12th Tamil Book Back Answers Unit 7.5
இயல்: 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
12th Tamil Book Back Answers Unit 7.5. TN 12th Standard Tamil Guide Lesson 7, Unit 7.5 book back answers, 12th Tamil Unit 7.5 Book Back and additional Questions and answers. HSC Second Year Tamil இயல்:7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும் Full Answer key. TN 12th Tamil Samacheer kalvi Guide. Syllabus Reduced Syllabus. 12th Tamil Unit 7 Free Online Test.
பாடநூல் வினாக்கள்
12th Tamil Book Back Answers Unit 7.5
நெடுவினா
1. சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ள, புகளூர்க் கல்வெட்டு எவ்வகையில் துணைபுரிகிறது? விளக்குக.
Answer:
முன்னுரை :
இலக்கியங்கள் அவை உருவானகாலக்கட்டத்தில் அந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் காலம் தாண்டி நினைக்கும் வகையில் பதிவு செய்பவை கல்வெட்டுகள். இப்பகுதியில் புகளூர் கல்வெட்டுகள் மூலம் சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ளலாம்.
எழுத்து வடிவம் :
கல்வெட்டுகள் மூலம் சங்ககால வரலாற்றை அறிய முடிகிறது. பொதுவாகக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் சங்ககால எழுத்து வடிவமான ‘தமிழ் பிராமி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.
புகளூர் கல்வெட்டு :
சங்ககாலத்தில் சேரர்களின் தலைநகரமான கரூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆறு நாட்டான்குன்றின் மீதுள்ள குகைகளில் காணமுடிகிறது.
ஆறுநாட்டான் குன்று :
ஆறுநாட்டான் குன்றின் மீதுள்ள குகைகளுள் ஒன்றில் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ள பிராமி கல்வெட்டின் வரிகள்:
‘யாற்றூர் செங்காயபன் உறையகோ ஆதன் செல்லிரும் பொறைமகன் பெருங்கடுங்கோ மகன்இளங்கடுங்கோ ஆக அறுத்த கல்’
என்று பொறிக்கப்பட்டுள்ளன. ‘கோ அதல் செல் இரும்பொறை’ என்னும் பெயரில் உள்ள சில பெயர்ப்பகுதிகள் ‘செல்வக் கடுங்கோ வாழி அதன்’ என்றும் 7ஆம் பதிற்றுப்பத்துத் தலைவன் பெயரினூடே பொதிந்து கிடைப்பதைக் காணமுடிகிறது. இவர் மகன் பெயர் ‘பெருங்கடுங்கோ ‘ பாலை. பாலை பாடிய பெருங்கடுங்கோவையும், இவன் மகன்
‘இளங்கடுங்கோ’ என்னும் பெயர் மருதம் பாடிய இளங்கடுங்கோவையும் நினைவூட்டுகின்றன. இளங்கடுங்கோ சமணத்துறவிக்கு மலைக்குகையில் படுக்கை அமைத்துக் கொடுத்தான். அவை சிதைந்த நிலையில் உள்ளது. பிட்டன்’ ‘கொற்றன்’ என்னும் பெயர்கள் படிக்கக்கூடிய நிலையில் தெளிவாக உள்ளன.
கல்வெட்டு மூலம் அறிந்த செய்தி:
சேரன் செங்குட்டுவனின் தமையன் நார்முடிச் சேரல் பாலை பாடிய பெருங்கடுங்கோ’. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலத்தில் வாழ்ந்த படைத்தலைவன் நன்னன். நன்னனைப் பாடிய பொறையர் ‘நன்னன் நன்னாட்டு எழிற்குன்றம்’ (நற்றிணை. 391) போன்றவர்களைப் பற்றி அறியமுடிகிறது. புகளூர் கல்வெட்டு மூலம் மூன்று தலைமுறை மன்னர்கள் முறையே
பதிற்றுப்பத்தின் 6.7.8 வது பாட்டுடைத் தலைவர்களை அறிய முடிகிறது என்று ஐராவதம் மகாதேவன் ஆய்வு மூலம் அறியமுடிகிறது.
முடிவுரை :
புகளூர் கல்வெட்டு மூலம் சேரமன்னர்களின் வாழ்க்கை , பாலை, மருதம் பாடியவர்கள், பதிற்றுப்பத்தில் பாடிய புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய உதவுகிறது.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. ‘சங்ககாலக் கல்வெட்டுகளும் என் நினைவுகளும்’ என்ற ஐராவதம் மகாதேவன் எழுதிய கட்டுரை வெளிவந்த இதழ்
அ) எழுத்து
ஆ) கணையாழி
இ) கல்வெட்டு
ஈ) தென்றல்
Answer:
ஆ) கணையாழி
2. ஐராவதம் மகாதேவன் கல்வெட்டு ஆய்வில் ஈடுபட்ட ஆண்டுகள்
அ) 20
ஆ) 30
இ) 40
ஈ) 25
Answer:
ஆ) 30
3. …………….. எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று ஐராவதம் மகாதேவன் கண்ட முடிவு வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
அ) பிராகிருத
ஆ) சிந்துவெளி
இ) கல்வெட்டு
ஈ) பாரசீக
Answer:
ஆ) சிந்துவெளி
4. ஐராவதம் மகாதேவன் பெற்ற விருதுகளையும் ஆண்டுகளையும் பொருத்திக் காட்டுக.
அ) ஜவகர்கலால் நேரு ஆய்வறிஞர் விருது – 1) 2009
ஆ) இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது – 2) 1970
இ) தாமரைத்திரு விருது – 3) 1992
அ) 2, 1, 3
ஆ) 3, 1, 2
இ) 2, 3,1
ஈ) 1, 2, 3
Answer:
அ) 2, 1, 3
5. ஐராவதம் மகாதேவன் பணிகளில் குறிப்பிடத்தக்கன
i) பதிற்றுப்பத்தில் இடம் பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளூர் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளதைக் கண்டுபிடித்தது.
ii) இலக்கியத்தையும் கல்வெட்டாய்வையும் ஒருங்கிணைத்தது
iii) பாறைகளிலிருந்து பழங்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு நூலாக்கியது
அ) i, ii – சரி
ஆ) ii, iii – சரி
இ) iii – மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி
6. மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் குகைக்கல்வெட்டுகள் யாருடையவை, எந்நூற்றாண்டைச் சார்ந்தவை என்று குறிப்பிடுகிறார் ஐராவதம் மகாதேவன்?
அ) பாண்டியன் நெடுஞ்செழியன், 2 ஆம் நூற்றாண்டு
ஆ) பாண்டியன் அறிவுடைநம்பி, 2ஆம் நூற்றாண்டு
இ) சோழன் நலங்கிள்ளி, 2ஆம் நூற்றாண்டு
ஈ) சோழன் நெடுங்கிள்ளி, முதலாம் நூற்றாண்டு
Answer:
அ) பாண்டியன் நெடுஞ்செழியன், 2 ஆம் நூற்றாண்டு
7. 1965 நவம்பர் 3ஆம் நாளன்று மதுரை மாங்குளம் குகைக் கல்வெட்டினை ஐராவதம் மகாதேவன் ஆய்ந்ததைப் பற்றிக் கூறும் நூல்
அ) நூற்றாண்டு மாணிக்கம்
ஆ) தமிழக கல்வெட்டியல்
இ) கல்வெட்டு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) நூற்றாண்டு மாணிக்கம்
8. சங்கக் காலத்தை அறிய இலக்கியங்கள் மட்டுமே துணை என்று இருந்த நிலையில் கல்வெட்டுகளும் துணையாக இருப்பதைக் கண்டறிந்த ஆய்வு முன்னோடி
அ) தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
ஆ) ஐராவதம் மகாதேவன்
இ) வி. கிருஷ்ண மூர்த்தி
ஈ) தேனுகா
Answer:
ஆ) ஐராவதம் மகாதேவன்
9. தமிழ்மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்ட பழந்தமிழ் வரி வடிவத்தைத் தமிழ்ப் பிராம்மி என்றழைக்காமல் ‘தமிழி’ என்றோ அல்லது பழந்தமிழ் என்றோ அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர்
அ) ஐராவதம் மகாதேவன்
ஆ) தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
இ) வி. கருஷ்ண மூர்த்தி
ஈ) கே.வி. சுப்பிரமணியனார்
Answer:
அ) ஐராவதம் மகாதேவன்
10. ‘எர்லி தமிழ் எபிகிராபி’ என்னும் நூலின் ஆசிரியர்
அ) ஐராவதம் மகாதேவன்
ஆ) ஜி.யு. போப்
இ) ஜார்ஜ் எல். ஹார்ட்
ஈ) கே.வி. சுப்பிரமணியனார்
Answer:
அ) ஐராவதம் மகாதேவன்
11. ஆற்றூர் என்னும் இடத்தைச் சேர்ந்த செங்காய்பன் …………. ஆவார்.
அ) சமணத்துறவி
ஆ) பௌத்தத்துறவி
இ) அமைச்சர்
ஈ) புலவர்
Answer:
அ) சமணத்துறவி
12. கரூரை அடுத்த புகளூர் ஆறு நாட்டான் குன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் குறிக்கப்பெறும் மன்னர்கள்
i) கோ ஆதன் செல்லிரும்பொறை
ii) பெருங்கடுங்கோன்
iii) இளங்கடுங்கோ
iv) இளங்கோ
அ) i – சரி
ஆ) ii, iii – சரி
இ) i, i, ii – சரி
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி
13. பதிற்றுப்பத்தில் குறிக்கப்பெறும் மன்னர்களில் புகளூர் கல்வெட்டால் அறியப்படுபவர்கள்
i) 6, 7, 8 ஆவது பாட்டுடைத் தலைவர்கள் என்ற ஐராவதம் மகாதேவனின் கூற்று சரியானது
ii) 7, 8, 9 ஆவது பாட்டுடைத் தலைவர்கள் என்ற ஒரு மாணவரின் கூற்று சரியானது
அ) i – சரி
ஆ) ii – சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
ஆ) ii – சரி
14. புகளூர் கல்வெட்டின் காலம் …………. நூற்றாண்டு.
அ) முதலாம்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
Answer:
ஆ) இரண்டாம்
15. தமிழ்நாட்டிலுள்ள பிராம்மிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர்
அ) கே.வி. சுப்பிரமணியனார்
ஆ) ஐராவதம் மகாதேவன்
இ) தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
ஈ) இவர்களில் எவருமில்லை
Answer:
அ) கே.வி. சுப்பிரமணியனார்
கற்பவை கற்றபின்
1. உங்கள் பகுதியில் உள்ள பழங்காலக் கல்வெட்டுகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
ஆசிரியர் : இன்று நான் கல்வெட்டுகள் பற்றி உங்களுக்குக் கூறப்போகிறேன்.
மாணவர்கள் : எந்தக் கல்வெட்டுகள் பற்றி கூறப்போகிறீர்கள் ஐயா?
ஆசிரியர் : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சந்திரசவுடேஸ்வரர் கோயில் பற்றி கூற இருக்கிறேன்.
மாணவர்கள் : அக்கோவிலில் எத்தனை கல்வெட்டுகள் உள்ளன ஐயா?
ஆசிரியர் : அக்கோவிலில் 26 கல்வெட்டுகள் உள்ளன.
மாணவர்கள் : மன்னர்கள் பற்றி ஏதேனும் குறிப்புகள் காணப்படுகின்றதா ஐயா?
ஆசிரியர் : ஆமாம் மாணவர்களே! முதலாம் இராஜேந்திரனின் பெயர்க்குறிப்பு காணப்படுகிறது.
மாணவர்கள் : அந்தக் கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டைச் சோர்ந்தவை ஐயா?
ஆசிரியர் : காலம் 12 ஆம் நூற்றாண்டு என கணிக்கப்படுகிறது மாணவர்களே!
மாணவர்கள் : அக்கல்வெட்டின் பற்றி வேறு ஏதேனும் செய்திகளைக் கூறமுடியுமா ஐயா?
ஆசிரியர் : அக்கல்வெட்டுகள் பராமரிப்பு இன்றி அழிவுப் பாதையில் செல்கிறது.
மாணவர்கள் : நன்றி ஐயா!