆ) குகன் 

36. குகப்படலம் இடம்பெற்றுள்ள காண்டம்

அ) அயோத்தியா காண்டம்
ஆ) ஆரண்ய காண்டம்
இ) கிட்கிந்தா காண்டம்
ஈ) சுந்தர காண்டம்
Answer: அ) அயோத்தியா காண்டம் 
Question 37.
சடாயு உயிர்நீத்த படலம் இடம்பெற்றுள்ள காண்டம்
அ) அயோத்தியா காண்டம்
ஆ) ஆரண்ய காண்டம்
இ) கிட்கிந்தா காண்டம்
ஈ) சுந்தர காண்டம்
Answer: ஆ) ஆரண்ய காண்டம்

38. ……………… வேந்தன் சடாயு.

அ) வானர
ஆ) கழுகு
இ) மான்
ஈ) வன
Answer: ஆ) கழுகு 

39. இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது, தடுத்துச் சண்டையிட்டுக் காயப்பட்டவன்

அ) அனுமன்
ஆ) வாலி
இ) சடாயு
ஈ) குகன்
Answer: இ) சடாயு 

40. சடாயுவைத் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்தவன்

அ) இராமன்
ஆ) குகன்
இ) அனுமன்
ஈ) பரதன்
Answer: அ) இராமன் 
Question 41.
‘சவரி பிறப்பு நீங்கு படலம்’ இடம்பெற்றுள்ள காண்டம் ……….
அ) அயோத்தியா காண்டம்
ஆ) ஆரண்ய காண்டம்
இ) யுத்த காண்டம்
ஈ) சுந்தர காண்டம்
Answer: ஆ) ஆரண்ய காண்டம் 
Question 42.
சீதையைத் தேடிவரும் இராமனை, சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுமாறு செய்தவள்
அ) கைகேயி
ஆ) கோசலை
இ) மந்தரை
ஈ) சவரி
Answer: ஈ) சவரி  
Question 43.
அன்பளாகிய சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டியவன்
அ) இராமன்
ஆ) அனுமன்
இ) சுக்ரீவன்
ஈ) சடாயு
Answer: அ) இராமன் 
Question 44.
‘மாண்டது என் மாயப் பாசம்’ என்று யார் யாரிடம் கூறியது?
அ) கைகேயி, இராமனிடம்
ஆ) குகன் இராமனிடம்
இ) சவரி இராமனிடம்
ஈ) இராமன் அனுமனிடம்
Answer: இ) சவரி இராமனிடம் 
Question 45.
‘நட்புகோட்படலம்’ இடம்பெற்றுள்ள காண்டம்
அ) அயோத்தியா காண்டம்
ஆ) ஆரண்ய காண்டம்
இ) கிட்கிந்தா காண்டம்
ஈ) யுத்த காண்ம்
Answer: இ) கிட்கிந்தா காண்டம்
 
Question 46.
சீதையைத் தேடிவரும் இராம இலக்குவரைக் கண்ட அனுமன் யாரை அழைத்து வந்தான்?
அ) சடாயுவை
ஆ) சுக்ரீவனை
இ) சவரியை
ஈ) வாலியை
Answer: ஆ) சுக்ரீவனை 
Question 47.
பொருத்திக் காட்டுக.
அ) அனகன் – 1. உறவினர்
ஆ) சுவர் – 2. பகைவர்
இ) உடுபதி – 3. அமாவசை
ஈ) செற்றார் – 4. சந்திரன்
உ) கிளை – 5. இராமன்
 
அ) 5, 3, 4, 2, 1
ஆ) 5, 4, 3, 2, 1
இ) 4, 5, 3, 1, 2
ஈ ) 2, 3, 1, 5, 4
Answer: அ) 5, 3, 4, 2, 1  
Question 48.
வானரத் தலைவன்
அ) சடாயு
ஆ) குகன்
இ) பரதன்
ஈ) சுக்ரீவன்
Answer: ஈ) சுக்ரீவன் 
Question 49.
அமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கிற சந்திரனையும் சூரியனையும் ஒத்து இருந்தவர்கள்
அ) இராமனும் குகனும்
ஆ) இராமனும் இலக்குவனும்
இ) இராமனும் சுக்ரீவனும்
ஈ) சுக்ரீவனும் இராவனனும்
Answer: இ) இராமனும் சுக்ரீவனும் 
Question 50.
‘என் காதல் சுற்றம் உன் சுற்றம்’ – என்று யார் யாரிடம் கூறியது?
அ) இராமன் குகனிடம்
ஆ) இராமன் சுக்ரீவனிடம்
இ) சுக்ரீவன் இராமனிடம்
ஈ) வீடணன் இராவணனிடம்
Answer: ஆ) இராமன் சுக்ரீவனிடம் 
Question 51.
சீதையைக் கவர்ந்து வந்தது தவறென இராவனிடம் கூறியவர்
அ) அனுமன்
ஆ) சவரி
இ) சுக்ரீவன்
ஈ) வீடணன்
Answer: ஈ) வீடணன் 
Question 52.
இராமன் யாருக்கு இலங்கை அரசை உரிமையாக்கினான்?
அ) சுக்ரீவனுக்கு
ஆ) வீடணனுக்கு
இ) அனுமனுக்கு
ஈ) இராவணனுக்கு
Answer: ஆ) வீடணனுக்கு 
Question 53.
மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகன்
அ) சுக்ரீவன்
ஆ) குகன்
இ) வீடணன்
ஈ) அனுமன்
Answer: அ) சுக்ரீவன் 
Question 54.
யாருடன் சேர்த்து அறுவர் ஆனோம் என்கிறார் இராமன்?
அ) குகனுடன்
ஆ) சுக்ரீவனுடன்
இ) வீடணனுடன்
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer: ஆ) சுக்ரீவனுடன் 
Question 55.
‘நின்னொடும் எழுவர் ஆனோம்’ என்று யார் யாரிடம் கூறியது?
அ) இராமன் சுக்ரீவனிடம்
ஆ) இராமன் குகனிடம்
இ) இராமன் வீடணனிடம்
ஈ) இலக்குவன் குகனிடம்
Answer: இ) இராமன் வீடணனிடம் 
Question 56.
கம்பராமாயணத்தில் பாடப்பகுதியாக அமைந்துள்ள பகுதி
அ) இராவணன் சீதையைச் சிறை எடுத்தல்
ஆ) இராமன் இராவணனை வெல்லுதல்
இ) இராமன் அனைத்து உயிர்களையும் கீழ்மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டுவது
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer: இ) இராமன் அனைத்து உயிர்களையும் கீழ்மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டுவது 
Question 57.
கம்பராமாயணத்தை இயற்றியவர்
அ) கம்பர்
ஆ) சேக்கிழார்
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) அம்பிகாவதி
Answer: அ) கம்பர் 
Question 58.
கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர்
அ) இராமபுராணம்
ஆ) இராமாவதாரம்
இ) சீதாகல்யாணம்
ஈ) இராமநவமி
Answer: ஆ) இராமாவதாரம் 
Question 59.
கம்பரது காலம் ………….. ஆம் நூற்றாண்டு.
அ) 1
ஆ) 11
இ) 12
ஈ) 13
Answer: இ) 12
Question 60.
கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புக்குரியவர்
அ) கம்பர்
ஆ) புகழேந்தி
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) ஔவையார்
Answer: அ) கம்பர் 

குறுவினா

1. குகனிடம் இராமன் கூறியது என்ன?

Answer:
நீ என் தம்பி ; இலக்குவன் உன் தம்பி.
சீதை உன் அண்ணி .
இந்நிலவுலகம் முழுவதும் உனக்குரியது.
நான் உன் ஏவலுக்குப் பணிபரியும் பணியாள்.
 

2. குகன் இராமனுக்குச் செய்த உதவி என்ன?

Answer:
இராமன் கங்கையைக் கடந்து காட்டிற்குச் செல்ல நாவாய் கொடுத்து உதவியவன்.
 

3. சடாயு யார்? அவன் மேற்கொண்ட செயல் யாது?

Answer:
கருடனின் அண்ண ன் அருணனின் மகன் சடாயு.
இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது தடுத்து சண்டையிட்டுத் தன் உயிரைத் துறந்தவன்.

4. இராமாயணத்தில் சவரி செய்த செயல்கள் யாவை?

Answer: 
சீதையைத் தேடி வரும் இராமனை, சுக்ரீவனுடன் நட்புக் கொள்ளுமாறு செய்தவள்.
காப்பியத்தின் போக்கில் திருப்பத்தை உருவாக்கியவள்.
இராமன், இலக்குவன் இருவருக்கும் விருந்தளித்து உபசரித்தவள்.
 

5. சவரியிடம் இராமன் வினாவியது என்ன?

Answer:
தன்னையே நினைத்துத் தவமிருந்த சவரியிடம், “இவ்வளவு காலம் நீ துன்பம் ஏதுமின்றி நலமுடன் இருந்தாய் அல்லவா?” என்று பரிவுடன் வினவினான்.
 

6. வீடணன் ஏன் இராமனிடம் அடைக்கலமானான்?

Answer: 
சீதையைக் கவர்ந்தது தவறு என்று இராவணனிடம் கூறினான் வீடணன்.
கோபம் கொண்ட இராவணன் வீடணனைக் கடிந்தான்.
எனவே, இலங்கையை விட்டு வீடணன் இராமனிடம் அடைக்கலமானான்.
 

7. இராமன் வீடணனுக்குக் கொடுத்த உரிமை பற்றிக் கூறியது யாது?

Answer:
“ஒளி பொருந்திய பற்களை உடைய அரக்கர் வாழ்வதும் ஆழமான கடல் நடுவே உள்ளதுமான இலங்கை அரசாட்சியை பதினான்கு உலகங்களும், எனது பெயரும் எவ்வளவு காலம் இருக்குமோ : 2 அவ்வளவு காலம் உனக்கே உரிமையாக” கொடுத்தேன் என்று இராமன் வீடணனிடம் கூறினான். 

8. இராமன் குறிப்பிடும் எழுவரின் பெயர்களை எழுதுக.

Answer:
இராமன், இலக்குவன், பரதன், சத்ருக்னன், குகன், சுக்ரீவன், வீடணன். 

9. பாடப்பகுதியில் கம்பராமாயணத்தின் இடம் பெற்றுள்ள காண்டங்கள் யாவை?

Answer: 
  • அயோத்தியா காண்டம்
  • ஆரணிய காண்டம்
  • கிட்கிந்தா காண்டம்
  • யுத்த காண்டம்

10. பாடப்பகுதியில் இடம்பெறும் கம்பராமாயண பாத்திரங்களைக் குறிப்பிடுக.

Answer:
குகன், சடாயு, சவரி, சுக்கீவன், வீடணன்.
 

11. சவரி – குறிப்பு வரைக.

Answer: 
இராமனிடம் மிகுதியான அன்பையும் பக்தியையும் கொண்டவள் சவரி.
சீதையைத் தேடி வரும் இராமனை, சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுமாறு செய்தவள் இவள்.
இராமன் அன்பளாகிய சவரிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான்.

சிறுவினா 

1. ‘இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்’ என்று இராமன் கூறக் காரணம் என்ன?

Answer:
 
கங்கையைக் கடந்து காட்டிற்கு இராமன் செல்ல இருக்கின்றனர்.
அந்தப் பிரிவைத் தாங்காத குகன், இராமன் காட்டிற்குச் சென்று துன்பம் அடைவான் எனக் கருதி வருந்தினான்.
குகனின் வருத்தம் அறிந்த இராமன், குகனிடம் துன்பம் இருந்தாலே இன்பம் வரும்.
துன்பத்திற்குப் பின் இன்பம் உறுதியாக வரும்.
இப்போது பிரிகிறோம் என்று எண்ணி வருந்தாதே.
இதுவரை நாங்கள் நான்குபேர்தான் உடன்பிறந்தவர்களாக இருந்தோம்.
உன்னையும் சேர்த்து ஐவர் ஆகின்றோம் ; நம் உறவு நீடிக்கும். 

2. இராமனும் சுக்ரீவனும் இருந்த காட்சியைக் கம்பர் எங்ஙனம் வருணிக்கின்றார்?

Answer:
  • (i) பகைவர்களை அழித்து அறங்களைக் காக்கும் நபர்கள் போல இருவரும் ஒன்றாகயிருந்தார்கள்.
  • (ii) குறையான வலிமையும் இருள் போன்ற குணமும் உடைய பகைவர்களை அழித்து அறத்தினைக் காக்க ஒன்றாக இருந்தனர்.
  • (iii) ஆசையை அறவே அழித்த இராமனும் ; வானரத் தலைவனான சுக்ரீவனும் அமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கும் சந்திரனையும் சூரியனையும் போன்று இருந்தார்கள்.

3. இராமன் சுக்ரீவனிடம் கொண்ட உறவின் உறுதியை கம்பர் எவ்வாறு எடுத்துரைக்கின்றார்?

Answer: 
இராமன் சுக்ரீவனிடம் மிக ஆழமான பாசம் கொண்டிருந்தான்.
சுக்ரீவனைப் பார்த்து, “இனி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்றான்.
விண்ணிலும் மண்ணிலும் உள்ள உன் பகைவர் எனக்கும் பகைவர் ஆவர்.
தீயவராக இருந்தாலும் உன் நண்பர்கள் என் நண்பர்கள் ஆவர்.
உன் உறவினர் எல்லோரும் என் உறவினர்.
அன்பு மிகுந்த என் சுற்றத்தினர் எல்லாரும் இனி உன் சுற்றத்தினர் ஆவர்.
‘நீ, என் இனிய உயிர்நண்பன்’ என்று இராமன்சுக்ரீவனிடம் கூறியதாகக்கம்பர் எடுத்துரைக்கின்றார். 

4. “குன்று சூழ்வான் மகனொடும் அறுவர் ஆனோம்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.

Answer:
இடம் :
இப்பாடல் வரிகம்பர் எழுதிய கம்பராமாயணத்தின் யுத்த காண்டத்தில் வீடணன் அடைக்கலப் படலத்தில் உள்ளது. 
பொருள் :
நாங்கள் உடன்பிறந்ததோர் நால்வராக இருந்தோம், எங்களுடன் குகன் சேர்ந்து ஐந்து பேராக இருந்தோம். அதன்பிறகு கதிரவனின் மகனான சுக்ரீவன் இணைந்து தற்போது ஆறுபேராக இருக்கின்றோம். 
விளக்கம் :
சீதையைக் கவர்ந்து வந்தது தவறென வீடணன் இராவணிடம் கூறினான். வீடணனின் பேச்சைக் கேட்காத இராவணன் வீடணனைக் கடிந்தான். எனவே, வீடணன் இலங்கையை விட்டு வெளியேறி இராமனிடம் வந்து அடைக்கலம் வந்து தன்னையும் ஏற்றுக்கொள்ளுமாறு இராமனிடம் வேண்டினான். அப்பொழுது இராமன், “கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் நாங்கள் இப்போது அறுவராக இருக்கின்றோம், உன்னையும் சேர்த்து எழுவரானோம்” என்று கூறுமிடத்தில் இப்பாடல் வரி இடம் பெற்றுள்ளது. 

கற்பவை கற்றபின்

1. உங்கள் மனம் கவர்ந்த கம்பராமாயணப் பாத்திரம் எது? ஏன்? வகுப்பறையில் உரையாடுக.

Answer:
என் மனங்கவர்ந்த கம்பராமாயணப் பாத்திரம் அனுமன்.
(i)அனுமன் அஞ்சனனையின் மைந்தன், காற்றின் மைந்தன், சொல்லின் செல்வன், இராமனின் தூ தன் என்றெல்லாம் புகழப்படுபவன்.
 
(ii) பஞ்சவடியில் இராமனும் சீதையும் பிரிகின்றனர். பல இடங்களிலும் சீதையைத் தேடி இராம இலக்குவர் அலைகின்றனர். இடையே அனுமன், சடாயு, சுக்ரீவன், சவரி போன்ற உறவுகள் கிடைக்கின்றன.
 
(iii) எனினும், கடல் தாண்டி இலங்கை சென்று, சீதாபிராட்டியை அடையாளம் கண்டு, சூளாமணியோடு அனுமன் இராமனிடம் திரும்புகிறான். வந்தவுடன் அனுமன் இராமனை வணங்கவில்லை . சீதை இருக்கும் தென்திசை நோக்கி வணங்கினான். இராமனும் சீதை நலமுடன் இருக்கிறான் என்பதை அனுமனின் செயலால் உணர்ந்தான். அனுமனின் நற்சொல்லுக்காகக் காத்திருக்கும் இராமனிடம்,
 
‘கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்
தெண்டிரை அலைகடல் இலங்கைத் தென்னகர்’
என்று கூறிச் சாந்தப்படுத்துகிறான்.
 
மேலும்,
‘விறபெருந் கடந்தோள்வீர! வீங்கு இலங்கை வெற்பில்
நற்பெரும் தவத்தாளாய நங்கையைக் கண்டேன் அல்லேன்
இற்பிறப்பதென்பதொன்றும் இரும்பொறையென்ப தொன்றும்
கற்பெனும் பெயரதொன்றும் களிநடம் புரியக்கண்டேன்.’
 
என்ற அனுமனின் இந்த பதில்களே இராம அவதாரத்தில் இராமனுக்கு மகிழ்வும் அமைதியும் தந்ததாகக் கொள்ளப்படுகிறது.
 
எனவேதான் இராமனுக்குப் பிடித்த அனுமனை எவர்க்கும் பிடிக்கும். 

Leave a Reply