12th Botany Unit 9 Lesson 7 Additional 2 Marks

12th Botany Unit 9 Lesson 7 Additional 5 Marks

12th Botany Unit 9 Lesson 7 Additional 5 Marks

TN 12th Bio-Botany Unit 9, 7th Lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 9 Lesson 7 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 7 . சூழல்மண்டலம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 7 Book Back Answers.

12th Bio-Botany Unit 9.தாவரச் சூழ்நிலையியல் | Lesson 7. சூழல்மண்டலம் – Additional 5 Marks

12th Botany Unit 9 Lesson 7 additional 5 marks

 

IV. ஐந்து மதிப்பெண் வினாக்கள்

1. சூழல்மண்டலம் வரையறு. சூழல்மண்டலத்தின் கூறுகளை விளக்குக.
  • சூழல்மண்டலம் என்ற சொல் A.G.டான்ஸ்லி (1935), என்பவரால் முன்மொழியப்பட்டது.
  • சுற்றுச்சூழலின் அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளை ஒருங்கிணைப்பதன் விளைவாக அமைந்த அமைப்பாகும்.
  • ஓடம் (1962) இதனை சூழ்நிலையின் அமைப்பு உயிரற்ற காரணிகளை ஒருங்கிணைப்பதன் விளைவாக அமைந்த அமைப்பாகும்.
  • சூழல்மண்டலம் இரண்டு முக்கிய கூறுகளை கொண்டுள்ளது.

உயிரற்ற கூறுகள் :
காலநிலை காரணிகள் : 
காற்று, நீர், சூரிய ஒளி, மழை வெப்பநிலை மற்றும் ஈரப்பரம்

மண் காரணிகள் : மண், காற்று, மண்நீர் மற்றும் PH
நில அமைப்புக் காரணிகள் : விரிவகலம், குத்துயரம்.
கரிம பொருட்கள்: கார்போஹைட்ரேட், புரதம் கொழும்பு மற்றும் மட்குப்பொருட்கள்.
கனிமப்பொருட்கள் : C, H, O, N மற்றும் P உயிரற்ற கூறுகள் சூழல்மண்டலத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
உயிரினக் கூறுகள்: 
  • உயிரினங்களான தாவரங்கள், விலங்குகள் பூஞ்சைகள், பாக்டீரியங்கள் ஆகியவை அடங்கும்
  • உயிரினங்கள் சூழல் மண்டலத்தின் ஊட்டமட்டங்களை உருவாக்குகின்றன.
  • இவை இரண்டு கூறுகளை கொண்டுள்ளன.

i) தற்சார்பு

ii) சார்பூட்டக் கூறுகள்
தற்சார்பு கூறுகள்: 
  • இவை ஒளிச்சேர்க்கை என்ற நிகழ்வின் மூலம் எளிய கனிம மூலக்கூறிலிருந்து கரிம கூறுகளை உற்பத்தி செய்கின்றன.
  • (எ.கா.) தாவரங்கள் (அ) உற்பத்தியாளர்கள்

சார்பூட்டக் கூறுகள்:

  • உற்பத்தியாளர்களை உண்ணும் உயிரினங்கள் நுகர்வோர்கள் என அழைக்கப்படுகின்றன. இவை

i) பெரும் நுகர்வோர்
ii) நுண் நுகர்வோர்

நுண் நுகர்வோர் : 
  • சிதைப்பவைகள் (எ.கா) பாக்டீரியா பூஞ்சை ஆக்டினோமைசிட்டுகள் உணவுச்சங்கிலி, உணவு வலை,சூழல் பிரமிட்கள் ஆகியவை உருவாக்கத்திற்கு உயிரினக் கூறுகள் தேவை.
2. மொத்த சூரிய ஒளியில் 2-10 விழுக்காடு மட்டுமே தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுத்தப் படுகிறது. ஏன்? விளக்குக
  • தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குக் கிடைக்கக் கூடிய ஒளியின் அளவு ஒளிச்சேர்க்கைசார் செயலூக்க கதிர்வீச்சு எனப்படுகிறது.
  • இது 400-700nm க்கு இடைப்பட்ட கதிர்வீச்சு ஆகும். இது ஒளிச்சேர்க்கைக்கும் தாவர வளர்ச்சிக்கும் இன்றியமையாததாகும்.
  • பொதுவாக தாவரங்கள் திறம்பட ஒளிச்சேர்க்கை செய்ய அதிக அளவில் நீலம் மற்றும் சிவப்பு நிற ஒளிக்கதிர்களை ஈர்க்கின்றன,
  • மொத்த சூரிய ஒளியில் வளிமண்டலத்தை அடையும் 34% மீண்டும் வளிமண்டலத்திற்கே திருப்பப்படுகிறது.
  • 10% ஒசோன், நீராவி வளிமண்டல வாயுக்களால் ஈர்க்கப்படுகிறது.
  • மீதமுள்ள 56% மட்டுமே பூமியின் மேற்பரப்பை வந்தடைகிறது. இதில் 2 – 10% தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்காக பயன்படுகிறது மீதி வெப்ப மாக சிதறடிக்கப்படுகிறது.
  • ஒளிச்சேர்க்கை சார் செயலூக்க கதிர்வீச்சின் அளவு சிலிகான் ஒளிமின் காண்கலம் ஒன்றின் உதவியால் நுண்அறியப்பட்டு மில்லி மோல்கள் / சதுரமீட்டர் /விளாடி என்ற அலகால் குறிப்பிடப் படுகிறது.
  • இதில் 400-700nm அலைநீளம் கொண்ட ஒளியை மட்டுமே நுண்ணறிய முடியும்.
  • ஒளிச்சேர்க்கை சார் செயலூக்கத்திற்கான கதிர் வீச்சின் அளவு 0 – 3000 மில்லி மோல்கள் சதுர மீட்டர் /வினாடி ஆகவும் உள்ளது,
  • இரவு நேரங்களில் PAR பூஜ்யமாகவும் கோடை காலங்களின் மதிய வேளையில் PAR 2000 – 3000 மில்லி மோல்கள் / சதுரமீட்டர் / வினாடி ஆகவும் உள்ளது.
3.முதல்நிலை உற்பத்தித்திறன் என்றால் என்ன? அதனுடைய வகைகள் யாவை? முதலநிலை உற்பத்தித் திறனை பாதிக்கும் காரணிகள் யாவை? (அ) முதல்நிலை உற்பத்தித்திறன் என்றால் என்ன? நிகர முதல்நிலை உற்பத்தித்திறனை எவ்வாறு கணக்கிடுவாய்? முதல்நிலை உற்பத்தித்திறனை பாதிக்கும் காரணிகள் யாவை? 
முதல்நிலை உற்பத்தித்திறன் (Primary productivity):

  • ஒளிச்சேர்க்கை மற்றும் வேதிச்சேர்க்கை செயல் பாட்டின் மூலம் தற்சார்பு ஊட்ட உயிரிகளினால் உற்பத்தி செய்யப்படும் வேதியாற்றல் அல்லது கரிம கூட்டுப்பொருட்கள் முதல்நிலை உற்பத்தித் திறன் எனப்படுகிறது. இது பாக்டீரியங்கள் முதல் மனிதன் வரை உள்ள அனைத்து உயிரினங் களுக்கும் கிடைக்கும் ஆற்றல் மூலமாகும்.

மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் (Gross Primary Productivitiy (GPP) : 

  • சூழல்மண்டலத்திலுள்ள தற்சார்பு ஊட்ட உயிரிகளால் ஒளிச்சேர்க்கையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவு ஆற்றல் அல்லது கரிமப்பொருட்கள் அல்லது உயிரித்திரள் மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் எனப்படுகிறது.

நிகர முதல்நிலை உற்பத்தித்திறன் (Net Primary Productivitiy (NPP):

  • தாவரத்தின் சுவாசச் செயலால் ஏற்படும் இழப் பிற்குப் பிறகு எஞ்சியுள்ள ஆற்றல் விகிதமே நிகர முதல்நிலை உற்பத்தித்திறன் எனப்படுகிறது இது வெளிப்படையான ஒளிச்சேர்க்கை என்றும் அழைக்கப்படுகிறது. எனவே GPP க்கும் சுவாச இழப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாடே NPP யாகும்.
  • |NPP – GPP- சுவாச இழப்பு மொத்த உயிரிக்கோளத்தின் நிகர முதல்நிலை
  • உற்பத்தித்திறன் ஒரு வருடத்திற்கு சுமார் 170 எடை) என மதிப்பிடப் மில்லியன் டன்கள் (உலர் பட்டுள்ளது. இதில் ஒரு வருடத்தில் ஓர் அலகு காலத்தில் கடல்வாழ் உற்பத்தியாளர்களின் நிகர முதல்நிலை உற்பத்தித்திறன் மட்டும் 55 மில்லியன் டன்கள் ஆகும்.

முதல் நிலை உற்பத்தித்திறனை பாதிக்கும் காரணிகள் : 

  • ஒளிச்சேர்க்கைத்திறன், கிடைக்கும் ஊட்டச் சத்துகளின் தன்மை நிலப்பரப்பு, மற்றும் சுற்றுச் சூழல் காரணிகளைப் பொருத்தது.
4.இரண்டாம்நிலை உற்பத்தித்திறன் என்றால் என்ன?  அதன் வகைகள் யாவை?  குழும உற்பத்தித்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
இரண்டாம்நிலை உற்பத்தித்திறன் (Secondary prodactivity); 
  • சார்பூட்ட உயிரிகள் அல்லது நுகர்வோர்கள் திசுக்களில் சேமித்து வைக்கப்படும் ஆற்றலின் அளவே. இரண்டாம் நிலை உற்பத்தித்திறன் ஆகும்.

மொத்த இரண்டாம் நிலை உற்பத்தித்திறன் (Gross secondary productivity): 

  • தாவர உண்ணிகளால் உட்கொள்ளப்படும் மொத்த தாவரப் பொருட்களில், அவற்றினால் கழிவாக வெளியேற்றப்படும் பொருட்களைக் கழித்து வரும் மதிப்பே இதுவாகும்.

நிகர இரண்டாம் நிலை உற்பத்தித்திறன் (Net secondary productivity) 

  • ஓர் அலகு இடத்தில் ஓர் அலகு காலத்தில் சுவாச இழப்பிற்குப் பிறகு நுகர்வோர்களால் சேமிக்கப் படும் ஆற்றல் அல்லது உயிர்த்திரளே நிகா இரண்டாம் நிலை உற்பத்தித்திறன் எனப்படுகிறது.

குழும உற்பத்தித்திறன் (Community producti-vity):

  • ஓர் அஞை இடத்தில் ஓர் அலகு காலத்தில் ஒரு தாவரக் குழுமத்தினால் உற்பத்தி செய்யப்படும் நிகர கரிம பொருட்களின் உயிரித்திரள் விகிதமே குழும உற்பத்தித்திறன் எனப்படுகிறது.

12th Botany Unit 9 Lesson 7 Additional 5 Marks

5. சூழல்மண்டலத்தில் எவ்வாறு ஆற்றல் கடத்தப்படுகிறது? (அ) சூழல்மண்டலத்தில் ஊட்டமட்டம் தொடர்பான கருத்தை விளக்குக. (அ) சூழ்நிலை மண்டலத்தில் உள்ள வெவ்வேறு ஊட்டமட்டம் பற்றி எழுதுக
  • சூழலமண்டலத்தில் ஆற்றல் ஊட்டமட்டங்களுக்கிடையே பரிமாற்றம் அடைவது ஆற்றல் ஒட்டம்
  • உணவுச் சங்கிலியில் உயிரினங்கள் அமைந்திருக்கும் இடத்தை குறிப்பதே ஊட்டமட்டமாகும்.
  • ஊட்ட மட்டங்களின் எண்ணிக்கை, உணவுச் சங்கிலி படிநிலைகளின் எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கும்.
  • முதல் ஊட்ட மட்டத்தில் (T;) பசுந்தாவரங்கள் இடம் பெற்றுள்ளதால், அவை உற்பத்தியாளர்கள்
  • தாவரங்கள் உற்பத்தி செய்யும் ஆற்றலை, பயன்படுத்தும் தாவர உண்ணிகள் முதல்நிலை துகர் வோர்கள் (primary consumers) என்று அழைக்கப்படுவதோடு, இரண்டாவது ஊட்ட மட்டத்தில் (T2) இடம் பெறுகின்றன.
  • தாவர உண்ணிகளை உண்டு வாழும். ஊர் உண்ணிகள், மூன்றாவது ஊட்ட மட்டத்தில் (T3) இடம்பெறுகின்றன. இவை இரண்டாம்நிலை நுகர்வோர்கள் (secondary consumers).அல்லது முதல்நிலை கண்உண்ணிகள் (primary carnivores) என்று அழைக்கப்படுகின்றன.
  • ஒரு ஊண் உண்ணியை உணவாகக் கொள்ளும் மற்றொரு மார் உளண்ணி நான்காவது ஊட்ட மட்டத்தில் (T4) இடம் பெறுகின்றது. இவை மூன்றாம் நிலை அகர்வோர்கள் (tertiary consumers) அல்லது இரண்டாம்நிலை ஊர் உண்ணிகள் (condary camivores) என்றும் அழைக்கப்படுகின்றன.
  • தாவரங்கள் மற்றும் விலங்குகள் இரண்டையும் உண்ணும் உயிரினங்கள் அனைத்துண்ணிகள் தாவரங்கள் மற்றும் விலங்குகள் இரண்டையும் உண்ணும் உயிரினங்கள் அனைத்துண்ணிகள் (காகம்) எனப்படுகிறது. இந்த உயிரினங்கள் உணவுச்சங்கிலியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஊட்ட மட்டத்தில் இடம் பெறுகின்றன.

12th Botany Unit 9 Lesson 7 Additional 5 Marks

6. வெப்ப இயக்கவியலின் விதிகள் எப்படி ஒரு சூழல் மண்டலத்தின் ஆற்றல் சேமிப்பு மற்றும் இழப்புபற்றி விளக்குகிறது. (அ) சூழ்நிலைமண்டலத்தில் வெப்ப இயக்கவியலின் விதிகள் பற்றி விளக்குக.
i)வெப்ப இயக்கவியலின் முதல் விதி : 
  • ஆற்றல் வெவ்வேறு வடிவங்களில் ஒரு அமைப்பில் இருந்து மற்றொன்றுக்கு கடத்தப்படுகிறது என்பதே முதல் விதியாகும்.
  • ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்
  • இந்த பேரண்டத்தில் உள்ள ஆற்றலின் அளவு நிலையானது.
  • (எ.கா) ஒளிச்சேர்க்கையில் (பச்சையம், நீர், கார்பன் டைஆக்சைடு) சேர்க்கைச்செயல் மூலம் தரசம் (வேதி ஆற்றல்) உருவாகிறது. தரசத்தில் சேகரிக்கப்படும் ஆற்றல் புற ஆதாரங்களிலிருந்து (ஒளி ஆற்றல்) பெறப்படுகிறது.
  • இதனால் மொத்த ஆற்றலில் லாபமும் இல்லை. இங்கு ஒளிஆற்றல் வேதிஆற்றலாக மாற்றப் இழப்பும் இல்லை.
  • ஒளி ஆற்றல் → வேதி ஆற்றல்

ii)வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி

  • ஒவ்வொரு ஆற்றல் மாற்றத்தின் போதும் அமைப்பில் உள்ள கட்டிலா ஆற்றல் குறைக்கப்படுகிறது.
  • இரண்டாம் விதியாகும். அதாவது ஆற்றல் மாற்றம் 100% முழுமையாக இருக்க முடியாது.
  • ஆற்றல் ஒரு உயிரினத்திலிருந்து மற்றொன்றிற்கு, உணவு வடிவில் கடத்தப்படும் பொழுது, ஆற்றலின் ஒரு பகுதி உயிரித்திசுவில் சேகரிக்கப் படு அதேசமயம் அதிகப்படியான ஆற்றல் பிறச்செயலின் வாயிலாக வெப்பமாக சிதறடிக்கப் படுகிறது.
  • எடுத்துக்காட்டுபத்து விழுக்காடு விதி
  • பத்து விழுக்காடு விதி இந்த விதி லின்டிமேன். (1942) என்பவரால் முன்மொழியப்பட்டது.
  • உணவுவழி ஆற்றல் ஒரு ஊட்டமட்டத்திலிருந்து மற்றொன்றிற்கு கடத்தப்படும் போது. 10% மட்டுமே ஒவ்வொரு ஊட்ட மட்டத்திலும் சேமிக்கப்படுகிறது. மீதமுள்ள ஆற்றல் (90%) சுவாசித்தல், சிதைத்தல் போன்ற நிகழ்வின் மூலம் வெப்பமாக இழக்கப்படுகிறது. எனவே இவ்விதி பத்து விழுக்காடு விதி (Ten percent law) எனப்படுகிறது.

12th Botany Unit 9 Lesson 7 Additional 5 Marks

7. உணவுச் சங்கிலி என்றால் என்ன? (அ) உற்பத்தி யாளர்களிடமிருந்து ஆற்றல் இறுதி உண்ணிகள் வரை எவ்வாறு கடத்தப்படுகிறது? இவற்றில் வகைகள் யாவை?
  • உற்பத்தியாளர்களிடமிருந்து ஆற்றல் இறுதி உண்ணிகள் வரை கடத்தப்படுவது உணவுச் சங்கிலி என்று அழைக்கப்படுகிறது.
  • இரண்டு வகை உணவுச்சங்கிலிகள் உள்ளன.

1) மேய்ச்சல் உணவுச்சங்கிலி,
2) மட்குப்பொருள் உணவுச்சங்கிலி

1.மேய்ச்சல் உணவுச்சங்கிலி (Grazing food chain): மேய்ச்சல் உணவுச்சங்கிலிக்கு சூரியனே முதன்மை ஆற்றல் மூலமாகும். இதன் முதல் இணைப்பு உற்பத்தியாளர்களிடமிருந்து (தாவரங்கள்) தொடங்குகிறது. உணவுச் சங்கிலியின் இரண்டாவது இணைப்பினை அமைக்கும் முதல்நிலை நுகர்வோர்கள் (எலி) உற்பத்தியாளர்களிடமிருந்து உணவைப் பெறுகின்றன. உணவுச்சங்கிலியின் மூன்றாவது இணைப்பை அமைக்கும் இரண்டாம்நிலை நுகர் வோர்கள் (பாம்பு) முதல்நிலை நுகர்வோர்களிட மிருந்து உணவைப் பெறுகின்றன. நான்காம் இணைப்பை அமைக்கும் மூன்றாம் நிலை நுகர் வோர்கள் (பருந்து) இரண்டாம்நிலை நுகர்வோர் களிடமிருந்து தங்கள் உணவைப் பெறுகின்றன.
2.மட்குப்பொருள் (சிதைவுக்கூளம்) உணவுச்சங்கிலி (Detritus food chain): இந்த வகையான உணவுச்சங்கிலி இறந்த கரிமப் பொருட்களிலிருந்து தொடங்குகிறது. இதுவே முக்கியமான ஆற்றல் மூலமாக உள்ளது. அதிகப் படியான கரிமப்பொருட்கள் இறந்த தாவரங்கள். விலங்குகள் மற்றும் அவற்றின் கழிவு பொருட் களிலிருந்து பெறப்படுகிறது. இந்த வகையான உணவுச்சங்கிலி அனைத்து சூழல்மண்டலத் திற்கும் பொதுவானது,

இறந்த உயிரிகளின் கரிமப்பொருட் களிலிருந்து ஆற்றல் கடத்தப்படுவது வரிசையாக அமைந்த மணவாழ் உயிரினங்களான மட்கு ண்ணிகள் – சிறிய ஊண்உண்ணிகள் பெரிய (இறுதி) ஊண்உண்ணிகள் முறையே உண்ணு தலாலும், உண்ணப்படுதலாலும் நிகழ்கிறது. இந்த தொடர் சங்கிலியே மட்குப்பொருள் உணவுச்சங்கிலி எனப்படுகிறது.

8.சூழியல் பிரமிட்கள் என்றால் என்ன? சூழியல் எண்ணிக்கை பிரமிட் பற்றி எழுதுக.
  • ஒரு சூழல்மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை குறிக்கும் திட்ட வரைபடங்கள் சூழியல் பிரமிட்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக் கருத்து சார்லஸ் எல்டன் (1927) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் எவை எல்டோனியின் பிரமிட்கள் எனவும் அழைக்கப் படுகின்றன.
எண்ணிக்கை பிரமிட் (Pyramid of number)
  • ஒரு சூழல்மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் காணப்படும் உயிரினங்களின் எண்ணிக்கையை குறிக்கும் திட்ட வரைபடம் எண்ணிக்கை பிரமிட் என்று அழைக்கப்படுகிறது.
  • உற்பத்தியாளர்களில் தொடங்கி முதல்நிலை வோர்கள் மற்றும் இறுதியாக மூன்றாம்நிலை நுகர் வோர்கள் வரை ஒவ்வொரு ஊட்ட மட்டத்திலும் நுகர்வோர்கள், பிறகு இரண்டாம்நிலை நுகர் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே புல்வெளி மற்றும் குளச் சூழல் மண்டலம் ஆகியவற்றின் பிரமிட்கள் எப்போதும் நேரானவை.
  • வனச்சூழல் மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் அடிப்பகுதி (T) குறைவான எண்ணிக்கை யிலான பெரிய மரங்களை கொண்டுள்ளது. இரண்டாவது ஊட்ட மட்டத்தில் இடம் பெற்று உள்ள தாவர உண்ணிகள் (Tஙூ) (பழம் உண்ணும் பறவைகள், யானை, மான்) உற்பத்தியாளர்களை விட அதிக எண்ணிக்கையை கொண்டுள்ளது. இறுதி ஊட்ட மட்டத்தில் (T,) காணப்படும் மூன்றாம் நிலை நுகர்வோர்கள் (சிங்கம்) மூன்றாம் ஊட்ட மட்டத்தில் (TZ) உள்ள இரண்டாம் நிலை நுகர்வோர்களை விட (நரி மற்றும் பாம்பு) குறை வான எண்ணிக்கையை கொண்டுள்ளது. எனவே வனச்சூழல்மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் கதிரிழை வடிவத்தில் தோன்றுகிறது.
  • ஒட்டுண்ணி சூழல்மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் எப்பொழுதும் தலைகீழானது. தனி மரம் ஒன்றிலிருந்து தொடங்குவதே இதற்குக் காரண மாகும். எனவே, உயிரினங்களின் எண்ணிக்கை படிப்படியாக அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் உற்பத்தியாளர்கள் முதல் மூன்றாம் நிலை நுகர் வோர்கள் வரை படிப்படியாக அதிகரிக்கிறது.

9.சிதைவு செயல்முறைகள் பற்றி எழுதி சிதைவை பாதிக்கும் காரணிகள் எவை என்று குறிப்பிடு.(அ) சூழல்மண்டலத்தில் ஊட்டங்களின் மறுசுழற்சிக்கும் சமநிலைப்பாட்டிற்கும் தேவைப்படும் முக்கியமான செயலை பற்றி விவரி.

சிதைவு செயல்முறைகள்

  • சிதைவு என்பது நொதிகளின் செயல்பட்டால் படிப்படியாக நடைபெறக்கூடிய ஒரு நிலை யழிவுச் செயலாகும். சிதைவுக்கூளங்கள் சிதைத் தலுக்கு உதவும் மூலப்பொருட்களாக செயல் படுகின்றன.

அ. துணுக்காதல் (Fragmentation) :

  • சிதைப்பவைகளாக உள்ள பாக்டீரியங்கள், பூஞ்சைகள் மற்றும் மண் புழுக்களினால் சிதைவுக்கூளங்கள் சிறிய துண்டுகளாக உடை படுவதற்கு துணுக்காதல் என்று பெயர்.

ஆ. சிதைமாற்றம் (Catabolism) :

  • சிதைப்பவைகள் செல்வெளி நொதிகள் சிலவற்றை அவற்றின் சுற்றுப்புறத்தில் சுரந்து அங்கு உள்ள சிக்கலான கரிம மற்றும் கனிமச்சேர்மங் களை எளிய ஒன்றாக உடைக்க உதவுகின்றன. இது சிதைமாற்றம் என்று அழைக்கப்படுகிறது.

இ. கசிந்தோடுதல் (Leaching) அல்லது வடிதல் (Eluviation) :

  • சிதைந்த, நீரில் கரையும் கரிம மற்றும் கனிமப் பொருட்கள் மண்ணின் மேற்பரப்பிலிருந்து கீழ் அடுக்கிற்கு இடப்பெயர்ச்சி அடைதலுக்கு அல்லது நீரினால் எடுத்து செல்லப்படுவதற்கு கசிந்தோடுதல் அல்லது வடிதல் என்று பெயர்

ஈ.மட்காதல் (Humificaiton):

  • கருமையான படிக உருவமற்ற பொருளான மட்காக மாற்றமடையும் செயலுக்கு மட்காதல் என்று பெயர். இது அதிக நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் பெற்றிருப்பதால் சிதைத்தல் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது.

உ. கனிமமாக்கம் (Mineralisation) :

  • சில நுண்ணுயிரிகள் மண்ணின் கரிம மட்கிலிருந்து கனிம ஊட்டச்சத்துக்களை வெளியேற்று வதில் ஈடுபடுகின்றன. அத்தகைய செயல்முறை கனிமமாக்கல் என்று அழைக்கப் படுகிறது.

சிதைவுச் செயலைப் பாதிக்கும் காரணிகள் :‘ வெப்பநிலை, மண் ஈரப்பதம், மண், ஆக்ஸிஜன் ஆகிய காலநிலைக் காரணிகளாலும் சிதைவுக் கூளங்களின்.
வேதித்தன்மையினாலும் சிதைவுச் செயல் பாதிக்கப்படுகிறது.

10. உயிரித்திரள் பிரமிட் வரையறு. பிரமிடின் வடிவத்தை பொருத்து உயிரித்திரள் பிரமிட் எத்தனை வகைப்படும்? 
  • உயிரித்திரள் பிரமிட் (Pyramid of biomass) – ஒரு சூழல்மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் காணப்படும் கரிமப்பொருட்களின் (உயிரித்திரள்) அளவை குறிக்கும் திட்ட வரை படம் உயிரித்திரள் பிரமிட் என்று அழைக்கப் படுகிறது.
  • புல்வெளி மற்றும் வனச் சூழல்மண்டலத்தில் உயிரிதிரளின் அளவு அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் உற்பத்தியாளர்களில் தொடங்கி இறுதி உண்ணிகள் (மூன்றாம் நிலை நுகர்வோர்) வரை படிப்படியாகக் குறைகிறது. எனவே இந்த இரண்டு சூழல்மண்டலங்களிலும் உயிரித்திரள் பிரமிட் நேரான பிரமிட்டாக உள்ளது.
  • எனினும், குளச் சூழல்மண்டலத்தின் பிரமிட்டின் அடிப்பகுதியில் உள்ள உற்பத்தியாளர்கள் நுண்ணுயிரிகளாக குறைவான உயிரித்திரளைக் கொண்டுள்ளது. மேலும் உயிரித்திரள் மதிப்பு பிரமிட்டின் இறுதிவரை படிப்படியாக அதிகரிக்கிறது. எனவே இந்த உயிரித்திரள் பிரமிட் எப்பொழுதும் தலைகீழ் வடிவத்தில் காணப்படும்.

11.குளச் சூழல்மண்டலத்தை படத்துடன் எழுதுக.
  • i) ஒரு தன்னிறைவு பெற்ற மற்றும் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் தகுதிபெற்ற நன்னீர் சூழல் மண்டலமாகும். இதிலுள்ள உயிரற்ற மற்றும் உயிருள்ள கூறுகளுக்கிடையே ஒரு சிக்கலான கூட்டுச்செயல் காணப்படுகிறது.
  • ii) ஒரு குளச் சூழல்மண்டலம் கரைந்த கனிம (CO,Oz, Ca, N, பாஸ்பேட்) மற்றும் இறந்த கரிமப் பொருட்களிலிருந்து உருவாகும் கரிமச்சேர்மங்கள் (அமினோ அமிலங்கள், கரிம மட்கு அமிலம்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • iii) ஒரு குளச் சூழல்மண்டலத்தின் செயல்பாடு அங்கு நிலவும் ஒளியின் அளவு, வெப்பநிலை, நீரின் pH மதிப்பு மற்றும் பிற காலநிலைத் தன்மை போன்ற காரணிகளால் ஒழுங்குப் படுத்தப்படுகிறது.
  • உயிருள்ள கூறுகள் (Biotic components) : இது உற்பத்தியாளர்கள், பலவேறு வகையிலான நுகர்வோர்கள் மற்றும் சிதைப்பவைகள் (நுண்ணு யிரிகள்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • அ)உற்பத்தியாளர்கள் : ஆசில்லடோரியா, அனபேனா, யூடோரைனா. வால்வாக்ஸ், டயாட்டம் போன்ற பல்வேறு வகை யான மிதவை உயிரிகள் : யூலோத்ரிக்ஸ், எஸ்பைரோகைரா,
  • மிதவை தாவர்களான தாமரை மற்றும் அல்லி,பெரும் தாவரங்களான டைஃபா மற்றும் ஐபோமியா ஆகியன குளச் சூழலமண்டலத்தின் முக்கிய உற்பத்தியாளர்களாக உள்ளன.
  • ஆ.)நுகர்வோர்கள்:விலங்கு மிதவை உயிரிகள். ஆழ்நீர் வாழிகள். இரண்டாம் நிலை நுகர்வோர்கள், வாத்து, கொக்கு போன்ற மூன்றாம் நிலை நுகர்வோர்கள் (வனர் உண்ணிகள்) மற்றும் சில உச்சநிலை ஊண் உண்ணிகளான பெரிய மீன்கள், பருந்து, மனிதன் போன்றவைகள் அடங்கும்.
  • இ)சிதைப்பவைகள் :இவை நுண்நுகர்வோர்கள் என அழைக்கப்படுகிறது. சூழல்மண்டலத்தில் ஊட்டச்சத்துகளை மறுசுழற்சி செய்ய இவை உதவுகின்றன.
  • சூழல்மண்டலத்தில் உயிரற்ற மற்றும் உயிருள்ள கூறுகளுக்கிடையே ஊட்டச்சத்துக்களின் சுழற்சி தெளிவாக உள்ளதால், தன்னிறைவு மற்றும் தானே இயங்கவல்ல அமைப்பாக குளச் சூழல்மண்டலம் தன்னை உருவாக்கிக் கொள்கிறது.

12th Botany Unit 9 Lesson 7 Additional 5 Marks

12. படிமசுழற்சி என்றால் என்ன? அதனுடைய பண்புகளை ஒரு படிமசுழற்சியால் விளக்குக. 
படிம சுழற்சி என்பது சூழ்நிலை மண்டலத்தில் மிகவும் மெதுவான செயலாகும். இது முடிவு அடைய அதிக காலத்தை எடுத்துக் கொள்ளும்,
  • பாஸ்பரஸ் சுழற்சி (Phosphours Cycle) DNA, RNA, ATP, NADP மற்றும் அனைத்து பாஸ்போலிப்பிட் போன்ற உயிரிய மூலக்கூறு களில் பாஸ்பரஸ் இருக்கிறது.
  • பாஸ்பரஸ் உயிரிக்கோளத்தில் அதிக அளவில் காணப்படுவதில்லை. அதே சமயம் பாறை படிவுகள், கடல் படிவுகள், கட் அருகு வாழ் பறவைகளின் எச்சங்கள் போன்றவற்றில் அதிகப் படியான பாஸ்பரஸ் காணப்படுகிறது.
  • உற்பத்தியாளர்கள் பாஸ்பேட் அயனிகளாக பாஸ்பரஸை உள்ளெடுப்பதன் மூலம் உணவுச் சங்கிலியின் ஒவ்வொரு, ஊட்ட மட்டத்திற்கும் உணவு மூலமாக கடத்தப்படுகிறது.
  • உயிரினங்களின் தொல்லுயிர் எச்ச எரிபொருட்களை எரிப்பது வனஅழிவு. காட்டுத்தீ, எரிமலை வெடிப்புகள், இறந்த கரிமப்பொருட்களின் சிதைவு போன்றவைகளால் கார்பன் மிகையாக வெளிவிடப் படுவதால் வளிமண்டலத்தில் இதன் அளவு அதிகரிக்கிறது.
13.சூழல்மண்டலத்தின் நன்மைகள் மற்றும் சேவைகள் அடிப்படையில் எத்தனை வகையான சூழல்மண்டல சேவைகள் உள்ளன ? அவை யாவை?

சூழல்மண்டல சேவைகள்

12th Botany Unit 9 Lesson 7 Additional 5 Marks

14. சதுப்பு நில சூழல்மண்டலத்தின் சேவைகள் பற்றி விளக்கி எழுதுக. (அ) சதுப்பு நில சூழல்மண்டலம் எவ்வாறு இயற்கைக்கும் மனிதனுக்கும் சேவை யாற்றுகிறது?
சதுப்பு நில சூழல்மண்டலத்தின் சேவைகள் : 
  • வாழிடத்தை வழங்குவதுடன் நீர்வாழ் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கான நாற்றங்கால்களாகத்திகழ்கிறது.
  • மருந்துகள், எரி கட்டைகள் மற்றும் மரக்கட்டைகள் ஆகியவற்றை வழங்குகிறது.
  • வண்டல் படிதல் மற்றும் மண் அரிப்பை சமநிலைப்படுத்துவதன் மூலம் கடலுக்கும் நதி களுக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்படுகிறது.
  • சூறாவளி, ஆழிப்பேரலை மற்றும் உயர் அலைக் காலங்களில் நீரின் விசையைக் குறைக்க உதவுகிறது.
  • காற்றுத்தடுப்பு, ஆக்ஸிஜன் உற்பத்தி, கார்பன் சேகரிப்பு மற்றும் அலைகளிலிருந்து உப்பு தெளிப்பைத் தடுக்க உதவுகிறது.
15. “சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாம் தோல்வி அடைந்தால், நம் சந்ததிகளை காப்பாற்றுவதிலும் தோல்வி அடைவோம்.” எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நம் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள் யாவை? சுற்றுசூழலை பாதுகாப்பதில் நம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள்
  • சூழல் நட்புடையப் பொருட்களை மட்டுமே வாங்குதல், பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல்.
  • அதிக மரங்களை வளர்த்தல்
  • நீடித்த நிலைத்த பண்ணைப் பொருட்களைத் தேர்ந்தெடுத்தல் (காய்கறிகள், பழங்கள், கீரைகள் முதலியன)
  • இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்தல். கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் கழிவு உற்பத்தி அளவைக் குறைத்தல்.
  • நீர் மற்றும் மின்சார நுகர்வை குறைத்தல்
  • வீட்டில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைக் குறைத்தல் அல்லது தவிர்த்தல்.
  • உங்கள் மகிழுந்து மற்றும் வாகனங்களை சரியாக பராமரித்தல் (கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கு)
16.சூழல்மண்டல மேலாண்மை உத்திகள் யாவை?
சூழல்மண்டல மேலாண்மை உத்திகள் :

  • இது சூழலமண்டலத்தின் உயிரிப்பன்மத்தைப் பராமரிக்க உதவுகிறது.
  • சேதமடைந்த சூழலமண்டலத்தை சுட்டிக்காட்ட இது உதவுகிறது. (சில உயிரினங்கள் சூழல் மண்டலத்தின் ஆரோக்கியத்தை குறிக்கின்றன. இத்தகையச் சிற்றினங்கள் “தலைமை இனங்கள்” (flagship species) என அழைக்கப்படுகின்றன.
  • இது சூழலமண்டலத்தின் தவிர்க்கவியலாத மாற்றத்தை அடையாளம் காணவும் அதற்கேற்ப திட்டம் திட்டவும் பயன்படுகிறது.
  • இது நீடித்த நிலையான வளர்ச்சி திட்டத்தின் மூலம் சூழல்மண்டலத்தின் நிலைத்தன்மையை அடைவதற்கான கருவிகளில் ஒன்றாகும்.
  • புனரமைப்பு தேவைப்படுகிற சூழல்மண்டலங்களை அடையாளம் காண இது உதவுகிறது.
  • அரசு நிறுவனங்கள், உள்ளுர் மக்கள், குழுமங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ஒருங்கி ணைந்த நிர்வாகத்துடன் இது தொடர்புடையது.
  • சூழலமண்டல மேலாண்மை நடவடிக்கைகள் முடிந்த பின்னரும் நீண்ட காலமாக செயல்பட உள்ளுர் நிறுவனங்கள் மற்றும் சமுதாய குழுக்கள் பொறுப்பேற்கும் திறன் மேம்பட இது உதவுகிறது
17. சூழிலியல் வழிமுறை வளர்ச்சியின் பண்புகள் எவ்வாறு வழிமுறை வளர்ச்சிக்கு உதவுகிறது? (அ) சூழியியல் வழிமுறை வளர்ச்சியின் பண்புகள் யாவை?
  • தாவர குழுமத்தின் குறிப்பிட்ட அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு முறையான செயல்முறையாகவிளங்குகிறது.
  • உயிரற்ற மற்றும் உயிருள்ள காரணிகளின்
  • மாற்றங்கள் விளைவாக உருவாகிறது. நிலையற்ற குழுமத்தை நிலையான குழுமமாக மாற்றி அமைகிறது.
  • சிற்றின பன்மம், மொத்த உயிரிஎடை, செயல் வாழிடத்தன்மை, மண்ணின் கரிம மட்கு போன்ற வற்றில் படிப்படியாக முன்னேற்றம் காணப் படுகிறது.
  • எளிய உணவுச்சங்கிலியிலிருந்து சிக்கலான உணவு வலைக்கு முன்னேறுகிறது.
  • கீழ்நிலை மற்றும் எளிய உயிரினங்களை முன்னேறிய உயர் உயிரினங்களான மாற்றி அமைக்கிறது.
  • தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கிடையே இடைச்சார்பை உருவாக்குகிறது.
18. முதல்நிலை வழிமுறை வளர்ச்சிக்கும், இரண்டாம் நிலை வழிமுறை வளர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டை அட்டவணைப்படுத்துக.
முதல்நிலை வழிமுறை வளர்ச்சி
1.வெற்று நிலங்களில் ஆக்கமடைதல்
2.உயிரிய மற்றும் பிற வெளிப்புறக் காரணிகளால் தொடங்கி வைக்கப்படுகிறது.
3.மண் இல்லாத இடங்களிலும் முதல் நிலை வழிமுறை வளர்ச்சி தொடங்க முடியும்.
4.முன்னோடித் தாவரங்கள் வெளிச்சூழலில் இருந்து வருகின்றன.
5.இது முடிவடைய அதிக காலம் எடுத்துக்கொள்கிறது.
இரண்டாம்நிலை வழிமுறை வளர்ச்சி
1.பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆக்கமடைதல்
2.புறக்காரணிகளால் மட்டுமே தொடங்கி வைக்கப்படுகிறது.
3.ஏற்கனவே மண் உள்ள இடங்களில் மட்டுமே
இது நிகழ்கிறது.
4.முன்னோடித் தாவரங்கள் நிலவிவரும் உட்சூழலிலிருந்து உருவாக்கப்படுகின்றன.
5.இது முடிவடைய ஒப்பீட்டளவில் குறைந்த காலத்தையே எடுத்துக் கொள்கிறது.
19. நீர்நிலை வழிமுறை வளர்ச்சியின் படிநிலைகள் யாவை? (அ) தாவர வழிமுறை வளர்ச்சியில் நீர் நிலை வழிமுறை வளர்ச்சியின் பல்வேறு நிலை களை பற்றி எழுதுக.
கொடுக்கப்பட்டுள்ளது நீர்நிலை வழிமுறை வளர்ச்சியின் பல்வேறு நிலைகள். அவை
1. தாவர மிதவை உயிரிநிலை
2. நீருள் மூழ்கிய தாவரநிலை 3.நீருள் மூழ்கி மிதக்கும் நிலை
4. நாணற் சதுப்பு நிலை
5. சதுப்பு புல்வெளி நிலை
6. புதர்ச்செடி நிலை
7. காடு நிலை
1.தாவர மிதவை உயிரிநிலை (Phytoplankton stage):
நீலப்பசும்பாசிகள், பாக்டீரியங்கள், சயனோ பாக்டீரியங்கள், பசும்பாசிகள், டயட்டம் போன்ற முன்னோடி குழுமங்களைக் கொண்ட வழிமுறை வளர்ச்சியின் முதல்நிலை இதுவாகும். இந்த உயிரினங்களின் குடிபெயர்வு, வாழ்க்கை செயல் முறைகள், இறப்பின் மூலமாக குளத்தின் கரிம பொருளின் அளவு மற்றும் ஊட்டச்சத்து செறி வடைகிறது. இது வளர்ச்சியின் அடுத்த படி நிலை வளர்ச்சிக்கு உதவுகிறது.
2.நீருள் மூழ்கிய தாவர நிலை (Submerged plant stage):
மிதவை உயிரிகளின் இறப்பு மற்றும் மட்குதலின் விளைவாலும், மழைநீர் மூலம் நிலத்திலிருந்து மண் துகள்கள் அடித்து வரப்படுவதாலும். குளத்தின் அடிப்பகுதியில் ஒரு தளர்வான மண் உருவாக வழி வகுக்கிறது. எனவே வேரூன்றி நீருள் மூழ்கி வாழும் நீர் வாழ்த்தாவரங்கள் புதிய வாழ்தளத்தில் தோன்ற ஆரம்பிக்கிறது. (எ.கா.) கேரா, யூட்ரிகுலேரியா. தாவரங்களின் இறப்பு மற்றும் சிதைவு குளத்தின் அடித்தளத்தை உயர்த்துவதால் குளம் ஆழமற்றதாக மாறுகிறது. எனவே இந்த வாழிடம் நீருள் மூழ்கி மிதக்கும் நிலையிலுள்ள வேறுவகையான தாவரங்கள் குடியேறுவதற்கு ஏதுவாக அமைகிறது.
3.நீருள் மூழ்கி மிதக்கும் நிலை (Submerged free floating stage): 
இந்த நிலையில் குளத்தின் ஆழம் கிட்டத்தட்ட  2-5 அடியாக இருக்கும். எனவே, வேரூன்றிய நீர்வாழ்த்தாவரங்கள் மற்றும் பெரிய இலை களுடன் கூடிய மிதக்கும் தாவரங்கள் குளத்தில் குடியேற ஆரம்பிக்கின்றன. (எ.கா) வேரூன்றிய மிதக்கும் தாவரங்களான தாமரை, அல்லி மற்றும் ட்ராபா, இந்த தாவரங்களின் இறப்பு மற்றும் சிதைத்தல் மூலம் குளத்தின் ஆழம் மேலும் குறைகிறது. இதன் காரணமாக மிதக்கும் தாவரங்கள் படிப்படியாக பிற இனங்களால் மாற்றி அமைக்கப்படுவதால் புதிய நிலை ஒன்று உருவாகிறது.
4.நாணற் சதுப்பு நிலை (Reed-swamp stage): 
இது நீர் நில வாழ்நிலை எனவும் அழைக்கப் படுகின்றது. இந்த நிலையில் வேரூன்றிய மிதக்கும் தாவரங்கள் பிற தாவரங்களால் மாற்றி யமைக்கப்படுகிறது. இது நீர்சூழ்நிலையிலும், நில சூழ்நிலையிலும் வெற்றிகரமாக வாழக் கூடியது. எ.கா. டைஃபா
5.சதுப்பு புல்வெளி (Marsh meadow stage):
நீரின் அளவு குறைவதால், குளத்தின் ஆழம் குறையும் பொழுது சைப்பரேசி மற்றும் போயேசி. இவற்றின் அதிகம் கிளைத்த வேர்களின் உதவி யால் பாய் விரித்தது போன்ற தாவரத்தொகுப்பு ஒன்று உருவாகிறது. இது அதிக அளவு நீர் உறிஞ்சுவதற்கும், நீர் இழப்பிற்கும் வழி வகுக் கிறது. இந்த நிலையின் முடிவில் மண் வறண்டு, சதுப்பு நிலத் தாவரங்கள் படிப்படியாக, மறைந்து  புதர்ச்செடிகள் குடிபுக வழிவகுக்கிறது.
6.புதர்ச்செடி நிலை (Shrub stage)
சதுப்பு நிலத் தாவரங்கள் தொடர்ந்து மறைவதால் மண் வறண்டு போகிறது. எனவே இந்த பகுதி களில் நிலவாழ்த் தாவரங்களான புதர்ச்செடிகள் (சாலிக்ஸ் மற்றும் கார்னஸ்) மற்றும் மரங்கள் (பாப்புலஸ் மற்றும் அல்னஸ்) ஆகியவை படையெடுக்கின்றன. இந்த தாவரங்கள் அதிக அளவிலான நீரை உறிஞ்சி, வறண்ட வாழ் இடத்தை உருவாக்குகின்றன. அத்துடன் செழுமையான நுண்ணுயிரிகளுடன் கூடிய கரிம மட்கு சேகரமடைவதால் மண்ணில் கனிமவளம் அதிகரிக்கிறது. இறுதியில் அப்பகுதி புதிய மர இனங்களின் வருகைக்கு சாதகமாகிறது.
7.காடு நிலை(Forest Stage)
நீர்வழிமுறை வளர்ச்சியின் உச்சநிலை குழுமம் இதுவாகும். இந்த நிலையின் போது பல்வேறு வகையான மரங்கள் படையெடுப்பதோடு ஏதாவது ஒரு வகையான தாவரததொகுப்பு உருவாகிறது.
20.தாவர வழிமுறை வளர்ச்சியின் முக்கியத்துவம் யாது?
  • சுற்றுச்சூழல் சார் வழிமுறை வளர்ச்சி பற்றிய அறிவு. காடுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிற்றினங்களின் கட்டுப்பாட்டான வளர்ச்சியைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
  • வழிமுறை வளர்ச்சி பற்றிய அறிவை பயன் படுத்துவதன் மூலம், வண்டல் படிவிலிருந்து அணைகளை பாதுகாக்கலாம்.
  • காடுகளை மீட்டெடுத்தல், புதிய காடுகளை வளர்த்தலில் பயன்படுத்தப்படும் நுட்பங்களைப் பற்றிய தகவல்களை இது வழங்குகிறது.
  • மேய்ச்சல் நிலங்களின் பராமரிப்புக்கு இது உதவு கிறது.
  • உயிரினங்களின் உயிரிபன்மத்தை ஒரு சூழல் மண்டலத்தில் பராமரிக்க இது உதவுகிறது.
  • வள ஆதாரம் கிடைக்கும் அளவு மற்றும் பலவேறு காரணிகளின் இடையூறுகளால் வழி முறை வளர்ச்சியின் போது உருவாகும் உயிரி பன்மத்தன்மைகள் தாக்கத்திற்கு உள்ளாகின்றன.
  • உயிரினங்கள் இல்லாத ஒரு வாழ்விடப் பகுதியில் குடியேறி காலனிகள் தோன்ற முதலநிலை வழி முறை வளர்ச்சி உதவுகிறது.
  • சேதமடைந்த பகுதி மற்றும் வாழிடத்தில் ஒரு தாவர குழுமத்தை மறுசீரமைப்பதில் இரண்டாம் நிலை வழிமுறை வளர்ச்சி ஈடுபடுகிறது.
  • உலகெங்கிலும் நாம் பார்க்கும் காடுகள் மற்றும் தாவரங்கள் அனைத்தும் தாவர வழிமுறை வளர்ச்சியினால் தோன்றியவையேயாகும்.
21. கார்பன் சுழற்சி என்றால் என்ன? 
  • கார்பன் சுழற்சியின் படம் வரைக. உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே நடைபெறும் கார்பன் ஓட்டத்திற்கு கார்பன் சுழற்சி என்று பெயர்.

12th Botany Unit 9 Lesson 7 Additional 5 Marks

Leave a Reply