12th Tamil Guide Unit 8

12th Tamil Book Answers Unit 8.1

12th Tamil Book Answers Unit 8.1

இயல்: 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

12th Tamil Book Answers Unit 8.1 TN 12th Standard Tamil All Unit Book Answers, 12th Tamil Lesson 8, Unit 8.1  Book Back Question and answers, additional question and answers. HSC Second Year Tamil இயல்:8.1 நமது அடையாளங்களை மீட்டவர். TN 12th Tamil  Samacheer kalvi Guide. Syllabus Reduced Syllabus. 12th Tamil Unit 8 Free Online Test.

12th Tamil Book Answers Unit 8.1, இயல்:8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

பாடநூல் வினாக்கள்

12th Tamil Book Answers Unit 8.1

பலவுள் தெரிக

1. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

அ) தனித்தமிழ்த் தந்தை – 1. மு.வரதராசனார்
ஆ) ஆராய்ச்சிப் பேரறிஞர் – 2. மயிலை. சீனி. வேங்கடசாமி
இ) தமிழ் தென்றல் – 3. திரு.வி.க.
ஈ) மொழி ஞாயிறு – 4. தேவநேயப்பாவாணர்
Answer:
அ) தனித்தமிழ்த் தந்தை – 1. மு.வரதராசனார்

 

2. ச.த. சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப் பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்.

அ) பௌத்தமும் தமிழும்
ஆ) இசுலாமும் தமிழும்
இ) சமணமும் தமிழும்
ஈ) கிறுத்தவமும் தமிழும்
Answer:
ஈ) கிறுத்தவமும் தமிழும்

குறுவினா12th

Tamil Book Answers Unit 8.1

1. ‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ நூல் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • அழகுக் கலைகள் பற்றி தமிழில் வெளிவந்த முழுமையான நூல்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்தோதுவதாக அமையும் நூல்.
  • தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்ற நூல்.

2. ‘விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டேன்’ யார், யாரைப் பற்றி எதற்காகக் கூறுகிறார்?
Answer:

  • பாவேந்தர் பாரதிதாசன் வேங்கடசாமியைப் பற்றிக் கூறுகிறார்.
  • தமிழ் கெட நேர்ந்த போது தமிழ்ப்பணியை உயிர்ப் பணியாகக் கொண்டு தமிழரின் மேன்மையை ஓங்கிடச் செய்தல் வேண்டும் என்று கூறுகிறார்.

சிறுவினா

1. மயிலை சீனி. வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் உருவாக்கித் தருக.
Answer:

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்த கால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
  • இன வரலாற்றை எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர்.
  • இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் எழுதிய 

புத்தகங்கள் தமிழரின் : புதையல்களாக விளங்குகின்றன.

  • சமயம், மானுடவியல், தொல்பொருள் போன்ற துறையில் மொழி ஆய்வு செய்தவர்.
  • வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி போன்றவற்றில் புலமை பெற்றவர்.
  • தமிழில் ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ குறித்து முழுமையான நூல் வெளியிட்டவர்.
  • இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற நூல் ஆகும்.

நெடுவினா | 12th Tamil Book Answers Unit 8.1

1. மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.
Answer:

  1. மயிலை சீனி. வேங்கடசாமியின் ஆய்வுகள் மொழிக்கு முதன் முதலாக வைக்கப்பட்டுள்ளன.
  2. இவரது ஆய்வுகள் அறிஞர்களுக்கு மட்டுமன்றி பொது மக்களுக்கும் அறிவு விருந்தாகிறது.
  3. பல ஆய்வுகள் கிளைவிட இவரது ஆய்வுகள் அடி மரமாக அமைந்தது.
  4. இவரது ஆய்வுகள் அனைத்தும் வேண்டியது, வேண்டாதது என்றோ, ஒதுக்க முடியாத வகையில் : இவரது எழுத்தாளுமை திகழ்கிறது.
  5. தமிழக வரலாற்றுக் கழகத்திலும், தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து மொழிக்குத் தொண்டாற்றியமைக்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயமும், மதுரைப் பல்கலைக்கழகம் தமிழ்ப் : பேரவைச் செம்மல் விருதும் வழங்கியது.
  6. ஓயாத தேடலினாலும், கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வுகள் வெளிக்கொணர்ந்த : மாமனிதருக்கு சென்னை கோகலே அரங்கில் மணிவிழா எடுத்து ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
  7. தமிழ்த் தேனீ என்றால் நம் மயிலை சீனியைத்தான் குறிக்கும்.
  8. எப்போதும் அவரது கால்கள் அறிவை நோக்கியே நகர்ந்தன.
  9. இவர் நூலகத்தைத் தன் தாயகமாகக் கொண்டு அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கினார்.
  10. இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டி தவறுகளை மறுத்து எடுத்துரைக்கும் ஆய்வு அணுகுமுறைக் கொண்டவர்.
  11. சமயம், கலை, இலக்கியம், கிறுத்துவமும் தமிழும், பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும் போன்ற ஆய்வு நூல்களை எழுதியும், வட்டெழுத்து கோலெழுத்து தமிழ் பிராம்மி போன்றவற்றில் புலமைப் பெற்று பன்முகங்கள் கொண்டு விளங்கினார்.
  12. இத்தகு காரணங்களைக் கொண்டு நாம் மயிலையாரை ஆய்வு செய்கின்ற போது அவர் ஓர் சிறந்த ஆராய்ச்சிப் பேரறிஞர் என்ற கூற்று சாலப் பொருந்தும்.

கூடுதல் வினாக்கள் | 12th Tamil Book Answers Unit 8.1

பலவுள் தெரிக

1. மயிலை சீனி. வேங்கடசாமி பிறந்த நாள் ………….. பிறப்பிடம்

அ) 16.12.1900, சென்னை மயிலாப்பூர்
ஆ) 14.12.1905, சென்னை வடபழனி
இ) 13.10.1902, மதுரை மாட்டுத்தாவனி
ஈ) 10.12.1901
Answer:
அ) 16.12.1900, சென்னை மயிலாப்பூர்

 

2. மயிலை சீனி. வேங்கடசாமியின் தந்தை ……………… ஆவார்.

அ) சீனிவாசன்
ஆ) கோவிந்தராசன்
இ) கிருஷ்ணமூர்த்தி
ஈ) வெங்கடசுப்பு
Answer:
அ) சீனிவாசன்

3. மயிலை சீனி. வேங்கடசாமியின் தமையனார் ………….. ஆவார்.

அ) சீனிவாசன்
ஆ) கோவிந்தராசன்
இ) கிருஷ்ணமூர்த்தி
ஈ) ராசராசன்
Answer:
ஆ) கோவிந்தராசன்

4. மயிலை சீனி. வேங்கடசாமியின் தந்தையார் பணி ……………. தமையனார் பணி ……………

அ) சித்த மருத்துவர், தமிழாசிரியர்
ஆ) தமிழாசிரியர், சித்த மருத்துவர்
இ) வழக்கறிஞர், கட்டிட வரைவாளர்
ஈ) கட்டிட வரைவாளர், வழக்கறிஞர்
Answer:
அ) சித்த மருத்துவர், தமிழாசிரியர்

5. மயிலை சீனி. வேங்கடசாமி ஆசிரியப் பயிற்சி பெற்று, தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆண்டுகள்

அ) 20
ஆ) 25
இ) 28
ஈ) 30
Answer:
ஆ) 25

6. 1934இல் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிபேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ‘கிறித்தவமும் தமிழும்’ என்ற பொருள் குறித்து உரையாற்றியவர்

அ) கா. சுப்பிரமணியர்
ஆ) விபுலானந்த அடிகள்
இ) ச.த. சற்குணர்
ஈ) திரு.வி.க
Answer:
இ) ச.த. சற்குணர்

7. மயிலை சீனி. வேங்கடசாமியின் முதல் நூல்

அ) கிறித்துவமும் தமிழும்
ஆ) பௌத்தமும் தமிழும்
இ) சமணமும் தமிழும்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) கிறித்துவமும் தமிழும்

8. மயிலை சீனி. வேங்கடசாமி புலமை பெற்றிருந்த எழுத்துகள்

i) வட்டெழுத்து
ii) கோலெழுத்து
iii) தமிழ் பிராம்மி
அ) i, ii – சரி
ஆ) ii, iil – சரி
இ) மூன்றும் சரி
ஈ) iii – மட்டும் தவறு
Answer:
இ) மூன்றும் சரி

9. மயிலை சீனி. வேங்கடசாமி எந்தெந்த பல்லவ மன்னர்களைப் பற்றி நூல்களை எழுதினார்?

i) மகேந்திரவர்மன்
ii) நரசிம்மவர்மன்
iii) மூன்றாம் நந்திவர்மன்
அ) i, ii – சரி
ஆ) ii, iii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) iii – மட்டும் தவறு
Answer:
இ) மூன்றும் சரி

10. 1905களில், ……………… நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டவர் மயிலை சீனி. வேங்கடசாமி.

அ) கி.பி.3 – கி.பி.9
ஆ) கி.பி.6 – கி.பி.12
இ) கி.பி.7 – கி.பி.12
ஈ) கி.பி.8 – கி.பி.13
Answer:
அ) கி.பி.3 – கி.பி.9

11. கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளி வந்த முழுமையான முதல் நூல் …………….. ஆசிரியர் ………………..

அ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) நுண்கலைகள், கா. சுப்பிரமணியர்
இ) இசைவாணர் கதைகள், விபுலானந்த அடிகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி

12. தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமியின் நூல்

அ) நுண்கலைகள்
ஆ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்
இ) இசைவாணர் கதைகள்
ஈ) பௌத்தமும் தமிழும்
Answer:
ஆ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்

13. மயிலை சீனி. வேங்கடசாமி நூல்களின் படங்களை வரைந்து வெளியிட்டவர்

அ) மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) விபுலானந்த அடிகள்
இ) திரு.வி.க
ஈ) ச.த.சற்குணர்
Answer:
அ) மயிலை சீனி. வேங்கடசாமி

14. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒன்றினை வேங்கடசாமி நிகழ்த்திய ஆண்டு

அ) 1960
ஆ) 1962
இ) 1956
ஈ) 1954
Answer:
ஆ) 1962

15. தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தற்சான சான்றாக விளங்கும் வேங்கடசாமியின் நூல்

அ) பழங்காலத் தமிழர் வணிகம்
ஆ) தமிழ்நாட்டு வரலாறு
இ) கொங்கு நாட்டு வரலாறு
ஈ) களப்பிரர் ஆட்சியில் தமிழாம்
Answer:
ஆ) தமிழ்நாட்டு வரலாறு

16. தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூலின் சிறப்பு

i) சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் முதலிய இலக்கியத் தரவுகளைக் கொண்டு இந்நூல் : எழுதப்பட்டுள்ளது.
ii) அத்துடன் துளுமொழியையும் தமிழ்மொழியையும் ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளது.
iii) குறைந்த ஆதாரங்களைக் கொண்டு ஒரு பெரிய வரலாற்றையே உருவாக்கிய பெருமை மயிலை சீனி.வேங்கடசாமியையே சாரும்.
அ) i – சரி
ஆ) ii – சரி
இ) iii மட்டும் சரி
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

17. ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடியாக விளங்கும் மயிலை சீனி.வேங்கடசாமியின் நூல்

அ) தமிழ்நாட்டு வரலாறு
ஆ) பத்தொன்பதாம் நூற்றாண்டுத்தமிழ்
இ) களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
ஈ) பழங்காலத் தமிழர் வணிகம்
Answer:
ஆ) பத்தொன்பதாம் நூற்றாண்டுத்தமிழ்

18. ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ என்னும் நூலில் வேங்கடசாமி மறைந்து போன …………….. நூல்கள் தொடர்பான குறிப்புகளைக் கூறியுள்ளவர்.

அ) 321
ஆ) 333
இ) 345
ஈ) 247
Answer:
ஆ) 333

19. தாங்கெட நேர்ந்த போதும்
தமிழ்கெட லாற்றா அண்ணல்
வேங்கடசாமி என்பேன் – என்று கூறியவர்

அ) பாரதிதாசன்
ஆ) கண்ண தாசன்
இ) திரு.வி.க.
ஈ) ம.பொ.சி.
Answer:
அ) பாரதிதாசன்

20. வேங்கடசாமி, ………… என்னும் இதழில் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் ‘அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.

அ) குடியரசு
ஆ) ஊழியன்
இ) செந்தமிழ்ச்செல்வி
ஈ) ஆரம்பாசிரியன்
Answer:
இ) செந்தமிழ்ச்செல்வி

21. மத்தவிலாசம் என்ற நாடக நூலை இயற்றியவர் ………………. அதனை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியவர்.

அ) மகேந்திரவர்மன், மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) நரசிம்மவர்மன், தெ.பொ.மீ
இ) மூன்றாம் நந்திவர்மன், விபுவானந்த அடிகள்
ஈ) இராசராசசோழன், கவிமணி
Answer:
அ) மகேந்திரவர்மன், மயிலை சீனி. வேங்கடசாமி

22. மயிலை சீனி. வேங்கடசாமி பெற்றுள்ள சிறப்புகளை பொருத்திக் காட்டுக.

i) தமிழ்ப் பேரவைச் செம்மல் – தமிழ் எழுத்தாளர் சங்கம்
ii) ஆராய்ச்சிப் பேரறிஞர் – சென்னை கோகலே மண்டபம்
iii) கேடயம் (1962) வழங்கல் – மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்
அ) 3, 2, 1
ஆ) 2, 1, 3
இ) 1, 2, 3
ஈ) 2, 3, 1
Answer:
அ) 3, 2, 1

23. சங்கக்காலப் பசும்பூன் பாண்டியன் தன் கொடியில் ……………. சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் வேங்கடசாமி.

அ) புலி
ஆ) யானை
இ) கழுதை
ஈ) சேவல்
Answer:
ஆ) யானை

குறுவினா

1. மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பு வரைக.

Answer:
பெயர் : மயிலை சீனி. வேங்கடசாமி
பிறப்பு : 16.12.1900
ஊர் : மயிலாப்பூர்
பெற்றோர் : சீனுவாசன் – கோவிந்தம்மாள்
பணி : பள்ளி ஆசிரியர், இதழ் ஆசிரியர், ஆராய்ச்சியாளர்.

 

2. மயிலை சீனி. வேங்கடசாமிக்கு கிடைத்த சீதனங்கள் யாவை?

Answer:
மகாபாரதம், இராமாயணம்.

3. மயிலையார் எதன் அடிப்படையில் இன வரலாற்றை எழுதினார்?

Answer:
இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு.

4. மயிலையாரின் ஆய்வுக்கட்டுரைகள் வெளியான இதழ்களைக் குறிப்பிடுக.

Answer:
குடியரசு, ஊழியன், செந்தமிழ்ச் செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி.

5. மயிலையார் கிறுத்துவமும் தமிழும் எனும் நூல் எங்கு யார் உரையைக் கேட்டு எழுதினார்?

Answer:

  • 1934 – தெ.பொ. மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப்பள்ளி.
  • தமிழ் ஆராய்ச்சி மாநாடு.
  • ச.த. சற்குணர் ஆற்றிய உரை.

6. மயிலையார் ஆய்வு செய்த துறைகள் சிலவற்றைக் குறிப்பிடுக.

Answer:
சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழி ஆய்வு.

 

7. மயிலையாரின் பன்முக அறிவினைக் குறிப்பிடுக.

Answer:

  • சமயம், மானுடவியல், தொல் பொருள் ஆய்வு, தமிழக வரலாறு கலை வரலாறு போன்ற துறையிலும்.
  • வட்டெழுத்து, கோலெழுத்து தமிழ் பிராம்மி கல்வெட்டுப் போன்ற துறைகளில் பன்முக அறிவினைப் பெற்று விளங்கினார்.

8. மயிலையாரின் எம்மொழிகளில் புலமையுடையவர்?

Answer:
மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம்

 

9. மயிலையாரின் மொழிபெயர்ப்பு பணியினைக் கூறுக.

Answer:
மகேந்திரவர்மன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிப் பெயர்ப்பு செய்தார்.

10. மயிலையாரின் சொல்லாய்வுப் பணியினை விளக்குக.

Answer:
மயிலையார் செய்த சொல்லாய்வினை செந்தமிழ்ச் செல்வி’ என்ற இதழில் எழுதி அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.

11. மயிலையாரைப் பற்றி விபுலானந்தவின் கருத்து யாது?

Answer:

  • மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித் துறையில் முதியவர்.
  • நல்லொழுக்கம் வாய்ந்தவர்.
  • நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னேப்போல் போற்றுபவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சிறுவினா

1. மயிலை சீனி. வேங்கடசாமி பற்றி நாரண துரைக்கண்ணன் சொன்ன உருவ விவரிப்பினை விளக்குக

Answer:

  • ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்.
  • அகன்ற நெற்றி, வட்டமுகம், எடுப்பான மூக்கு, பேசத்துடிக்கும் உதடு, நான்கு முழ வேட்டி, காலர் இல்லா முழுக்கைச் சட்டை.
  • சட்டைப் பையில் மூக்குக் கண்ணாடி பவுண்டன் பேனா, மேல் துண்டு, இடது கரத்தில் தொங்கும் புத்தகப்பை.
  • இத்தோற்றத்தோடு கன்னிமாரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வருவார்.

2. மயிலையார் எதற்காக தமிழ் வளர்த்த அழகுக் கலைகள் என்ற நூலை எழுதினார்?

Answer:

  1. தற்காலத்துத் தமிழ்ச்சமூகம் தனது பழைய அழகுக் கலைச் செல்வங்களை மறந்தன.
  2. தன்பெருமையை தான் அறியாச் சமூகமாக இருந்து வருகிறது.
  3. கலை என்று கூறப்படுவதெல்லாம் சினிமாக் கலை இசைக்கலை பற்றியே.
  4. இலக்கியக் கலை கூட அதிகமாகப் பேசப்படுவதில்லை .
  5. ஏனைய அழகுக்கலைகள் மறந்து விட்டன.
  6. இதன் காரணமாக இந்நூலை எழுதினார்.

3. மயிலையாரின் மீட்டுருவாக்க முயற்சியைச் சான்றுடன் விளக்குக.

Answer:

  • தமிழக வரலாற்றை பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தார்.
  • ‘தமிழ் நாட்டு வரலாறு’ என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சான்று.
  • இந்நூல் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் போன்ற தரவுகளைக் கொண்டு எழுதினார்.
  • துளுமொழி – தமிழ்மொழி ஒப்பீட்டு ஆராய்ந்துள்ளார்.

4. மயிலையாரின் ஆவணப் பணியினை விளக்குக.

Answer:

  1. தமிழியலுக்கு தேவையான பல்வேறு ஆவணங்களைத் தொகுத்து தம் பணியை மேற்கொண்டார்.
  2. இதன் விளைவாக சாசனச் செய்யுள் மஞ்சரி மறைந்து போன தமிழ் நூல் தமிழ் மறுமலர்ச்சிக்குப் பெரும் விளக்கம் அளிப்பதாக அமைந்தது.
  3. இலக்கண, இலக்கிய பரப்பில் உறைந்திருந்த செய்திகளைத் தொகுத்து மறைந்து போன 333 நூல்கள் தொடர்பான குறிப்புகளை முன் வைத்தார்.

5. மயிலையாரின் வாழ்க்கையைப் பற்றிச் சில தகவல்கள் திரட்டுக.

Answer:

  • திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்தவர்.
  • தம் வாழ்வை முழுமையாகத் தமிழின் ஆய்வுக்கு ஒதுக்கியவர்.
  • நாம் தாழாமல் இருக்கத் தம்மைத் தாழ்த்திக் கொண்டவர்.
  • பெருமைகளை ஆய்வு நோக்கில் விரித்துரைத்தவர்.
  • சுய அடையாளங்களை மீட்டுத் தந்தவர்.

6. மயிலை சீனி. வேங்கடசாமியின் தொடக்கக்கால ஆய்வுகள் பற்றி விளக்குக.

Answer:

  • 1934 தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர் நிகழ்த்திய உரையைக் கேட்டு கிறித்துவமும் தமிழும் என்ற நூலை எழுதினார்.
  • தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் ஈடுபட்டு “பௌத்தமும் தமிழும்’, சமணமும் தமிழும் என்ற நூலை எழுதினார்.
  • சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல் பொருள் ஆய்வு, கலை வரலாறு முதலியன பல துறைகளில் கவனம் செலுத்தினார்.
  • கல்வெட்டு ஆய்வில் ஆர்வமும் பயிற்சியும் அதிகம். தமிழ் எழுத்தியலின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர்.
  • வட்டெழுத்து, கோலெழுத்து தமிழ் பிராம்மி புலமை பெற்றதால் சாசனங்கள் அவரால் எளிதில் வாசிக்க முடிந்தது.
  • வரலாறு, இலக்கியம், கலையியல், சமயம் போன்ற துறைகளிலும் நூல்களை எழுதியுள்ளார்.

7. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்கம் தருக.

Answer:

  • கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரை உள்ள இடைப்பட்ட காலங்களில் ஆட்சி செய்த மன்னர்களைப் பற்றி ஆய்வு செய்தார்.
  • மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் போன்றோர் நூல்களைப் பற்றியும் எழுதியுள்ளார். மூவேந்தர்கள், கொங்கு நாட்டு மன்னர்கள் களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றை எழுதியுள்ளார்.
  • வரலாற்றை மட்டுமல்லாமல், அரசியல், பண்பாடு, கலை வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.
  • களப்பிரர் பற்றி ஆய்வு செய்து “களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூலை வெளியிட்டார்.

8. மயிலை.சீனி. வேங்கடசாமியின் கலையியல் ஆய்வுகள் பற்றி விவரி.

Answer:

  1. கலையியல் சார்ந்த ஆய்வுகள், நூல்கள் வெளிவர வழிகாட்டியாக விளங்கியவர் மயிலையார்.
  2. இதற்கு இளமைப் பருவத்தில் ஓவியக் கல்லூரியில் பயின்றது உதவியாக இருந்தன.
  3. கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான ஆய்வுகள் தமிழ்ச் சமூகத்திற்கு புதிய வரவாக இருந்தன.
  4. தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் என்னும் நூல், கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளி வந்த முழுமையான முதல் நூல் ஆகும்.
  5. தமிழக அரசின் முதல் பரிசுப் பெற்ற நூல் ஆகும். இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், நுண்கலைகள் இசைவாணர் கதைகள் என்பன இவருடைய நூல்கள்.
  6. தம் நூலில் தாமே படங்களை வரைவார். இது அவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

9. மயிலையாரின் இலக்கிய பணியினை விளக்குக.

Answer:

  • 1962இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவு.
  • இதன் மூலம் ஆய்வுப்பயணம் தொல்காப்பியம், சங்க இலக்கியம், கல்வெட்டுகள் நோக்கி நகர்ந்தது.
  • இதன் விளைவாக பழந்தமிழர் வணிகர் களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு போன்ற நூல்களை எழுதினார்.
  • தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தார்.
  • “தமிழ்நாட்டு வரலாறு” எனும் நூல் மீட்டுருவாக்க முயற்சிக்கு சான்று.
  • துளுமொழி – தமிழ்மொழி ஒப்பிட்டு ஆய்ந்துள்ளார்.
  • சாசனச் செய்யுள் மஞ்சரி மறைந்து போன தமிழ் நூல்கள் எழுதினார்.
  • “மறைந்துப் போன தமிழ் நூல்கள்” மயிலையாரின் ஆவணப்பணிகளில் ஒன்றாகும்.
  • 333 நூல்கள் தொடர்பான குறிப்புகளை முன் வைத்தார்.

10. மயிலை சீனி. வேங்கடசாமி பன்மொழிப் புலமையை விளக்குக.

Answer:

  • தமிழ் ஆய்வு மரபில், சொல் ஆய்வுகளை மேற்கொள்ளாத ஆய்வாளர் இல்லை.
  • மயிலையாரும் சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு செந்தமிழ்ச் செல்வி’ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வு கட்டுரைகள் “அஞ்சிறைத்தும்பி” நூலாக வெளி வந்தது.
  • மகேந்திரவர்மன் எழுதிய ‘மத்த விலாசம் எனும் நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கம் செய்தார்.
  • மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம் பாலி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் புலமைக் கொண்டவர்.
  • நான் கதைகளையும் நவீனங்களையும் எழுதுகிறவன் அல்லன் என்று கூறியவர்.
  • வரலாற்று ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி நூல்களை எழுகிறவன் என்று குறிப்பிட்டவர்.
  • மயிலை சீனி. வேங்கடசாமி இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சியில் முதியவர் நல்லொழுக்கம் வாய்ந்தவர் என்று சுவாமி விபுலானந்த அடிகளார் புகழ்கிறார்.
  • இக்காரணங்களைக் கொண்டு மயிலையார் பன்மொழிப் புலமை வாய்ந்தவர் என்று கூறலாம்.

Leave a Reply