12th Tamil Book Back Answers Unit 7.2
இயல்: 7.2 அதிசயமலர்
12th Tamil Book Back Answers Unit 7.2. TN 12th Standard Tamil Guide Lesson 7, Unit 7.2 book back answers, 12th Tamil Unit 7.2 Book Back and additional Questions and answers. HSC Second Year Tamil இயல்:7.2 அதிசயமலர் Full Answer key. TN 12th Tamil Samacheer kalvi Guide. Syllabus Reduced Syllabus. 12th Tamil Unit 7 Free Online Test.
பாடநூல் வினாக்கள் | 12th Tamil Book Back Answers Unit 7.2
பலவுள் தெரிக
1. அதிசய மலரின் புன்னகையைப் பிடித்தவாறு தமிழ்நதி கடக்க சொல்வது
அ) கடந்தகால துயரங்களை
ஆ) ஆட்களற்ற பொழுதை
இ) பச்சயம் இழந்த நிலத்தை
ஈ) அனைத்தையும்
Answer:
ஈ) அனைத்தையும்
சிறுவினா
12th Tamil Book Back Answers Unit 7.2
1. அதிசய மலரின் பூச்செடி எவ்வாறு முளைத்ததாக தமிழ்நதி கூறுகிறார்?
Answer:
- புலம் பெயர்ந்த மக்களின் எண்ணத்தில் மீதமிருக்கும் மரங்களில், நீரில்லா பொட்டல் வெளிப் பகுதியில், போருக்குப் பின் பிறந்த குழந்தை போல முகை (மொட்டு) அவிழ்ந்து மலர்ந்து சிரிக்கிறது அதிசய மலர் ஒன்று.
- ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், உலாவிய யானையின் எச்சத்திலிருந்து வளர்ந்திருக்கலாம் இச்செடி.
- எவரோ ஒருவருடைய கால் சப்பாத்தின் (காலுறை) பின்புறம் விதை ஒட்டிக்கொண்டு இங்கு வந்து உயிர் பெற்றிருக்கலாம் – என்று தமிழ்நதி கூறுகிறார்.
2. ‘எங்கிருந்தோ வருகிறது
வண்ணத்துப் பூச்சியொன்று
பறவைகளும் வரக்கூடும் நாளை’ – இடம்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
தமிழ்நதியின் அதன் பிறகு எஞ்சும்’ கவிதைத் தொகுப்பில் அதிசய மலர்’ என்ற தலைப்பில் இப்பாடல் இடம்பெற்றுள்ளன.
பொருள் :
மலரைத் தேடி வண்ணத்துப் பூச்சியும், பறவையும் வரக்கூடும் என்பது பொருள்.
விளக்கம்:
மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் உலவிய யானையின் எச்சத்திலோ அல்லது காலனியின் பின்புறம் ஒட்டிக்கிடந்து முளைத்தது அதிசய மலர். அப்பூச்செடியின் அடையாளத்தைக் கண்டு எங்கிருந்தோ வண்ணத்துப்பூச்சியும், பறவையும் நாளை வரக்கூடும் என்று தமிழ்நதி கூறுகிறார்.
கூடுதல் வினாக்கள்
12th Tamil Book Back Answers Unit 7.2
பலவுள் தெரிக
1. ‘அதிசய மலர்’ என்னும் கவிதையின் ஆசிரியர்
அ) ஆத்மாநாம்
ஆ) நாகூர்ரூமி
இ) தமிழ்நதி
ஈ) இரா. மீனாட்சி
Answer:
இ) தமிழ்நதி
2. ‘அதிசய மலர்’ என்னும் கவிதை இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
அ) அதன் பிறகும் எஞ்சும்
ஆ) கானல்வரி
இ) சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பணி
ஈ) கைவிட்ட தேசம்
Answer:
அ) அதன் பிறகும் எஞ்சும்
3. கவிஞர் தமிழ்நதியின் இயற்பெயர்
அ) கலைச்செல்வி
ஆ) தமிழ்ச்செல்வி
இ) கலைவாணி
ஈ) வாணி
Answer:
இ) கலைவாணி
4. கவிஞர் தமிழ்நதியின் பிறப்பிடம்
அ) ஈழத்தின் திருகோணமலை
ஆ) கேரளத்தின் திருவனந்தபுரம்
இ) கர்நாடகாவின் மாண்டியா
ஈ) தமிழகத்தின் திருச்செந்தூர்
Answer:
அ) ஈழத்தின் திருகோணமலை
5. கவிஞர் தமிழ்நதி கலைத்துறையில் பட்டம் பெற்ற பல்கலைக்கழகம்
அ) சென்னை
ஆ) கொலம்பியா
இ) யாழ்ப்பாணம்
ஈ) அண்ணாமலை
Answer:
இ) யாழ்ப்பாணம்
6. கவிஞர் தமிழ்நதி புலம்பெயர்ந்து சென்றுள்ள நாடு
அ) சிங்கப்பூர்
ஆ) மலேசியா
இ) கனடா
ஈ) ஆஸ்திரேலியா
Answer:
இ) கனடா
7. பொருத்துக.
அ) நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது – 1. நாவல்
ஆ) சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பணி – 2. குறுநாவல்
இ) கானல்வரி – 3. கவிதைகள்
ஈ) பார்த்தீ னியம் – 4. சிறுகதைகள்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 4, 1, 2, 3
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 4, 3, 2, 1
8. தமிழ்நதி எழுதிய ‘ஈழம்: கைவிட்ட தேசம்’ என்பது
அ) சிறுகதைகள்
ஆ) கவிதைகள்
இ) குறுநாவல்
ஈ) நாவல்
Answer:
ஈ) நாவல்
9. பச்சையம் இழந்த சாம்பல் நிலத்தில் மலரை அடையாளம் கண்டு வருவது.
அ) யானை
ஆ) வண்ணத்துப்பூச்சி
இ) எறும்பு
ஈ) ஈ
Answer:
ஆ) வண்ணத்துப்பூச்சி
குறுவினா
1. அதிசய மலர் என்ற கவிதை தமிழ்நதியின் எத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன?
Answer:
‘அதன் பிறகு எஞ்சும்’ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
2. தமிழ்நதியின் மொழிநடை எதனை அடிப்படையாகக் கொண்டது?
Answer:
புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும், வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி இவருடையது.
3. அதிசிய மலரின் புன்னகை எங்கிருந்து தொடங்குகிறது?
Answer:
இதழ்களிலிருந்து தொடங்குகிறது.
4. அதிசய மலர் எப்போது சிரித்தது?
Answer:
போருக்குப் பிறகு முகையை அவிழ்த்துச் சிரித்தது.
5. ‘எவருடையவோ
சப்பாத்தின் பின்புறம்
விதையாக ஒட்டிக்கிடந்து
உயிர் தரித்திருக்கலாம்’ – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
தமிழ்நதியின் ‘அதன் பிறகு எஞ்சும்’ கவிதைத் தொகுப்பில் ‘அதிசய மலர்’ என்ற தலைப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளன.
விளக்கம் :
யாருடைய செருப்பின் பின்புறமாக விதையாக ஒட்டிக் கொண்டு வந்து தன் வாழ்வை உருவாக்கிக் கொண்டிருக்கலாம்.
சிறுவினா
1. கவிஞர் தமிழ்நதி குறிப்பு வரைக.
Answer:
- பெயர் : கலைவாணி
- பிறப்பு : ஈழம், திருகோணமலை.
- வசிப்பு : கனடா
- படிப்பு : யாழ்ப்பாணத்தில் கலைத்துறையில் பட்டம்
- நூல்கள் : சிறுகதை – நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது
- நாவல் – ஈழம், கைவிட்ட தேசம், பார்த்தீனியம்
- குறுநாவல் – சாலை வரி
- கவிதை – சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனி
கற்பவை கற்றபின்
1. போர்களுக்கு எதிரான குரல்கள் வெளிப்படும் புதுக்கவிதைகளைத் தொகுத்து வகுப்பறையில் படிக்க.
Answer:
போருக்கு எதிராக குரல்கள்…….இன்று காலையும் போர் விமானங்கள் எங்கள் கிராமத்தின் மேல் சுற்றின. சிலர் பதுங்கு குழிக்குள் அடைக்கலம் சிலர் வெளியே நின்று வெறுத்துப் பார்த்தனர்.குண்டுகள் வீழ்ந்தனகிராமத்தின் மத்தியில் புகை மண்டலம்சிலருக்குக் காயம்; சிலர் மாயம்எத்தனை பேர் மாண்டனர்பலருக்கு அந்தக் கணக்குதான் தேவைபாழும் உலகம் பரிதாபப்படவில்லை .எங்கள் மேல் விழுமோ கிழக்கில் வெள்ளி வருமோ!மனிதம் விற்று மதி போற்றும்மக்கள் வேடத்தில் மாக்கள் கூட்டம்மதம் தன்னை ஆயுதமாய் ஏந்திபகுத்தறியாமல் பகை கொள்வதாபடைகொண்டு தாக்கினால் பாவம்நாங்கள் என்ன செய்வோம்பாதி பேர் கைது பாதி பேர் காணோம்பக்கத்து வீட்டில் அப்பா இல்லைஎன் வீட்டில் என் அண்ணன் இல்லைஎதிர் வீட்டில் என் நண்பன் இல்லைஎங்கே போனார்கள் ஆண்டுஇரண்டாயிற்று சேதி இல்லைஇறைவனும் எங்கள் முன் வரவில்லைஏதேனும் கேட்கலாம் என்றால்எதைக் கேட்பது எதை விடுவதுமீண்டு வருமா மாண்ட உயிர்கள்மறு பிறவியிலாவது ஆண்டவாஎன்னை படைப்பதை நீ மறந்து விடு.